குறிப்பு : இந்த வலைப்பக்கத்தில் எபிரேய வார்த்தைகளின் சரியான உச்சரிப்பு கையாளப்பட்டுள்ளதால் சற்று பொறுமையாக வாசிக்கவும்.

ஹனுக்காHanukkah –  חֲנֻכָּה 

ஹனுக்கா என்றால் எபிரேய மொழியில் அர்ப்பணிப்பு.

யூத நாட்காட்டியின் ஒன்பதாம் மாதமான Kislev / כִּסְלֵו/ கிஸ்லேவ் மாதம் 25ம் தேதி இப்பண்டிகை தொடங்கி எட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இன்று டிசம்பர் மாலை தொடங்கி டிசம்பர் 10 மாலை முடிய கொண்டாடப்படுகிறது.

நமது கிறிஸ்துமஸ் பண்டிகை போன்று இதனை யூதர்களின் கிறிஸ்துமஸ் என்று பொதுவாக அயல் நாடுகளில் குறிப்பாக இஸ்ரயேலிலும், வட அமெரிக்காவிலும் இதனை விமரிசையாகக் கொண்டாடுவர். தற்காலத்தில், புகழ் பெற்ற கனடா மற்றும் வட அமெரிக்காவின் Holiday Season / விடுமுறை காலம் எனும் நடைமுறையில், கிறிஸ்துமஸ் பண்டிகையோடு சேர்த்து  இப்பண்டிகையும் இடம் பெற்றுள்ளது.

வரலாற்றில் இப்பண்டிகையானது நிகழ்ந்த சம்பவத்தின் நினைவாக ஒன்பது தண்டுகளுடன், திரிகளைக் கொண்ட ஹனுக்கியா / Hanukkiah என்னும் விளக்கேற்றி கொண்டாடப்படுகிறது.

Shamash / שמש / சமாஷ் என்பது இதன் எபிரேயப் பெயர் ஆகும்.

இப்பண்டிகை தோன்றிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ள நாம் கத்தோலிக்க திருச்சபை பயன்படுத்தும் வேதாகமத்தில் உள்ள மக்கபே ஆகமம் 1 & 2 / Books of the Maccabees 1 & 2 வாசித்தல் அவசியமாகிறது.

புதிய (உடன்படிக்கையில்) ஏற்பாட்டில் யோவான் 10:22ல் மட்டுமே, “தேவாலயப் பிரதிஷ்டைப் பண்டிகை” / Festival of Dedication என்று வருகிறது. இந்த சமயத்தில் தான் நம் ஆண்டவராகிய இயேசுவின் போதனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய நாட்களில் யூதேயா தேசமானது, அண்டிஓக்கஸ் எஃபிஃபேன்ஸ் / Antiochus Ephiphanes என்னும் சிரியா தேசத்து மன்னனின் ஆளுகையில் இருந்தது. இதனை Seleucid Empire / செலுசிட் பேரரசு என்றும் அழைப்பர்.  கிரேக்க நாகரிகம் எங்கும் நிறைந்திருந்த காலம் அது. யூதர்களில் சிலர் அரசாங்க வேலை, செழிப்பான, வசதியான வாழ்க்கை போன்ற காரணங்களுக்காக கிரேக்க மொழி கற்று இருந்தனர். தம் யூத மரபை மறந்தவர்களாக, துறந்தவர்களாக, Torah/ תּוֹרָה / டோராவின்படி வாழாமல் இருந்தனர். இவர்கள் Hellenists எனப்படுவர்.  

ஒரு இனத்தின் மொழியையும், பண்பாட்டையும் மாற்றிவிட்டால், சிதைத்துவிட்டால், அனைத்தையும் இழந்த அடிமைகளாக அவர்கள் ஆக்கப்படுவர். (எங்கோ இது இப்பொழுதும் நடப்பது போன்று உள்ளதல்லவா?)

கிரேக்க நாகரிகம் – அதன் தாக்கத்தை அதிகப்படுத்தி ஏனைய மக்களையும் அடிமைப்படுத்த அண்டிஓக்கஸ் மன்னன் விரும்பினான், ஆதலால் ஏகப்பட்ட கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தி, அடக்குமுறையைக் கையாண்டு வந்தான். யூத மதத்தை தடை செய்து, ירושלים / Yerushalayim / எருஷலாயீம் தேவாலயத்தில் கிரேக்க கடவுள் Zeus / Ζεύς / ஜூயுஸ்  சிலை நிறுவப்பட்டது. பன்றிகளை பலி செலுத்தவும், உண்ணவும் ஆணை இடப்பட்டது. டோரா கிழித்து எறியப்பட்டது. வழிப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் Olive oil / ஒலிவ எண்ணை பாழ்ப்படுத்தப்பட்டது. Kosher/ כָּשֵׁר / கோஷெர் உணவு பழக்க வழக்கங்கள், விருத்தசேதனம் செய்யவும் தடை செய்யப்பட்டன.

