பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 26 | Jeremiah 26

A Warning to the Cities of Judah

1בְּרֵאשִׁ֗ית מַמְלְכ֛וּת יְהוֹיָקִ֥ים בֶּן־יֹאשִׁיָּ֖הוּ מֶ֣לֶךְ יְהוּדָ֑ה הָיָה֙ הַדָּבָ֣ר הַזֶּ֔ה מֵאֵ֥ת יְהוָ֖ה לֵאמֹֽר׃

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை:
1 At the beginning of the reign of Jehoiakim son of Josiah king of Judah, this word came from the LORD:
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு:1

2כֹּ֣ה ׀ אָמַ֣ר יְהוָ֗ה עֲמֹד֮ בַּחֲצַ֣ר בֵּית־יְהוָה֒ וְדִבַּרְתָּ֞ עַל־כָּל־עָרֵ֣י יְהוּדָ֗ה הַבָּאִים֙ לְהִשְׁתַּחֲוֺ֣ת בֵּית־יְהוָ֔ה אֵ֚ת כָּל־הַדְּבָרִ֔ים אֲשֶׁ֥ר צִוִּיתִ֖יךָ לְדַבֵּ֣ר אֲלֵיהֶ֑ם אַל־תִּגְרַ֖ע דָּבָֽר׃

2 நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 “This is what the LORD says: Stand in the courtyard of the house of the LORD and speak all the words I have commanded you to speak to all the cities of Judah who come to worship there. Do not omit a word.
2 "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்று கொண்டு, அங்கு வழிபாடு செலுத்தவரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே.

3אוּלַ֣י יִשְׁמְע֔וּ וְיָשֻׁ֕בוּ אִ֖ישׁ מִדַּרְכּ֣וֹ הָרָעָ֑ה וְנִחַמְתִּ֣י אֶל־הָרָעָ֗ה אֲשֶׁ֨ר אָנֹכִ֤י חֹשֵׁב֙ לַעֲשׂ֣וֹת לָהֶ֔ם מִפְּנֵ֖י רֹ֥עַ מַעַלְלֵיהֶֽם׃

3 அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள்.
3 Perhaps they will listen and turn—each from his evil way of life—so that I may relent of the disaster I am planning to bring upon them because of the evil of their deeds.
3 ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீயவழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக் கொள்வேன்'.

4וְאָמַרְתָּ֣ אֲלֵיהֶ֔ם כֹּ֖ה אָמַ֣ר יְהוָ֑ה אִם־לֹ֤א תִשְׁמְעוּ֙ אֵלַ֔י לָלֶ֙כֶת֙ בְּת֣וֹרָתִ֔י אֲשֶׁ֥ר נָתַ֖תִּי לִפְנֵיכֶֽם׃

4 நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள்கேட்கும்படிக்கும்,
4 And you are to tell them that this is what the LORD says: ‘If you do not listen to Me and walk in My law, which I have set before you,
4 நீ அவர்களிடம் சொல்லவேண்டியது: 'ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும்,

5לִשְׁמֹ֗עַ עַל־דִּבְרֵי֙ עֲבָדַ֣י הַנְּבִאִ֔ים אֲשֶׁ֥ר אָנֹכִ֖י שֹׁלֵ֣חַ אֲלֵיכֶ֑ם וְהַשְׁכֵּ֥ם וְשָׁלֹ֖חַ וְלֹ֥א שְׁמַעְתֶּֽם׃

5 நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால்,
5 and if you do not listen to the words of My servants the prophets, whom I have sent you again and againa even though you did not listen,
5 நீங்கள் செவி சாய்க்காதபொழுதும் நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பி வைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில்,

6וְנָתַתִּ֛י אֶת־הַבַּ֥יִת הַזֶּ֖ה כְּשִׁלֹ֑ה וְאֶת־הָעִ֤יר הזאתה אֶתֵּ֣ן לִקְלָלָ֔ה לְכֹ֖ל גּוֹיֵ֥י הָאָֽרֶץ׃

