பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®
பழைய ஏற்பாடு   புதிய ஏற்பாடு

Obadiah  ஒபதியா  עֹבַדְיָה

அதிகாரம்  1   

ஒபதியா 1 | Obadiah 1

The Destruction of Edom (Jeremiah 49:7–22)

1חֲז֖וֹן עֹֽבַדְיָ֑ה כֹּֽה־אָמַר֩ אֲדֹנָ֨י יְהוִ֜ה לֶאֱד֗וֹם שְׁמוּעָ֨ה שָׁמַ֜עְנוּ מֵאֵ֤ת יְהוָה֙ וְצִיר֙ בַּגּוֹיִ֣ם שֻׁלָּ֔ח ק֛וּמוּ וְנָק֥וּמָה עָלֶיהָ לַמִּלְחָמָֽה׃

1 ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம்.:
1 This is the vision of Obadiah: This is what the Lord GOD says about Edom—We have heard a message from the LORD; an envoy has been sent among the nations to say, “Rise up, and let us go to battle against her!”—
1 ஒபதியா கண்ட காட்சி: தலைவராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்து இவ்வாறு சொல்கின்றார்: "விழித்தெழுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!" என்று அறிவிக்கத் தூதன் ஒருவனை வேற்றினத்தாரிடையே ஆண்டவர் அனுப்பினார், என்பதாக ஆண்டவரிடமிருந்து வந்த செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம்.

2הִנֵּ֥ה קָטֹ֛ן נְתַתִּ֖יךָ בַּגּוֹיִ֑ם בָּז֥וּי אַתָּ֖ה מְאֹֽד׃

2 இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய்.
2 “Behold, I will make you small among the nations; you will be deeply despised.
2 நான் உன்னை மக்களினத்தாரிடையே சிறுமைக்குள்ளாக்குவேன்; நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய்.

3זְד֤וֹן לִבְּךָ֙ הִשִּׁיאֶ֔ךָ שֹׁכְנִ֥י בְחַגְוֵי־סֶ֖לַע מְר֣וֹם שִׁבְתּ֑וֹ אֹמֵ֣ר בְּלִבּ֔וֹ מִ֥י יוֹרִדֵ֖נִי אָֽרֶץ׃

3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
3 The pride of your heart has deceived you, O dwellers in the clefts of the rocksa whose habitation is the heights, who say in your heart, ‘Who can bring me down to the ground?’
3 பாறை இடுக்குகளில் வாழ்பவனே! உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே! 'என்னைத் தரை மட்டும் தாழ்த்தக் கூடியவன் யார்?' என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது.

4אִם־תַּגְבִּ֣יהַּ כַּנֶּ֔שֶׁר וְאִם־בֵּ֥ין כּֽוֹכָבִ֖ים שִׂ֣ים קִנֶּ֑ךָ מִשָּׁ֥ם אוֹרִֽידְךָ֖ נְאֻם־יְהוָֽה׃

4 நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,
4 Though you soar like the eagle and make your nest among the stars, even from there I will bring you down,” declares the LORD.
4 நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.

5אִם־גַּנָּבִ֤ים בָּאֽוּ־לְךָ֙ אִם־שׁ֣וֹדְדֵי לַ֔יְלָה אֵ֣יךְ נִדְמֵ֔יתָה הֲל֥וֹא יִגְנְב֖וּ דַּיָּ֑ם אִם־בֹּֽצְרִים֙ בָּ֣אוּ לָ֔ךְ הֲל֖וֹא יַשְׁאִ֥ירוּ עֹלֵלֽוֹת׃

5 நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
5 “If thieves came to you, if robbers by night—oh, how you will be ruined—would they not steal only what they wanted? If grape gatherers came to you, would they not leave some gleanings?
5 உன்னிடம் திருடர்கள் வருவார்களாயின், கொள்ளைக்காரர்கள் இரவில் வருவார்களாயின் தங்கள் தேவைக்கு அதிகமாகத் திருடுவார்களோ? திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள் உன்னிடம் வந்தால் திராட்சைப் பழங்களில் சிலவற்றையாவது விட்டுவைக்க மாட்டார்களா? நீயோவெனில் முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்!

6אֵ֚יךְ נֶחְפְּשׂ֣וּ עֵשָׂ֔ו נִבְע֖וּ מַצְפֻּנָֽיו׃

6 ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டது.
6 But how Esau will be pillaged, his hidden treasures sought out!
6 ஏசா எவ்வளவாய்க் கொள்ளையடிக்கப்பட்டான்! மறைத்து வைக்கப்பட்ட அவனுடைய கருவூலங்கள் சூறையாடப்பட்டன.

