பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Acts  அப்போஸ்தலருடைய நடபடிகள்  Πράξεις Ἀποστόλων

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24 | Acts 24

Tertullus Prosecutes Paul

1 Μετὰ δὲ πέντε ἡμέρας κατέβη ὁ ἀρχιερεὺς Ἁνανίας μετὰ πρεσβυτέρων τινῶν καὶ ῥήτορος Τερτύλλου τινός οἵτινες ἐνεφάνισαν τῷ ἡγεμόνι κατὰ τοῦ Παύλου

1 ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
1 Five days later the high priest Ananias came down with some elders and a lawyera named Tertullus, who presented to the governor their case against Paul.
1 ஐந்து நாட்களுக்குப்பின் தலைமைக்குருவான அனனியாவும் சில மூப்பர்களும் வழக்குரைஞரான தெர்த்துல் என்பவரும் வந்து பவுலுக்கெதிராக ஆளுநரிடம் முறையிட்டார்கள்.

2 Κληθέντος δὲ αὐτοῦ ἤρξατο κατηγορεῖν ὁ Τέρτυλλος λέγων Πολλῆς εἰρήνης τυγχάνοντες διὰ σοῦ καὶ διορθωμάτων γινομένων τῷ ἔθνει τούτῳ διὰ τῆς σῆς προνοίας

2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
2 When Paul had been called in, Tertullus opened the prosecution: “Because of you, we have enjoyed a lasting peace, and your foresight has brought improvements to this nation.
2 ❮2-3❯தெர்த்துல் அழைக்கப்பட்டபோது, அவர் குற்றம் சாட்டத் தொடங்கிக் கூறியது: "மாண்புமிகு பெலிக்சு அவர்களே! உம்மால் தான் நாட்டில் பேரமைதி நிலவுகிறது. உம் தொலை நோக்கால்தான் இந்நாடு எல்லா இடங்களிலும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை நாங்கள் மிக்க நன்றியுணர்வோடு ஏற்றுக் கொள்கிறோம்.

3 πάντῃ τε καὶ πανταχοῦ ἀποδεχόμεθα κράτιστε Φῆλιξ μετὰ πάσης εὐχαριστίας

3 கனம்பொருந்தின பேலிக்ஸே உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும் உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம்.
3 In every way and everywhere, most excellent Felix, we acknowledge this with all gratitude.

4 ἵνα δὲ μὴ ἐπὶ πλεῖόν σε ἐνκόπτω παρακαλῶ ἀκοῦσαί σε ἡμῶν συντόμως τῇ σῇ ἐπιεικείᾳ

4 உம்மை நான் அநேக வார்த்தைகளிலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
4 But in order not to burden you any further, I beg your indulgence to hear us briefly.
4 இனியும் உம்முடைய நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நான் கூற விரும்புவதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்; நீர் பொறுமையுடன் கேட்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

5 Εὑρόντες γὰρ τὸν ἄνδρα τοῦτον λοιμὸν καὶ κινοῦντα στάσεις πᾶσιν τοῖς Ἰουδαίοις τοῖς κατὰ τὴν οἰκουμένην πρωτοστάτην τε τῆς τῶν Ναζωραίων αἱρέσεως

5 என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகமெழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
5 We have found this man to be a pestilence, stirring up dissension among the Jews all over the world. He is a ringleader of the sect of the Nazarenes,
5 தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம். இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்; நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்.

6 ὃς καὶ τὸ ἱερὸν ἐπείρασεν βεβηλῶσαι ὃν καὶ ἐκρατήσαμεν

6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்களோ இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம்.
6 and he even tried to desecrate the temple; so we seized him.b
6 திருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றபோது இவனை நாங்கள் பிடித்துக் கொண்டோம். [1]

1 ஆ-8அ] - 6ஆ 'நாங்கள் எங்கள் திருச்சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்க விரும்பினோம். 7 ஆனால் ஆயிரத்தவர் தலைவரான லீசியா வந்து வலுக்கட்டாயமாக இவனை எங்களிடமிருந்து கூட்டிக்கொண்டு போய்விட்டார். 8அ இவனுக்கு எதிராகக் குற்றம் சாட்டுவோர் உம்மிடம் வர ஆணை பிறப்பித்தார்' என சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.

