பராஷா நோவாக்: நோவாக்கின் நம்பிக்கை

பராஷா பெயர் 02 நோவாக் , נֹחַ

இந்த வாரம், நாம் மோஷேயின் முதல் புத்தகத்திலிருந்து நோவாக் எனும் விவிலிய பாத்திரத்துடன் நமது ஆய்வைத் தொடர்கிறோம்— அவருடைய தலைமுறையின் ஒரே நீதிமான். (ஆதியாகமம் 6:9)

நோவாக்: ஒரு நீதிமான்

எபிரெய வேதாகமம் நோவாக்கை ட்ஸ்சாடீக் צַדִּיק / நீதிமான் மற்றும் תָּמִים / டாமீம் தூய்மையான, அப்பாவி, முழுமையான மற்றும் குறைபாடற்ற) என்றும் விவரிக்கிறது.

நோவாக் வாழ்ந்த காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்களில் இருந்து அதற்கு நேர் மாறான நன்நெறிகளுடன் வாழ்ந்த மனிதராக நமக்கு அறிமுகமாகிறார். ஆறு அத்தியாயங்கள் உள்ளாகவே உலகம் வன்முறை மற்றும் ஊழல்களால் நிரம்பி காணபட்டது என்று வேதாகமம் விவரிக்கிறது.

நோவாக்கையும் அவருடைய குடும்பத்தினரையும் தவிர மற்ற அனைவரையும் அழிப்பதாக கடவுள் முடிவு செய்தார். இந்த ஆறு பேரும் அற்புதமாக ஒரு பெட்டியில் காப்பாற்றப்படுவார்கள் என்றும் தேவ திட்டம் வெளிப்படுகிறது.

வரவிருக்கும் பிரளயத்திற்கு எந்த சாத்தியமும், ஆதாரமும் இல்லை என்றாலும் நோவாக் கடவுளுக்கு கீழ்ப்படிந்தார்.

அந்த காரணத்திற்காக, எபிரெயர் புத்தகத்தில் நோவாக்கை நம்முடைய விசுவாச நாயகர்ளில் ஒருவராக நாம் வாசிக்கிறோம். (எபிரெயர் 11: 7)

கடவுள் மீது நோவாக்கின் முழுமையான நம்பிக்கை, சமரசமற்ற கீழ்ப்படிதலின் விளைவாக, அவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட ஓய்விடத்திற்குப் புக முடிந்தது.

உண்மையில், எபிரேய மொழியில் נֹחַ / நோவாக் என்றால் “ஓய்வு” என்று பொருள்.

அவர் சூழ்நிலையில் “தனது சொந்த புரிதலில் சாய்ந்த” ஒரு மனிதர் அல்ல, கர்த்தருடைய வார்த்தையில் முழு மனதுடன் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்த மாந்தராவார்.

கடவுளுடைய வார்த்தையை நம்புவதற்கும் கீழ்ப்படிவதற்கும் நாம் கற்றுக்கொள்ளும்போது, இந்த அமைதி மற்றும் ஓய்வெடுக்கும் இடத்திற்கு வருவோம். கடவுளின் கட்டளைகளுக்கு இணங்குவதற்கு முன்பு, எல்லாவற்றையும் நியாயப்படுத்த முயற்சிக்கிறோம், ஏதாவது அர்த்தமுள்ளதா அல்லது நம் இறையியலுடன் உடன்படுகிறதா என்பதையும் உறுதிசெய்கிறோம். (எபிரெயர் 4:11)

பெரும் வெள்ளம்

இந்தப் பராஷாவில், கடவுள் நோவாக்கை,  ஒவ்வொரு வகையான விலங்கு ஜோடிகளை கொள்ளும் திறனளவு கொண்ட ஒரு பெரிய பெட்டியை (எபிரேய மொழியில் תֵּבָה / டவாஹ் என அழைக்கப்படுகிறது) கட்ட அறிவுறுத்துகிறார். பெட்டியில் காப்பாற்றப்பட்டவர்களைத் தவிர பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் அழித்துவிடும் ஒரு பயங்கரமான நீர் பிரளயம் வரப்போகிறது,

மனிதகுலத்தின் ஊழல் குறித்து கடவுளின் வருத்தம் மிகவும் கடுமையானது, ஆரம்பத்தில் இருந்தே மீண்டும் தொடங்க, நோவாக்குடன் தனது உடன்படிக்கையை நிறுவ முடிவு செய்தார் – (ஆதியாகமம் 6: 17-19)

நாம் ‘பெட்டி’, ‘பேழை’ என்பதற்கு ‘படகு’ என்ற சொல் கொண்டு புரிந்து மேலும் தொடர்வோம்.

