பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 10 | Jeremiah 10
The Sovereignty of God
1 இஸ்ரவேல் வீட்டாரே கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்:
1 Hear the word that the LORD speaks to you, O house of Israel.
1 இஸ்ரயேல் வீட்டாரே! ஆண்டவர் உங்களுக்குக் கூறும் சொல்லைக் கேளுங்கள்.
2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்.
2 This is what the LORD says: “Do not learn the ways of the nations or be terrified by the signs in the heavens, though the nations themselves are terrified by them.
2 ஆண்டவர் கூறுவது இதுவே; வேற்றினங்களின் வழியைக் கற்றுக் கொள்ளாதீர்; வானத்தில் தோன்றும் அடையாளங்களைக் கண்டு கலங்காதீர்; வேற்றினத்தாரே அவற்றால் கலக்கமுறுவர்.
3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும்.
3 For the customs of the peoples are worthless; they cut down a tree from the forest; it is shaped with a chisel by the hands of a craftsman.
3 வேற்றினங்கள் வழிபடும் சிலைகள் வீணானவை; அவை காட்டிலிருந்து வெட்டப்பட்ட மரத்தாலானவை; கைவினைஞர் உளியால் செய்த வேலைப்பாடுகள்.
4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள்.
4 They adorn it with silver and gold and fasten it with hammer and nails, so that it will not totter.
4 அவை பொன், வெள்ளியால் அணி செய்யப்பட்டவை. அசையாதபடி ஆணி, சுத்தியல் கொண்டு பொருத்தப் பெற்றவை.
5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
5 Like scarecrows in a cucumber patch, their idols cannot speak. They must be carried because they cannot walk. Do not fear them, for they can do no harm, and neither can they do any good.”
5 அவை வெள்ளரித் தோட்டத்துப் பொம்மை போன்றவை; அவற்றால் பேச முடியாது; அவற்றைத் தூக்கிக்கொண்டுதான் செல்லவேண்டும். அவற்றால் நடக்கவும் முடியாது. அவை நன்மையும் செய்யா; தீமையும் செய்யா; அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
6 கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.
6 There is none like You, O LORD. You are great, and Your name is mighty in power.
6 ஆண்டவரே! உமக்கு நிகர் யாருமிலர்; நீர் பெரியவர்; உமது பெயர் ஆற்றல் மிக்கது.
7 ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டிது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை.
7 Who would not fear You, O King of nations? This is Your due. For among all the wise men of the nations, and in all their kingdoms, there is none like You.
7 மக்களினங்களின் மன்னரே! உமக்கு அஞ்சாதவர் யார்? அரசுரிமை உமதே; வேற்றினத்தாரின் ஞானிகள் அனைவரிலும் அவர்களின் அரசுகள் அனைத்திலும் உமக்கு நிகர் யாருமிலர்.*
* திவெ 15:4.
8 அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது.
8 But they are altogether senseless and foolish, instructed by worthless idols made of wood!
8 அவர்கள் மூடர்களும் முட்டாள்களுமாய் உள்ளனர்; அவர்களது போதனையின் பொருளாம் சிலைகள் மரக்கட்டைகளே.
9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருத்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டானின் கைகளினாலும் செய்யப்பகிடுறது; இளநீலமும், இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது.
9 Hammered silver is brought from Tarshish, and gold from Uphaz—the work of a craftsman from the hands of a goldsmith. Their clothes are blue and purple, all fashioned by skilled workers.
9 தர்சீசிலிருந்து வெள்ளித் தகடுகளும், ஊபாசிலிருந்து பொன்னும் வந்து சேர்கின்றன. அவை கைவினைஞரின் வேலைப்பாடுகள்; பொற்கொல்லனின் கைத்திறனால் ஆனவை; ஊதா, கருஞ்சிவப்பு உடைகளைக் கொண்டவை. அவை எல்லாமே தேர்ச்சிபெற்ற கைவினைஞரின் வேலைப்பாடுகள்.
10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.
10 But the LORD is the true God; He is the living God and eternal King. The earth quakes at His wrath, and the nations cannot endure His indignation.
10 ஆனால், ஆண்டவரே உண்மையான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! அவர் வெஞ்சினம் கண்டு நிலம் நடுங்கும்; அவர் கடுங்கோபத்தை வேற்றினத்தார் தாங்கிக்கொள்ளார்.
11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
11 Thus you are to tell them: “These gods, who have made neither the heavens nor the earth, will perish from this earth and from under these heavens.”a
11 நீ அவர்களுக்கு இவ்வாறு கூறு; விண்ணையும் மண்ணையும் உருவாக்காத அந்தத் தெய்வங்கள் மண்ணின் மீதும் விண்ணின் கீழும் இல்லாதொழியும்.
12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
12 The LORD made the earth by His power; He established the world by His wisdom and stretched out the heavens by His understanding.
12 அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார்; தம் ஞானத்தால் பூவுலகை நிலை நாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.
