எபிரேயப் பெயர்கள்

எபிரேயப் பெயர்களின் உச்சரிப்பை நமக்கு நன்கு பரிச்சயமான சிலவற்றை இந்தப் பதிவில் கேட்போம் .
இப்பெயர்கள் நம் மொழியிலும், ஆங்கிலத்திலும் எவ்வாறு திரிந்துள்ளன என்பதை நாம் இனம் காணலாம்.

1 சாமுவேல் : 25

  • 3 : அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான்.

Abigail  –  அபிகாயில்
אֲבִיגָיִל
அவிகாயில்

His name was Nabal and his wife’s name was Abigail. She was an intelligent and beautiful woman, but her husband was surly and mean in his dealings—he was a Calebite. – 1 Samuel 25:3

ஆதியாகமம் : 35

  • 18 : மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

Benjamin  –  பென்யமீன்
בִּנְיָמִין
பின்யாமின் 

As she breathed her last—for she was dying—she named her son Ben-Oni. But his father named him Benjamin. – Genesis 35:18

ஆதியாகமம் : 3

  • 20 : ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.

Eve –  ஏவாள்
חַוָּה
கவாஹ்

Adam named his wife Eve, because she would become the mother of all the living. – Genesis 3:20

1 நாளாகமம் : 3

  • 1 : தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன்.

Daniel –  தானியேல் 
דָּנִיֵּאל
டானியேல்

These were the sons of David born to him in Hebron: The firstborn was Amnon the son of Ahinoam of Jezreel; the second, Daniel the son of Abigail of Carmel; – 1 Chronicles 3:1

ரூத் : 4

  • 17 : அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

David –  தாவீது 
דָּוִד
டாவீட்

The women living there said, “Naomi has a son!” And they named him Obed. He was the father of Jesse, the father of David. – Ruth 4:17

யாத்திராகமம் : 6

  • 23 : ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்

Elisheba –  எலிசபா
אֱלִישֶׁבַע‬
எலிஷெவா

 Aaron married Elisheba, daughter of Amminadab and sister of Nahshon – Exodus 6:23

1 இராஜாக்கள் : 4

  • 31 : அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும்,

Ethan – ஏத்தான்
אֵיתָן‬
எய்ட்டான்

He was wiser than anyone else, including Ethan the Ezrahite – 1 Kings 4:31

தானியேல் : 8

  • 16 : அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.

Gabriel – காபிரியேல்
גַּבְרִיאֵל 
காவ்ரியேல்

And I heard a man’s voice from the Ulai calling, “Gabriel, tell this man the meaning of the vision.” – Daniel  8:16

1 சாமுவேல் : 1

  • 2 : அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.

Hannah –  அன்னாள்
חַנָּה 
ஹன்னாஹ் 

He had two wives; one was called Hannah and the other Peninnah. Peninnah had children, but Hannah had none. – 1 Samuel 1:2

ஆதியாகமம் : 11

  • 29 : ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிரகாமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இல்க்காளுக்கும் தகப்பன்.

Iscah –  இல்க்கா  
יִסְכָּה‎
இஸ்காஹ்

Abram and Nahor both married. The name of Abram’s wife was Sarai,and the name of Nahor’s wife was Milkah; she was the daughter of Haran, the father of both Milkah and Iscah. – Genesis 11:29