பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Revelation  வெளிப்படுத்தின விசேஷம்  Ἀποκάλυψις Ἰωάννου

அதிகாரம் 1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22

வெளிப்படுத்தின விசேஷம் 2 | Revelation 2

To the Church in Ephesus (Acts 19:8–12; Ephesians 1:1–2)

1Τῷ ἀγγέλῳ τῆς ἐκκλησίας ἐν Ἐφέσῳ γράψον Τάδε λέγει ὁ κρατῶν τοὺς ἑπτὰ ἀστέρας ἐν αὐτοῦ τῇ δεξιᾷ ὁ περιπατῶν ἐν μέσῳ τῶν ἑπτὰ τῶν χρυσῶν λυχνιῶν

1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
1 “To the angel of the church in Ephesus write: These are the words of Him who holds the seven stars in His right hand and walks among the seven golden lampstands.
1 "எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:

2Οἶδα σου τὰ ἔργα καὶ σου τὸν κόπον καὶ τὴν ὑπομονήν καὶ ὅτι οὐ δύνῃ βαστάσαι κακούς καὶ ἐπείρασας καὶ εὗρες αὐτοὺς ψευδεῖς τοὺς καὶ εἰσίν οὐκ λέγοντας ἑαυτοὺς ἀποστόλους

2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;
2 I know your deeds, your labor, and your perseverance. I know that you cannot tolerate those who are evil, and you have tested and exposed as liars those who falsely claim to be apostles.
2 உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும்.

3καὶ οὐ κεκοπίακες καὶ ἔχεις ὑπομονὴν καὶ ἐβάστασας διὰ μου τὸ ὄνομά

3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
3 Without growing weary, you have persevered and endured many things for the sake of My name.
3 நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

4Ἀλλὰ ἔχω ὅτι κατὰ σοῦ ἀφῆκες σου τὴν πρώτην τὴν ἀγάπην

4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.
4 But I have this against you: You have abandoned your first love.
4 ஆனால், உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை.

5οὖν μνημόνευε πόθεν πέπτωκας* καὶ μετανόησον καὶ ποίησον τὰ ἔργα πρῶτα δὲ εἰ μή ἐὰν μὴ μετανοήσῃς ἔρχομαί σοι καὶ κινήσω σου τὴν λυχνίαν ἐκ αὐτῆς τοῦ τόπου

5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.
5 Therefore, keep in mind how far you have fallen. Repent and perform the deeds you did at first. But if you do not repent, I will come to you and remove your lampstand from its place.
5 ஆகையால், நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம்மாறு; முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம் மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன்.

6Ἀλλὰ ἔχεις τοῦτο ὅτι μισεῖς τὰ ἔργα τῶν Νικολαϊτῶν ἃ κἀγὼ μισῶ

6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.
6 But you have this to your credit: You hate the works of the Nicolaitans, which I also hate.
6 இருப்பினும், உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய்.

7Ὁ ἔχων οὖς ἀκουσάτω τί τὸ Πνεῦμα λέγει ταῖς ἐκκλησίαις Τῷ νικῶντι δώσω αὐτῷ φαγεῖν ἐκ τοῦ ξύλου τῆς ζωῆς ὅ ἐστιν ἐν τῷ Παραδείσῳ τοῦ Θεοῦ

7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.
7 He who has an ear, let him hear what the Spirit says to the churches. To the one who overcomes, I will grant the right to eat from the tree of life in the Paradise of God.
7 கேட்கச்செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.'1

To the Church in Smyrna

8Καὶ τῷ ἀγγέλῳ τῆς ἐκκλησίας ἐν Σμύρνῃ γράψον Τάδε λέγει ὁ πρῶτος καὶ ὁ ἔσχατος ὃς ἐγένετο νεκρὸς καὶ ἔζησεν

8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;
8 To the angel of the church in Smyrna write: These are the words of the First and the Last, who died and returned to life.
8 "சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே:2

9Οἶδά σου τὴν θλῖψιν καὶ τὴν πτωχείαν ἀλλὰ εἶ πλούσιος καὶ τὴν βλασφημίαν ἐκ τῶν καὶ εἰσίν ἑαυτούς οὐκ λεγόντων εἶναι Ἰουδαίους ἀλλὰ συναγωγὴ τοῦ Σατανᾶ

9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.
9 I know your affliction and your poverty—though you are rich! And I am aware of the slander of those who falsely claim to be Jews, but are in fact a synagogue of Satan.
9 உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால், உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே.