நோவாக்கின் தொழில் படகு கட்டுவது அல்ல, மேலும் அந்த வேலை என்பது எளிதல்ல.

அவர் தண்ணீரில் மிதந்து எல்லாவற்றையும் உலர வைக்கும் பொருட்டு படகு கட்டி அதை உள்ளேயும் வெளியேயும் கீல்(தார்) பூசி முத்திரையிட வேண்டும்.

அவ்வாறான படகு செய்வதற்கு ஒரு உயர் தரமான கைவினைத்திறன் தேவைப்படுகிறது, மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானம், கடவுளிடமிருந்து நோவாக்கிற்கு கிடைப்பதும் அவசியமாக உள்ளது.

மேலும் வியக்க வைக்கும் விலங்குகளின் வரிசையையும், பெரிய அளவிலான முன்னேற்பாடுகளையும், கொண்டு செல்ல படகு மட்டுமல்ல, 40 நாட்கள் மற்றும் 40 இரவுகளுக்கு மழையைத் தாங்க வேண்டும். மழை நின்ற பிறகும், நீர் குறைவதற்கு மேலும் 150 நாட்கள் கடக்கும்.

கடவுளின் உத்தரவுப்படி படகு செய்து பெருவெள்ளத்தில் தப்பித்து பயணிக்க, படகு இறுதியாக அராரத் மலையில் கரை ஒதுங்கியது. பறவைகளின் நடத்தையை கவனிப்பதன் மூலம் படகை விட்டு வெளியேறுவது எப்போது பாதுகாப்பானது? என்பதை, தீர்மானிக்க, நோவாக் ஒரு முறையை வகுக்கிறார்.

அவர் ஒரு காக்கையை அனுப்புகிறார் அது கால் பதிக்க இடம் கிடைக்காது திரும்பி வருகிறது. ஒரு வாரம் கடந்து அவர் ஒரு புறாவை அனுப்புகிறார். காக்கை செய்தபடியே அது மீண்டும் வருகிறது.

பின்னர், நோவாக் மீண்டும்  புறாவை அனுப்புகிறார், அது ஒரு ஒலிவ மரக் கிளையுடன் திரும்பும்போது, தாவரங்கள் மீண்டும் வளரத் தொடங்குவதற்கு நீர் போதுமான அளவு வறண்டு போயிருப்பதை அவர் அறிந்து கொள்கிறார். நோவாக்  மீண்டும் புறாவை அனுப்புவதற்கு இன்னொரு வாரம் கடந்து செல்கிறது. அது திரும்பி வராதபோது, படகில் இருந்து வெளியேறுவது பாதுகாப்பானது என்று அவர் புரிந்துகொள்கிறார்.

படைப்பை நினைவூட்டும் ஒரு காட்சியில், நோவாக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வெளியே சென்று பூமியை நிரப்பும்படி பலுகிப் பெருகவேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகிறார். கடவுள் முதலில் காய்கள், பச்சை மூலிகைகள், பழங்கள் முதலியவற்றை உண்ணக் கொடுத்தது போலவே, இப்போது மனிதகுலத்தை விலங்குகளின் மாமிசத்தை சாப்பிட அனுமதிக்கிறார்; ஆயினும்கூட, இரத்தத்தை சாப்பிடுவதை கடவுள் தடைசெய்கிறார்.(ஆதியாகமம் 9: 3-4)

கடவுள் கொலைக்கான மரண தண்டனையையும் விதிக்கிறார், கடவுளின் சாயலில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் மேலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்றது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட இவ்வாறு நிறுவுகிறார். மற்றவர்களைப் பார்க்கும்போது, சர்வவல்லமையுள்ள கடவுளின் சாயலிலும், ஒற்றுமையிலும் அவை படைக்கப்பட்டவை என்பதை நாம் காண வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு நினைவூட்டுகிறது. (ஆதியாகமம் 9: 6)

வானவில்: உடன்படிக்கையின் அடையாளம்

நோவாக்கும் அவருடைய குடும்பத்தினரும் படகை விட்டு வெளிவந்த பிறகு, அவர்கள் படகில் சுமந்த தூய்மையான விலங்குகளை காணிக்கையாக கடவுளுக்கு பலியிட்டார்கள்.

