குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

ரோஷ் ஹஷானாRosh HaShana – רֹאשׁ הַשָּׁנָה

யூத நாட்காட்டியின் ஏழாவது மாதமான Tishrei / תִּשְׁרֵי / டிஷ்ரேய் மாதம் 1ம் தேதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Rosh רֹאשׁ  ரோஷ்  என்பது தலை, הַ என்பது நிச்சயப் பெயர்சொற்குறி, Shana שָּׁנָה ஷானா என்பது வருடம்.

ரோஷ் ஹஷானா – யூத நாட்காட்டியின் முதல் நாள் / புத்தாண்டு என்று பொருளாகும்.

100 முறை ஒலிக்கப்படும் எக்காளமுழக்கத்தோடு (shofar blasts) ரோஷ் ஹஷானா தொடங்கும்.

இந்த ஆண்டு இன்று செப்டம்பர் 9  மாலை தொடங்கி செப்டம்பர் 11 மாலை முடிய இப்புத்தாண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ரோஷ் ஹஷானா நம்முடைய வேதத்தில் Ezekiel 40:1ல் ஆண்டின் தொடக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலையுதிர் காலம் தொடங்கும் ஏழாவது மாதமான Tishrei / תִּשְׁרֵי / டிஷ்ரேய் மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் இது கொண்டாடப்படும் வழக்கம் உள்ளது. யூத பாரம்பரியத்தின்படி ஆதாம் படைக்கப்பட்ட நாளாக அனுசரிக்கப்படுகிறது.

மேலும் ஒரு விளக்கமாக இம் மாதத்தின் முதல் நாளில் கர்த்தர் ஜீவ புத்தகத்தை  திறக்கிறார் அதனால் யோம் ஹா டின் / Yom HaDin என்ற பெயரும் இதற்குண்டு, பின் பத்தாம் நாளான யோம் கிப்பூர் / יוֹם כִּיפּוּר / Yom Kippur  பாவ நிவாரண நாளன்று மூடி முத்திரை இடுகிறார். இதனாலேயே ரோஷ் ஹஷானா அன்று “May you be inscribed (in the book of life) for a good year” என்று வாழ்த்து சொல்லும் வழக்கம் உள்ளது.

லேவியராகமம் 23ல் கர்த்தருடைய பண்டிகையாக இது Yom Teruah / יוֹם תְּרוּעָה / யோம் டெரூவா என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசை அன்று வரும் ஒரே கர்த்தருடைய பண்டிகை இதுவே. ஏழாம் மாதம் முதல் நாள் தொடங்கி பத்து நாட்கள் சென்று உபவாசம் இருக்கும் Yom Kippur / பாவ நிவாரண நாளாக நிறைவடைகிறது. இந்த நாட்களில் மனிதன் கடந்த ஆண்டில் தான் நடந்து வந்த விதங்களையும், தன்னைத் தானே சுயபரிசோதனை செய்யவும், பாவத்தில் இருந்து விடுபட்டு மனந்திரும்பும் வாய்ப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

எண்ணாகமம் 29ல் – இச்சமயம் எக்காளம் முழக்கமிடும் நாளாக உள்ளது.

இந்நாள் ஹாக் ஷோஃபாரிம்/ חַג שׁוֺפָרִים Hag Shofarim என்றும் அழைக்கப்படுகிறது.

இன்னுமொரு பெயராக யோம் ஹா ஸிக்கரோன்/ יוֹם הַזִּכָּרוֹן / Yom Hazikaron என்றும் அழைக்கப்படுகிறது.

வழக்கங்கள்:

வேதாகமத்தில் உள்ள Genesis 21 , 1 Samuel 1:1-2:10  புத்தகத்தை முதல் நாளில் வாசிப்பது.

வேதாகமத்தில் உள்ள Genesis 22 / Jeremiah 31:2-20  புத்தகத்தை இரண்டாம் நாளில் வாசிப்பது.

Numbers 29:1-6 பகுதிகளை  இரண்டு  நாட்களும் வாசிப்பது.

மேலும் Psalm 81/ Isaiah 27:13 / Jonah / வாசிக்கும் வழக்கமும் உண்டு.

வாரம் முழுவதும் Selichot என்னும் பாவ நிவாரண ஜெபம் செய்வது

யூத ஆலயங்களில் நீண்ட கால ஆராதனைகள், சிறப்பு மன்றாட்டு ஜெபங்கள், பாமாலைகள் பாடப்படும்.

யூத மக்கள் Tashlich என்னும் பாவத்தை புறம் தள்ளும் நதியோர நடை மேற்கொள்வர். அச்சமயம் பாவத்தின் அடையாளமாக ரொட்டித் துண்டுகளை ஓடும் நதியில் தூக்கி எரிந்து தங்கள் பாவங்களை விட்டொழித்ததாக கருதிக் கொள்வர். 

தேனில் நனைத்த ஆப்பிள் பழம், திராட்சை ரசம், மாதுளை பழங்கள் இனிப்பில்  செய்யப்பட்ட பண்டங்களை
உண்ணுவது வழக்கம்.  

SHANA TOVAH / שָׁנָה טוֹבָה