பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 27 | Jeremiah 27

The Yoke of Nebuchadnezzar

1בְּרֵאשִׁ֗ית מַמְלֶ֛כֶת יְהוֹיָקִ֥ם בֶּן־יֹאושִׁיָּ֖הוּ מֶ֣לֶךְ יְהוּדָ֑ה הָיָ֞ה הַדָּבָ֤ר הַזֶּה֙ אֶֽל־יִרְמְיָ֔ה מֵאֵ֥ת יְהוָ֖ה לֵאמֹֽר׃

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு, உண்டான வார்த்தை:
1 At the beginning of the reign of Zedekiaha son of Josiah king of Judah, this word came to Jeremiah from the LORD.b
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமாகிய* செதேக்கியாவுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு இதுவே:12

1 - 'யோயாக்கிம்' என்பது எபிரேய பாடம்.

2 2 அர 24:18-20; 2 குறி 36:11-13.

2כֹּֽה־אָמַ֤ר יְהוָה֙ אֵלַ֔י עֲשֵׂ֣ה לְךָ֔ מוֹסֵר֖וֹת וּמֹט֑וֹת וּנְתַתָּ֖ם עַל־צַוָּארֶֽךָ׃

2 கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,
2 This is what the LORD said to me: “Make for yourself a yoke out of leather straps and put it on your neck.
2 "ஆண்டவர் என்னிடம் இவ்வாறு உரைத்தார்; கயிறுகளையும் நுகத்தடியையும் நீ செய்து, உனது கழுத்தில் பூட்டிக் கொள்.

3וְשִׁלַּחְתָּם֩ אֶל־מֶ֨לֶךְ אֱד֜וֹם וְאֶל־מֶ֣לֶךְ מוֹאָ֗ב וְאֶל־מֶ֙לֶךְ֙ בְּנֵ֣י עַמּ֔וֹן וְאֶל־מֶ֥לֶךְ צֹ֖ר וְאֶל־מֶ֣לֶךְ צִיד֑וֹן בְּיַ֤ד מַלְאָכִים֙ הַבָּאִ֣ים יְרוּשָׁלִַ֔ם אֶל־צִדְקִיָּ֖הוּ מֶ֥לֶךְ יְהוּדָֽה׃

3 அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும் மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி,
3 Send word to the kings of Edom, Moab, Ammon, Tyre, and Sidon through the envoys who have come to Jerusalem to Zedekiah king of Judah.
3 யூதாவின் அரசனான செதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்துள்ள தூதர்கள் வழியாக ஏதோம் மன்னனுக்கும் மோவாபு மன்னனுக்கும் அம்மோனியரின் மன்னனுக்கும் தீர் மன்னனுக்கும் சீதோன் மன்னனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு.

4וְצִוִּיתָ֣ אֹתָ֔ם אֶל־אֲדֹֽנֵיהֶ֖ם לֵאמֹ֑ר כֹּֽה־אָמַ֞ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל כֹּ֥ה תֹֽאמְר֖וּ אֶל־אֲדֹֽנֵיכֶֽם׃

4 அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
4 Give them a message from the LORD of Hosts, the God of Israel, to relay to their masters:
4 அவர்கள் தங்கள் தலைவர்களிடம் பின்வரும் செய்தியைச் சொல்லுமாறு கட்டளையிடு; இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

5אָנֹכִ֞י עָשִׂ֣יתִי אֶת־הָאָ֗רֶץ אֶת־הָאָדָ֤ם וְאֶת־הַבְּהֵמָה֙ אֲשֶׁר֙ עַל־פְּנֵ֣י הָאָ֔רֶץ בְּכֹחִי֙ הַגָּד֔וֹל וּבִזְרוֹעִ֖י הַנְּטוּיָ֑ה וּנְתַתִּ֕יהָ לַאֲשֶׁ֖ר יָשַׁ֥ר בְּעֵינָֽי׃

5 நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன்.
5 By My great power and outstretched arm, I made the earth and the men and beasts on the face of it, and I give it to whom I please.
5 உங்கள் தலைவர்களிடம் நீங்கள் சொல்லவேண்டியது; என் மிகுந்த ஆற்றலோடும் ஓங்கிய புயத்தோடும் மண்ணுலகையும் அதில் வாழும் மனிதரையும் விலங்குகளையும் படைத்தது நானே. எனக்கு விருப்பமானவர்களிடம் அவற்றை நான் கொடுப்பேன்.