மனிதனின் துன்மார்க்கத்தினால் பூமியை மீண்டும் ஒருபோதும் சபிக்க மாட்டேன் என்றும், வெள்ளத்தினால் சேதம் கொண்டு வந்தது போல பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் சுவாசிக்கும் உயிரினங்களை மீண்டும் ஒருபோதும் அழிக்க மாட்டேன் என்றும் கடவுள் நோவாக்கு வாக்குறுதி அளித்தார்: (ஆதியாகமம் 8:21)

பூமியிலுள்ள அனைவருடனும் உடன்படிக்கையின் அடையாளமாக OT BRIT / אוֹת בְּרִית / ஓட் ப்ரீத் கடவுள் வானத்தில் வானவில் ஒன்றை அமைத்தார்: ஆதியாகமம் 9:13

கடவுள் செய்த ஒரே உடன்படிக்கை இதுவல்ல. மற்ற உடன்படிக்கைகளும் பின்பற்றப்பட வேண்டும், ஒவ்வொன்றும் அதன் சொந்த அடையாளத்துடன் (OT) வருகிறது. אַבְרָהָם / அவ்ராஹாம் உடன்படிக்கையின் அடையாளம் எட்டாவது நாளில் அனைத்து ஆண் குழந்தைகளையும் விருத்தசேதனம் செய்வது. ஏழாம் நாள் ஷப்பாத்தை கடைப்பிடிப்பதே מֹשֶׁה / மோஷே உடன்படிக்கை.

 ஆண்டவர் இயேசுவானவர் புதிய உடன்படிக்கையில் – Brit Chadasha בְּרִית חֲדָשָׁה ப்ரீத் கடாஷாவில் ஒருவருக்கொருவர் நாம் அன்பு செலுத்துவது என்பது டோரா நம் இதயத்திலும், மனத்திலும் எழுதப்பட்டிருக்கிறது என்றும் அவர் மீதான விசுவாசத்தின் பெரிய அடையாளமாகவும் இருக்கிறது என்றும் கூறுகிறார்: (யோவான் 13:35)

ஹாமின் தலைமுறை சாபம்

படகை விட்டு வெளியேறிய பிறகு நோவாக் ஒரு திராட்சைத் தோட்டத்தை அமைத்தார். அவர் நீதிமான் என்றாலும், மதுவருந்தி குடிபோதையில் இருந்தார், தனது கூடாரத்தில் நிர்வாணமாக படுத்துறங்கியதை, அவருடைய மகன் ஹாம் கண்டார்.

அவரது இரண்டு மகன்களான ஷேம் மற்றும் யாஃபெத் ஆகியோர் தங்கள் தந்தையால் ஆசீர்வதிக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் பின்னோக்கி நடந்து சென்று அவரது நிர்வாணத்தை மூடினர்; இருப்பினும், நோவாக்கின் மகன் ஹாம் தனது தந்தையை அவமதித்ததற்காக தண்டிக்கப்பட்டார்.

இது நம் குழந்தைகள் அனைவருக்கும் ஒரு வலுவான படிப்பினை. நம் தாயையும் தந்தையையும் மதிக்க வேண்டும் என்ற கட்டளையானது  நாம் நீண்ட மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வோம் என்ற வாக்குறுதியுடன் வருகிறது. (யாத்திராகமம் 20:12)

பெற்றோரை சரியாக மதிக்க குழந்தைகளுக்கு கற்பிப்பது அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கிறது.

நோவாக்கின் குடும்பத்தினர் அனைவரும் உடல் ரீதியாக காப்பாற்றப்பட்டாலும், ஒவ்வொருவரும் ஆன்மீக இரட்சிப்பின் வழியைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது – இது இதயத்தின் மாற்றமாகும். ஷேம் மற்றும் யாஃபெத் சரியான இதயத்தையும் சரியான ஆவியையும் காட்டினர், அதே நேரத்தில் அவர்களின் சகோதரர் ஹாம், அவரது இதயம் மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைக் காட்டினார்.

ஹாம் மீதான இந்த சாபம் அவருடன் முடிவடையவில்லை, ஆனால் தலைமுறைகள் மீது சுமையாகக் கடத்தப்பட்டது.

