பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
Hebrews எபிரெயர் Ἑβραίους
எபிரெயர் 1 | Hebrews 1
The Supremacy of the Son (Colossians 1:15–23)
1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,
1 On many past occasions and in many different ways, God spoke to our fathers through the prophets.
1 பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.
2 But in these last days He has spoken to us by His Son,a whom He appointed heir of all things, and through whom He made the universe.b
2 இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
3 The Son is the radiance of God’s glory and the exact representation of His nature, upholding all things by His powerful word. After He had provided purification for sins, He sat down at the right hand of the Majesty on high.
3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
4 இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
4 So He became as far superior to the angels as the name He has inherited is excellent beyond theirs.
4 இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.
5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
5 For to which of the angels did God ever say: “You are My Son; today I have become Your Father”? Or again: “I will be His Father, and He will be My Son”d ?
5 ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது ⦃"நீ என் மைந்தர்; இன்று நான் § உம்மைப் பெற்றெடுத்தேன்"⦄ என்றும், ⦃"நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன், § அவர் எனக்கு மகனாயிருப்பார்"⦄ என்றும் எப்போதாவது கூறியதுண்டா?1
6 ஆகிலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார்.
6 And again, when God brings His firstborn into the world, He says: “Let all God’s angels worship Him.”e
6 மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, ⦃"கடவுளின் தூதர் அனைவரும் § அவரை வழிபடுவார்களாக"⦄ என்றார்.2
2 திபா 97:7.
7 தேவதூதரைக்குறித்தோ தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
7 Now about the angels He says: “He makes His angels winds, His servants flames of fire.”f
7 வானதூதரைக் குறித்து அவர் ⦃"தம் தூதரைக் காற்றுகளாகவும் § தம் பணியாளரைத் § தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்"⦄ என்றார்.3
3 திபா 104:4.
8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
8 But about the Son He says: “Your throne, O God, endures forever and ever, and justice is the scepter of Your kingdom.
8 தம் மகனைக் குறித்து, "இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல்.
9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;
9 You have loved righteousness and hated wickedness; therefore God, Your God, has anointed You above Your companions with the oil of joy.”g
9 நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய் § உயர்த்தினார்" என்றார்.4
4 திபா 45:6,7.
10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்களும் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது;
10 And: “In the beginning, O Lord, You laid the foundations of the earth, and the heavens are the work of Your hands.
10 மீண்டும், "ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ!
11 அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்;
11 They will perish, but You remain; they will all wear out like a garment.h
11 அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்;
12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.
12 You will roll them up like a robe; like a garment they will be changed; but You remain the same, and Your years will never end.”i
12 போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்; ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது" என்றார் அவர்.5
13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?
13 Yet to which of the angels did God ever say: “Sit at My right hand until I make Your enemies a footstool for Your feet”j ?
13 மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" என்று கூறியதுண்டா?6
6 திபா 110:1.
14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?
14 Are not the angels ministering spirits sent to serve those who will inherit salvation?
14 அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or in His Son
2 b Or the world ; literally the ages
5 c Psalm 2:7; literally today I have begotten You
5 d 2 Samuel 7:14; 1 Chronicles 17:13
6 e Deuteronomy 32:43 (see DSS and LXX)
7 f Psalm 104:4 (see also LXX)
9 g Psalm 45:6–7
12 h BYZ and TR do not include like a garment .
12 i Psalm 102:25–27
13 j Psalm 110:1
14 k Literally Are they not all
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.