இஸ்ரயேல் 70 

இஸ்ரயேல் என்னும் நாடு மீண்டும் நிறுவப்பட்டது, 1878 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்தப் பதிவில் பரிசுத்த வேதாகமத்தில் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் ஒன்று நிறைவேறிய வரலாற்று தருணங்களில் கர்த்தரின் கரம் செயல்பட்ட விதங்களைக் காண்போம்.

தியோடோர் ஹெர்ஸல் மறைந்தாலும் அவரது  யூத தாயக இயக்கம் உலகம் முழுதும் உள்ள யூதர்களிடம் பேராதரவு பெற்றிருந்தது. பிரிட்டிஷ் அரசு யூதர்களுக்கான தனி நிலம் என்னும் கருத்தை ஆதரித்து Balfour Declaration / பால்ஃபோர் அறிவிப்பை 1917ல் வெளியிட்டது. British Mandate Palestine / பிரிட்டிஷ் மேன்டேட் பாலஸ்தீன் என்ற பெயரில் ஜோர்டான் நதியை மையம்மாக வைத்து பெரிய நிலபரப்பு ஒன்று அங்கீகரிக்கப்பட்டது. அப்பகுதியில் யூத மக்கள் குடியேறத் தொடங்கினர். அன்றைய நாட்களில் அங்கு வசித்த அரேபியர்கள் தங்கள் நிலங்களை யூதர்களிடம் நல்ல விலைக்கு விற்று விட்டுச் சென்றனர். 1921ல் பிரிட்டிஷ் அரசு ஜோர்டான் நதியின் இரு புறங்களையும் பிரித்து மேற்கு பகுதியை பாலஸ்தீன் என்றும் கிழக்கு பகுதியை ட்ரான்ஸ் ஜோர்டான் என்றும் வரை படத்தில் தொடர்ந்து மாற்றங்களை செய்து வந்தது.

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடந்தது. 1917ல் பிரிட்டிஷ் ஜெனரல் எட்மன்ட் அலென்பி, Ottomon Empire / ஆட்டோமான் பேரரசு ஆட்சிக்கு உட்பட்டிருந்த Jerusalem / יְרוּשָׁלַיִם / எருஷலாயீம் நகரத்தை கைப்பற்றினார். ஜெனரல் எட்மன்ட் அலென்பி எருஷலாயீம் நகரத்தை கைப்பற்றிய பின் தன் குதிரையை விட்டிறங்கி Jaffa Gate / யஃப்பா வாசல் வழியாக நடந்து மரியாதை செய்தது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 

1889ல் ஆஸ்திரியா நாட்டில் பிறந்து, 1913ல் ஜெர்மனி தேசத்துக்கு குடிபெயர்ந்து, அரசியல் சதி/ ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு சிறை சென்று, அங்கு Mein Kampf எனும் புத்தகம் எழுதி 1924ல்  சிறைவாசம் முடித்து வெளியே வந்து ஜெர்மனிய தேசியவாதம், யூத இன எதிர்ப்பு, கம்யுனிச எதிர்ப்பு கொள்கைகளை தன் சிறந்த பேச்சாற்றலால் உழைக்கும் சாதாரண வர்க்க மக்களிடம் கொண்டு சென்று 1933ல் மிகப் பெரிய அளவில் தேர்வு செய்யப்பட்ட Nazi Party / நாஜிக் கட்சியின் வேந்தனாக உருவெடுத்து, இரண்டாம் உலகப் போருக்கு காரணமாகவும் ஆகிறான் ஒருவன். அவன் பெயர் Adolf Hitler / அடால்ப் ஹிட்லர். இரண்டாம் உலகப் போர் 1939 முதல் 1945 வரை நடந்தது.

தியோடோர் ஹெர்ஸல் முன்னுணர்வு கொண்டது போலவே பேராபத்து யூத மக்களுக்கு Adolf Hitler / அடால்ப் ஹிட்லர் மூலம் வந்தது. மற்றொரு கோரமான மிகக் கொடூரமான காலமாக இதுவும் வரலாற்று பக்கங்களில் பதிவேறியது. Nazis / நாஜிக்கள் தங்கள் இனவாத அரசியல் கொள்கைகளால் Holocaust / ஹொலகாஸ்ட் என்னும் தீயிலிட்டு பலி கொடுக்கும் கொடூர செயல் மூலம் அறுபது லட்சம் யூத மக்கள்
19331945 கால கட்டங்களில் கொன்று குவித்தனர். ஐரோப்பாவைச் சேர்ந்த மூன்றில் இரண்டு யூதர்களை கொன்றனர். இன்றும் அந்த கோர சம்பவத்தால் மறைந்த தம் இன மக்களுக்காக Yom HaShoah / Holocaust Remembrance Day என்று Nisan / நிசான் மாதம் 27ம் தேதியை அஞ்சலி செலுத்தும் நினைவு  தினமாக கடைபிடித்து வருகின்றனர்.

உலகம் இவ்வாறு கர்த்தர் அனுமதித்த பல்வேறு நிகழ்வுகளால் அலைகழிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது. அமெரிக்காவில் யூதர்களின் தனி நாடு – இஸ்ரயேல் தேசம் என்னும் கோரிக்கைக்கு ஆதரவு எப்படி இருந்தது? அங்கீகாரம் கிடைத்ததா? என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.