பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Ezekiel எசேக்கியேல் יְחֶזְקֵאל
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48
எசேக்கியேல் 1 | Ezekiel 1
Ezekiel’s Vision by the River Kebar (Psalm 137:1–9)
1 முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
1 In the thirtieth year, on the fifth day of the fourth month, while I was among the exiles by the River Kebar, the heavens opened and I saw visions of God.a
1 முப்பதாம் ஆண்டு, நான்காம் மாதம் ஐந்தாம் நாளன்று, நான் நாடு கடத்தப்பட்டோருடன் கெபார் ஆற்றோராம் இருக்கையில், விண்ணுலகம் திறக்கப்படக் கடவுள் அருளிய காட்சிகளைக் கண்டேன்.1
1 திவெ 19:11.
2 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
2 On the fifth day of the month—it was the fifth year of the exile of King Jehoiachin—
2 அந்த மாதத்தின் ஐந்தாம் நாளன்று — யோயாக்கீன் அரசன் நாடு கடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு —2
3 அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
3 the word of the LORD came directly to Ezekiel the priest, the son of Buzi, in the land of the Chaldeans by the River Kebar. And there the LORD’s hand was upon him.
3 கல்தேயர் நாட்டின் கெபார் ஆற்றோரம், பூசி என்ற குருவின் மகன் எசேக்கியேலுக்கு, ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. அங்கே ஆண்டவரின் கைவன்மை அவர்மேல் இருந்தது.
The Four Living Creatures
4 இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
4 I looked and saw a whirlwind coming from the north, a great cloud with fire flashing back and forth and brilliant light all around it. In the center of the fire was a gleam like amber,c
4 நான் உற்றுப்பார்க்கையில், வடக்கிலிருந்து புயற்காற்று விரைந்து வந்தது. மின்னலடிக்கும் பெருமேகத்தையும் அதனைச் சுற்றிச் சுடர்வீசும் தீப்பிழம்பையும், அத்தீம்பிழம்பினுள் மின்னும் வெண்கலம் போன்ற ஒன்றையும் கண்டேன்.
5 அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
5 and within it was the form of four living creatures. And this was their appearance: They had a human form,
5 அதன் நடுவினின்று நான்கு உயிரினங்களின் வடிவம் தோன்றியது. அவற்றின் தோற்றம் மனிதச் சாயலுக்கு ஒப்பாயிருந்தது.3
3 திவெ 4:6.
6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
6 but each had four faces and four wings.
6 அவை ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.
7 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
7 Their legs were straight, and the soles of their feet were like the hooves of a calf, gleaming like polished bronze.
7 அவற்றின் பாதங்கள் குளம்புகள் போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல் மின்னின.
8 அவைகளுடைய செட்டைகளின் கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
8 Under their wings on their four sides they had human hands. All four living creatures had faces and wings,
8 அவற்றின் நாற்புறமும் முகங்களும், இறக்கைகளும் இருந்ததுபோல், இறக்கைகளின் கீழ் நாற்புறமும் மனிதக் கைகளும் இருந்தன.
9 அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
9 and their wings were touching one another. They did not turn as they moved; each one went straight ahead.
9 அவை ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றவற்றின் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவை செல்கையில் முகம் திரும்பாமல், திசை மாறாமல் சென்றன.
10 அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.
10 The form of their faces was that of a man, and each of the four had the face of a lion on the right side, the face of an ox on the left side, and also the face of an eagle.
10 முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன.4
11 அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றொடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
11 Such were their faces. Their wings were spread upward; each had two wings touching the wings of the creature on either side, and two wings covering its body.
11 அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, அவற்றின் இறக்கைகள் மேல்நோக்கி விரிந்திருந்தன. ஒவ்வொன்றின் இரண்டு இறக்கைகளும் மற்றதன் இறக்கைகளைத் தொட்டுக் கொண்டிருந்தன. எஞ்சிய இரண்டும் அவற்றின் உடல்களை மூடியிருந்தன.
12 அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
12 Each creature went straight ahead. Wherever the spirit would go, they would go, without turning as they moved.
12 அவை ஒவ்வொன்றும் நேர்முகமாய்ச் சென்றன. எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ, அங்கெல்லாம் அவையும் சென்றன. அவை செல்கையில் எப்பக்கமும் திரும்பவில்லை.
13 ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
13 In the midst of the living creatures was the appearance of glowing coals of fire, or of torches. Fire moved back and forth between the living creatures; it was bright, and lightning flashed out of it.
13 அவ்வுயரினங்களிடையே, பற்றியெரியும் நெருப்புத் தணல் போன்றும் தீப்பந்தம் போன்றும் ஏதோ ஒன்று தோன்றி, முன்னும் பின்னும் சென்றது. அந்த நெருப்பு பேரொளி வீசிற்று; அதனின்று மின்னல் கிளம்பிற்று.
14 அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
14 The creatures were darting back and forth as quickly as flashes of lightning.
14 மின்னல் பாய்வதுபோல அந்த உயிரினங்கள் முன்னும் பின்னும் விரைந்தன.
The Four Wheels
15 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
15 When I looked at the living creatures, I saw a wheel on the ground beside each creature with its four faces.
15 நான் அந்த உயிரினங்களை உற்று நோக்கியபோது, நான்கு முகம் கொண்ட ஒவ்வோர் உயிரினத்தின் அருகிலும் உயிரினத்துக்கு ஒரு சக்கரமாக நான்கு சக்கரங்கள் நிலத்தின்மேல் தென்பட்டன.
