பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Revelation  வெளிப்படுத்தின விசேஷம்  Ἀποκάλυψις Ἰωάννου

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22

வெளிப்படுத்தின விசேஷம் 11 | Revelation 11

The Two Witnesses

1 Καὶ μοι ἐδόθη κάλαμος ὅμοιος ῥάβδῳ λέγων Ἔγειρε καὶ μέτρησον τὸν ναὸν τοῦ Θεοῦ καὶ τὸ θυσιαστήριον καὶ τοὺς προσκυνοῦντας ἐν αὐτῷ

1 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்.
1 Then I was given a measuring rod like a staff and was told, “Go and measure the temple of God and the altar, and count the number of worshipers there.
1 பின்பு குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. "எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு; அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.

2 καὶ ἔκβαλε ἔξωθεν τὴν αὐλὴν τὴν ἔξωθεν τοῦ ναοῦ καὶ μὴ μετρήσῃς αὐτὴν ὅτι ἐδόθη τοῖς ἔθνεσιν καὶ πατήσουσιν τὴν τὴν ἁγίαν πόλιν τεσσεράκοντα [καὶ] δύο μῆνας

2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.
2 But exclude the courtyard outside the temple. Do not measure it, because it has been given over to the nations, and they will trample the holy city for 42 months.
2 ஆனால், கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு; ஏனெனில், அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள்.

3 καὶ δώσω τοῖς μου δυσὶν μάρτυσίν καὶ προφητεύσουσιν χιλίας διακοσίας ἑξήκοντα ἡμέρας περιβεβλημένοι σάκκους

3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
3 And I will empower my two witnesses, and they will prophesy for 1,260 days, clothed in sackcloth.”
3 நான் என் சாட்சிகளுள் இருவரை அனுப்புவேன். அவர்கள் சாக்கு உடை உடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள்" என்று எனக்குச் சொல்லப்பட்டது.

4 Οὗτοί εἰσιν αἱ δύο ἐλαῖαι καὶ αἱ δύο λυχνίαι ἑστῶτες αἱ ἐνώπιον τοῦ Κυρίου τῆς γῆς

4 பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
4 These witnesses are the two olive trees and the two lampstands that stand before the Lord of the earth.a
4 மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.

5 καὶ εἴ τις θέλει ἀδικῆσαι αὐτοὺς πῦρ ἐκπορεύεται ἐκ αὐτῶν τοῦ στόματος καὶ κατεσθίει αὐτῶν τοὺς ἐχθροὺς καὶ οὕτως εἴ τις θελήσῃ ἀδικῆσαι αὐτοὺς δεῖ αὐτὸν ἀποκτανθῆναι

5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்தமனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
5 If anyone wants to harm them, fire proceeds from their mouths and devours their enemies. In this way, anyone who wants to harm them must be killed.
5 யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.

6 οὗτοι ἔχουσιν τὴν ἐξουσίαν κλεῖσαι τὸν οὐρανόν ἵνα μὴ ὑετὸς βρέχῃ τὰς ἡμέρας τῆς αὐτῶν προφητείας καὶ ἔχουσιν ἐξουσίαν ἐπὶ αὐτὰ στρέφειν τῶν ὑδάτων εἰς αἷμα καὶ πατάξαι τὴν γῆν ἐν πάσῃ πληγῇ ὁσάκις ἐὰν θελήσωσιν

6 அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.
6 These witnesses have power to shut the sky so that no rain will fall during the days of their prophecy, and power to turn the waters into blood and to strike the earth with every kind of plague as often as they wish.
6 தாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்து விட அவர்களுக்கு அதிகாரம் உண்டு; தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

The Witnesses Killed and Raised

7 Καὶ ὅταν τελέσωσιν αὐτῶν τὴν μαρτυρίαν τὸ θηρίον τὸ ἀναβαῖνον ἐκ τῆς ἀβύσσου ποιήσει πόλεμον μετ’ αὐτῶν καὶ νικήσει αὐτοὺς καὶ ἀποκτενεῖ αὐτούς

7 அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.
7 When the two witnesses have finished their testimony, the beast that comes up from the Abyss will wage war with them, and will overpower and kill them.
7 அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும்.

