பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 24 | Jeremiah 24
The Good and Bad Figs
1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைப்பிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார்.
1 After Nebuchadnezzar king of Babylon had carried away Jeconiaha son of Jehoiakim king of Judah, as well as the officials of Judah and the craftsmen and metalsmiths from Jerusalem, and had brought them to Babylon,b the LORD showed me two baskets of figs placed in front of the temple of the LORD.
1 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவின் தலைவர்களையும் தச்சர்களையும் கொல்லர்களையும் எருசலேமிலிருந்து நாடுகடத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர், ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி; இதோ, ஆண்டவரது கோவில்முன் அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன.*
2 ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது.
2 One basket had very good figs, like those that ripen early, but the other basket contained very poor figs, so bad they could not be eaten.
2 ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன; அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன. மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன; அவை தின்ன முடியாத அளவுக்கு மிக கெட்டவையாய் இருந்தன.
3 கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன்.
3 “Jeremiah,” the LORD asked, “what do you see?” “Figs!” I replied. “The good figs are very good, but the bad figs are very bad, so bad they cannot be eaten.”
3 அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, "எரேமியா, நீ காண்பது என்ன?" என்று கேட்டார். நான் "அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன" என்றேன்.
4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
4 Then the word of the LORD came to me, saying,
4 ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது;
5 நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப்போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன்.
5 “This is what the LORD, the God of Israel, says: ‘Like these good figs, so I regard as good the exiles from Judah, whom I have sent away from this place to the land of the Chaldeans.c
5 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், அதாவது இவ்விடத்திலிருந்து நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள் இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள். அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.
6 அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன்.
6 I will keep My eyes on them for good and will return them to this land. I will build them up and not tear them down; I will plant them and not uproot them.
6 அவர்களுக்கு நன்மை செய்வதில் நான் கண்ணாயிருக்கிறேன்; அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன். நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்; கவிழ்த்து வீழ்த்தமாட்டேன். நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்; பிடுங்கி எறியமாட்டேன்.
7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
7 I will give them a heart to know Me, that I am the LORD. They will be My people, and I will be their God, for they will return to Me with all their heart.
7 நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளும் உள்ளத்தை நான் அவர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பிவருவார்கள்.
8 புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு,
8 But like the bad figs, so bad they cannot be eaten,’ says the LORD, ‘so will I deal with Zedekiah king of Judah, his officials, and the remnant of Jerusalem—those remaining in this land and those living in the land of Egypt.
8 ஆண்டவர் கூறுவது இதுவே; யூதா அரசன் செதேக்கியாவையும் அவர் தலைவர்களையும் இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும், எகிப்து நாட்டில் வாழ்வோரையும், தின்ன முடியாத அளவுக்குத் தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.
9 அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து,
9 I will make them a horror and an offense to all the kingdoms of the earth, a disgrace and an object of scorn, ridicule, and cursing wherever I have banished them.
9 உலகின் அரசுகள் அனைத்துக்கும் அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள். நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம் அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும் பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.
10 அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 And I will send against them sword and famine and plague, until they have perished from the land that I gave to them and their fathers.’”
10 நான் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையருக்கும் கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும் கொள்ளை நோயையும் அனுப்புவேன்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Jeconiah is a variant of Jehoiachin ; see 2 Kings 24:12.
1 b Or metalsmiths, and had brought them from Jerusalem to Babylon
5 c That is, the Babylonians
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.