7עַֽד־הַגְּב֣וּל שִׁלְּח֗וּךָ כֹּ֚ל אַנְשֵׁ֣י בְרִיתֶ֔ךָ הִשִּׁיא֛וּךָ יָכְל֥וּ לְךָ֖ אַנְשֵׁ֣י שְׁלֹמֶ֑ךָ לַחְמְךָ֗ יָשִׂ֤ימוּ מָזוֹר֙ תַּחְתֶּ֔יךָ אֵ֥ין תְּבוּנָ֖ה בּֽוֹ׃

7 உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், அவனுக்கு உணர்வில்லை.
7 All the men allied with you will drive you to the border; the men at peace with you will deceive and overpower you. Those who eat your breadb will set a trap for you without your awareness of it.
7 உன்னோடு உடன்படிக்கை செய்தவர்கள் யாவரும் உன்னை ஏமாற்றி விட்டார்கள்; அவர்கள் உன்னை நாட்டின் எல்லை வரை விரட்டி விட்டார்கள்; உன்னோடு உறவாடியவர்கள் உனக்கு எதிராய் எழும்பி உன்னை மேற்கொண்டார்கள்; உன்னோடு உண்டவர்களும் நல்லுறவு கொண்டிருந்தவர்களும் உனக்குக் கண்ணி வைத்தார்கள்; உன்னைக் குறித்து 'அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை எங்கே?' என்றார்கள்.

8הֲל֛וֹא בַּיּ֥וֹם הַה֖וּא נְאֻם יְהוָ֑ה וְהַאֲבַדְתִּ֤י חֲכָמִים֙ מֵֽאֱד֔וֹם וּתְבוּנָ֖ה מֵהַ֥ר עֵשָֽׂו׃

8 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
8 In that day, declares the LORD, will I not destroy the wise men of Edom and the men of understanding in the mountains of Esau?
8 அந்நாளில் நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும் ஏசாவின் மலைமேல் உள்ள அறிவாளிகளையும் அழிக்காமல் விடுவேனா? என்கிறார் ஆண்டவர்.

9וְחַתּ֥וּ גִבּוֹרֶ֖יךָ תֵּימָ֑ן לְמַ֧עַן יִכָּֽרֶת־אִ֛ישׁ מֵהַ֥ר עֵשָׂ֖ו מִקָּֽטֶל׃

9 தேமானே, ஏசாவின் பர்வதத்திலுள்ள மனுஷர் யாவரும் கொலையினால் சங்கரிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
9 Then your mighty men, O Teman, will be terrified, so that everyone in the mountains of Esau will be cut down in the slaughter.
9 தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள் திகிலடைவார்கள்; ஆதலால் ஏசாவின் மலைமேல் உள்ள யாவரும், வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள்.

10מֵחֲמַ֛ס אָחִ֥יךָ יַעֲקֹ֖ב תְּכַסְּךָ֣ בוּשָׁ֑ה וְנִכְרַ֖תָּ לְעוֹלָֽם׃

10 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.
10 Because of the violence against your brother Jacob, you will be covered with shame and cut off forever.
10 உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக நீ செய்த கொடுமையை முன்னிட்டு, நீ வெட்கி நாணுவாய். நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.

11בְּיוֹם֙ עֲמָֽדְךָ֣ מִנֶּ֔גֶד בְּי֛וֹם שְׁב֥וֹת זָרִ֖ים חֵיל֑וֹ וְנָכְרִ֞ים בָּ֣אוּ שערו וְעַל־יְרוּשָׁלִַ֙ם֙ יַדּ֣וּ גוֹרָ֔ל גַּם־אַתָּ֖ה כְּאַחַ֥ד מֵהֶֽם׃

11 நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.
11 On the day you stood aloof while strangers carried off his wealth and foreigners entered his gate and cast lots for Jerusalem, you were just like one of them.
11 அயல்நாட்டார் யாக்கோபின் செல்வத்தைக் கொள்ளையிட்ட அந்நாளில் - வெளிநாட்டார் அவன் வாயில்களுக்குள் புகுந்து எருசலேமுக்காகத் தங்களுக்குள் சீட்டுப்போட்ட அந்நாளில் - நீ விலகி நின்று அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!