6 நான் இந்த ஆலயத்தைச் சீலோவாப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
6 then I will make this house like Shiloh, and I will make this city an object of cursing among all the nations of the earth.’”
6 இக்கோவிலைச் சீலோவைப் போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்."2

Jeremiah Threatened with Death

7וַֽיִּשְׁמְע֛וּ הַכֹּהֲנִ֥ים וְהַנְּבִאִ֖ים וְכָל־הָעָ֑ם אֶֽת־יִרְמְיָ֔הוּ מְדַבֵּ֛ר אֶת־הַדְּבָרִ֥ים הָאֵ֖לֶּה בְּבֵ֥ית יְהוָֽה׃

7 எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள்.
7 Now the priests and prophets and all the people heard Jeremiah speaking these words in the house of the LORD,
7 ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர்.

8וַיְהִ֣י ׀ כְּכַלּ֣וֹת יִרְמְיָ֗הוּ לְדַבֵּר֙ אֵ֣ת כָּל־אֲשֶׁר־צִוָּ֣ה יְהוָ֔ה לְדַבֵּ֖ר אֶל־כָּל־הָעָ֑ם וַיִּתְפְּשׂ֨וּ אֹת֜וֹ הַכֹּהֲנִ֧ים וְהַנְּבִאִ֛ים וְכָל־הָעָ֥ם לֵאמֹ֖ר מ֥וֹת תָּמֽוּת׃

8 சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும்.
8 and as soon as he had finished telling all the people everything the LORD had commanded him to say, the priests and prophets and all the people seized him, shouting, “You must surely die!
8 மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, "நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்" என்று கூச்சலிட்டனர்.

9מַדּוּעַ֩ נִבֵ֨יתָ בְשֵׁם־יְהוָ֜ה לֵאמֹ֗ר כְּשִׁלוֹ֙ יִֽהְיֶה֙ הַבַּ֣יִת הַזֶּ֔ה וְהָעִ֥יר הַזֹּ֛את תֶּחֱרַ֖ב מֵאֵ֣ין יוֹשֵׁ֑ב וַיִּקָּהֵ֧ל כָּל־הָעָ֛ם אֶֽל־יִרְמְיָ֖הוּ בְּבֵ֥ית יְהוָֽה׃

9 இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள்.
9 How dare you prophesy in the name of the LORD that this house will become like Shiloh and this city will be desolate and deserted!” And all the people assembled against Jeremiah in the house of the LORD.
9 "இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?" என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் ஏரேமியாவைச் சூழ்ந்து கொண்டனர்.

10וַֽיִּשְׁמְע֣וּ ׀ שָׂרֵ֣י יְהוּדָ֗ה אֵ֚ת הַדְּבָרִ֣ים הָאֵ֔לֶּה וַיַּעֲל֥וּ מִבֵּית־הַמֶּ֖לֶךְ בֵּ֣ית יְהוָ֑ה וַיֵּֽשְׁב֛וּ בְּפֶ֥תַח שַֽׁעַר־יְהוָ֖ה הֶחָדָֽשׁ׃

10 யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள்.
10 When the officials of Judah heard these things, they went up from the king’s palace to the house of the LORD and sat there at the entrance of the New Gate.
10 யூதாவின் தலைவர்கள் இதைப்பற்றிக் கேள்வியுற்று அரண்மனையிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்று அங்கே "புதுவாயில்" அருகே அமர்ந்தார்கள்.

11וַיֹּ֨אמְר֜וּ הַכֹּהֲנִ֤ים וְהַנְּבִאִים֙ אֶל־הַשָּׂרִ֔ים וְאֶל־כָּל־הָעָ֖ם לֵאמֹ֑ר מִשְׁפַּט־מָ֙וֶת֙ לָאִ֣ישׁ הַזֶּ֔ה כִּ֤י נִבָּא֙ אֶל־הָעִ֣יר הַזֹּ֔את כַּאֲשֶׁ֥ר שְׁמַעְתֶּ֖ם בְּאָזְנֵיכֶֽם׃

11 அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள்.
11 Then the priests and prophets said to the officials and all the people, “This man is worthy of death, for he has prophesied against this city, as you have heard with your own ears!”
11 குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, "இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்" என்று முறையிட்டனர்.