13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்.
13 When He thunders, the waters in the heavens roar; He causes the clouds to rise from the ends of the earth. He generates the lightning with the rain and brings forth the wind from His storehouses.
13 அவர் குரல் கொடுக்க வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகிறது; மண்ணுலகின் எல்லையினின்று மேகங்கள் எழச்செய்கிறார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச் செய்கிறார்.
14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
14 Every man is senseless and devoid of knowledge; every goldsmith is put to shame by his idols. For his molten images are a fraud, and there is no breath in them.
14 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை; அவற்றுக்கு உயிர் மூச்சே இல்லை.
15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
15 They are worthless, a work to be mocked. In the time of their punishment they will perish.
15 அவை பயனற்றவை; ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்; தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.
16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
16 The Portion of Jacob is not like these, for He is the Maker of all things, and Israel is the tribe of His inheritance—the LORD of Hosts is His name.
16 யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்; அவரே அனைத்தையும் உருவாக்கியவர்; அவரது உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேல் இனத்தை உருவாக்கியவரும் அவரே; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.
The Coming Captivity of Judah
17 அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள்.
17 Gather up your belongings from this land, you who live under siege.
17 முற்றுகையிடப்பட்டவனே, தலையில் கிடக்கும் உன் பொருள்களை மூட்டையாகக் கட்டு.
18 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 For this is what the LORD says: “Behold, at this time I will sling out the inhabitants of the land and bring distress upon them so that they may be captured.”
18 ஏனெனில், ஆண்டவர் கூறுவது இதுவே; நாட்டில் வாழ்வோரை இத்தருணத்தில் வீசி எறிவேன்; அவர்கள் என்னைக் கண்டுணருமாறு அவர்களுக்குத் துன்பம் வருவிப்பேன்.
19 ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன்.
19 Woe to me because of my brokenness; my wound is grievous! But I said, “This is truly my sickness, and I must bear it.”
19 ஐயோ நான் நொறுங்குண்டேன்; என் காயம் கொடியது; நானோ "உண்மையில் இது ஒரு நோய்; நான் இதைத் தாங்கியே ஆக வேண்டும்" என்று எண்ணிக்கொண்டேன்.
20 என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.
20 My tent is destroyed, and all its ropes are snapped. My sons have departed from me and are no more. I have no one left to pitch my tent or set up my curtains.
20 என் கூடாரம் அழிக்கப்பட்டது; அதன் கயிறுகளெல்லாம் அறுத்தெறியப்பட்டன; என் மக்கள் என்னைவிட்டுச் சென்றுவிட்டனர்; அவர்கள் இங்கு இல்லை; என் கூடாரத்தை மீண்டும் எழுப்புவார் எவருமிலர்; அதன் திரைகளைக் கட்டுவார் யாருமிலர்.
21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது.
21 For the shepherds have become senseless; they do not seek the LORD. Therefore they have not prospered, and all their flock is scattered.
21 ஏனெனில், மேய்ப்பவர்கள் மூடர்களாய் இருந்தனர்; அவர்கள் ஆண்டவரைத் தேடவில்லை; எனவே, அவர்கள் வாழ்வு வளம் பெறவில்லை; அவர்களின் மந்தைகள் எல்லாம் சிதறிப்போயின.
22 இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது.
22 Listen! The sound of a report is coming—a great commotion from the land to the north. The cities of Judah will be made a desolation, a haunt for jackals.b
22 குரல் ஒலி ஒன்று கேட்கின்றது; அது அண்மையில் ஒலிக்கின்றது; வடக்கு நாட்டிலிருந்து பெருங் கொந்தளிப்பு எழுகின்றது; யூதாவின் நகர்கள் பாழாகிக் குள்ள நரிகளின் வளையாகப் போகின்றன.
23 கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.
23 I know, O LORD, that a man’s way is not his own; no one who walks directs his own steps.
23 ஆண்டவரே! நான் அறிவேன்; மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.
24 கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
24 Correct me, O LORD, but only with justice—not in Your anger, or You will bring me to nothing.
24 ஆண்டவரே! உம் சினத்திற்கு ஏற்ப அன்று, உன் நீதிக்கு ஏற்ப என்னைத் திருத்தியருளும். இல்லையெனில், நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.
25 உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.
25 Pour out Your wrath on the nations that do not acknowledge You, and on the families that do not call on Your name. For they have devoured Jacob; they have consumed him and finished him off; they have devastated his homeland.
25 உம்மை அறியாத வேற்றினத்தார் மேலும், உம் பெயரைச் சொல்லி மன்றாடாத குடும்பத்தார் மேலும் உன் சீற்றத்தைக் காட்டியருளும். ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்; விழுங்கி முற்றிலும் அழித்து விட்டார்கள்; அவர் குடியிருப்பையும் பாழாக்கிவிட்டார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a The original text of this verse is in Aramaic.
22 b Or serpents or dragons
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.