12וְאַל־תֵּ֤רֶא בְיוֹם־אָחִ֙יךָ֙ בְּי֣וֹם נָכְר֔וֹ וְאַל־תִּשְׂמַ֥ח לִבְנֵֽי יְהוּדָ֖ה בְּי֣וֹם אָבְדָ֑ם וְאַל־תַּגְדֵּ֥ל פִּ֖יךָ בְּי֥וֹם צָרָֽה׃

12 உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
12 But you should not gloat in that day, your brother’s day of misfortune, nor rejoice over the people of Judah in the day of their destruction, nor boast proudlyc in the day of their distress.
12 நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும்; யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்; அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்;

13אַל־תָּב֤וֹא בְשַֽׁעַר־עַמִּי֙ בְּי֣וֹם אֵידָ֔ם אַל־תֵּ֧רֶא גַם־אַתָּ֛ה בְּרָעָת֖וֹ בְּי֣וֹם אֵיד֑וֹ וְאַל־תִּשְׁלַ֥חְנָה בְחֵיל֖וֹ בְּי֥וֹם אֵידֽוֹ׃

13 என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும்,
13 You should not enter the gate of My people in the day of their disaster, nor gloat over their affliction in the day of their disaster, nor loot their wealth in the day of their disaster.
13 என் மக்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும்; அவர்கள் கேடுற்ற நாளில், அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்கள் அழிவுற்ற நாளில், அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.

14וְאַֽל־תַּעֲמֹד֙ עַל־הַפֶּ֔רֶק לְהַכְרִ֖ית אֶת־פְּלִיטָ֑יו וְאַל־תַּסְגֵּ֥ר שְׂרִידָ֖יו בְּי֥וֹם צָרָֽה׃

14 அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.
14 Nor should you stand at the crossroads to cut off their fugitives, nor deliver up their survivors in the day of their distress.
14 அவர்களுள் தப்பி ஓடியவர்களை வெட்டி வீழ்த்தும்படி வழிச் சந்துகளில் பதுங்கியிராது இருந்திருக்க வேண்டும்; அவர்கள் துயருற்ற நாளில், அவர்களில் எஞ்சியோரைக் காட்டிக்கொடுக்காது இருந்திருக்க வேண்டும். 1

The Deliverance of Israel

15כִּֽי־קָר֥וֹב יוֹם־יְהוָ֖ה עַל־כָּל־הַגּוֹיִ֑ם כַּאֲשֶׁ֤ר עָשִׂ֙יתָ֙ יֵעָ֣שֶׂה לָּ֔ךְ גְּמֻלְךָ֖ יָשׁ֥וּב בְּרֹאשֶֽׁךָ׃

15 எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.
15 For the Day of the LORD is near for all the nations. As you have done, it will be done to you; your recompense will return upon your own head.
15 ஏனெனில், ஆண்டவரின் நாள் வேற்றினத்தார் எல்லார் மேலும் வரப்போகின்றது; நீ செய்ததுபோலவே உனக்கும் செய்யப்படும்; நீ செய்த வினைகள் உன் தலைமேலேயே விழும்.

16כִּ֗י כַּֽאֲשֶׁ֤ר שְׁתִיתֶם֙ עַל־הַ֣ר קָדְשִׁ֔י יִשְׁתּ֥וּ כָֽל־הַגּוֹיִ֖ם תָּמִ֑יד וְשָׁת֣וּ וְלָע֔וּ וְהָי֖וּ כְּל֥וֹא הָֽיוּ׃

16 நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள். இராதவர்களைப்போல் இருப்பார்கள்.
16 For as you drank on My holy mountain, so all the nations will drink continually. They will drink and gulp it down; they will be as if they had never existed.
16 என் திரு மலையில், நீங்கள் என் தண்டனையாகிய பானத்தைக் குடித்தது போலவே வேற்றினத்தார் அனைவரும் குடிப்பார்கள். மேலும் குடிப்பார்ர்கள், குடித்துக் கொண்டே இருப்பார்கள்; குடித்து மயங்கிக் கிடப்பார்கள்.

17וּבְהַ֥ר צִיּ֛וֹן תִּהְיֶ֥ה פְלֵיטָ֖ה וְהָ֣יָה קֹ֑דֶשׁ וְיָֽרְשׁוּ֙ בֵּ֣ית יַֽעֲקֹ֔ב אֵ֖ת מוֹרָֽשֵׁיהֶם׃

17 ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
17 But on Mount Zion there will be deliverance, and it will be holy, and the house of Jacob will reclaim their possession.
17 ஆனால், தப்பிப் பிழைத்தோர் சீயோன் மலையில் இருப்பர்; சீயோன் மலையும் தூய்மையாய் இருக்கும்; யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர்.

