பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 2 | Jeremiah 2
Israel Has Forsaken God
1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
1 Now the word of the LORD came to me, saying,
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 “Go and proclaim in the hearing of Jerusalem that this is what the LORD says: ‘I remember the devotion of your youth, your love as a bride, how you followed Me in the wilderness, in a land not sown.
2 "நீ சென்று எருசலேம் நகரினர் அனைவரும் கேட்கும் முறையில் இவ்வாறு பறைசாற்று. ஆண்டவர் கூறுவது இதுவே; உன் இளமையின் அன்பையும் மணமகளுக்குரிய காதலையும் விதைக்கப்படாத பாலைநிலத்தில் நீ என்னை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நான் நினைவுகூர்கிறேன்.
3 இஸ்ரவேல் கர்த்தருக்கு பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 Israel was holy to the LORD, the firstfruits of His harvest. All who devoured her found themselves guilty; disaster came upon them,’” declares the LORD.
3 இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது; அவரது அறுவடையின் முதற்கனியாய் இருந்தது; அதனை உண்டவர் அனைவரும் குற்றவாளிகள் ஆயினர்; அவர்கள்மேல் தீமையே வந்து சேர்ந்தது, என்கிறார் ஆண்டவர்.
4 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
4 Hear the word of the LORD, O house of Jacob, and all you families of the house of Israel.
4 யாக்கோபின் வீட்டாரே, இஸ்ரயேல் வீட்டின் அனைத்துக் குடும்பத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும் ஒருவனும், கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல்,
5 This is what the LORD says: “What fault did your fathers find in Me that they strayed so far from Me, and followed worthless idols, and became worthless themselves?
5 ஆண்டவர் கூறுவது இதுவே: என்னை விட்டகன்று வீணானவற்றைப் பின்பற்றி வீணாகும் அளவுக்கு உங்கள் தந்தையர் என்னிடம் என்ன தவறு கண்டனர்?
6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?
6 They did not ask, ‘Where is the LORD who brought us up from the land of Egypt, who led us through the wilderness, through a land of deserts and pits, a land of drought and darkness, a land where no one travels and no one lives?’
6 எகிப்து நாட்டிலிருந்து நம்மை அழைத்து வந்தவரும் பாழ்நிலமும் படுகுழிகள் நிறைந்த நிலமும் வறட்சி, காரிருள் மிகுந்த நிலமும் யாருமே கடந்து செல்லாததும், யாருமே வாழாததுமாகிய பாலைநிலத்தில் நம்மை நடத்தி வந்தவருமான ஆண்டவர் எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லையே!
7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள்.
7 I brought you into a fertile land to eat its fruit and bounty, but you came and defiled My land, and made My inheritance detestable.
7 செழிப்பான நாட்டுக்கு அதன் கனிகளையும் நலன்களையும் நுகருமாறு நான் உங்களை அழைத்து வந்தேன். நீங்களோ, அந்நாட்டிற்குள் வந்து அதனைத் தீட்டுப்படுத்தினீர்கள்; எனது உரிமைச் சொத்தை நீங்கள் அருவருப்புக்குள்ளாக்கினீர்கள்.
8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்.
8 The priests did not ask, ‘Where is the LORD?’ The experts in the law no longer knew Me, and the leaders rebelled against Me. The prophets prophesied by Baal and followed useless idols.
8 குருக்கள், "ஆண்டவர் எங்கே?" என்று கேட்கவில்லை; திருச்சட்டத்தைப் போதிப்போர் என்னை அறியவில்லை; ஆட்சியாளர்* எனக்கு எதிராகக் கலகம் செய்தனர்; இறைவாக்கினர் பாகால் பெயரால் பேசிப் பயனற்றவற்றைப் பின்பற்றினர்.*
* 'மேய்ப்பர்' என்பது எபிரேய பாடம்.
9 ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 Therefore, I will contend with you again, declares the LORD, and I will bring a case against your children’s children.
9 ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவேன்" என்கிறார் ஆண்டவர். உங்கள் மக்களின் மக்களோடும் வழக்காடுவேன்.
