குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

ஷவூஓட்SHAVUOT שבועות

ஷவுஓட் Shavuot  שבועות என்பது வாரங்கள். Shavua  שבועות  ஷவுஆ என்பது வாரம்.

ஹாக் ஹா ஷவுஓட் Feasts of the Weeks – Hag HaShavuot என்பது வாரங்களின் பண்டிகை ஆகும். பண்டிகையானது யூத மரபின்படி  ஒரு நாளேயாம், ஆனால் தற்காலத்தில் உலகம் முழுவதுமுள்ள புலம்பெயர்ந்த யூதர்களால் இரு தினங்களாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மே 30  மாலை தொடங்கி ஜூன் 1 மாலை முடிய  இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இது Pesach (Passover)  פסח  பெசாஹ்  பண்டிகைக்கு பின்  50 நாட்கள் கழித்து வரும். Πεντηκοστη கிரேக்க மொழியில் Pentecost, அஃதாவது Pente என்றால் 50வது நாள். Lev 23:15 ஆக Israel ישראל இஸ்ரயேல் மக்கள் நாம் அப்போஸ்தலர் நடபடிகள் இரண்டாம் அதிகாரத்தை வாசிப்பதற்கு முன்பே சற்று ஏறக்குறைய 1500 ஆண்டுகட்கு முன்பிருந்தே இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் என்பதைப் புரிந்து கொள்தல் மிக அவசியமாகும். இப்பண்டிகையின் சிறப்புகளை  இரு விதங்களாகப் பார்க்கலாம்
  1.  “Zeman Matan Toratenu? (“the time of the giving of our Torah”). זמן מתן תורתינו (எபிரேய மொழியில்) சீனாய்
    மலையில் இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் Moses מֹשה மோஷேவிடம் தோராவை வழங்கும் நிகழ்வாகவும்.
  2. யூத மக்கள் விவசாய வாழ்க்கை முறையில் கோடை காலத்தில் பார்லி அறுவடை முடிந்து கோதுமை
    அறுவடையின் தொடக்க அறிவிப்பாகவும்.
 
யூத நாட்காட்டியின் மூன்றாம் மாதமான, Sivan סיון சிவான் மாதம் 6ம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Sinai סיני சீனாய் மலையில் இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமன்றி ஆண்டவர் முழு உலக மக்கள் அனைவருக்கும் சேர்த்தே தோராவை போதித்தார். ஆனால் இஸ்ரயேல் மக்கள் மட்டுமே ஆண்டவர் சொன்னதை கேட்டது மட்டுமின்றி, கடை பிடிக்கவும் செய்தார்கள். Ex 19:8 மற்றொன்று இந்நாளில் ஆண்டவர் மட்டுமே பேசுபவராக இருப்பதை  நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பிற பெயர்கள்:
Hag Shavuot” (“Feast of Weeks,” Ex. 34:22; Deut. 16:10); חג שבועות
ஹாக் ஷவுஓட் (வாரங்களின் பண்டிகை)
“Yom ha-Bikkurim” (“The Day of the First-fruits,” Num. 28:26) חג הבכורים
யோம் ஹா பிக்குரிம் (முதற் கனிகளின் பண்டிகை)
“Hag ha-Katzir” (“The Harvest Feast,” Ex. 23:16). חג הקציר
ஹாக் ஹா கட்சிர் (சேர்ப்புக்கால பண்டிகை)
The Rabbinic name is “Azeret” (RH 1, 2; Ḥag. 2, 4). עשרת
ரபிகள் வழங்கும் பெயர் – அசெரெட்
Shalosh Regalim   שלוש רגלים
இஸ்ரயேல் மக்கள் வேதாகமத்தின்படி Yerushalayim (Jerusalem) ירושלים எருஷலாயீமுக்கு மேற்கொள்ளும் மூன்று புனித பயணங்களில் ஒன்று இப்பண்டிகை சமயமாகும். மீதம் இரு சமயங்கள் பெசாஹ் பண்டிகை மற்றும் Sukkot  סוכות சுக்கோத் பண்டிகை ஆகும்.
வழக்கங்கள்:

பண்டிகை சமயம் இரவு முழுவதும் கண் விழித்து தோராவைப்  படிப்பது.

Aseret Hadibrot   עשרת הדברות  பத்து அறிக்கைகள் (கட்டளைகள்) வாசிப்பது.
வேதாகமத்தில் உள்ள Ruth  רות  ரூத் புத்தகத்தை வாசிப்பது.
மேலும் Ezekiel  יחזקאל எஹெஸ்கேயெல்Habakkuk  חבקוק ஹவகூக் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களில் சில பகுதிகளையும் வாசிக்கும் வழக்கம் உண்டு.
யூத ஆலயங்களில் சிறப்பு வகுப்புகள்,  Yeshiva எஷிவாக்கள் இரவு முழுவதும் நடைபெறும்.
யூத சமயத்தை புறஜாதியைச் சேர்ந்த ரூத் ஏற்றுக் கொண்டதையே இப்பண்டிகை நேரத்திற்கு உகந்த புத்தகமாகக் கருதி வாசிக்கிறார்கள். அவ்வாறே யூதர்களும் புற ஜாதியினரும் ஒற்றுமைப்படும் காலமாக இப்பண்டிகை நாள் கருதப்படுகிறது.
 
இதன் பொருள், டவீட் இராஜா, ரூத் என்னும் மோவாப் பெண்ணின் வழித்தோன்றல் அது மட்டுமன்றி அவர் ஷவுஓட் அன்று மரித்ததாக பாரம்பரியமாக எண்ணப்படுகிறது. மிக முக்கியமாக நம்முடைய இராஜா (Jesus The Messiah)
ישוע המשיח இயெஷூவா ஹமஷியாஹ், புறஜாதியை (நம்மை) இரட்சிக்க இதே வம்சாவழியில் பின் தோன்றுவது.
தேன், பால், பாலாடைக் கட்டி முதலானவற்றில் செய்யப்பட்ட பண்டங்களை உண்ணுவது வழக்கம். ஆண்டவர் வழங்கிய தோராவை தேனின் இனிமைக்கு ஒத்துள்ளது என்பதை நினைவிற் கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர்.
 
இப்பண்டிகை சமயத்தில், யூத மக்கள் தம் குழந்தைகளுக்கு எபிரேய மொழியை ரபிகள் கொண்டு கற்பிக்க ஆரம்பிக்கின்றனர். ரபிகள் எபிரேய எழுத்துக்களை குழந்தைகளுக்கு எழுத்து பலகை வைத்து  எழுதி சொல்லிக் கொடுப்பர்.
பின் அவ்வெழுத்துக்களை அழித்து விட்டு சிறிது தேனை எழுத்து போல் தடவி அவர்கள் நக்கி ருசி பார்க்க விடுவார்களாம். இப் பழக்கம் 12ம் நூற்றாண்டு முதல் ஜெர்மானிய யூத குடும்பங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
 
நாமும் கர்த்தர் நமக்களித்த கொடையான தோராவை இப்பண்டிகை அன்று வாசித்துக் கொண்டாடி மகிழ்ந்து நம் வாழ்வில் கர்த்தரின் வார்த்தையை கடைப்பிடிப்போம்.
HAPPY SHAVUOT /  CHAG SHAVUOT SAMEACH / חג שבועות שמח