நமக்குத் தெரியாமல் நம் குடும்பத்தின் தலைமுறை பாவங்களிலிருந்து நம் வாழ்வின் மீது சாபங்களை நாம் அறியாமல் கொண்டு செல்லலாம். நம் ஆண்டவர் இயேசுவின் பரிகார இரத்தம், இந்த சாபங்களை உடைக்கும் சக்தியைக் கொண்டுள்ளது. நம்முடைய எல்லா பாவங்களுக்கும் விலை கொடுத்தது, மீட்டது, எவ்வாறாயினும், குமாரனில் நம்முடைய சுதந்திரத்தில் நாம் பெற வேண்டும், அறிவிக்க வேண்டும், நடக்க வேண்டும்.

ஹாமின் மகன்களில் ஒருவர் குஷ். அவரது மகன் நிம்ரோட் – பாபிலோனிய (நவீன ஈராக்) இராஜ்யத்தைத் தொடங்கினார். நிம்ரோட் பொல்லாத நகரமான நினிவேயையும் கட்டினார், மனந்திரும்புதலைப் பிரசங்கிக்க கடவுள் யோனாவை அனுப்பினார்.

பாபிலோனில் (ஈராக்) உள்ள ஷினார் நிலத்தில் ‘பாபெல்’ கோபுரம் கட்டப்பட்டது. எபிரேய மொழியில், ‘பாபெல்’ என்றால் குழப்பம் என்று பொருள்.

உலக மக்கள் பாபெல் கோபுரத்தைக் கட்டும் இலக்கில் ஒன்றிணைந்தனர், ஆனால் அவர்களின் நோக்கங்கள் கடவுளுக்கு எதிரான கட்டுப்பாட்டிலும், கிளர்ச்சியிலும் நிறுவப்பட்டன.

அவர்கள் தங்கள் விதியைக் கட்டுப்படுத்த விரும்பினர். (ஆதியாகமம் 11: 4) இதன் விளைவாக, தீமை செய்ய மனிதகுலம் ஒன்றுபடுவதிலிருந்து காப்பாற்ற, அவர்களின் படைப்புகளை அழிக்க அவர்களின் மொழிகளில் குழப்பத்தை ஏற்படுத்த கடவுள் கட்டாயப்படுத்தப்பட்டார். (ஆதியாகமம் 11:7)

அவர்கள் கடவுளை நம்பாமல் தங்கள் சொந்த எதிர்காலத்தைப் பாதுகாக்க; பூமியெங்கும் சிதறடிக்கப்படுவதும், பிளவுபடுவதும் நேராமல் இருக்க, முயன்றபோது, பயந்தது போல் நேர்ந்தது என்பது தான் முரண்.(ஆதியாகமம் 11: 8)

நாம் செய்யும் எல்லாவற்றிலும், நாம் “நமக்காக ஒரு பெயரைக் கட்டமைக்க” முயற்சிக்கிறோமா அல்லது தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறோமா என்பதைப் பார்க்க, நமது நோக்கங்களை ஆராய வேண்டும். தூய்மையற்ற நோக்கங்களுடன் கட்டப்பட்டவை அனைத்தும் தீர்ப்பு நாளில் அழிக்கப்படும்.

இருப்பினும், நாம் கவனிக்கத் தவறவிடக்கூடாத ஒரு கொள்கை இங்கே ஒன்று உள்ளது: மக்கள் இதயம், மனம் மற்றும் நோக்கம் ஆகியவற்றின் ஒற்றுமையில் செயல் புரியும் போது – அவர்களுக்கு கூடாதது எதுவுமில்லை! (ஆதியாகமம் 11: 6)

அத்தகைய ஒற்றுமை ஒரு சக்திவாய்ந்த சக்தி என்பதை கடவுளும் ஒப்புக்கொள்கிறார்.

பிளவு மற்றும் வெற்றி என்ற தந்திரத்திற்கு நாம் அடிபணியும்போது, பலவீனம் மற்றும் தோல்விக்கு நாம் அடிபடுகிறோம். அதனால்தான் தேவாலயங்கள், குடும்பங்கள் மற்றும் திருமணங்களில் பிளவுகளை ஏற்படுத்த நம் ஆன்மாக்களின் எதிரி கூடுதல் நேரம் வேலை செய்கிறான்.

