இஸ்ரயேல் 70 

இஸ்ரயேல் என்னும் நாடு மீண்டும் நிறுவப்பட்டது, 1878 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்தப் பதிவில் பரிசுத்த வேதாகமத்தில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறிய வரலாற்று தருணங்களில் கர்த்தரின் கரம் செயல்பட்ட விதங்களைக் காண்போம்.

முந்தைய பதிவின் தொடர்ச்சி – எரேமியா 31:35-37ல் கர்த்தர் கூறுவது இஸ்ரயேலின் சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதே!

இதை ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828-1910), பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
What is the Jew?… What kind of unique creature is this whom all the rulers of all the nations of the world have disgraced and crushed and expelled… persecuted, burned and drowned, and who, despite their anger and fury, continue to live and to flourish… The Jew is the symbol of eternity.

அது போலவே Rabbi Dov Greenberg , Executive Director of Chabad – Stanford University பின் வருமாறு சொல்கிறார்.
Imagine we could travel back in time and say to the great Pharaoh [of Moses’ time], “There is good news and bad news. The good news is that one of the nations alive today will survive and change the moral landscape of the world. The bad news is: it won’t be yours. It will be that group of Hebrew slaves out there, building your glorious temples, the Children of Israel.”
Nothing would sound more outrageous. The Egypt of Pharaoh’s time was the greatest empire of the ancient world, brilliant in arts and sciences, formidable in war. The Israelites were a landless people, powerless slaves. Indeed, already in antiquity, those in power believed that the Israelites were on the verge of extinction.

எது யூத மக்களை இத்தனை ஆண்டுகளாக காப்பாற்றியது? என்று தர்க்க ரீதியாக யோசிக்கும் போது ஒரு ரபி இவ்வாறு விளக்கமளிக்கிறார்  – விசித்திரமான, உடல் ரீதியான, இயற்கையான மன ரீதியான, மொழி, நடத்தை அல்லது வழக்கங்களால் அல்ல டோராவும் (Torah) மிட்ஸ்வோட்டும் (Mitzvot) மட்டுமே சிதறுண்ட மக்களை பிணைக்கும் சங்கிலிகளாக இருந்து வந்தன என்கிறார்.

இன்னும் ஒரு விளக்கமும் கொடுக்கப்படுகிறது, அஃதாவது  הֲלָכָה / Halacha /  ஹலாக்கா – இதன் வேர்ச்சொல் தரும் பொருள் “நடத்தல்” ஆகும். எவ்வாறு? எதன் அடிப்படையில்?  என்றால், תּוֹרָה/Torah / ‬டோராவின் அடிப்படையில்! டோரா என்றால் “வழிமுறைகள்” என்று பொருள். கர்த்தர் மோசேயிடம் டோராவை ஒலி வடிவிலும் வரி/எழுத்து வடிவிலும் தந்ததாக பொருள் கொண்டு கி.மு. 400 முதல் யூத ரபிகள் சிலர் போதனைகளை டோராவில் இருந்தும், அதனோடு தொடர்புபடுத்தியும் வழங்கி வரத் தொடங்கினர். பல்வேறு ரபிகள் டோராவில் உள்ள அறிவுறுத்தல்கள், உத்தரவுகள், சட்டங்கள், ஒழுங்குகள் குறித்து அளித்த விளக்கங்கள் அவற்றை தொடர்ச்சியாக கைக்கொண்டு, பின் பற்றி, புறசமய பழக்க வழக்கங்களை தம் இனத்துள் சேர விடாமல் உபாகமம் 7:6ல் வரும் “பரிசுத்த ஜனம்”மாகவே இருந்து கர்த்தருக்கு சாட்சியாக இவ்வுலகத்தில் மீண்டும் ஒரே இடத்தில் கூடினர்.

ஆனால் அந்த ஒரு இடம் “இஸ்ரயேல்” என்று உணர்த்த அதை வரலாற்று நிகழ்வாக்க கர்த்தர், விதை விதைக்க தியோடோர்  ஹெர்ஸல் / Theodor Herzl (1860-1904) என்னும் மனிதரை பயன்படுத்தினார். இவரே World Zionist Organization / உலக யூத தாயக இயக்க நிறுவனர் மற்றும் Zionism / யூதவியத்தின் தந்தை எனப்படுபவர். ஹெர்ஸல் – புடபெஸ்ட், ஹங்கேரி நாட்டில் ஒரு செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். 1878ல் வியன்னா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படிக்க சேர்கிறார். பின் 1881ல் ஜெர்மன் மாணவ அமைப்பில் உறுப்பினராகிறார். 1884ல் படிப்பு முடித்து தன் பார்வையை இலக்கியத்தின்பால் திருப்பி கட்டுரைகள், நாடகங்கள் எழுதத் தொடங்குகிறார். அவைகள் வியன்னா, ப்ராக், பெர்லின் மற்றும் நியூயார்க் நகரங்களில் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. 1889ல் திருமணம். அது இனிமையற்று இருந்தாலும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார்.

