பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
2 Kings 2 இராஜாக்கள் מְלָכִים ב
2 ராஜாக்கள் 16 | 2 Kings 16
Ahaz Reigns in Judah (2 Chronicles 28:1–4)
1 ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.
1 In the seventeenth year of Pekah son of Remaliah, Ahaz son of Jotham became king of Judah.
1 இரமலியாவின் மகன் பெக்கா ஆட்சியேற்ற பதினேழாம் ஆண்டில் யூதா அரசன் யோத்தாமின் மகன் ஆகாசு அரசனானான்.
2 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
2 Ahaz was twenty years old when he became king, and he reigned in Jerusalem sixteen years. And unlike David his father, he did not do what was right in the eyes of the LORD his God.
2 ஆகாசு அரசனானபோது அவனுக்கு வயது இருபது. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் தன் மூதாதையான தாவீதைப் போல் தன் கடவுளான ஆண்டவர் திருமுன் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை.
3 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.
3 Instead, he walked in the ways of the kings of Israel and even sacrificed his son in the fire, according to the abominations of the nations that the LORD had driven out before the Israelites.
3 இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே தானும் நடந்து, இஸ்ரயேலரின் பார்வையில் ஆண்டவர் விரட்டியடித்த வேற்றினத்தாரின் அருவருப்பான வழக்கத்தின்படியே தன் மகனைத் தீயிலிட்டுப் பலியாக்கினான்.1
1 இச 12:31.
4 மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
4 And he sacrificed and burned incense on the high places, on the hills, and under every green tree.
4 மேலும், தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான்.
5 அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.
5 Then Rezin king of Aram and Pekah son of Remaliah king of Israel came up to wage war against Jerusalem. They besieged Ahaz but could not overcome him.
5 அப்பொழுது சிரியாவின் மன்னன் ரேட்சீனும் இஸ்ரயேலின் அரசனும் இரமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்து, ஆகாசுக்கு எதிராக முற்றுகையிட்டனர். ஆனால், அவர்களால் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.2
2 எசா 7:1.
6 அக்காலத்தில் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள் வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள்.
6 At that time Rezin king of Aram recovered Elathb for Aram,c drove out the men of Judah, and sent the Edomites into Elath, where they live to this day.
6 அவ்வேளையில், ஏதோம் மன்னன்* தன் நாட்டிற்காக** ஏலாத்தைக் கைப்பற்றி அங்கிருந்து யூதா மக்களை விரட்டியடித்தான். ஏதோமியர் ஏலாத்திற்குள் நுழைந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகின்றனர்.34
3 'சிரியாவின் மன்னன் ரேட்சீன்' என்பது எபிரேய பாடம்.
4 'சிரியாவுக்காக' என்பது எபிரேய பாடம்.
7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி;
7 So Ahaz sent messengers to Tiglath-pileser king of Assyria, saying, “I am your servant and your son. Come up and save me from the hands of the kings of Aram and Israel, who are rising up against me.”
7 எனவே, ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரிடம் தூதனுப்பி "நான் உம் பணியாளன்; உம் மகன், நீர் புறப்பட்டு வந்து என்னை முற்றுகையிட்டிருக்கும் சிரியா மன்னன் கையினின்றும் இஸ்ரயேல் அரசன் கையினின்றும் விடுவிப்பீர்" என்று சொன்னான்.
8 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான்.
8 Ahaz also took the silver and gold found in the house of the LORD and in the treasuries of the king’s palace, and he sent it as a gift to the king of Assyria.
8 மேலும், ஆகாசு ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனைக் கருவூலங்களிலும் இருந்த பொன்னையும் வெள்ளியையும் எடுத்து அசீரிய மன்னனுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைத்தான்.
9 அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
9 So the king of Assyria responded to him, marched up to Damascus, and captured it. He took its people to Kir as captives and put Rezin to death.
9 அசீரிய மன்னன் அதற்கு இணங்கி, தமஸ்குவைக் கைப்பற்றி அதன் குடிமக்களைக் கீருக்கு நாடு கடத்தினான்.
The Idolatry of Ahaz (2 Chronicles 28:16–27)
10 அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.
10 Then King Ahaz went to Damascus to meet Tiglath-pileser king of Assyria. On seeing the altar in Damascus, King Ahaz sent Uriah the priest a model of the altar and complete plans for its construction.
10 எனவே, அரசன் ஆகாசு அசீரிய மன்னன் திக்லத் பிலேசரைச் சந்திக்கத் தமஸ்குக்குச் சென்றான். அப்பொழுது, அவன் அந்நகரிலுள்ள பலிபீடத்தைக் கண்டு அதன் வரைபடத்தையும், தன் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளையும் குரு உரியாவுக்கு அனுப்பி வைத்தான்.