8 καὶ αὐτῶν τὸ πτῶμα ἐπὶ τῆς πλατείας τῆς τῆς μεγάλης πόλεως ἥτις πνευματικῶς καλεῖται Σόδομα καὶ Αἴγυπτος ὅπου αὐτῶν ὁ Κύριος καὶ ἐσταυρώθη

8 அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
8 Their bodies will lie in the street of the great city—figuratively called Sodom and Egypt—where their Lord was also crucified.
8 சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.

9 καὶ τρεῖς καὶ ἥμισυ ἡμέρας ἐκ τῶν λαῶν καὶ φυλῶν καὶ γλωσσῶν καὶ ἐθνῶν βλέπουσιν αὐτῶν τὸ πτῶμα καὶ οὐκ ἀφίουσιν αὐτῶν τὰ πτώματα τεθῆναι εἰς μνῆμα

9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள்.
9 For three and a half days all peoples and tribes and tongues and nations will view their bodies and will not permit them to be laid in a tomb.
9 பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.

10 καὶ οἱ κατοικοῦντες ἐπὶ τῆς γῆς χαίρουσιν ἐπ’ αὐτοῖς καὶ εὐφραίνονται καὶ πέμψουσιν ἀλλήλοις δῶρα ὅτι οὗτοι οἱ δύο προφῆται ἐβασάνισαν τοὺς κατοικοῦντας ἐπὶ τῆς γῆς

10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
10 And those who dwell on the earth will gloat over them, and will celebrate and send one another gifts, because these two prophets had tormented them.
10 மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்; ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்; ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.

11 Καὶ μετὰ τὰς τρεῖς καὶ ἥμισυ ἡμέρας πνεῦμα ζωῆς ἐκ τοῦ Θεοῦ εἰσῆλθεν ἐν αὐτοῖς καὶ ἔστησαν ἐπὶ αὐτῶν τοὺς πόδας καὶ μέγας φόβος ἐπέπεσεν ἐπὶ τοὺς θεωροῦντας αὐτούς

11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.
11 But after the three and a half days, the breath of life from God entered the two witnesses, and they stood on their feet, and great fear fell upon those who saw them.
11 அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.

12 καὶ ἤκουσαν μεγάλης φωνῆς ἐκ τοῦ οὐρανοῦ λεγούσης αὐτοῖς Ἀνάβατε ὧδε καὶ ἀνέβησαν εἰς τὸν οὐρανὸν ἐν τῇ νεφέλῃ καὶ αὐτῶν οἱ ἐχθροὶ ἐθεώρησαν αὐτοὺς

12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள், அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.
12 And the witnesses heard a loud voice from heaven saying, “Come up here.” And they went up to heaven in a cloud as their enemies watched them.
12 அப்பொழுது விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல், "இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்" என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.1

13 Καὶ ἐν ἐκείνῃ τῇ ὥρᾳ ἐγένετο μέγας σεισμὸς καὶ τὸ δέκατον τῆς πόλεως ἔπεσεν καὶ ἑπτά χιλιάδες ὀνόματα ἀνθρώπων ἀπεκτάνθησαν ἐν τῷ σεισμῷ καὶ οἱ λοιποὶ ἐγένοντο ἔμφοβοι καὶ ἔδωκαν δόξαν τῷ Θεῷ τοῦ οὐρανοῦ

13 அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
13 And in that hour there was a great earthquake, and a tenth of the city collapsed. Seven thousand were killed in the quake, and the rest were terrified and gave glory to the God of heaven.
13 அந்நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது. அதனால் ஏழாயிரம் பேர் இறந்தனர். எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர்களாய் விண்ணகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.2

14 Ἡ ἡ δευτέρα Οὐαὶ ἀπῆλθεν ἰδοὺ ἡ ἡ τρίτη Οὐαὶ ἔρχεται ταχύ

14 இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.
14 The second woe has passed. Behold, the third woe is coming shortly.
14 இவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது; இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.

