பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
மத் மாற் லூக் யோ அப் ரோ 1கொரி 2கொரி கலா எபே பிலி கொ 1தெ 2தெ 1தீ 2தீ தீத்து பிலெ எபி யா 1பே 2பே 1யோ 2யோ 3யோ யூதா வெளி
2 John 2 யோவான் Ἰωάννου β´
அதிகாரம் 1
2 யோவான் 1 | 2 John 1
A Greeting from the Elder (3 John 1:1–4)
1 நமக்குள் நிலைநிற்கிறதும், என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும்,
1 The elder, To the chosen lady and her children, whom I love in the truth—and not I alone, but also all who know the truth—
1 தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கும் அவள் பிள்ளைகளுக்கும் மூப்பனாகிய நான் எழுதுவது: உங்கள்மேல் எனக்கு உண்மையான அன்பு உண்டு. எனக்கு மட்டும் அல்ல, உண்மையை அறிந்துள்ள அனைவருக்குமே உங்கள்மேல் அன்பு உண்டு.
2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,
2 because of the truth that abides in us and will be with us forever:
2 உண்மையின் பொருட்டு உங்கள்மீது அன்புசெலுத்துகிறோம். அந்த உண்மை நம்முள் நிலைத்திருக்கிறது. அது என்றென்றும் நம்மோடு இருக்கும்.
3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.
3 Grace, mercy, and peace from God the Father and from Jesus Christ, the Son of the Father, will be with us in truth and love.
3 இவ்வாறு, உண்மையையும் அன்பையும் கொண்டு வாழும் நமக்கு தந்தையாம் கடவுளிடமிருந்தும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் வரும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகும்.
Walking in the Truth (John 8:30–47)
4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும் சந்தோஷப்பட்டேன்.
4 I was overjoyed to find some of your children walking in the truth, just as the Father has commanded us.
4 தந்தையிடமிருந்து நாம் பெற்ற கட்டளைப்படி, உம்முடைய பிள்ளைகளுள் சிலர் உண்மைக்கேற்ப நடப்பது கண்டு நான் பெருமகிழ்ச்சியுற்றேன்.
5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
5 And now I urge you, dear lady—not as a new commandment to you, but one we have had from the beginning—that we love one another.
5 பெருமாட்டியே, நான் இப்பொழுது உம்மிடம் கேட்டுக்கொள்வது இதுவே: ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோம். இதை நான் ஒரு புதிய கட்டளையாக எழுதவில்லை. இது தொடக்கத்திலிருந்தே நமக்குள்ள கட்டளை.
6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
6 And this is love, that we walk according to His commandments. This is the very commandment you have heard from the beginning, that you must walk in love.
6 நாம் அவருடைய கட்டளைப்படி வாழ்வதில் அன்பு அடங்கியுள்ளது; அந்தக் கட்டளை நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்ததுதான்; அதைக் கடைப்பிடித்து வாழுங்கள்.
Beware of Deceivers
7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
7 For many deceivers have gone out into the world, refusing to confess the coming of Jesus Christ in the flesh. Any such person is the deceiver and the antichrist.
7 ஏனெனில், ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.
8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
8 Watch yourselves, so that you do not lose what we have worked for,a but that you may be fully rewarded.
8 உங்கள் உழைப்பின் பயனை இழந்துவிடாமல் முழுக் கைம்மாறு பெற்றுக்கொள்ளக் கவனமாயிருங்கள்.
9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
9 Anyone who runs ahead without remaining in the teaching of Christ does not have God. Whoever remains in His teaching has both the Father and the Son.
9 கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திராமல் வரம்பு மீறிச் செல்வோர் கடவுளைக் கொண்டிருப்பதில்லை. அவர் போதனையில் நிலைத்திருப்போரிடமே தந்தையும் மகனும் இருக்கிறார்கள்.
10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
10 If anyone comes to you but does not bring this teaching, do not receive him into your home or even greet him.
10 உங்களிடம் வருவோர் இப்போதனையை ஏற்காதிருப்பின், அவர்களை உங்கள் இல்லத்திலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வாழ்த்தும் கூற வேண்டாம்.
11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.
11 Whoever greets such a person shares in his evil deeds.
11 அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோர் அவர்களுடைய தீச்செயல்களிலும் பங்கு கொள்கிறார்கள்.
Conclusion (3 John 1:13–14)
12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
12 I have many things to write to you, but I would prefer not to do so with paper and ink. Instead, I hope to come and speak with you face to face,b so that our joy may be complete.
12 நான் உங்களுக்கு எழுத வேண்டியவை இன்னும் பல இருப்பினும் அவற்றை நான் எழுத்து வடிவில் தர விரும்பவில்லை; மாறாக உங்களிடம் வந்து நேரில் பேசுவேன் என எதிர்பார்க்கிறேன். அப்போது நம் மகிழ்ச்சி நிறைவடையும்.
13 தெரிந்துகொள்ளப்பட்ட நம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்
13 The children of your elect sister send you greetings.c
13 தேர்ந்தெடுக்கப்பட்ட உம் சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
8 a NE and WH what you have worked for
12 b Literally mouth to mouth
13 c BYZ and TR include Amen.
Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.