10 நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும்,
10 Cross over to the coasts of Cyprus and take a look; send to Kedar and consider carefully; see if there has ever been anything like this:
10 சைப்ரசு நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்குக் கடந்து சென்றுபாருங்கள்; கேதாருக்கு ஆளனுப்பி முழுத் தெளிவு பெறுங்கள்; இது போன்ற செயல் உண்டோ என்று பாருங்கள்.
11 எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
11 Has a nation ever changed its gods, though they are no gods at all? Yet My people have exchanged their Gloryb for useless idols.
11 தங்கள் தெய்வங்கள் தெங்வங்களே அல்ல எனினும், அவற்றினை மாற்றிக்கொண்ட மக்களினம் உண்டா? என் மக்களோ, என் மாட்சியைப் பயனற்ற ஒன்றிற்காக மாற்றிக் கொண்டனர்.
12 வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 Be stunned by this, O heavens; be shocked and utterly appalled,” declares the LORD.
12 வானங்களே இதைக் கண்டு திடுக்கிடுங்கள்; அஞ்சி நடுங்கித் திகைத்து நில்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
13 என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.
13 “For My people have committed two evils: They have forsaken Me, the fountain of living water, and they have dug their own cisterns—broken cisterns that cannot hold water.
13 ஏனெனில், என் மக்கள் இரண்டு தீச்செயல்கள் செய்தார்கள்; பொங்கிவழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்; தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்.
The Consequence of Israel’s Sin
14 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்?
14 Is Israel a slave? Was he born into slavery? Why then has he become prey?
14 இஸ்ரயேல் ஓர் அடிமையா? வீட்டில் அடிமையாகப் பிறந்தவனா? அவன் ஏன் சூறையாடப்பட வேண்டும்?
15 பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.
15 The young lions have roared at him; they have growled with a loud voice. They have laid waste his land; his cities lie in ruins, without inhabitant.
15 அவனுக்கு எதிராக இளஞ் சிங்கங்கள் கர்ச்சித்து, பெருமுழக்கம் செய்து அவனது நாட்டைப் பாழடையச் செய்தன; அவன் நகர்கள் தீக்கிரையாக்கப்பட்டன; அவற்றில் குடியிருப்போர் எவருமிலர்.
16 நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள்.
16 The men of Memphisc and Tahpanhes have shaved the crown of your head.
16 மெம்பிசு, தகபனேசு நகரினர் உன் தலையை மழித்தனர்.
17 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ உனக்கு நேரிடப்பண்ணினாய்?
17 Have you not brought this on yourself by forsaking the LORD your God when He led you in the way?
17 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வழிநடத்திச் செல்லும்போதே அவரை நீ புறக்கணித்ததால் அன்றோ இதை உனக்கு வருவித்துக் கொண்டாய்?
18 இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
18 Now what will you gain on your way to Egypt to drink the waters of the Niled? What will you gain on your way to Assyria to drink the waters of the Euphratese?
18 நைல் நதி நீரைக் குடிக்க இப்போது நீ எகிப்துக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன? யூப்பிரத்தீசு நதியின் நீரைக் குடிக்க அசீரியாவுக்குப் போவதால் உனக்கு வரும் பயன் என்ன?
19 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
19 Your own evil will discipline you; your own apostasies will reprimand you. Consider and realize how evil and bitter it is for you to forsake the LORD your God and to have no fear of Me,” declares the Lord GOD of Hosts.
19 உன் தீச்செயலே உன்னைத் தண்டிக்கும்; உன் பற்றுறுதியின்மையே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவராம் என்னைப் புறக்கணித்தது தீயது எனவும் கசப்பானது எனவும் கண்டுணர்ந்து கொள். என்னைப் பற்றிய அச்சமே உன்னிடம் இல்லை, என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
20 பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.
20 “For long ago you broke your yoke and tore off your chains, saying, ‘I will not serve!’ Indeed, on every high hill and under every green tree you lay down as a prostitute.
20 நெடுங்காலத்துக்கு முன்பே உன் நுகத்தடியை முறித்துவிட்டாய்; உன் தளைகளை அறுத்துவிட்டாய்; "நான் ஊழியம் செய்யேன்" என்று சொன்னாய். உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விலைமாதாகக் கிடந்தாயே!
