பராஷா லெக் லெகா (முன்னோக்கிச் செல்லுங்கள்): விதியைக் கடந்து

லெக் லெகா (முன்னோக்கிச் செல்லுங்கள்) לֶךְ-לְךָ

ஆதியாகமம் 12:1–17:27; ஏசாயா 40:27– 41:16; மத்தேயு 1:1–17

பராஷா பெயர் 03 லெக் லெகா, לֶךְ-לְךָ

இந்த வார பராஷாவில், கடவுளுடைய கட்டளையின்படி, Abram / אַבְרָם‎‎ / அவ்ராம் கானான் தேசத்தை அடைந்து, அவருடைய தந்தையின் முடிக்கப்படாத பணியை தொடர்வதைப்  பார்ப்போம்.

கடவுளின் உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசம்

வாசிக்கவும் (ஆதியாகமம் 12:6) அவ்ராமும் அவரது மனைவி Sarai / שָׂרָי / சாராயும் புனித பூமியின் முதல் குடியேற்றவாசிகளாக மாறி, தங்கள் உடமைகளை மூட்டை கட்டி, ஷெகேமுக்கு அருகிலுள்ள  אֵלוֹן מוֹרֶה / எலோன் மோரேஹ்ஹில் (நவீன கால நாப்லஸ்) குடியேறினர்.

கடவுள் அவ்ராமுக்கும் அவருடைய சந்ததியினருக்கும் நிலத்தை வழங்குவதாக ஒரு நித்திய வாக்குறுதியை அளித்தார்: (ஆதியாகமம் 12:7)

அந்த நேரத்தில் கானானியர்கள், கானான் பூமியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தாலும், அது ஒரு நாள் அவருடைய சந்ததியினருக்கு – யூத மக்களுக்கு சொந்தமானது என்று கடவுள் அவ்ராமுக்கு உறுதியளித்தார்.

இன்று மத்திய கிழக்கின் அரசியல் நிலைமைக்கு மிகத் தெளிவான தொடர்பு இருப்பதை  நாம் காணலாம்.

தற்பொழுது பாலஸ்தீனியர்கள் இஸ்ரயேலுக்குள் பெரிய நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளனர், இது பல இஸ்ரயேலியர்கள் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை பிளவுபடுத்த வேண்டுமென்று விரும்புகிற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு யூத அரசுக்கு அருகில் ஒரு தனி பாலஸ்தீனிய அரசை நிறுவுவது அமைதியை உருவாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள பலர் இது ஒரு நியாயமான தீர்வு என்று நினைக்கிறார்கள், ஏனெனில் இஸ்ரயேலில் வாழும் சில அரேபியர்கள் அங்கு பல நூற்றாண்டுகளாக வசித்து வருகின்றனர்.

யூத மக்கள் வீணாக தேசத்திற்கு திரும்பியிருக்கிறார்களா என்றும்  சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்.

கடவுள் கொடுத்த நம் நிலத்தை மீண்டும் உரிமை கோருவதற்காக – கண்ணீரின் நதிகளும், இரத்தக் குளங்களும் சிந்தப்பட்டுள்ளன. மலேரியாவால் பாதிக்கப்பட்ட சதுப்பு நிலங்களை வெளியேற்றவும், நகரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், எதிரிகளின் கூட்டங்களுக்கு எதிராக இந்த தேசத்தை பாதுகாக்கவும் தங்கள் உயிரை பணயம் வைத்த அல்லது தியாகம் செய்த அனைவரும் வீணாக செய்தார்களா?

யூத மக்கள் நாடுகடத்தப்பட்ட நாடுகளில் 2,000 வருட துன்புறுத்தல்கள் – படுகொலைகள் மற்றும் விசாரணைகள் மற்றும் Holocaust / ஹோலோகாஸ்ட் போன்றவற்றில் கூட அழிக்கப்பட்ட அச்சுறுத்தலில் இருந்து தப்பித்து, இறுதியாக தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசத்திற்குத் திரும்பியது, வெறுப்பால் உருவான பைத்தியங்கள், மத தீவிரவாதிகள்! போன்றோரால் இறுதியாக திரும்பவும் வெளியேற்றப்படத்தானா?.

இது கடவுள் தனது உடன்படிக்கையை மீறினால் மட்டுமே ஆகும்.