The Seventh Trumpet

15 Καὶ ὁ ἕβδομος ἄγγελος ἐσάλπισεν καὶ ἐγένοντο μεγάλαι φωναὶ λέγοντες ἐν τῷ οὐρανῷ ἡ βασιλεία τοῦ κόσμου Ἐγένετο τοῦ ἡμῶν Κυρίου καὶ τοῦ αὐτοῦ Χριστοῦ καὶ βασιλεύσει εἰς τοὺς αἰῶνας τῶν αἰώνων

15 ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
15 Then the seventh angel sounded his trumpet, and loud voices called out in heaven: “The kingdom of the world has become the kingdom of our Lord and of His Christ, and He will reign forever and ever.”
15 பின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது: "உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்" என்று முழக்கம் கேட்டது.3

16 Καὶ οἱ εἴκοσι τέσσαρες πρεσβύτεροι οἱ καθήμενοι ἐπὶ αὐτῶν τοὺς θρόνους ἐνώπιον τοῦ Θεοῦ ἔπεσαν ἐπὶ αὐτῶν τὰ πρόσωπα καὶ προσεκύνησαν τῷ Θεῷ

16 அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
16 And the twenty-four elders who sit on their thrones before God fell on their faces and worshiped God,
16 கடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.

17 λέγοντες Εὐχαριστοῦμέν σοι Κύριε ὁ Θεός ὁ Παντοκράτωρ ὁ ὢν καὶ ὁ ἦν ὅτι εἴληφας σου τὴν μεγάλην τὴν δύναμίν καὶ ἐβασίλευσας

17 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம், தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
17 saying: “We give thanks to You, O Lord God Almighty, the One who is and who was,b because You have taken Your great power and have begun to reign.
17 "கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; ஏனெனில், நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர்.

18 καὶ τὰ ἔθνη ὠργίσθησαν καὶ σου ἡ ὀργή ἦλθεν καὶ ὁ καιρὸς κριθῆναι τῶν νεκρῶν καὶ δοῦναι τὸν μισθὸν σου τοῖς δούλοις τοῖς προφήταις καὶ τοῖς ἁγίοις καὶ τοῖς φοβουμένοις σου τὸ ὄνομά τοὺς* μικροὺς* καὶ τοὺς* μεγάλους* καὶ διαφθεῖραι τοὺς διαφθείροντας τὴν γῆν

18 ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம்வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
18 The nations were enraged,c and Your wrath has come. The time has come to judge the deadd and to reward Your servants the prophets, as well as the saints and those who fear Your name, both small and great—and to destroy those who destroy the earth.”
18 வேற்றினத்தார் சினந்தெழுந்தனர். உமது சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும் உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள், உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும் உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது" என்று பாடினார்கள்.4

19 Καὶ ὁ ναὸς τοῦ Θεοῦ ὁ ἐν τῷ οὐρανῷ ἠνοίγη καὶ ἡ κιβωτὸς τῆς αὐτοῦ διαθήκης ὤφθη ἐν αὐτοῦ τῷ ναῷ καὶ ἐγένοντο ἀστραπαὶ καὶ φωναὶ καὶ βρονταὶ καὶ σεισμὸς καὶ μεγάλη χάλαζα

19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.
19 Then the temple of God in heaven was opened, and the ark of His covenant appeared in His temple. And there were flashes of lightning, and rumblings, and peals of thunder, and an earthquake, and a great hailstorm.
19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.5


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Revelation  Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
4 a See Zechariah 4:14.
17 b TR includes and who is to come .
18 c See Psalm 2:1.
18 d See Daniel 12:2.

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.