1891-1895 வரை  Neue Freie Presse என்னும் புகழ் பெற்ற வியன்னா தேச பத்திரிக்கையில் பணி புரிந்தார். அவர் பிரான்ஸ் நாட்டின் சமூக அரசியல்பால் நாட்டம் காட்டினார். 1892ல் பிரான்ஸ் நாட்டில் யூத எதிர்ப்பு புத்தெழுச்சி பெறுவதைக் கண்டு “French Antisemites” என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். பின் 1895ல் Das neue Ghetto நாடகம் மூலம் யூதர்கள் புற சமயத்தார் சமூகத்தில் எற்றுக் கொள்ளப்பட, தன்மயமாக்குவதை, மதம் மாறுவதை கடுமையாக எதிர்த்தார்.  அதே ஆண்டில் Dreyfus trial என்னும் வழக்கில் இராணுவத்தைச் சேர்ந்த அப்பாவி யூத கேப்டன் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டு, கூடியிருந்த மக்கள் “யூதர்களுக்கு சாவைக் கொடு” என்று கோஷமிட்ட போது தான், அவர் மனதில் உலகம் முழுவதும் யூத எதிர்ப்பால் அல்லல்படும் தம் இன மக்கள் யாவர்க்கும் தனி நாடு வேண்டும்! அதுவும் தம் முன்னோர்கள் வாழ்ந்து மறைந்த பூமியாக இருக்க வேண்டும்! என்றும் எண்ணம் கொண்டார். அன்றைய நாட்களில் யூத மக்களிடம் சேவை புரிந்தவர்கள் ரபிமார், மற்றும் பல் துறை அறிஞர்களிடம் தம் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு தேடினார். ஆனால் எளிதில் பலன் கிடைக்கவில்லை. Max Nordau  என்னும் எழுத்தாளர், சமூக விமர்சகர் மட்டுமே இவரை ஆதரித்தார்.

இந்நிலையில் தம் முயற்சியில் தடைகள் இருந்தாலும் 1896ல் Der Judenstaat (The Jewish State) என்னும் சகாப்தமாகவே மாறிய ஆய்வுக் கட்டுரையை புத்தகமாக ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். பின்பு ஹீப்ரு, ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன் மற்றும் ரொமேனிய மொழிகளில் மொழி பெயர்ப்புகள் தொடர்ந்தன. ஹெர்ஸல் தம் புத்தகத்தில் ஐரோப்பா முழுவதும்  சிதறிக் கிடக்கும் யூத மக்களின் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்து, அதற்கான தீர்வு – யூத நாடு ஒன்றே என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். மேலும் நாம் நம் வீட்டுக்கு செல்லும் நேரம் வந்து விட்டது என்றும் கூறினார். அவருக்கு யூத இன எதிர்ப்பால் தம் மக்களுக்கு ஏதோ பெரிய ஆபத்து வர இருக்கிறது என்று முன்னுணர்வு கொண்டிருந்தார். இவரது புத்தகத்திற்கு வரவேற்பும், எதிர்ப்பும் சரியாக இருந்தது. மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூதர்கள் இதை எதிர்த்தனர். ஆனால் யூதவிய (Zionism) ஆதரவாளர்களான டேவிட் வுல்ப்சோன், மாக்ஸ் போடன்ஹய்மர் மேலும் சிலர் தனி நாடு சிந்தனையை வரவேற்று தியோடோர் ஹெர்ஸலை ஒரு நல்ல தலைவராக ஏற்றுக் கொண்டனர். மேலும் இந்த சிந்தனையால் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூத மாணவர்கள் பெரிதும் கவரப்பட்டு அதீத உற்சாகத்தோடு இயங்கத் தொடங்க Zionist Movement / யூத தாயக இயக்கம் பிறந்தது. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பெரும்பான்மை யூதர்களின் ஆதரவு இவ்வியக்கத்திற்கு முதுகெலும்பானது. அவர்கள் ஹெர்ஸலை தம் இரட்சகராகவே பார்த்தனர்.

அது முதல் ஹெர்ஸல் தம் ஆற்றல், ஆதார வளங்கள் அனைத்தையும் யூத தாயக நோக்கத்திற்காகவே செலவிட்டார். இங்ஙனம் யூத மக்கள் மனதில்  தனி நாடு என்னும் விதையை முதன் முதலில் விதைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த போது தம் 44வது வயதில், ஜூலை 3, 1904 அன்று அகால மரணம் அடைந்தார். யூத தாயக இயக்கம் நல்லதொரு தலைவரை இழந்தாலும், யூத இன வரலாற்று பக்கங்களில் ஹெர்ஸல் தம் வாழ்நாளிலேயே மாபெரும் உயரத்தை தொட்டிருந்தார்.