பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Lamentations புலம்பல் אֵיכָה
புலம்பல் 1 | Lamentations 1
How Lonely Lies the City! (2 Kings 24:10–17)
1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!
1 Howa lonely lies the city, once so full of people! She who was great among the nations has become a widow. The princess of the provinces has become a slave.
1 அந்தோ! மக்கள் மிகுந்த மாநகர் தனியளாய் அமர்ந்தனளே! நாடுகளில் மாண்புடையாள் விதவைபோல் ஆனாளே! மாநிலங்களின் இளவரசி அடிமைப்பெண் ஆயினளே!
2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.
2 She weeps aloud in the night, with tears upon her cheeks. Among all her lovers there is no one to comfort her. All her friends have betrayed her; they have become her enemies.
2 ஆறாத் துயருற்று இரவில் அவள் அழுகின்றாள்; அவளின் கன்னங்களில் கண்ணீர் வடிகின்றது; அவளின் காதலரில் தேற்றுவார் எவரும் இல்லை; அவளின் நண்பர் அனைவரும் அவளுக்குத் துரோகம் செய்து பகைவர் ஆயினர்.
3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
3 Judah has gone into exile under affliction and harsh slavery; she dwells among the nations but finds no place to rest. All her pursuers have overtaken her in the midst of her distress.
3 இன்னலுற்ற அடிமையான யூதா நாடுகடத்தப்பட்டாள்! வேற்றினத்தாருடன் தங்கியிருக்கும் அவள் அமைதி பெறவில்லை! துரத்தி வந்தோர் இடுக்குகளிடையே அவளை வளைத்து பிடித்தனர்!
4 பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
4 The roads to Zion mourn, because no one comes to her appointed feasts. All her gates are deserted; her priests groan, her maidens grieve, and she herself is bitter with anguish.
4 விழாக்களுக்குச் செல்பவர் யாருமில்லை; சீயோனுக்குச் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் நுழைவாயில்கள் பாழடைந்துள்ளன; அவள் குருக்கள் பெருமூச்சு விடுகின்றனர்; அவளின் கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர்; அவளுக்கு வாழ்க்கையே கசப்பாயிற்று.
5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்; அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
5 Her foes have become her masters; her enemies are at ease. For the LORD has brought her grief because of her many transgressions. Her children have gone away as captives before the enemy.
5 உயர் தலைவர் ஆயினர் அவளின் எதிரிகள்! வளமுடன் வாழ்கின்றனர் அவளின் பகைவர்! அவளுடைய பல்வேறு குற்றங்களுக்காக ஆண்டவர் அவளைத் துன்பத்திற்கு உட்படுத்தினார்! அவள் குழந்தைகளை எதிரிகள் கைதியாக்கிக்கொண்டு போயினர்.
6 சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்து போனார்கள்.
6 All the splendor has departed from the Daughter of Zion. Her princes are like deer that find no pasture; they lack the strength to flee in the face of the hunter.
6 அனைத்து மேன்மையும் மகள் சீயோனை விட்டு அகன்றது; அவள் தலைவர்கள் பசும்புல் காணா மான்கள்போல் ஆயினர். துரத்தி வருவோர் முன் அவர்கள் ஆற்றல் அற்றவர் ஆயினர்.
7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
7 In the days of her affliction and wandering Jerusalem remembers all the treasures that were hers in days of old. When her people fell into enemy hands she received no help. Her enemies looked upon her, laughing at her downfall.
7 எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்; அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்; அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.
8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைப்பண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
8 Jerusalem has sinned greatly; therefore she has become an object of scorn. All who honored her now despise her, for they have seen her nakedness;b she herself groans and turns away.
8 ஏராளமாய்ப் பாவம் செய்தாள் எருசலேம்; அதனால் அவள் கறைப்பட்டவள் ஆனாள்; அவளை முன்பு மதித்த அனைவரும் அவமதித்தனர்; அவளுடைய திறந்த மேனியைக் கண்டனர்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னோக்கித் திரும்பினாள்.
9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.
9 Her uncleanness stains her skirts; she did not consider her end. Her downfall was astounding; there was no one to comfort her. Look, O LORD, on my affliction, for the enemy has triumphed!
9 ஐயகோ! அவள் தீட்டு அவள் ஆடையில் தெரிகின்றதே! அவள் தனக்கு வரவிருப்பதை நினைவில் கொள்ள வில்லை! அவளது வீழ்ச்சி அதிர்ச்சியைத் தருகின்றது! அவளைத் தேற்றுவார் யாரும் இல்லை! "ஆண்டவரே என் துன்பத்தைப் பாரும்! பகைவன் பெருமை பெற்றுவிட்டான்!"
10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.
10 The adversary has seized all her treasures. For she has seen the nations enter her sanctuary—those You had forbidden to enter Your assembly.
10 ஒப்பற்ற அவளது விருப்பமான பொருளனைத்தின்மீதும் கைவைத்தான் பகைவன்! வேற்றினத்தார் உம் சபைக்கு வருவதைத் தடை செய்தீர்! அன்னார் அவளது திருத்தலத்தில் நுழைவதை அவள் பார்த்து நின்றாள்!
11 அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.
11 All her people groan as they search for bread. They have traded their treasures for food to keep themselves alive. Look, O LORD, and consider, for I have become despised.
11 உணவைத் தேடி அவளின் மக்கள் அனைவரும் ஓலமிடுகின்றனர்! உயிரைக் காத்திடத் தம் ஒப்பற்ற பொருள்களை உணவுக்காகத் தந்தனர்! "ஆண்டவரே என்னைக் கண்ணோக்கும்! நான் எத்தகு இழிநிலைக்கு உள்ளானேன் என்று பாரும்!"
