Hebrew/எபிரேயம் – Emunaha Avodah – this website offers content for believers in Yeshua HaMashiach-Jesus the Messiah from Hebraic perspective. The world’s first ever Tamil-Hebrew Holy ‘Online’ Audio Bible® has been painstakingly created and published with God’s blessings. Its highlight is the facility to read Tamil-Hebrew Old Testament verses side-by-side with the voice of a Jewish Rabbi chanting Hebrew scriptures. We pray that everyone will benefit from listening and learning to obey God’s Word in Hebrew.

Hebrew/எபிரேயம் மற்றும் தமிழில் – எமுனா அவோடா, இந்த வலைத்தளத்தில் இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கு எபிரேயக் கண்ணோட்டத்தில்  அமைந்த பதிவுகள் இடம் பெறுகின்றன. உலகிலேயே முதன்முறையாகத் தமிழ்-எபிரேயம் பரிசுத்த ‘இணை’ய ஒலி வேதாகமம்® கர்த்தரின் ஆசீர்வாதத்துடன் பெருமுயற்சி செய்து உருவாக்கப்பட்டுப் பதியப்பட்டுள்ளது. இதின் சிறப்பம்சம் – அருகருகே தமிழ் – எபிரேயம் பழைய உடன்படிக்கை வசனங்கள் வாசிக்கும் வசதியோடு யூத ரபியின் குரலில் எபிரேய வேத வசனங்கள் ஒலிக்கும்படி தரப்பட்டுள்ளது. எபிரேய மொழியில் அனைவரும் ஆண்டவர் அருளிய வார்த்தையை கேட்டு கற்று கீழ்படிந்து நடந்து பயன் பெற வேண்டுகிறோம்.

Hanukkah
Hanukkah
 Blogs/வலைப்பூ - Simchat Torah
Blogs/வலைப்பூ - Besora
Blogs/வலைப்பூ - Torah
Sukkot
 Yom Kippur
Blogs/வலைப்பூ - India?
Blogs/வலைப்பூ - Biblical Hebrew, Rabbi
Blogs/வலைப்பூ - Rabbinic Literature
Psalm 23
Blogs/வலைப்பூ - Yeshua

உலக வரலாற்றில் வழக்கொழிந்த ஒரு மொழி, இன்றைய  நவீன உலகத்தில்,  ஒரு நாட்டின் பேச்சு மொழியாக உயிர்ப்பிக்கப்பட்டது என்றால் அது Hebrew / எபிரேயம் மட்டுமே. Biblical Hebrew / வேதாகம எபிரேயம், பேச்சு மொழியாக உருப்பெற்றது வரலாற்றில் ஒரு மாபெரும் தனித்தன்மை வாய்ந்த நிகழ்வு. கி.மு. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க அறிஞன் Homer / ஹோமெரின் காவியங்களைக் கிரேக்க மொழியில் வாசிக்க முடியாத, கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில இலக்கியத்தின் தந்தை எனப்படும் Geoffrey Chaucer / ஜெஃப்ரி சாசெரின் காலத்திய ஆங்கில மொழியை வாசிக்க முடியாத, கி.மு. 3 – கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மொழியில், சங்கத் தமிழ் இலக்கியங்களை வாசிக்க முடியாத சிறார்களும், பெரியோர்களும் வாழும் இவ்வுலகத்தில், Bar Mitzvah / பார் மிட்ஸ்வா சமயம் 13 வயது பாலகன் வாசிக்கும் எபிரேய மொழி வேதாகம வரிகளின் வயது ஏறத்தாழ 2000 ஆண்டுகள் ஆகும். மொழியின் தொன்மையை ஆராய்ந்து பார்த்தால் மிகுந்த ஆச்சர்யம் தரும். மேலும் வாசிக்க!

    CONTACT US