10Μηδὲν* φοβοῦ ἃ μέλλεις πάσχειν ἰδοὺ ὁ διάβολος μέλλει βάλλειν ἐξ ὑμῶν εἰς φυλακὴν ἵνα πειρασθῆτε καὶ ἕξετε θλῖψιν δέκα ἡμερῶν γίνου πιστὸς ἄχρι θανάτου καὶ δώσω σοι τὸν στέφανον τῆς ζωῆς

10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
10 Do not fear what you are about to suffer. Look, the devil is about to throw some of you into prison to test you, and you will suffer tribulation for ten days. Be faithful even unto death, and I will give you the crown of life.
10 உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன்.

11Ὁ ἔχων οὖς ἀκουσάτω τί τὸ Πνεῦμα λέγει ταῖς ἐκκλησίαις Ὁ νικῶν οὐ μὴ ἀδικηθῇ ἐκ τοῦ τοῦ δευτέρου θανάτου

11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
11 He who has an ear, let him hear what the Spirit says to the churches. The one who overcomes will not be harmed by the second death.
11 கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.'"3

To the Church in Pergamum

12Καὶ τῷ ἀγγέλῳ τῆς ἐκκλησίας ἐν Περγάμῳ γράψον Τάδε λέγει ὁ ἔχων τὴν τὴν ὀξεῖαν τὴν δίστομον ῥομφαίαν

12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;
12 To the angel of the church in Pergamum write: These are the words of the One who holds the sharp, double-edged sword.
12 "பெர்காமில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே:

13Οἶδα ποῦ κατοικεῖς ὅπου ὁ θρόνος τοῦ Σατανᾶ καὶ κρατεῖς μου τὸ ὄνομά καὶ οὐκ ἠρνήσω τὴν πίστιν μου καὶ ἐν ταῖς ἡμέραις μου μου ὁ πιστός ὁ μάρτυς Ἀντιπᾶς ὃς ἀπεκτάνθη παρ’ ὑμῖν ὅπου ὁ Σατανᾶς κατοικεῖ

13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
13 I know where you live, where the throne of Satan sits. Yet you have held fast to My name and have not denied your faith in Me, even in the day when My faithful witness Antipas was killed among you, where Satan dwells.
13 நீ எங்குக் குடியிருக்கிறாய் என நான் அறிவேன். அங்கேதான் சாத்தானின் அரியணை உள்ளது. நீ என் பெயர் மீது உறுதியான பற்றுக் கொண்டுள்ளாய்; சாத்தான் குடியிருக்கும் இடத்தில், நம்பிக்கையுள்ள என் சாட்சியான அந்திப்பா உங்கள் நடுவே கொலை செய்யப்பட்ட காலத்தில்கூட நீ என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகவில்லை.

14Ἀλλ’ ἔχω ὀλίγα κατὰ σοῦ ὅτι ἐκεῖ ἔχεις κρατοῦντας τὴν διδαχὴν Βαλαάμ ὃς ἐδίδασκεν τῷ Βαλὰκ βαλεῖν σκάνδαλον ἐνώπιον τῶν υἱῶν Ἰσραήλ φαγεῖν εἰδωλόθυτα καὶ πορνεῦσαι

14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
14 But I have a few things against you, because some of you hold to the teaching of Balaam, who taught Balak to place a stumbling block before the Israelites so they would eat food sacrificed to idols and commit sexual immorality.
14 ஆயினும், உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு; பிலயாமின் போதனையில் பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர். இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள் இடறிவிழும்படி செய்யப் பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன். அதனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.4

15οὕτως ὁμοίως σὺ καὶ ἔχεις κρατοῦντας τὴν διδαχὴν τῶν Νικολαϊτῶν

15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
15 In the same way, some of you also hold to the teaching of the Nicolaitans.
15 இதுபோலவே நிக்கொலாயரின் போதனையில் பிடிப்புள்ள சிலரும் உன் நடுவில் உள்ளனர்.