12וַיֹּ֤אמֶר יִרְמְיָ֙הוּ֙ אֶל־כָּל־הַשָּׂרִ֔ים וְאֶל־כָּל־הָעָ֖ם לֵאמֹ֑ר יְהוָ֣ה שְׁלָחַ֗נִי לְהִנָּבֵ֞א אֶל־הַבַּ֤יִת הַזֶּה֙ וְאֶל־הָעִ֣יר הַזֹּ֔את אֵ֥ת כָּל־הַדְּבָרִ֖ים אֲשֶׁ֥ר שְׁמַעְתֶּֽם׃

12 அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார்.
12 But Jeremiah said to all the officials and all the people, “The LORD sent me to prophesy against this house and against this city all the words that you have heard.
12 அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: "நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார்.

13וְעַתָּ֗ה הֵיטִ֤יבוּ דַרְכֵיכֶם֙ וּמַ֣עַלְלֵיכֶ֔ם וְשִׁמְע֕וּ בְּק֖וֹל יְהוָ֣ה אֱלֹהֵיכֶ֑ם וְיִנָּחֵ֣ם יְהוָ֔ה אֶל־הָ֣רָעָ֔ה אֲשֶׁ֥ר דִּבֶּ֖ר עֲלֵיכֶֽם׃

13 இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார்.
13 So now, correct your ways and deeds, and obey the voice of the LORD your God, so that He might relent of the disaster He has pronounced against you.
13 எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார்.

14וַאֲנִ֖י הִנְנִ֣י בְיֶדְכֶ֑ם עֲשׂוּ־לִ֛י כַּטּ֥וֹב וְכַיָּשָׁ֖ר בְּעֵינֵיכֶֽם׃

14 நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள்.
14 As for me, here I am in your hands; do to me what you think is good and right.
14 இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள்.

15אַ֣ךְ ׀ יָדֹ֣עַ תֵּדְע֗וּ כִּ֣י אִם־מְמִתִ֣ים אַתֶּם֮ אֹתִי֒ כִּי־דָ֣ם נָקִ֗י אַתֶּם֙ נֹתְנִ֣ים עֲלֵיכֶ֔ם וְאֶל־הָעִ֥יר הַזֹּ֖את וְאֶל־יֹשְׁבֶ֑יהָ כִּ֣י בֶאֱמֶ֗ת שְׁלָחַ֤נִי יְהוָה֙ עֲלֵיכֶ֔ם לְדַבֵּר֙ בְּאָזְנֵיכֶ֔ם אֵ֥ת כָּל־הַדְּבָרִ֖ים הָאֵֽלֶּה׃

15 ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.
15 But know for certain that if you put me to death, you will bring innocent blood upon yourselves, upon this city, and upon its residents; for truly the LORD has sent me to speak all these words in your hearing.”
15 ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்."

Jeremiah Spared from Death

16וַיֹּאמְר֤וּ הַשָּׂרִים֙ וְכָל־הָעָ֔ם אֶל־הַכֹּהֲנִ֖ים וְאֶל־הַנְּבִיאִ֑ים אֵין־לָאִ֤ישׁ הַזֶּה֙ מִשְׁפַּט־מָ֔וֶת כִּ֗י בְּשֵׁ֛ם יְהוָ֥ה אֱלֹהֵ֖ינוּ דִּבֶּ֥ר אֵלֵֽינוּ׃

16 அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள்.
16 Then the officials and all the people told the priests and prophets, “This man is not worthy of death, for he has spoken to us in the name of the LORD our God!”
16 பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, "கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்" என்றார்கள்.