11 ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
11 And Uriah the priest built the altar according to all the instructions King Ahaz had sent from Damascus, and he completed it by the time King Ahaz had returned.
11 அரசன் ஆகாசு தமஸ்குவிலிருந்து அனுப்பிய பலிபீடக் கட்டமைப்பின் எல்லாக் குறிப்புகளுக்கும் ஏற்ப, குரு உரியா அவன் திரும்பி வருவதற்குள் கட்டி முடித்தார்.
12 ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு,
12 When the king came back from Damascus and saw the altar, he approached it and presented offerings on it.
12 அரசன் தமஸ்குவிலிருந்து திரும்பி வந்தான். அவன் பலிபீடத்தைக் கண்டு, நெருங்கிச் சென்றான்.
13 தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
13 He offered his burnt offering and his grain offering, poured out his drink offering, and sprinkled the blood of his peace offerings on the altar.
13 அவன் எரிபலியும் உணவுப் படையலும் அதில் செலுத்தி, நீர்மப் படையலை வார்த்தான்; தனக்கென்று நல்லுறவுப் பலியின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மீது தெளித்தான்.
14 கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான்.
14 He also took the bronze altar that stood before the LORD from the front of the temple (between the new altar and the house of the LORD) and he put it on the north side of the new altar.
14 மேலும், அவன் ஆண்டவர் திருமுன் இருந்த வெண்கலப் பலிபீடத்தைக் கோவிலின் முன்புறமிருந்து அகற்றித் தன் பலிபீடத்திற்கும் ஆண்டவரின் இல்லத்திற்கும் இடையே வடபுறத்தில் வைத்தான்.5
5 விப 27:1-2; 2 குறி 4:1.
15 ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான்.
15 Then King Ahaz commanded Uriah the priest, “Offer on the great altar the morning burnt offering, the evening grain offering, and the king’s burnt offering and grain offering, as well as the burnt offerings, grain offerings, and drink offerings of all the people of the land. Sprinkle on the altar all the blood of the burnt offerings and sacrifices. But I will use the bronze altar to seek guidance.”
15 பிறகு, அரசன் ஆகாசு குரு உரியாவை நோக்கி. "பெரிய பலிபீடத்தின்மேல் காலை எரிபலியையும், மாலை உணவுப்படையலையும், அரசனின் எரிபலியையும், உணவுப் படையலையும், நாட்டு மக்கள் அனைவரின் எரிபலியையும் உணவுப் படையலையும் நீர்மப் படையலையும் செலுத்தி எரிபலிகளின் எல்லா இரத்தத்தையும் மற்றப் பலிகளின் எல்லா இரத்தத்தையும் அதன்மேல் தெளிப்பீர். வெண்கலப் பலிபீடம் திருவுளத்தை நான் அறிவதற்கென்று இருக்கட்டும்" என்றான்.
16 ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.
16 So Uriah the priest did just as King Ahaz had commanded.
16 அரசன் ஆகாசு கட்டளையிட்டபடியே, அனைத்தையும் குரு உரியா செய்தார்.
17 பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின் மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து,
17 King Ahaz also cut off the frames of the movable stands and removed the bronze basin from each of them. He took down the Sea from the bronze oxen that were under it and put it on a stone base.
17 அப்பொழுது, அரசன் ஆகாசு சக்கரத் தாங்கிகளைப் பிரித்துக் கொப்பரைகளை அவற்றினின்று அகற்றினான். வெண்கல நீர்த் தொட்டியைக் காளைகளினின்று அகற்றி, அதனைக் கல்தளத்தின்மீது வைத்தான்.6
18 ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளில் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.
18 And on account of the king of Assyria, he removed the Sabbath canopyd they had built in the temple and closed the royal entryway outside the house of the LORD.
18 மேலும், அசீரிய மன்னனின் விருப்பத்திற்கிணங்க, ஆண்டவரின் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அரியணை மேடையையும் வெளியிலிருந்த அரச நுழைவாயிலையும் அவன் அகற்றினான்.
19 ஆகாஸ் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
19 As for the rest of the acts of Ahaz, along with his accomplishments, are they not written in the Book of the Chronicles of the Kings of Judah?
19 ஆகாசு செய்த பிற செயல்கள், 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
20 ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
20 And Ahaz rested with his fathers and was buried with them in the City of David, and his son Hezekiah reigned in his place.
20 ஆகாசு தன் மூதாதையரோடு துயில்கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பின் அவன் மகன் எசேக்கியா அரசர் ஆனார்.7
7 எசா 14:28.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
3 a Literally made his son pass through the fire
6 b Elath is a variant of Eloth ; see 1 Kings 9:26.
6 c Or Syria
18 d Or the base of his throne ; see also LXX.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.