கடவுள் அவ்ராமுக்கு அளித்த வாக்குறுதியை விட அதிகமாக செய்தார். அவ்ராமின் சந்ததியினருக்கு ஈசாக் மற்றும் யாக்கோபின் மூலம் இந்த நிலத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுக்க அவர் ஒரு இரத்த உடன்படிக்கை செய்தார்:

அவ்ராமுக்கு:  (ஆதியாகமம் 17:7–8) ஈசாக்கிற்கு: (ஆதியாகமம் 26:3) யாக்கோபுக்கு: (ஆதியாகமம் 28:13-14)

கடவுளுடன் இந்த உடன்படிக்கையை நிறுவ அவ்ராம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. உண்மையில், ஆதியாகமத்தின் 15ஆம் அதிகாரத்தில், அவ்ராம் அளித்த விலங்குகளின் வழியாக கடவுள் மட்டுமே நடந்தார், அவ்ராமுடன் அவர் வெட்டிய உடன்படிக்கை நிபந்தனையற்றது என்பதைக் குறிக்கிறது.

அவ்ராம் அவருடன் உடன்படிக்கை செய்தபோது கடவுள் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தியிருந்தார், அநேகமாக அதன் நிபந்தனையற்ற தன்மையை வலியுறுத்துவதற்கும், அவ்ராம் அதன் வழியாக நடப்பதைத் தடுப்பதற்கும் (ஆதியாகமம் 15:8-20). பண்டைய உடன்படிக்கை நடைமுறைகளில், இரு தரப்பினரும் காணிக்கை அளிப்பது நிபந்தனையாக இருந்தால் அதை நடத்துவார்கள்.

கடவுளின் நித்திய வாக்குறுதியை அறிவிக்கும் பல வேதவசனங்களுடன், இந்த நிலத்திற்கான நம் ஆதரவும், கூற்றும் வெறும் அரசியல் அல்ல, ஆனால் அது தெய்வீக உரிமை.

நிச்சயமாக, கடவுளின் வார்த்தைக்கு பெரும் எதிர்ப்பு உள்ளது. கானானியர்கள் தங்கள் ஆயுதங்களையும் கூட்டாளிகளையும் வைத்திருந்தார்கள், இன்று இஸ்ரயேலின் எதிரிகளும் இருக்கிறார்கள்; இருவரும் நிலத்தை தங்கள் சொந்தமாகக் கோருவதற்கான முயற்சிகளில் சில தற்காலிக வெற்றிகளைப் பெற்றனர், ஆனால் இறுதியில், கடவுள் அந்த நிலத்தை சொந்தமாகக் கொண்டுள்ளார், மேலும் அவர் விரும்பியவர்களுக்கு அதைக் கொடுக்க முடியும். அவ்ராமுடனான அவருடைய நித்திய உடன்படிக்கை நிற்கும்.

முதல் எபிரேயராக நிலத்தை நடப்பது

வாசிக்கவும் (ஆதியாகமம் 13:17)

தேசத்தின் நீளத்தையும் அகலத்தையும் நடக்க கடவுள் அவ்ராமுக்குக் கட்டளையிட்டபோது, ​​அது ஒரு சுற்றுலாப் பார்வைக்கு மட்டும் அல்ல; பண்டைய காலங்களில் ஒரு சொத்தின் உரிமையை அதன் வழியாக நடப்பதன் மூலம் அது சட்டப்பூர்வமாக தனதானது எனும்  வழக்கத்தை நிறுவுகிறது.

எகிப்திய மற்றும் ஹிட்டைட் மன்னர்கள் தங்கள் பிரமாண்டமான அரண்மனைகளை விட்டு வெளியேறி, தங்கள் கிராமப்புறங்களில் சடங்கு நடைப்பயணத்தை மேற்கொள்வார்கள். அப்படிச் செய்து இது தங்களது என்பதை உறுதிபடுத்திக் கொள்வார்கள்.