16οὖν μετανόησον δὲ εἰ μή ἔρχομαί σοι ταχύ καὶ πολεμήσω μετ’ αὐτῶν ἐν τῇ ῥομφαίᾳ μου τοῦ στόματός

16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
16 Therefore repent! Otherwise I will come to you shortly and wage war against them with the sword of My mouth.
16 ஆகவே, மனம்மாறு. இல்லையேல், நான் விரைவில் உன்னிடம் வருவேன்; என் வாயிலிருந்து வெளிவரும் வாள்கொண்டு அவர்களோடு போர்த்தொடுப்பேன்.

17Ὁ ἔχων οὖς ἀκουσάτω τί τὸ Πνεῦμα λέγει ταῖς ἐκκλησίαις αὐτῷ Τῷ νικῶντι δώσω τοῦ τοῦ κεκρυμμένου μάννα καὶ δώσω αὐτῷ λευκήν ψῆφον γεγραμμένον ἐπὶ τὴν ψῆφον καὶ καινὸν ὄνομα ὃ οὐδεὶς οἶδεν εἰ μὴ ὁ λαμβάνων

17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.
17 He who has an ear, let him hear what the Spirit says to the churches. To the one who overcomes, I will give the hidden manna. I will also give him a white stone inscribed with a new name, known only to the one who receives it.
17 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை வெற்றி பெறுவோருக்கு அளிப்பேன்; வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும் அப்பெயரை அறியார்.'

To the Church in Thyatira (Acts 16:11–15)

18Καὶ τῷ ἀγγέλῳ τῆς ἐκκλησίας ἐν Θυατείροις γράψον Τάδε λέγει ὁ Υἱὸς τοῦ Θεοῦ ὁ ἔχων αὐτοῦ τοὺς ὀφθαλμοὺς ὡς φλόγα πυρός καὶ αὐτοῦ οἱ πόδες ὅμοιοι χαλκολιβάνῳ

18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
18 To the angel of the church in Thyatira write: These are the words of the Son of God, whose eyes are like a blazing fire and whose feet are like polished bronze.
18 "தியத்திராவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: 'தீப்பிழம்பு போன்ற கண்களும் வெண்கலம் போன்ற காலடிகளும் கொண்ட இறைமகன் கூறுவது இதுவே:

19Οἶδά σου τὰ ἔργα καὶ σου τὴν ἀγάπην καὶ τὴν πίστιν καὶ τὴν διακονίαν καὶ τὴν ὑπομονήν καὶ σου τὰ ἔσχατα τὰ ἔργα πλείονα τῶν πρώτων

19 உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
19 I know your deeds—your love, your faith, your service, your perseverance—and your latter deeds are greater than your first.
19 உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, நம்பிக்கை, திருத்தொண்டு, மனவுறுதி ஆகியவை எனக்குத் தெரியும்; நீ இப்பொழுது செய்துவரும் செயல்கள் முதலில் செய்தவற்றைவிட மிகுதியானவை என்பதும் தெரியும்.

20Ἀλλὰ ἔχω κατὰ σοῦ ὅτι ἀφεῖς τὴν γυναῖκα Ἰεζάβελ ἡ λέγουσα ἑαυτὴν προφῆτιν καὶ διδάσκει καὶ πλανᾷ ἐμοὺς τοὺς δούλους πορνεῦσαι καὶ φαγεῖν εἰδωλόθυτα

20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
20 But I have this against you: You tolerate that woman Jezebel, who calls herself a prophetess. By her teaching she misleads My servants to be sexually immoral and to eat food sacrificed to idols.
20 ஆயினும், உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. இசபேல் என்னும் பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய். தான் ஒரு இறைவாக்கினள் எனக் கூறிக்கொள்ளும் அவள் என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து அவர்கள் பரத்தைமையில் ஈடுபடவும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து வருகிறாள்.5

21καὶ ἔδωκα αὐτῇ χρόνον ἵνα μετανοήσῃ ἐκ αὐτῆς τῆς πορνείας καὶ οὐ θέλει μετανοῆσαι

21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.
21 Even though I have given her time to repent of her immorality, she is unwilling.
21 அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ தன் பரத்தைமையை விட்டு மனம்மாற விரும்பவில்லை.