7 அப்பொழுது சேனாபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய்,
7
7 [*]

8 παρ’ οὗ δυνήσῃ αὐτὸς ἀνακρίνας περὶ πάντων τούτων ἐπιγνῶναι ὧν ἡμεῖς κατηγοροῦμεν αὐτοῦ

8 இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
8 By examining him yourself, you will be able to learn the truth about all our charges against him.”
8 [*] நீர் விசாரணை செய்தால் நாங்கள் இவன் மேல் சுமத்தும் குற்றம் அனைத்தும் உண்மை என அறிய முடியும்."

9 Συνεπέθεντο δὲ καὶ οἱ Ἰουδαῖοι φάσκοντες ταῦτα οὕτως ἔχειν

9 யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள்.
9 The Jews concurred, asserting that these charges were true.
9 யூதர்களும் அவரோடு சேர்ந்து இக்குற்றச்சாட்டுகள் யாவும் உண்மையே எனக் கூறினார்கள்.

Paul’s Defense to Felix

10 Ἀπεκρίθη τε ὁ Παῦλος νεύσαντος αὐτῷ τοῦ ἡγεμόνος λέγειν Ἐκ πολλῶν ἐτῶν ὄντα σε κριτὴν τῷ ἔθνει τούτῳ ἐπιστάμενος εὐθύμως τὰ περὶ ἐμαυτοῦ ἀπολογοῦμαι

10 பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத்தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன்.
10 When the governor motioned for Paul to speak, he began his response: “Knowing that you have been a judge over this nation for many years, I gladly make my defense.
10 பவுல் பேசுமாறு ஆளுநர் சைகை காட்ட, அவர் கூறியது: "பல ஆண்டுகளாக நீர் இந்த நாட்டின் நடுவராக இருந்து வருகிறீர் என்பதை நான் அறிந்து நம்பிக்கையோடு என் நிலையை விளக்குகிறேன்.

11 δυναμένου σου ἐπιγνῶναι ὅτι οὐ πλείους εἰσίν μοι ἡμέραι δώδεκα ἀφ’ ἧς ἀνέβην προσκυνήσων εἰς Ἰερουσαλήμ

11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
11 You can verify for yourself that no more than twelve days ago I went up to Jerusalem to worship.
11 நான் கடவுளை வணங்குவதற்காக எருசலேமுக்குச் சென்று பன்னிரண்டு நாள் கூட ஆகவில்லை என்பதை நீரே விசாரித்து அறிந்து கொள்ளலாம்.

12 καὶ οὔτε ἐν τῷ ἱερῷ εὗρόν με πρός τινα διαλεγόμενον ἢ ἐπίστασιν ποιοῦντα ὄχλου οὔτε ἐν ταῖς συναγωγαῖς οὔτε κατὰ τὴν πόλιν

12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை.
12 Yet my accusers did not find me debating with anyone in the temple or riling up a crowd in the synagogues or in the city.
12 நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலக மூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை.

13 οὐδὲ παραστῆσαι δύνανταί σοι περὶ ὧν νυνὶ κατηγοροῦσίν μου

13 இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள்.
13 Nor can they prove to you any of their charges against me.
13 இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.

14 Ὁμολογῶ δὲ τοῦτό σοι ὅτι κατὰ τὴν Ὁδὸν ἣν λέγουσιν αἵρεσιν οὕτως λατρεύω τῷ πατρῴῳ Θεῷ πιστεύων πᾶσι τοῖς κατὰ τὸν νόμον καὶ τοῖς ἐν τοῖς προφήταις γεγραμμένοις

14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனை செய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசி புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து,
14 I do confess to you, however, that I worship the God of our fathers according to the Way, which they call a sect. I believe everything that is laid down by the Law and written in the Prophets,
14 ஆனால், இந்த ஒன்று மட்டும் உம்மிடம் நான் ஒப்புக்கொள்கிறேன். இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்; திருச்சட்டத்திலும், இறைவாக்கினர் நூல்களிலும் உள்ள அனைத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

15 ἐλπίδα ἔχων εἰς τὸν Θεόν ἣν καὶ αὐτοὶ οὗτοι προσδέχονται ἀνάστασιν μέλλειν ἔσεσθαι δικαίων τε καὶ ἀδίκων

15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.
15 and I have the same hope in God that they themselves cherish, that there will be a resurrection of both the righteous and the wicked.
15 நேர்மையாளரும் நேர்மையற்றோரும் உயிர்த்தெழுவர் என்று அவர்கள் எதிர்நோக்குகின்றார்கள். அதே எதிர்நோக்கைக் கடவுள் எனக்கும் கொடுத்துள்ளார்.