மெசொப்பொத்தேமியாவில், பண்டைய பதிவுகளின்படி, ஒரு சொத்தை விற்பவர் தனது கால்களை நிலத்திலிருந்து தூக்கி, வாங்குபவர்களை அதன் மீது கால் வைப்பார். இது வேதாகமத்தின் கலாச்சார சூழலை மேலும் விளக்கக்கூடும், அதில் கடவுள் யோசுவாவுக்கு வாக்குறுதி அளிக்கிறார். “நான் மோசேக்கு வாக்குறுதியளித்தபடி, நீங்கள் கால் வைத்த எல்லா இடங்களையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.” (யோசுவா 1:3)

சட்டப்படி, அவ்ராம் தேசத்தின் நீளத்தையும் அகலத்தையும் நடந்து சென்றபோது, ​​அதை தனக்கும் தன் சந்ததியினருக்கும் ஒரு நித்திய உடைமையாக எடுத்துக் கொண்டார்.

ரபீக்கள் அவ்ராமின் நிலத்தின் வழி கால் நடையை வாசனை திரவியத்துடன் ஒப்பிட்டுள்ளனர், இது நகரும் போது மட்டுமே நறுமணத்தைத் தருகிறது, வாக்குறுதியளிக்கப்பட்ட தேசம் முழுவதும் விசுவாசத்தின் மணம் வீசுகிறது என்று  பொருள் தருகின்றனர்.

நோவாக்  கடவுளோடு “நடந்தார்”; அவ்ராம் கடவுளுக்கு முன்பாக நடந்து, ஒரு உண்மையான கடவுள்மீது நம்பிக்கை பற்றிய அறிவை உலகம் முழுவதும் வர வழி செய்தது.

எல்லைகளைக் கடக்கும் திறனை அவ்ராம் கொண்டிருந்தார்: அவர் மெசொப்பொத்தேமியாவிலிருந்து கானானுக்குச் சென்றது மட்டுமல்லாமல், சிலை வழிபாட்டு உலகத்திலிருந்து தைரியமாக ஒரு உண்மையான கடவுளை வணங்கிய ஒரு உலகத்திற்குச் சென்றார். உலகம் ஒருபுறம் நின்றது, அவர் மறுபுறம் உண்மையுடன் நின்றார்.

அவர் தனது விதியைக் கடந்தார், அவருடைய சந்ததியினர் வெகுமதியையும் ஆசீர்வாதத்தையும் பெற்றனர்.

இந்த காரணத்திற்காக, அவ்ராம் ஒரு Ivri / ஈவ்ரி என்று அழைக்கப்பட்ட முதல் நபராக ஆனார். இந்த வார்த்தை எபிரேய வினைச்சொல்லான לַעֲבוֹר / லா அவோர் (கடக்க) என்பதிலிருந்து வந்தது, இது மொழியாக ஆங்கிலத்தில் “ஹீப்ரு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எனவே, லெக் லெகா டோராவின் மிக அற்புதமான அத்தியாயங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது கடவுளோடு முதல் எபிரேயரின் சாகசங்களை விவரிக்கிறது.

அவருடன் நம் வாழ்க்கையில் ஒரு புதிய, அற்புதமான சாகசமாக நாம் “கடந்து செல்லும்” வாழ்க்கையை மாற்றும் இடத்திற்கு வருவோம்.

லெக் லெகா: நம்மைக் கண்டுபிடிப்பது மற்றும் அழைப்பைக் கேட்பது

யூத (Mysticism) மாயவாதத்தின் ஒரு பழங்கால புத்தகமான Zohar / சோஹர், இந்தப்  பராஷாவின் ஆரம்ப வார்த்தைகளான லெக் லெகாவை “நீங்களே செல்லுங்கள்!” என்று விளக்குகிறது.

லெக் என்றால் போ, செல்; லெகா என்பது உனக்கு, உங்களுக்கு ஆக “தன்னகத்தே செல்” என்பது இதன் பொருள்.

ஆகையால், யூத Metaphysics / மீமெய்யியல் சிந்தனையின்படி, வாழ்க்கையின் முதல் முக்கியமான படியாக, நம்முடைய சொந்த சுயத்திற்குள் சென்று கடவுள் நம்மை யாராக இருக்க அழைத்தார் என்பதைக் கண்டுபிடிப்பதும், வாழ்க்கையில் நம்முடைய உயர்ந்த நோக்கத்தைக் கண்டுபிடிப்பதும் ஆகும்.

கடவுளால் கொடுக்கப்பட்ட ஊழினை நாம் உணர்ந்தவுடன், தெய்வீக அழைப்பைக் கேட்கும்போது, லெக் லெகா! (வெளியே செல்லுங்கள்), நம் வெளிப்புற உலக பயணத்தை சரியான நோக்கம் மற்றும் தைரியத்துடன் தொடங்கலாம்.