21 நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
21 I had planted you like a choice vine from the very best seed. How could you turn yourself before Me into a rotten, wild vine?
21 முற்றிலும் நல்ல கிளையினின்று உயர் இனத் திராட்சைச் செடியாய் உன்னை நட்டு வைத்தேன்; நீ கெட்டுப்போய்த் தரங்கெட்ட காட்டுத் திராட்சைச் செடியாய் மாறியது எப்படி?
22 நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22 Although you wash with lye and use an abundance of soap, the stain of your guilt is still before Me,” declares the Lord GOD.
22 நீ உன்னை உவர் மண்ணினால் கழுவினாலும், எவ்வளவு சவர்க்காரத்தைப் பயன்படுத்தினாலும், உன் குற்றத்தின் கறை என் கண்முன்னே இருக்கிறது, என்கிறார் என் தலைவராகிய ஆண்டவர்.
Israel’s Unfaithfulness (Judges 2:10–15; Isaiah 43:22–28)
23 நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.
23 “How can you say, ‘I am not defiled; I have not run after the Baals’? Look at your behavior in the valley; acknowledge what you have done. You are a swift young she-camel galloping here and there,
23 "நான் தீட்டுப்படவில்லை; பாகால்களுக்குப்பின் திரியவில்லை" என எப்படி நீ கூற முடியும்? பள்ளத்தாக்கில் நீ சென்ற பாதையைப் பார்; நீ செய்தது என்ன என்று அறிந்துகொள்; இங்கும் அங்கும் விரைந்தோடும் பெண் ஒட்டகம் நீ.
24 வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.
24 a wild donkey at home in the wilderness, sniffing the wind in the heat of her desire. Who can restrain her passion? All who seek her need not weary themselves; in mating season they will find her.
24 பாலைநிலத்தில் பழகியதும், காம வேட்கையில் மோப்பம் பிடிப்பதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காம வெறியை யாரால் கட்டுப்படுத்த முடியும்? அதனை வருந்தித் தேடத் தேவையில்லை; புணர்ச்சிக் காலத்தில் அதனை எளிதில் காணலாம்.
25 உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால் நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய்.
25 You should have kept your feet from going bare and your throat from being thirsty. But you said, ‘It is hopeless! For I love foreign gods, and I must go after them.’
25 "கால் தேய ஓடாதே; தொண்டை வறண்டுபோக விடாதே" என்றால், நீயோ, "பயனில்லை. நான் வேற்றுத் தெய்வங்கள்மேல் மோகம் கொண்டேன்; அவர்கள் பின்னே திரிவேன்" என்றாய்.
26 திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
26 As the thief is ashamed when he is caught, so the house of Israel is disgraced. They, their kings, their officials, their priests, and their prophets
26 திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
27 அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள்.
27 say to a tree, ‘You are my father,’ and to a stone, ‘You gave me birth.’ For they have turned their backs to Me and not their faces, yet in the time of trouble they beg, ‘Rise up and save us!’
27 ஒரு மரத்தை நோக்கி, "நீயே என் தந்தை" என்பர்; ஒரு கல்லை நோக்கி, "நீயே என்னைப் பெற்றெடுத்தவள்" என்பர். எனக்கு முகத்தையல்ல, முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தீங்கு வந்துற்ற நேரத்தில் , "எழுந்தருளி எங்களை விடுவியும்" என்பர்.
28 நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி.
28 But where are the gods you made for yourselves? Let them rise up in your time of trouble and save you if they can; for your gods are as numerous as your cities, O Judah.
28 உனக்கென நீ செய்துகொண்ட தெய்வங்கள் எங்கே? உனக்குத் தீங்கு வந்துற்ற நேரத்தில், முடிந்தால் அவை எழுந்து உன்னை விடுவிக்கட்டுமே! யூதாவே, உன் நகர்கள் எத்தனையோ, அத்தனை தெய்வங்கள் உன்னிடம் இருக்கின்றனவே!
