அசெரெட் ஹடெவாரீம்  עֲשֶׂרֶת הַדְּבָרִים  ASERET HAD’VARIM   

அசெரெட் ஹடெவாரீம் என்றால் பத்து வார்த்தைகள் (அறிக்கைகள்) ஆகும்.

சரியான மொழி பெயர்ப்புச் சொற்களை நாம் அறிந்து கொள்ளும் போது நம்முடைய ஆண்டவர் அளித்த வேத வாக்கியத்தில் உள்ள சத்தியங்களை மிகச் சரியாக விளங்கிக் கொள்ளலாம்.

முந்தைய மொழி பெயர்ப்புகளை குற்றப்படுத்துவதாக பொருள் கொள்ளக்கூடாது. அது நம் நோக்கம் அல்ல. தற்காலத்தில் மூல மொழியில் வேதாகமத்தை கற்பதற்கான வாய்ப்புகளை சாமானியர்களான நமக்கும் ஆண்டவர் மிகுந்த இரக்கத்தோடும், பரிவோடும் தந்து வருகிறார். அதை நாம் செம்மையாக பயன்படுத்தி மக்களை இரட்சிப்பின் அனுபவத்தில் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

யூத வழக்கத்தின்படி ஆண்டவர் அம்மக்களுக்கு 613 Mitzvot  מִצְווֹת‎  கட்டளைகளை வழங்கினார். இந்த 613 கட்டளைகள் அனைத்தும் ஆண்டவர் தந்தருளிய 10 வார்த்தைகள், அறிக்கைகளுக்குள் அடங்கும்.

ஆங்கிலத்தில் Ten Utterances  என்கிற பதம்  பயன்படுத்தப்படுகிறது.

யூத ரபிகள் தங்கள் இலக்கியங்களில் இதனை ASERET HADIBROT அசெரெட் ஹடிப்ரோட்   עֲשֶׂרֶת הַדִּבְּרוֺת என்கிறனர்.

Mitzvot மீட்ஸ்வோட் מִצְווֹת  – கட்டளைகள்

Dibrot டிப்ரோட் דְּבָרִים – அறிக்கைகள்

Aserat அசெரெட் עֲשֶׂרֶת – பத்து

பத்து கட்டளைகள் என்றால் Aserat HaMitzvot அசெரெட் ஹமீட்ஸ்வோட் עֲשֶׂרֶת הַמִצְווֹת என்று இருக்க வேண்டும்!

ஆனால் Torah תּוֹרָה‎ டோராவில்Aseret HaD’varim அசெரெட் ஹடெவாரீம் עֲשֶׂרֶת הַדְּבָרִים என்றே சொல்லப்பட்டுள்ளது.

 DibrotD’varim Dabar  דָּבָר Root word

டிப்ரோட், டெவாரீம் – டாபர் דָּבָר இதுவே வேர்ச்சொல்

דָּבָר  என்றால் தமிழில் ‘வார்த்தை’ ஆகும்.

இந்த வலைப்பூவில் தரப்படும் செய்திகள் மூல மொழி சார்ந்து இருப்பதால் நாம் எபிரேய மொழி எழுத்துக்களை சரியாக உச்சரிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

இதே வலைதளத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும். எழுதிப் பழக விரும்பினால் கொடுக்கப்பட்டுள்ள YouTube ஐகானை க்ளிக் செய்யவும்.

தேவனுடைய மொழிக்கான கணத்தை நாம் கண்டிப்பாகத் தர வேண்டும்.

சரி அசெரெட் ஹடெவாரீமை עֲשֶׂרֶת הַדִּבְּרוֺת மூல மொழியான எபிரேயத்தில் சொல்லப் பழகுவோம்.

1. I am the LORD your God (Jewish) (Protestant – 1)

א  אָנֹכִי יְהוָה אֱלֹהֶיךָ

அனோக்கி அடோனை எலோஹெகா

2. You shall have no other gods before me (Protestant – 1)

א  לֹא-יִהְיֶה לְךָ אֱלֹהִים אֲחֵרִים עַל-פָּנָי

லோ யிஹயெ லெகா எலோஹீம் அஹெய்ரீம் அல்-பனா

You shall not make for you any graven image (Protestant – 2)

ב לֹא תַעֲשֶׂה־לְךָ פֶסֶל

லோ டஅசே-லெகா பெசெல்

3. You shall not misuse the name of the LORD your God

ג   לֹא תִשָּׂא אֶת-שֵׁם-יְהוָה אֱלֹהֶיךָ, לַשָּׁוְא

லோ டிஸ்ஸா எட் ஷெம் அடோனை எலோஹெகா லஷாவ்

4. Remember the Sabbath day by keeping it holy.

ד  זָכוֹר אֶת-יוֹם הַשַּׁבָּת לְקַדְּשׁוֹ

ஸகோர் எட் யோம் ஹ ஷப்பாத் லேகட்ஷோ

5. Honor your father and your mother

ה  כַּבֵּד אֶת-אָבִיךָ, וְאֶת-אִמֶּךָ

கபெட் எட்-ஆவீகா வ எட்–ஈம்மேகா

6. You shall not murder

ו   לֹא תִּרְ צָח

லோ டிர் ஸாக்

7. You shall not commit adultery

ז   לֹא תִּנְאָף

லோ டின்நாஃப்

8. You shall not steal

ח  לֹא תִּגְנֹב

லோ டிக்னோவ்

9. You shall not give false testimony against your neighbor

ס  לֹא-תַעֲנֶה בְרֵעֲךָ עֵד שָׁקֶר

லோ டஅநெஹ் வெரெய்கா எய்ட் ஷாகெர்

10. You shall not covet

י   לֹא תַחְמֹד

லோ டக்மோத்

SHALOM        ஷலோம்      שָׁלוֹם