12 வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
12 Is this nothing to you, all you who pass by? Look around and see! Is there any sorrow like mine, which was inflicted on me, which the LORD made me suffer on the day of His fierce anger?
12 இவ்வழியாய்க் கடந்து செல்வோரே! உங்களுக்குக் கவலை இல்லையா? அனைவரும் உற்றுப் பாருங்கள்! எனக்கு வந்துற்ற துயர்போல வேறேதும் துயர் உண்டோ? ஆண்டவர் தம் வெஞ்சின நாளில் என்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கினார்.
13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.
13 He sent fire from on high, and it overpowered my bones. He spread a net for my feet and turned me back. He made me desolate, faint all the day long.
13 மேலிருந்து அவர் நெருப்பினை என் எலும்புகளுக்குள் இறங்கச் செய்தார்! என் கால்களுக்கு வலை விரித்தார்! அவர் என்னைப் பின்னடையச் செய்தார்! அவர் என்னைப் பாழாக்கினார்! நாள் முழுவதும் நான் சோர்ந்து போகிறேன்.
14 என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
14 My transgressions are bound into a yoke,14 knit together by His hand; they are draped over my neck, and the Lord has broken my strength. He has delivered me into the hands of those I cannot withstand.
14 என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால் பூட்டப்பட்டுள்ளது; அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன; அவர் என் வலிமையைக் குன்றச் செய்தார்; நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.
15 என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.
15 The Lord has rejected all the mighty men in my midst; He has summoned an army against med to crush my young warriors. Like grapes in a winepress, the Lord has trampled the Virgin Daughter of Judah.
15 என் தலைவர் என்னிடமுள்ள வலியோர் அனைவரையும் அவமதித்தார்; என் இளைஞரை அடித்து நொறுக்க அவர் எனக்கு எதிராக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; மகள் யூதாவாகிய கன்னியை, ஆலையில் திராட்சைப் பழத்தைப் பிழிவதுபோல, என் தலைவர் கசக்கிப் பிழிந்தார்.
16 இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
16 For these things I weep; my eyes flow with tears. For there is no one nearby to comfort me, no one to revive my soul. My children are destitute because the enemy has prevailed.
16 இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன்; என் இரு கண்களும் கண்ணீரைப் பொழிகின்றன; என் உயிரைக் காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார்; பகைவன் வெற்றி கொண்டதால் என் பிள்ளைகள் பாழாய்ப் போயினர்.
17 சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூர ஸ்திரீக்கு ஒப்பானாள்.
17 Zion stretches out her hands, but there is no one to comfort her. The LORD has decreed against Jacob that his neighbors become his foes. Jerusalem has become an unclean thing among them.
17 சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள்; அவளைத் தேற்றுவார் யாருமில்லை; சூழ்ந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார்; எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
18 கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.
18 The LORD is righteous, for I have rebelled against His command. Listen, all you people; look upon my suffering. My young men and maidens have gone into captivity.
18 ஆண்டவரோ நீதியுள்ளவர்; நான் அவரது வாக்குக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தேன்; அனைத்து மக்களினங்களே, செவிகொடுங்கள்; என் துயரத்தைப் பாருங்கள்; என் கன்னிப்பெண்களும் இளைஞரும் நாடுகடத்தப்பட்டனர்.
19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம் போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.
19 I called out to my lovers, but they have betrayed me. My priests and elders perished in the city while they searched for food to keep themselves alive.
19 என் காதலர்களை அழைத்தேன்; அவர்களோ என்னை ஏமாற்றினர்; என் குருக்களும் பெரியோரும் தங்கள் உயிரைக் காத்திட உணவு தேடுகையில், நகரில் பசியால் மாண்டனர்.
20 கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
20 See, O LORD, how distressed I am! I am churning within; my heart is pounding within me, for I have been most rebellious. Outside, the sword bereaves; inside, there is death.
20 ஆண்டவரே, என்னைக் கண்ணோக்கும்! துயரில் நான் மூழ்கியுள்ளேன்! நான் பெருங் கலகம் செய்துள்ளேன்! என் குலை நடுங்குகின்றது! என் இதயம் வெடிக்கின்றது! வெளியே வாளுக்கு இரையாகினர் என் பிள்ளைகள்! வீட்டினுள்ளும் சாவு மயம்!
21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
21 People have heard my groaning, but there is no one to comfort me. All my enemies have heard of my trouble; they are glad that You have caused it. May You bring the day You have announced, so that they may become like me.
21 நான் விடும் பெருமூச்சை அவர்கள் கேட்டார்கள்; என்னைத் தேற்றுவார் யாரும் இல்லை; என் எதிரிகள் அனைவரும் எனக்கு நேரிட்ட தீங்கைப்பற்றிக் கேள்வியுற்றனர்; நீரே அதைச் செய்தீர் என மகிழ்ச்சி அடைகின்றனர்! நீர் அறிவித்த நாளை வரச் செய்யும்! அவர்களும் என்னைப்போல் ஆகட்டும்!
22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.
22 Let all their wickedness come before You, and deal with them as You have dealt with me because of all my transgressions. For my groans are many, and my heart is faint.
22 அவர்கள் தீச்செயல்கள் அனைத்தும் உம் திருமுன் வருவதாக! என் அனைத்துக் குற்றங்களின் பொருட்டு, நீர் என்னைத் தண்டித்தது போல், அவர்களையும் தண்டியும்! விம்மல்கள் மிகப் பல! என் இதயம் சோர்ந்துபோயிற்று!
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a This chapter is an acrostic poem, each verse beginning with the successive letters of the Hebrew alphabet.
8 b Or her shame
14 c Most Hebrew manuscripts; other Hebrew manuscripts and LXX He kept watch over my sins
15 d Or has set a time for me
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.