29 என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 Why do you bring a case against Me? You have all rebelled against Me,” declares the LORD.
29 என்னிடம் ஏன் முறையிடுகிறீர்கள்? நீங்கள் எல்லாரும் எனக்கு எதிராய்க் கலகம் செய்தவர்களே, என்கிறார் ஆண்டவர்.
30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.
30 “I have struck your sons in vain; they accepted no discipline. Your own sword has devoured your prophets like a voracious lion.”
30 நான் உங்கள் மக்களை அடித்து நொறுக்கியது வீண்; அவர்கள் திருந்தவில்லை; சிங்கம் அழித்தொழிப்பதுபோல உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினரை வீழ்த்தியது.
31 சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.
31 You people of this generation, consider the word of the LORD: “Have I been a wilderness to Israel or a land of dense darkness? Why do My people say, ‘We are free to roam; we will come to You no more’?
31 இத்தலைமுறையினரே! ஆண்டவர் வாக்கைக் கவனியுங்கள். நான் இஸ்ரயேலுக்குப் பாலைநிலமாய் இருந்தேனா? அல்லது இருள்சூழ் நிலமாய் இருந்தேனா? "நாங்கள் விருப்பம் போல் சுற்றித் திரிவோம்; இனி உம்மிடம் வரமாட்டோம்" என்று என் மக்கள் ஏன் கூறினார்கள்?
32 ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள்.
32 Does a maiden forget her jewelry or a bride her wedding sash? Yet My people have forgotten Me for days without number.
32 ஒரு கன்னிப் பெண் தன் நகைகளை மறப்பாளோ? மணப்பெண் தன் திருமண உடையை மறப்பதுண்டோ? என் மக்களோ என்னை எண்ணிறந்த நாள்களாய் மறந்து விட்டார்கள்.
33 நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
33 How skillfully you pursue love! Even the most immoral of women could learn from your ways.
33 காதலரை அடையும் வழிகளைச் சிறப்பாய் வகுத்துள்ளாய்; ஒழுக்கமற்ற பெண்களுக்குக்கூட உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய்.
34 உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
34 Moreover, your skirts are stained with the blood of the innocent poor, though you did not find them breaking in. But in spite of all these things
34 மாசற்ற வறியவரின் இரத்தக்கறை உன் மேலாடை விளிம்புகளில் காணப்படுகின்றது; அவர்கள் கன்னமிட்டுக் திருடியதை நீ கண்டாயா?
35 ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன்.
35 you say, ‘I am innocent. Surely His anger will turn from me.’ Behold, I will judge you, because you say, ‘I have not sinned.’
35 இவை அனைத்தையும் நீ செய்திருந்தும் நீயோ, "நான் மாசற்றவள்; அவர் சினம் என்னைவிட்டு அகன்று விட்டது உறுதி" என்கிறாய். "பாவம் செய்யவில்லை" என்று நீ கூறியதால், நான் உனக்குத் தீர்ப்பு வழங்குவேன்.
36 நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப் போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய்.
36 How unstable you are, constantly changing your ways! You will be disappointed by Egypt just as you were by Assyria.
36 ஏன் இவ்வளவு எளிதாக உன் வழிகளை மாற்றிக் கொள்கின்றாய்? அசீரியாவால் நீ மானக்கேட்டிற்கு உள்ளானதுபோல் எகிப்தினாலும் மானக்கேட்டிற்கு உள்ளாவாய்!
37 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.
37 Moreover, you will leave that place with your hands on your head, for the LORD has rejected those you trust; you will not prosper by their help.”
37 உன் தலைமேல் கைகளை வைத்துக் கொண்டுதான் அங்கிருந்து திரும்பி வருவாய்; ஏனெனில், நீ நம்பியிருந்தவர்களை ஆண்டவர் உதறித் தள்ளிவிட்டார்; அவர்களால் உனக்குப் பயன் ஏதும் இல்லை."
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
10 a Hebrew Kittim
11 b Or their glorious God
16 c LXX; Hebrew Noph
18 d Hebrew of Shihor , a branch of the Nile River
18 e Hebrew the River
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.