16 சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
16 The workmanship of the wheels looked like the gleam of beryl, and all four had the same likeness. Their workmanship looked like a wheel within a wheel.
16 அந்தச் சக்கரங்களின் தோற்றமும் அமைப்பும்; அவை மரகதக் கல்லின் நிறத்துடன் தோன்றின. அவை நான்கும் ஒரே வடிவம் கொண்டிருந்தன; அவற்றின் தோற்றமும் அமைப்பும் சக்கரத்துக்குள் வேறொரு சக்கரம் பொருத்தப்பட்டதாக இருந்தன.
17 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
17 As they moved, they went in any of the four directions, without pivoting as they moved.
17 அவை இயங்குகையில் எப்பக்கமும் திரும்பாமல் நாற்றிசையிலும் செல்லக்கூடியவை.
18 அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
18 Their rims were high and awesome, and all four rims were full of eyes all around.
18 அவற்றின் வட்ட விளிம்புகள், உயரமாயும் அச்சம் தருவனவாயும் இருந்தன. அவை நான்கின் வட்ட விளிம்புகளும் கண்களால் நிறைந்திருந்தன.5
5 திவெ 4:8.
19 அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
19 So as the living creatures moved, the wheels moved beside them, and when the creatures rose from the ground, the wheels also rose.
19 உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும்.
20 ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
20 Wherever the spirit would go, they would go, and the wheels would rise alongside them, because the spirit of the living creatures was in the wheels.
20 எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்ததால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன.
21 அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21 When the creatures moved, the wheels moved; when the creatures stood still, the wheels stood still; and when the creatures rose from the ground, the wheels rose alongside them, because the spirit of the living creatures was in the wheels.
21 அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.6
6 எசே 10:9-13.
The Divine Glory
22 ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
22 Spread out above the heads of the living creatures was the likeness of an awesome expanse, gleaming like crystal.
22 உயிரினங்களின் தலைகளுக்குமேல் கவிகை போன்ற அமைப்பு ஒன்று இருந்தது. அது பளிங்கு போன்ற தோற்றம் கொண்டு, அச்சம் தருவதாய், அவற்றின் தலைகளுக்கு மேல் விரிந்திருந்தது.7
7 திவெ 4:6.
23 மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
23 And under the expanse, their wings stretched out toward one another. Each one also had two wings covering its body.
23 அக்கவிகையின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிராக விரிந்திருந்தன. மேலும் உயிரினம் ஒவ்வொன்றும் தன் உடலை இரண்டு இறக்கைகளால் மூடிக் கொண்டிருந்தது.
24 அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
24 When the creatures moved, I heard the sound of their wings like the roar of many waters, like the voice of the Almighty,d like the tumult of an army. When they stood still, they lowered their wings.
24 அவை செல்லும்போது அவற்றின் இறக்கைகள் எழுப்பிய ஒலியைக் கேட்டேன். அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போன்றும், எல்லாம் வல்லவரின் குரலொலி போன்றும் இருந்தது. அவை இயங்கும்போது ஏற்படும் இரைச்சலின் ஒலி ஒரு போர்ப்படையின் இரைச்சலை ஒத்த ஆரவாரமாக இருந்தது. அவை நின்றபோது தங்கள் இறக்கைகளை இறக்கிக்கொண்டன.8
25 அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
25 And there came a voice from above the expanse over their heads as they stood still with their wings lowered.
25 அவை தங்கள் இறக்கைகளை இறக்கி நின்றபோது அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின் மீதிருந்து குரலொன்று கேட்டது.
26 அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
26 Above the expanse over their heads was the likeness of a throne with the appearance of sapphire, and on the throne high above was a figure like that of a man.
26 அவற்றின் தலைக்கு மேலிருந்த கவிகையின்மீது நீல மணிக்கல் தோற்றமுடைய ஓர் அரியணை போன்ற ஒன்று தெரிந்தது. அந்த அரியணை மேல் மனிதச் சாயலுக்கு ஒப்பான ஓர் உருவமும் தெரிந்தது.9
9 எசே 10:1; திவெ 4:2-3.
27 அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
27 From what seemed to be His waist up, I saw a gleam like amber, with what looked like fire within it all around. And from what seemed to be His waist down, I saw what looked like fire; and brilliant light surrounded Him.
27 அவரது இடைக்கு மேற்புறம் சுற்றிலும் பளபளக்கும் வெண்கலம் போன்றும். நெருப்பு சூழ்ந்திருப்பதுபோன்றும் இருக்க நான் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்புறம் நெருப்புப் போன்றும் சுற்றிலும் ஒளிமயமாயும் இருக்கக் கண்டேன்.10
10 எசே 8:2.
28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
28 The appearance of the brilliant light all around Him was like that of a rainbow in a cloud on a rainy day. This was the appearance of the likeness of the glory of the LORD. And when I saw it, I fell facedown and heard a voice speaking.
28 சூழ்ந்திருந்த ஒளியும் கார்கால மேகத்தினிடையே காணப்படும் வானவில் போன்று தோன்றியது. இது ஆண்டவரது மாட்சிமிகு சாயலின் காட்சி.இதை நான் பார்த்ததும் முகம் குப்புற விழுந்தேன்; அப்போது ஒருவர் பேசும் குரல் கேட்டேன்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or from God
3 b That is, the Babylonians
4 c Or The center of the fire looked like glowing metal ; similarly in verse 27
24 d Hebrew Shaddai
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.