22Ἰδοὺ βάλλω αὐτὴν εἰς κλίνην καὶ τοὺς μοιχεύοντας μετ’ αὐτῆς εἰς μεγάλην θλῖψιν ἐὰν μὴ μετανοήσωσιν* ἐκ αὐτῆς τῶν ἔργων

22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,
22 Behold, I will cast her onto a bed of sickness, and those who commit adultery with her will suffer great tribulation unless they repent of her deeds.
22 இதோ, அவளைப் படுத்த படுக்கையாக்குவேன். அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை விட்டுவிட்டு மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன்.

23καὶ ἀποκτενῶ αὐτῆς τὰ τέκνα ἐν θανάτῳ καὶ πᾶσαι αἱ ἐκκλησίαι γνώσονται ὅτι ἐγώ εἰμι ὁ ἐραυνῶν νεφροὺς καὶ καρδίας καὶ δώσω ἑκάστῳ ὑμῖν κατὰ ὑμῶν τὰ ἔργα

23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.
23 Then I will strike her children dead, and all the churches will know that I am the One who searches minds and hearts, and I will repay each of you according to your deeds.
23 அவளுடைய பிள்ளைகளைக் கொன்றொழிப்பேன். அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆய்கிறவர் நானே என்பதை எல்லாத் திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்.6

24δὲ λέγω τοῖς λοιποῖς Ὑμῖν τοῖς ἐν Θυατείροις ὅσοι οὐκ ἔχουσιν ταύτην τὴν διδαχὴν οἵτινες οὐκ ἔγνωσαν τὰ ὡς λέγουσιν βαθέα τοῦ Σατανᾶ βάλλω οὐ ἄλλο βάρος ἐφ’ ὑμᾶς

24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
24 But I say to the rest of you in Thyatira, who do not hold to her teaching and have not learned the so-called deep things of Satan: I will place no further burden upon you.
24 தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. 'சாத்தானின் ஆழ்ந்த ஞானம்' எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன்.

25πλὴν κρατήσατε ὃ ἔχετε ἄχρι οὗ ἂν ἥξω

25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
25 Nevertheless, hold fast to what you have until I come.
25 நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் நான் வரும்வரை பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்.

26Καὶ ὁ νικῶν καὶ ὁ τηρῶν μου τὰ ἔργα ἄχρι τέλους δώσω αὐτῷ ἐξουσίαν ἐπὶ τῶν ἐθνῶν

26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
26 And to the one who overcomes and continues in My work until the end, I will give authority over the nations.
26 ❮26-28❯என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும், "வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன். அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்; குயவர்கலத்தைப் போல நொறுக்குவார்கள்.' விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.

27καὶ ποιμανεῖ αὐτοὺς ἐν σιδηρᾷ ῥάβδῳ συντρίβεται ὡς τὰ σκεύη τὰ κεραμικὰ ὡς κἀγὼ εἴληφα παρὰ τοῦ μου Πατρός

27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
27 He will rule them with an iron scepter and shatter them like potterya —just as I have received authority from My Father.

28καὶ δώσω αὐτῷ τὸν τὸν πρωϊνόν ἀστέρα

28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்
28 And I will give him the morning star.

29Ὁ ἔχων οὖς ἀκουσάτω τί τὸ Πνεῦμα λέγει ταῖς ἐκκλησίαις

29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.
29 He who has an ear, let him hear what the Spirit says to the churches.
29 கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்."


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Revelation  Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22

MAT  MRK  LUK  JHN   ACT  ROM  1CO   2CO  GAL   EPH   PHP  COL  1TH  2TH  1TI  2TI  TIT  PHM   HEB   JAS  1PE  2PE  1JN  2JN  3JN  JUD  REV

Footnotes:
27Psalm 2:9 (see also LXX)

Copyright:
The Greek New Testament (Nestle, 1904) is in the Public Domain.
The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam,1995 edition)
© Bible Society of India (BSI) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC).
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.