16 ἐν τούτῳ καὶ αὐτὸς ἀσκῶ ἀπρόσκοπον συνείδησιν ἔχειν πρὸς τὸν Θεὸν καὶ τοὺς ἀνθρώπους διὰ παντός

16 இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
16 In this hope, I strive always to maintain a clear conscience before God and man.
16 அவர்களைப் போல நானும் கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.

17 Δι’ ἐτῶν δὲ πλειόνων ἐλεημοσύνας ποιήσων εἰς τὸ ἔθνος μου παρεγενόμην καὶ προσφοράς

17 அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
17 After several years, then, I returned to Jerusalem to bring alms to my people and to present offerings.
17 பல ஆண்டுகளுக்குப் பின் என் இனத்தார்க்குப் பண உதவி செய்யவும் பலி செலுத்தவும் நான் இங்கு வந்தேன்.

18 ἐν αἷς εὗρόν με ἡγνισμένον ἐν τῷ ἱερῷ οὐ μετὰ ὄχλου οὐδὲ μετὰ θορύβου τινὲς δὲ ἀπὸ τῆς Ἀσίας Ἰουδαῖοι

18 அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் ஆலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள்.
18 At the time they found me in the temple, I was ceremonially clean and was not inciting a crowd or an uproar. But there are some Jews from the province of Asiac
18 நான் கோவிலில் தூய்மைச் சடங்கு செய்துகொண்டிருந்தபோது இவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அங்கு மக்கள் கூட்டமோ அமளியோ இல்லை.2

19 οὓς ἔδει ἐπὶ σοῦ παρεῖναι καὶ κατηγορεῖν εἴ τι ἔχοιεν πρὸς ἐμέ

19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்குமுன்பாகக் குற்றஞ்சாட்டட்டும்.
19 who ought to appear before you and bring charges, if they have anything against me.
19 ஆனால், ஆசியாவிலிருந்து வந்த யூதருள் சிலர் அங்கிருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்கள் உமக்குமுன் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.

20 ἢ αὐτοὶ οὗτοι εἰπάτωσαν τί εὗρον ἀδίκημα στάντος μου ἐπὶ τοῦ συνεδρίου

20 நான் ஆலோசனை சங்கத்தாருக்குமுன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச்சொல்லட்டும்.
20 Otherwise, let these men state for themselves any crime they found in me when I stood before the Sanhedrin,d
20 அல்லது நான் தலைமைச் சங்கத்தரால் விசாரிக்கப்பட்டபோது என்னிடம் என்ன குற்றம் கண்டார்களென இங்கிருப்பவர்களாவது எடுத்துச் சொல்லட்டும்.

21 ἢ περὶ μιᾶς ταύτης φωνῆς ἧς ἐκέκραξα ἐν αὐτοῖς ἑστὼς ὅτι Περὶ ἀναστάσεως νεκρῶν ἐγὼ κρίνομαι σήμερον ἐφ’ ὑμῶν

21 நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான்.
21 unless it was this one thing I called out as I stood in their presence: ‘It is concerning the resurrection of the dead that I am on trial before you today.’”
21 சங்கத்தார் நடுவில் நின்று, 'இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன்' என்று உரத்த குரலில் கூறினேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்."3

The Verdict Postponed

22 Ἀνεβάλετο δὲ αὐτοὺς ὁ Φῆλιξ ἀκριβέστερον εἰδὼς τὰ περὶ τῆς Ὁδοῦ εἴπας Ὅταν Λυσίας ὁ χιλίαρχος καταβῇ διαγνώσομαι τὰ καθ’ ὑμᾶς

22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
22 Then Felix, who was well informed about the Way, adjourned the hearing and said, “When Lysias the commander comes, I will decide your case.”
22 கிறிஸ்தவ நெறியைப் பற்றி மிகத் திட்டவட்டமாக அறிந்திருந்த பெலிக்சு, "ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்" என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