அவ்ராம் ராஜாக்களின் போரில் வெற்றி பெறுகிறார்

வாசிக்கவும் (ஆதியாகமம் 13:7)

ஆதியாகமத்தின் 13ஆம் அதிகாரத்தில், அவ்ராமும் அவருடைய மருமகன் லோத்தும் மிகவும் செல்வந்தர்களாகிவிட்டார்கள். அவற்றின் மந்தைகள் மிகப் பெரியவை, அவை அனைத்தையும் நிலம் ஆதரிக்க முடியாது. (ஆதியாகமம் 13:6)

இதன் விளைவாக, அவ்ராம் மற்றும் லோத்தின் மேய்ப்பர்களுக்கு இடையே சச்சரவு ஏற்படுகிறது. நிலைமை பெரிதாகும் முன், அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்கிறார்கள்.

அவ்ராம் அவருக்கு அந்தப் பகுதியின் முதல் தேர்வை வழங்கும்போது, ​​லோத் தனக்குத்தானே சிறந்ததைத் தேர்வு செய்கிறான், அதற்கு பதிலாக அவனை ஒரு மகனைப் போலவே நடத்திய மாமா, சிறந்ததை எடுத்துக் கொள் என்று லோத்தை வற்புறுத்துகிறார்.

மற்றோரு பொருள் – அவ்ராம் வயதின் காரணமாக அருகில் இருந்த இடத்திலேயே கூடாரமிட வசதியாக லோத் தொலை தூரம் சென்று கூடாரமிட, அப்பகுதி சற்றே செழிப்பான பூமியாக இருந்தது என்பதே ஆகும்.

சோதோம் மற்றும் கொமோராவுக்கு அருகிலுள்ள யோர்டானின் பச்சை, வளமான சமவெளிகளை லோத் தேர்வு செய்கிறார், அவ்ராம் மம்ரே (ஹெப்ரான்) சமவெளிக்கு செல்கிறார். (ஆதியாகமம் 13:10–11)

மலையின் மறுபுறத்தில் புல் பசுமையாக இருந்தாலும், உண்மையில் அது சிறந்தது என்று அர்த்தமல்ல, அவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்றும் அர்த்தமல்ல.

இணைந்திருந்தவர்கள் பிரிந்தவுடன், நான்கு சக்திவாய்ந்த ராஜாக்கள் சோதோம் அனைத்தையும். லோத் உட்பட கைப்பற்றும்போது லோத்துக்கு அவ்ராமின் உதவி தேவைப்படுகிறது. அவ்ராம் 318 ஆட்களைக் கொண்ட ஒரு சிறிய படையைச் சுற்றி வளைத்து சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கிறார்: (ஆதியாகமம் 14: 15-16)

இராஜாக்களின் போரில் அவ்ராம் இராணுவ வலிமையையும் வீரத்தையும் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தனது மருமகன் லோத்துக்கு மிகுந்த சுய தியாகத்தையும் தயவையும் காட்டினார். மிகச் சிறிய இராணுவத்துடன், நான்கு மன்னர்கள் மற்றும் அவர்களது படைபலம் அதிகமாக இருந்தாலும் அவ்ராம், தனது மருமகனைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்தார்.

இந்த வீரம் தான் இன்றைக்கு இஸ்ரேலிய தற்காப்புப் படை (ஐ.டி.எஃப்) படையில் தற்காலத்தில் வெளிபடுகிறது.

அவ்ராமைப் போலவே, ஐ.டி.எஃப் படையினரும் போருக்குள் நுழைவதால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு அஞ்சுவதில்லை, இஸ்ரயேலிய குடும்பங்களை தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடினும் எதிரிகளோடு அயராது போரிட்டு, பாதுகாத்து வருகின்றனர்.

இஸ்ரயேலுக்காக ஜெபிப்போம்.