நீதியிலும் தெய்வபக்தியிலும் வேரூன்றிய ஒற்றுமையில்தான் கடவுள் தம்முடைய ஆசீர்வாதத்தைக் கட்டளையிடுகிறார்: (சங்கீதம் 133: 1, 3)

விசுவாசிகள் அன்பினால் தூண்டப்பட்டு கடவுளின் நோக்கங்களில் ஐக்கியமாக இருக்கும்போது அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அன்பின் மொழி

பாபெல் மக்களிடையே இத்தகைய ஒற்றுமையை உருவாக்கியது எது? அவர்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர்.

பாபெல் கோபுரத்தை கட்டும் முழு வேலையையும் அழிக்க தேவையான ஒரே விஷயம், அவர்களின் தகவல்தொடர்புக்கு இடையூறு விளைவிப்பதாகும்.  

ஆனால் தகவல் தொடர்பு என்பது நாம் பேசும் மொழி அல்லது பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டது மட்டுமல்ல.

கேரி சாப்மேன் எழுதிய  The 5 Love Language  என்ற சிறந்த அளவில் விற்பனையான புத்தகம் மக்களை ஒருவருக்கொருவர் இணைக்கும் ஐந்து வெவ்வேறு உணர்ச்சி தொடர்பு விருப்பங்களை பகுப்பாய்வு செய்கிறது: உறுதிப்படுத்தும் வார்த்தைகள்; சேவை நடவடிக்கைகள்; பரிசுகளைப் பெறுதல்; தரமான நேரம்; மற்றும் உடல் தொடர்பு.

இந்த விருப்பங்களை புரிந்துகொள்வது, நம் வீடுகள், வேலை மற்றும் அன்றாட பயணங்களில் மற்றவர்களுடனான உறவை ஆழப்படுத்த உதவும்.

இன்னும் அதிகமாக, விசுவாசிகள் கடவுளின் அன்பு மொழி மூலம் ஒருவருக்கொருவர் தனித்துவமாக இணைக்கப்பட வேண்டும், இது ஒரு மனம், ஒரே இதயம் மற்றும் அவருடைய வார்த்தையில் வேரூன்றிய ஒரு ஆவி மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

கடவுளின் அன்பான மொழியை நாம் இப்படித்தான் பேசுகிறோம்: அவருடைய ஆவியின் கனியைக் கொண்டு மற்றவர்களுக்கு நாம்  அறிவுறுத்த வேண்டும், கண்டிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பதிலளிக்க வேண்டும் – அன்பு, மகிழ்ச்சி, அமைதி, சகிப்புத்தன்மை, தயவு, நன்மை, விசுவாசம், மென்மை மற்றும் சுயக்கட்டுப்பாடு (கலாத்தியர் 5: 22–23).

ஒரு பிரபலமான யூத பழமொழி உள்ளது: “நீங்கள் உங்கள் ரபியின் தூசியில் மூழ்கட்டும்!”

இயேசுவைப் பின்பற்றுபவர்கள், அவருடைய அடிச்சுவடுகளில் நெருக்கமாக நடந்து, தாழ்மையுடன் அவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய காலணியின் தூசியில் மூழ்கிவிடுவார்கள்.

கடவுளின் அன்பு மொழியின் ஒற்றுமையுடன் தொடர்புகொள்வது என்பது இயேசுவின் தூசியில் மூடியிருக்கும் மற்றும் உண்மையிலேயே அவருடைய சீடர்களாக / תַּלְמִידִים (டல்மீடீம்) இருப்பவர்களை நாம் அடையாளம் காணக்கூடிய ஒரு வழியாகும்.   

 வரவிருக்கும் தீர்ப்பு

நோவாக்கின் நாட்களில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போலவே, இறுதி காலத்திலும் தீர்ப்பு திடீரென்று வரும் (மத்தேயு 24: 36–41).

கர்த்தரை அறிந்தவர்கள் பயப்படத் தேவையில்லை, ஏனென்றால் நோவாக்கிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் படகை அளித்தபடியே அவர் கடுமையான உபத்திரவ புயலிலிருந்து ஒரு பாதுகாப்பான தங்குமிடம், புகலிடமும் வழங்குவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார், (ஏசாயா 26:20)

அன்றைய நாளில் மேசியாவான இயேசுவின் ஆட்சியின் கீழ் புதிய வானங்களையும், அமைதி மற்றும் நீதியையும் கொண்ட புதிய பூமியையும், விசுவாசத்தின் ஒற்றுமையிலும் கடவுளின் தங்குமிடத்திலிருந்து நாம் வெளிப்படுவோம்.