18וְהָיָה֩ בֵית־יַעֲקֹ֨ב אֵ֜שׁ וּבֵ֧ית יוֹסֵ֣ף לֶהָבָ֗ה וּבֵ֤ית עֵשָׂו֙ לְקַ֔שׁ וְדָלְק֥וּ בָהֶ֖ם וַאֲכָל֑וּם וְלֹֽא־יִֽהְיֶ֤ה שָׂרִיד֙ לְבֵ֣ית עֵשָׂ֔ו כִּ֥י יְהוָ֖ה דִּבֵּֽר׃

18 யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
18 Then the house of Jacob will be a blazing fire, and the house of Joseph a burning flame; but the house of Esau will be stubble—Jacob will set it ablaze and consume it. Therefore no survivor will remain from the house of Esau.” For the LORD has spoken.
18 யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர்; யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர்; ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர்; அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள்; ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார்; ஆண்டவரே இதைக் கூறினார்.

19וְיָרְשׁ֨וּ הַנֶּ֜גֶב אֶת־הַ֣ר עֵשָׂ֗ו וְהַשְּׁפֵלָה֙ אֶת־פְּלִשְׁתִּ֔ים וְיָרְשׁוּ֙ אֶת־שְׂדֵ֣ה אֶפְרַ֔יִם וְאֵ֖ת שְׂדֵ֣ה שֹׁמְר֑וֹן וּבִנְיָמִ֖ן אֶת־הַגִּלְעָֽד׃

19 தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
19 Those from the Negev will possess the mountains of Esau; those from the foothillsd will possess the land of the Philistines. They will occupy the fields of Ephraim and Samaria, and Benjamin will possess Gilead.
19 நெகேபில் இருப்பவர்கள் ஏசாவின் மலையைத் தமதாக்கிக் கொள்வார்கள். செபேலாவைச் சார்ந்தவர்கள் பெலிஸ்தியர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள். அவர்கள் எப்ராயிம், சமாரியா நாடுகளைத் தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்; பென்யமினோ கிலயாதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.

20וְגָלֻ֣ת הַֽחֵל־הַ֠זֶּה לִבְנֵ֨י יִשְׂרָאֵ֤ל אֲשֶֽׁר־כְּנַעֲנִים֙ עַד־צָ֣רְפַ֔ת וְגָלֻ֥ת יְרוּשָׁלַ֖͏ִם אֲשֶׁ֣ר בִּסְפָרַ֑ד יִֽרְשׁ֕וּ אֵ֖ת עָרֵ֥י הַנֶּֽגֶב׃

20 சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையையும் சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
20 And the exiles of this host of the Israelites will possess the land of the Canaanites as far as Zarephath; and the exiles from Jerusalem who are in Sepharad will possess the cities of the Negev.
20 இஸ்ரயேலிலிருந்து நாடுகடத்தப்பட்ட வீரர்கள் திரும்பி வந்து பெனீசியாவிலிருந்து சாரிபாத்து வரை உள்ள நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; எருசலேமிலிருந்து செபராதுக்கு நாடுகடத்தப்பட்டோர் நெகேபின் நகர்களைச் சொந்தமாக்கிக் கொள்வர்.

21וְעָל֤וּ מֽוֹשִׁעִים֙ בְּהַ֣ר צִיּ֔וֹן לִשְׁפֹּ֖ט אֶת־הַ֣ר עֵשָׂ֑ו וְהָיְתָ֥ה לַֽיהוָ֖ה הַמְּלוּכָֽה׃

21 ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.
21 The deliverers will ascende Mount Zion to rule over the mountains of Esau. And the kingdom will belong to the LORD.
21 விடுதலை பெற்றோர் 2 ஏசாவின் மலையை ஆளுவதற்குச் சீயோன் மலைமேல் ஏறுவர்; அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும்.

2 "வெற்றி வீரர்கள்" என்பது எபிரேய பாடம்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Obadiah Chapter  1  

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
3 a Or in the retreats of Sela
b Hebrew does not include Those who eat .
12 c Hebrew nor enlarge your mouth
19 d Hebrew Shephelah  or lowlands ; that is, the western foothills of Judea
21 e Or The deliverers will go up from ; LXX Those being delivered will go up

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.