 அவ்ராமின் ஊழ்வினை –  நித்திய இரட்சிப்பு

பராஷா லெக் லெகா  75 வயதிலிருந்து 99 வயது வரை அவ்ராமின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அதாவது, அவர் தனது ஊழ்வினையை உண்மையிலேயே அறியாமலேயே வாழ்ந்தார் – பெயர் மாற்றத்திற்கு வழிவகுத்த ஒரு உடன்படிக்கை மூலம் கடவுள் அதை அவருக்கு வெளிப்படுத்தும் வரை. இஸ்ரயேல் என்ற மகன் மூலமாக அதன் நிறைவேற்றத்தைக் காணத் தொடங்குவதற்கு முன்பே அவ்ராம் நீண்ட வருடங்கள்  காத்திருந்தார்.

இந்தப் பராஷாவில், கடவுள் அவரிடம், “இனி உன்  பெயர் அவ்ராம் / אַבְרָם என்று அழைக்கப்படமாட்டாது, ஆனால் உன் பெயர் அவ்ராஹாம் / אַבְרָהָם ; நான் உன்னை பல தேசங்களின் [அல்லது புறஜாதியார் —אַב-הֲמוֹן גּוֹיִם] தந்தையாக ஆக்கியுள்ளேன். ” (ஆதியாகமம் 17:5)

ஒரே ஒரு எபிரேய எழுத்தை சேர்த்துக் கொண்டால் – ஹே (ה) என்ற எழுத்து  – அவ்ராம் (மேன்மையான தந்தை) அவ்ராஹாம் ஆனார் – (பல நாடுகளின் மேன்மையான தந்தை.)

ה என்ற எழுத்து பெரும்பாலும் கடவுளின் பெயருக்கான சுருக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கடவுளின் தனிப்பட்ட பெயரில் இரண்டு முறை காணப்படுகிறது. ஆகவே, இந்த எழுத்தை அவ்ராமின் பெயரில் சேர்ப்பதன் மூலம், அவ்ராமின் இயல்பு, தன்மை மற்றும் விதிக்கு கடவுள் தன்னை அப்பா தந்தையாக சேர்த்துக் கொண்டார்.

அவ்ராமின் மனைவியின் பெயருக்கு  ה / ஹே  என்ற எழுத்தை சேர்ப்பதன் மூலம், அது שָׂרָי / சாராய் (என் இளவரசி) என்பதிலிருந்து  שָׂרָה / சாராஹ் (முழு உலகத்தின் இளவரசி) என மாற்றப்பட்டது.

இந்த காரணத்திற்காக, பெயரின் மாற்றம் ஒருவரின் விதியை மாற்றும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது.

கடவுள் அவ்ராஹாமுக்கு, இஸ்ரயேல் தேசத்திற்கு வாக்குறுதி அளித்தது மட்டுமல்லாமல், அவர் ஜாதிகளுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருப்பார் (ஆதியாகமம் 12: 2; 18:18; 22:17-18; 26:3-4).

இன்று, இஸ்ரயேல் தேசத்தின் மூலம் அவ்ராஹாமுக்கு அளித்த இந்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்ற எண்ணற்ற வழிகள் உள்ளன. இஸ்ரயேலின் தொழில்நுட்ப, விவசாய மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவுகின்றன.

ஆனால் இந்த வாக்குறுதியின் மிகவும் அர்த்தமுள்ள நிறைவேற்றம் என்பது யூத மக்கள் உண்மையாகப் பாதுகாத்து உலகுக்குக் கொண்டுவந்த கடவுளுடைய வார்த்தையாகும், அதேபோல் ஆண்டவர் இயேசு மேசியா மீது நம்பிக்கை கொண்டு நித்திய இரட்சிப்பும்:

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; தேவன், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே, அழியாததும், மாசு இல்லாததும், மகிமை குறையாததுமாகிய, சுதந்திரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாவதற்கு, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மீண்டும் பிறக்கச்செய்தார். கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாயிருக்கிற இரட்சிப்பிற்குரிய விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சொத்து பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது(1 பேதுரு 1: 3–5)

அவ்ராஹாம், ஈசாக் மற்றும் யாக்கோபின் நேரடி வம்சாவளியாகிய ஆண்டவர் இயேசு மூலமாக அவ்ராஹாம் ஏராளமான தேசங்களின் (புறஜாதி தேசங்கள்) தந்தையாக மாறுவதற்கான கடவுளின் விதி குறிப்பிடத்தக்க வகையில் நிறைவேற்றப்படுகிறது (மத்தேயு 1: 2).

ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள். (கலாத்தியர் 3: 27-29)

Prev
Next