இதனை எதிர்த்து யூதர்கள் கடும் புரட்சி செய்தனர், Mattathias ben Johanan / מַתִּתְיָהוּ הַכֹּהֵן בֶּן יוֹחָנָן / மடிட்யாஹு ஹகொஹென் பென் யோஹனன் என்னும் யூத ஆசாரியன் தன் ஐந்து மகன்களுடன் சேர்ந்து பல போர் தந்திரங்களை பயன்படுத்தி புரட்சி செய்து ஆளும் அரசை திணறடித்தார்.

மடிட்யாஹு இஸ்ரயேல் தேசத்தின் மூன்றாவது (தலைமை ஆசாரியன்) Kohen Gadol / כהן גדול / கொஹென் கடோல் ஆன Phinhas / פִּנְחָס / பின்ஹாஸ்சின் வழித்தோன்றல் ஆவார்.

அவர் மரித்த பின் அவரது மகனான Judah / யூதா தொடர்ந்து தலைமை ஏற்று செலுசிட் பேரரசை எதிர்த்து இரண்டு வருடங்கள் பல ஆக்ரோஷமான தாக்குதல்கள் புரிந்து இறுதியில் எருஷலாயீம் தேவாலயத்தை மீட்டனர். கி.பி. 164, Kislev / כִּסְלֵו / கிஸ்லேவ் மாதம் 25ம் தேதி ஆலயத்தை சுத்திகரித்து இறை ஒப்படைப்பு செய்து மீண்டும் வழிபாடுகள் தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூறும் வகையில் ஹனுக்கா நிறுவப்பட்டது.

யூதா, Judah Maccabee (“Judah the Hammer”) யூதா மக்கபே என்று பெயர் பெற்று இருந்தார். இன்றைய நவீன எபிரேய மொழியாக்கத்தில் Makebet / מקבת / மக்கெபெட் என்றால் சம்மட்டி ஆகும். யூதா போர் மூலம் எதிரிகளை சம்மட்டி அடி அடித்ததைக் கூறும் பெயர் இது.

லேவியராகமம் 23ல் நாம் வாசிக்கும் கர்த்தரின் பண்டிகைகளை விவரிக்கும் வண்ணமாக ஆலய வழிபாட்டில் பயன்படுத்தப்படும் Menorah / מְנוֹרָה /  கொத்து விளக்கு, ஏழு தண்டுகளை உடையது. ஹனுக்கா விளக்கு ஒன்பது தண்டுகளுடையது.

பண்டிகை முதல் நாளில் நடுத் தண்டில் உள்ள விளக்கும் (இதையே Shamash / שמש / சமாஷ் என்பர்), வலமிருந்து இடமாக ஒரு விளக்கும் எற்றுவர். ஒவ்வொரு நாளும் ஒரு விளக்கு வரிசை படி ஏற்றி ஹனுக்காவை கொண்டாடுவர். இது Sephardi Jews / செஃப்ஹார்டி யூத மக்களின் வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒன்பது விளக்கும் ஏற்றுவது Ashkenazi Jews / அஷ்கெனாசி யூதர்களின் வழக்கம். பொதுவாக வீட்டின் வெளியே, Mezuzah / மெசுசாவிற்கு எதிர்புறமாக விளக்கு வைப்பர். ஜன்னல் அருகே வைக்கும் வழக்கமும் உண்டு.

ஆலயத்தை கைபற்றிய சமயம்  Menorah / מְנוֹרָה / கொத்து விளக்கு, ஏற்ற ஒலிவ எண்ணை கையிருப்பு முதல் நாளுக்கு மட்டுமே இருக்க, அதைக் கொண்டு விளக்கேற்றப்பட, அந்த விளக்கானது தொடர்ந்து எட்டு நாட்களும் அணையாமல் ஒளிர்ந்த அதிசியம் ஒரு புனைவாக வரலாற்றில் உள்ளது.

உண்மையாகவே நாமும் நம்மை கர்த்தருக்கு ஒப்படைத்து அவருடைய வார்த்தையினால் பரிசுத்தம் அடைந்து உலகத்தின் இருள் நீக்கும் ஒளியாக மாறும் அதிசியத்தையே மேற் சொன்ன நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

HAPPY HANUKKAH / חֲנֻכָּה שָׂמֵחַ / HANUKKAH SAMEACH