பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 13 | Jeremiah 13
The Linen Loincloth
1 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
1 This is what the LORD said to me: “Go and buy yourself a linen loincloth and put it around your waist, but do not let it touch water.”
1 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: "நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே."
2 நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
2 So I bought a loincloth as the LORD had instructed me, and I put it around my waist.
2 ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன்.
3 இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: அவர்
3 Then the word of the LORD came to me a second time:
3 எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது:
4 நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
4 “Take the loincloth that you bought and are wearing, and go at once to Perath and hide it there in a crevice of the rocks.”
4 "நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை."1
1 - 'யூப்பிரத்தீசு' என்பது மறுபெயர்.
5 நான் போய் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்திலே ஒளித்துவைத்தேன்.
5 So I went and hid it at Perath, as the LORD had commanded me.
5 ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்துவைத்தேன்.
6 அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
6 Many days later the LORD said to me, “Arise, go to Perath, and get the loincloth that I commanded you to hide there.”
6 பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: "எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா."
7 அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
7 So I went to Perath and dug up the loincloth, and I took it from the place where I had hidden it. But now it was ruined—of no use at all.
7 அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.
8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
8 Then the word of the LORD came to me:
8 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
9 இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
9 “This is what the LORD says: In the same way I will ruin the pride of Judah and the great pride of Jerusalem.
9 "ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.
10 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 These evil people, who refuse to listen to My words, who follow the stubbornness of their own hearts, and who go after other gods to serve and worship them, they will be like this loincloth—of no use at all.
10 என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
11 கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தாரனைவரையும் யூதாவின் குடும்பத்தாரனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 For just as a loincloth clings to a man’s waist, so I have made the whole house of Israel and the whole house of Judah cling to Me, declares the LORD, so that they might be My people for My renown and praise and glory. But they did not listen.
11 கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை," என்கிறார் ஆண்டவர்.
The Wineskins
12 சகல ஜாடிகளும் திராட்சரசத்திலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
12 Therefore you are to tell them that this is what the LORD, the God of Israel, says: ‘Every wineskin shall be filled with wine.’ And when they reply, ‘Don’t we surely know that every wineskin should be filled with wine?’
12 நீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்," அவர்களோ 'சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?' என்று உன்னிடம் கூறுவார்கள்.
13 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின்குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,
13 then you are to tell them that this is what the LORD says: ‘I am going to fill with drunkenness all who live in this land—the kings who sit on David’s throne, the priests, the prophets, and all the people of Jerusalem.
13 அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; "ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.
14 பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
14 I will smash them against one another, fathers and sons alike, declares the LORD. I will allow no mercy or pity or compassion to keep Me from destroying them.’”
14 அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.
Captivity Threatened
15 நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
15 Listen and give heed. Do not be arrogant, for the LORD has spoken.
15 செவிகொடுத்துக் கேளுங்கள்! செருக்குறாதீர்கள்; ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.
16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும் நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
16 Give glory to the LORD your God before He brings darkness, before your feet stumble on the dusky mountains. You wait for light, but He turns it into deep gloom and thick darkness.
16 உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப் படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்; இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.
17 நீங்கள் இதை கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண்மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
17 But if you do not listen, I will weep in secret because of your pride. My eyes will overflow with tears, because the LORD’s flock has been taken captive.
17 ஆனால் நீங்கள் இதற்குச் செவி கொடுக்காவிட்டால், உங்கள் செருக்கை முன்னிட்டு என் உள்ளம் மறைவில் அழும்; அழுகை மிகுதியால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும்; எனெனில், ஆண்டவரின் மந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.
18 நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
18 Say to the king and to the queen mother: “Take a lowly seat, for your glorious crowns have fallen from your heads.”
18 அரசனுக்கும் அரசனின் அன்னைக்கும் சொல்லுங்கள்; கீழே அமருங்கள். ஏனெனில் உங்கள் மேன்மையின் மணிமுடி உங்கள் தலைகளிலிருந்து வீழ்ந்துவிட்டது.
19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.
19 The cities of the Negev have been shut tight, and no one can open them. All Judah has been carried into exile, wholly taken captive.
19 நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம் அடைபட்டுவிட்டன; அவற்றைத் திறப்பார் யாருமில்லை; யூதா முழுவதும் நாடுகடத்தப்பட்டுள்ளது. அது முற்றிலுமாய் நாடு கடத்தப்பட்டுள்ளது.
20 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களை பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
20 Lift up your eyes and see those coming from the north. Where is the flock entrusted to you, the sheep that were your pride?
20 உன் கண்களை உயர்த்தி வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்; உனக்குத் தரப்பட்ட மந்தை — உன் பெருமைக்குரிய மந்தை — எங்கே?
21 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?
21 What will you say when He sets over you close allies whom you yourself trained? Will not pangs of anguish grip you, as they do a woman in labor?
21 உன் நண்பர்களாக நீ வளர்த்து விட்டவர்களே உன் தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போது நீ என்ன சொல்வாய்? பேறுகாலப் பெண்ணின் வேதனை உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?
22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
22 And if you ask yourself, “Why has this happened to me?” It is because of the magnitude of your iniquity that your skirts have been stripped off and your body has been exposed.b
22 இவையெல்லாம் எனக்கு ஏன் நிகழ வேண்டும் என நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்; உன் குற்றம் பெரிது! அதனால்தான் உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது! உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.
23 எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால் தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
23 Can the Ethiopian change his skin, or the leopard his spots? Neither are you able to do good—you who are accustomed to doing evil.
23 எத்தியோப்பியர் தம் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? சிறுத்தைகள் தம் புள்ளிகளை அகற்றிக்கொள்ள முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்து பழகிவிட்ட நீங்களும் நன்மை செய்ய முடியும்.
24 ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்.
24 “I will scatter you like chaff driven by the desert wind.
24 பாலைநிலக் காற்றில் பறந்து போகும் பதர்போல் நான் உங்களைச்* சிதறடிப்பேன்.2
2 - 'அவர்களை' என்பது எபிரேய பாடம்.
25 நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 This is your lot, the portion I have measured to you,” declares the LORD, “because you have forgotten Me and trusted in falsehood.
25 இதுவே உன் கதி! நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு! ஏனெனில், நீ என்னை மறந்து பொய்யை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.
26 உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
26 So I will pull your skirts up over your face, that your shame may be seen.
26 உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்கிக் கழற்றிவிடுவேன்; உன் அவமானம் காணப்படும்.
27 உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.
27 Your adulteries and lustful neighings, your shameless prostitution on the hills and in the fields—I have seen your detestable acts. Woe to you, O Jerusalem! How long will you remain unclean?”
27 உன் அருவருக்கத்தக்க செயல்களாகிய விபசாரங்களையும் காமக் கனைப்புகளையும் பரந்த வெளியில் குன்றுகளின்மேல் நீ செய்த கீழ்த்தரமான வேசித்தனத்தையும் நான் கண்டேன்; ஐயகோ! எருசலேமே! நீ தூய்மை பெறுவது எந்நாளோ?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
4 a Or possibly to the Euphrates ; similarly in verses 5–7
22 b Literally and your heels have suffered violence
23 c Hebrew that Cushite ; that is, probably a person from the upper Nile region
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.