17וַיָּקֻ֣מוּ אֲנָשִׁ֔ים מִזִּקְנֵ֖י הָאָ֑רֶץ וַיֹּ֣אמְר֔וּ אֶל־כָּל־קְהַ֥ל הָעָ֖ם לֵאמֹֽר׃

17 தேசத்திலே மூப்பரானவர்களில் சிலர் எழும்பி சபையாகிய ஜனங்களை நோக்கி:
17 Some of the elders of the land stood up and said to the whole assembly of the people,
17 உடனே நாட்டின் மூப்பர்களுள் சிலர் எழுந்து, மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கூறியது:

18מיכיה הַמּ֣וֹרַשְׁתִּ֔י הָיָ֣ה נִבָּ֔א בִּימֵ֖י חִזְקִיָּ֣הוּ מֶֽלֶךְ־יְהוּדָ֑ה וַיֹּ֣אמֶר אֶל־כָּל־עַם֩ יְהוּדָ֨ה לֵאמֹ֜ר כֹּֽה־אָמַ֣ר ׀ יְהוָ֣ה צְבָא֗וֹת צִיּ֞וֹן שָׂדֶ֤ה תֵֽחָרֵשׁ֙ וִירוּשָׁלַ֙יִם֙ עִיִּ֣ים תִּֽהְיֶ֔ה וְהַ֥ר הַבַּ֖יִת לְבָמ֥וֹת יָֽעַר׃

18 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான்.
18 “Micah the Moreshite prophesied in the days of Hezekiah king of Judah and told all the people of Judah that this is what the LORD of Hosts says: ‘Zion will be plowed like a field, Jerusalem will become a heap of rubble, and the temple mount a wooded ridge.’b
18 "யூதாவின் அரசரான எசேக்கியாவின் காலத்தில் மோரசேத்தைச் சார்ந்த மீக்கா இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தார். அவர் யூதா மக்கள் எல்லாரையும் நோக்கி, 'படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: வயல்வெளியைப் போல் சீயோன் உழப்படும்; எருசலேம் பாழடைந்து மண்மேடாக மாறும். கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்,' என்று சொன்னார்.3

19הֶהָמֵ֣ת הֱ֠מִתֻהוּ חִזְקִיָּ֨הוּ מֶֽלֶךְ־יְהוּדָ֜ה וְכָל־יְהוּדָ֗ה הֲלֹא֮ יָרֵ֣א אֶת־יְהוָה֒ וַיְחַל֙ אֶת־פְּנֵ֣י יְהוָ֔ה וַיִּנָּ֣חֶם יְהוָ֔ה אֶל־הָרָעָ֖ה אֲשֶׁר־דִּבֶּ֣ר עֲלֵיהֶ֑ם וַאֲנַ֗חְנוּ עֹשִׂ֛ים רָעָ֥ה גְדוֹלָ֖ה עַל־נַפְשׁוֹתֵֽינוּ׃

19 அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே.
19 Did Hezekiah king of Judah or anyone else in Judah put him to death? Did Hezekiah not fear the LORD and seek His favor, and did not the LORD relent of the disaster He had pronounced against them? But we are about to bring great harm on ourselves!”
19 இதற்காக யூதாவின் அரசரான எசேக்கியாவும் யூதா நாடு முழுவதும் அவரைக் கொன்று போட்டார்களா? எசேக்கியா ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய உதவியைக் கெஞ்சி மன்றாடவில்லையா? இதனால் ஆண்டவர் அவர்களுக்கு அறிவித்திருந்த தண்டனையைக் குறித்துத் தமது மனத்தை மாற்றிக்கொள்ளவில்லையா? நாமோ நமக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் போகிறோம்.

The Prophet Uriah

20וְגַם־אִ֗ישׁ הָיָ֤ה מִתְנַבֵּא֙ בְּשֵׁ֣ם יְהוָ֔ה אֽוּרִיָּ֙הוּ֙ בֶּֽן־שְׁמַעְיָ֔הוּ מִקִּרְיַ֖ת הַיְּעָרִ֑ים וַיִּנָּבֵ֞א עַל־הָעִ֤יר הַזֹּאת֙ וְעַל־הָאָ֣רֶץ הַזֹּ֔את כְּכֹ֖ל דִּבְרֵ֥י יִרְמְיָֽהוּ׃

20 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்த தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான்.
20 Now there was another man prophesying in the name of the LORD, Uriah son of Shemaiah from Kiriath-jearim. He prophesied against this city and against this land the same things that Jeremiah did.c
20 ஆண்டவர் பெயரால் இறைவாக்கு உரைத்த இன்னொருவரும் இருந்தார்; அவர் கிரியத்து எயாரிமைச் சார்ந்த செமாயாவின் மகன் உரியா ஆவார். அவரும் எரேமியாவைப் போலவே இந்நகருக்கும் இந்நாட்டுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்திருந்தார்.