23 διαταξάμενος τῷ ἑκατοντάρχῃ τηρεῖσθαι αὐτὸν ἔχειν τε ἄνεσιν καὶ μηδένα κωλύειν τῶν ἰδίων αὐτοῦ ὑπηρετεῖν αὐτῷ

23 பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான்.
23 He ordered the centurion to keep Paul under guard, but to allow him some freedom and permit his friends to minister to his needs.
23 அதோடு அவர், "பவுலைக் காவலில் வையுங்கள் ஆனால், கடுங்காவல் வேண்டாம்; பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்" என நூற்றுவர் தலைவரிடம் பணித்தார்.

24 Μετὰ δὲ ἡμέρας τινὰς παραγενόμενος ὁ Φῆλιξ σὺν Δρουσίλλῃ τῇ ἰδίᾳ γυναικὶ οὔσῃ Ἰουδαίᾳ μετεπέμψατο τὸν Παῦλον καὶ ἤκουσεν αὐτοῦ περὶ τῆς εἰς Χριστὸν Ἰησοῦν πίστεως

24 சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
24 After several days, Felix returned with his wife Drusilla, who was a Jewess. He sent for Paul and listened to him speak about faith in Christ Jesus.
24 சில நாள்களுக்குப் பின்பு பெலிக்சு தம் யூத மனைவியாகிய துருசில்லாவுடன் வந்தார். அவர் பவுலை வரவழைத்து, கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கை கொள்வது பற்றி அவர் கூறியவற்றைக் கேட்டார்.

25 διαλεγομένου δὲ αὐτοῦ περὶ δικαιοσύνης καὶ ἐγκρατείας καὶ τοῦ κρίματος τοῦ μέλλοντος ἔμφοβος γενόμενος ὁ Φῆλιξ ἀπεκρίθη Τὸ νῦν ἔχον πορεύου καιρὸν δὲ μεταλαβὼν μετακαλέσομαί σε

25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான்
25 As Paul expounded on righteousness, self-control, and the coming judgment, Felix became frightened and said, “You may go for now. When I find the time, I will call for you.”
25 நேர்மை, தன்னடக்கம், வரப்போகும் தீர்ப்பு ஆகியனபற்றிப் பவுல் பேசியபொது பெலிக்சு அச்சமுற்று அவரைப் பார்த்து, "இப்போது நீர் போகலாம், நேரம் வாய்க்கும்போது உம்மை வரவழைப்பேன்" என்று கூறினார்.

26 ἅμα καὶ ἐλπίζων ὅτι χρήματα δοθήσεται αὐτῷ ὑπὸ τοῦ Παύλου διὸ καὶ πυκνότερον αὐτὸν μεταπεμπόμενος ὡμίλει αὐτῷ

26 மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
26 At the same time, he was hoping that Paul would offer him a bribe. So he sent for Paul frequently and talked with him.
26 அதே வேளையில் பவுல் தமக்குப் பணம் கொடுப்பாரென அவர் எதிர்பார்த்தார்; ஆகையால், அடிக்கடி பவுலை வரவழைத்து அவரோடு உரையாடி வந்தார்.

27 Διετίας δὲ πληρωθείσης ἔλαβεν διάδοχον ὁ Φῆλιξ Πόρκιον Φῆστον θέλων τε χάριτα καταθέσθαι τοῖς Ἰουδαίοις ὁ Φῆλιξ κατέλιπε τὸν Παῦλον δεδεμένον

27 இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.
27 After two years had passed, Felix was succeeded by Porcius Festus. And wishing to do the Jews a favor, Felix left Paul in prison.
27 இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநர் பதவியேற்றார். பெலிக்சு யூதரது நல்லெண்ணத்தைப் பெற பவுலைக் கைதியாக விட்டுச் சென்றார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Acts  Chapter   1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
1 a Or an orator 
6 b BYZ and TR include and we would have judged him according to our law. 7 But Lysias the commander came with great force and took him out of our hands, 8 ordering his accusers to come before you. 
18 c Literally from Asia ; Asia was a Roman province in what is now western Turkey.
20 d Or the Council 

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.