21וַיִּשְׁמַ֣ע הַמֶּֽלֶךְ־יְ֠הוֹיָקִים וְכָל־גִּבּוֹרָ֤יו וְכָל־הַשָּׂרִים֙ אֶת־דְּבָרָ֔יו וַיְבַקֵּ֥שׁ הַמֶּ֖לֶךְ הֲמִית֑וֹ וַיִּשְׁמַ֤ע אוּרִיָּ֙הוּ֙ וַיִּרָ֔א וַיִּבְרַ֖ח וַיָּבֹ֥א מִצְרָֽיִם׃

21 யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.
21 King Jehoiakim and all his mighty men and officials heard his words, and the king sought to put him to death. But when Uriah found out about it, he fled in fear and went to Egypt.
21 யோயாக்கிம் அரசரும் அவருடைய படைவீரர்களும் தலைவர்கள் அனைவரும் உரியா சொன்னதைக் கேட்டனர். உடனே அரசர் அவரைக் கொல்ல முயன்றார். ஆனால் உரியா அதை அறிந்து அச்சமுற்று எகிப்துக்குத் தப்பி ஓடிவிட்டார்.

22וַיִּשְׁלַ֞ח הַמֶּ֧לֶךְ יְהוֹיָקִ֛ים אֲנָשִׁ֖ים מִצְרָ֑יִם אֵ֣ת אֶלְנָתָ֧ן בֶּן־עַכְבּ֛וֹר וַאֲנָשִׁ֥ים אִתּ֖וֹ אֶל־מִצְרָֽיִם׃

22 அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான்
22 Then King Jehoiakim sent men to Egypt: Elnathan son of Achbor along with some other men.
22 அரசர் யோயாக்கிமோ அக்போரின் மகன் எல்னாத்தானையும், அவனோடு சில ஆள்களையும் எகிப்துக்கு அனுப்பி வைத்தார்.

23וַיּוֹצִ֨יאוּ אֶת־אוּרִיָּ֜הוּ מִמִּצְרַ֗יִם וַיְבִאֻ֙הוּ֙ אֶל־הַמֶּ֣לֶךְ יְהוֹיָקִ֔ים וַיַּכֵּ֖הוּ בֶּחָ֑רֶב וַיַּשְׁלֵךְ֙ אֶת־נִבְלָת֔וֹ אֶל־קִבְרֵ֖י בְּנֵ֥י הָעָֽם׃

23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனைவெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள்.
23 They brought Uriah out of Egypt and took him to King Jehoiakim, who had him put to the sword and his body thrown into the burial place of the common people.
23 அவர்கள் எகிப்திலிருந்து உரியாவை இழுத்து வந்து, அரசர் யோயாக்கிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். அரசரோ அவரை வாளுக்கு இரையாக்கி, அவருடைய சடலத்தைப் பொதுமக்கள் கல்லறையில் வீசி எறிந்தார்."

24אַ֗ךְ יַ֚ד אֲחִיקָ֣ם בֶּן־שָׁפָ֔ן הָיְתָ֖ה אֶֽת־יִרְמְיָ֑הוּ לְבִלְתִּ֛י תֵּת־אֹת֥וֹ בְיַד־הָעָ֖ם לַהֲמִיתֽוֹ׃

24 ஆனாலும் எரேமியாவைக கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.
24 Nevertheless, Ahikam son of Shaphan supported Jeremiah, so he was not handed over to the people to be put to death.
24 ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
5 a Literally I have sent you, rising up early and sending (them),
18 b Micah 3:12
20 c Literally according to all the words of Jeremiah

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.