6וְעַתָּ֗ה אָֽנֹכִי֙ נָתַ֙תִּי֙ אֶת־כָּל־הָאֲרָצ֣וֹת הָאֵ֔לֶּה בְּיַ֛ד נְבוּכַדְנֶאצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶ֖ל עַבְדִּ֑י וְגַם֙ אֶת־חַיַּ֣ת הַשָּׂדֶ֔ה נָתַ֥תִּי ל֖וֹ לְעָבְדֽוֹ׃

6 இப்பொழுதும் நான் இந்த தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன்.
6 So now I have placed all these lands under the authority of My servant Nebuchadnezzar king of Babylon. I have even made the beasts of the field subject to him.
6 என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரின் கையில் இந்நாடுகளை எல்லாம் இப்பொழுது ஒப்புவித்திருப்பதும் நானே. அவனுக்கு அடிபணியும் பொருட்டுக் காட்டு விலங்குகளையும் அவனிடம் நான் ஒப்புவித்திருக்கிறேன்.

7וְעָבְד֤וּ אֹתוֹ֙ כָּל־הַגּוֹיִ֔ם וְאֶת־בְּנ֖וֹ וְאֶֽת־בֶּן־בְּנ֑וֹ עַ֣ד בֹּא־עֵ֤ת אַרְצוֹ֙ גַּם־ה֔וּא וְעָ֤בְדוּ בוֹ֙ גּוֹיִ֣ם רַבִּ֔ים וּמְלָכִ֖ים גְּדֹלִֽים׃

7 அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபெளத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள்.
7 All nations will serve him and his son and grandson, until the time of his own land comes; then many nations and great kings will enslave him.
7 அவனுடைய நாட்டுக்கென்று குறிக்கப்பட்ட காலம் வரும்வரை, மக்களினங்கள் எல்லாம் அவனுக்கும் அவனுடைய மகனுக்கும் பேரனுக்கும் பணிவிடை செய்வார்கள். பின்னர் பல்வேறு மக்களினத்தாரும் மாமன்னர்களும் அவனையே தங்கள் அடிமை ஆக்கிக்கொள்வார்கள்.

8וְהָיָ֨ה הַגּ֜וֹי וְהַמַּמְלָכָ֗ה אֲשֶׁ֨ר לֹֽא־יַעַבְד֤וּ אֹתוֹ֙ אֶת־נְבוּכַדְנֶאצַּ֣ר מֶֽלֶךְ־בָּבֶ֔ל וְאֵ֨ת אֲשֶׁ֤ר לֹֽא־יִתֵּן֙ אֶת־צַוָּאר֔וֹ בְּעֹ֖ל מֶ֣לֶךְ בָּבֶ֑ל בַּחֶרֶב֩ וּבָרָעָ֨ב וּבַדֶּ֜בֶר אֶפְקֹ֨ד עַל־הַגּ֤וֹי הַהוּא֙ נְאֻם־יְהוָ֔ה עַד־תֻּמִּ֥י אֹתָ֖ם בְּיָדֽוֹ׃

8 எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
8 As for the nation or kingdom that does not serve Nebuchadnezzar king of Babylon and does not place its neck under his yoke, I will punish that nation by sword and famine and plague, declares the LORD, until I have destroyed it by his hand.
8 ஆனால் பாபிலோனிய மன்னனான நெபுகத்னேசருக்கு அடிபணிந்து, அவனது நுகத்தைத் தனது கழுத்தில் ஏற்க மனமில்லாத மக்களினத்தையோ அரசையோ — அவனுடைய கையில் அவற்றை நான் ஒப்புவிக்கும்வரை — வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றால் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர்.

9וְ֠אַתֶּם אַל־תִּשְׁמְע֨וּ אֶל־נְבִיאֵיכֶ֜ם וְאֶל־קֹֽסְמֵיכֶ֗ם וְאֶל֙ חֲלֹמֹ֣תֵיכֶ֔ם וְאֶל־עֹֽנְנֵיכֶ֖ם וְאֶל־כַּשָּׁפֵיכֶ֑ם אֲשֶׁר־הֵ֞ם אֹמְרִ֤ים אֲלֵיכֶם֙ לֵאמֹ֔ר לֹ֥א תַעַבְד֖וּ אֶת־מֶ֥לֶךְ בָּבֶֽל׃

9 பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள்.
9 But as for you, do not listen to your prophets, your diviners, your interpreters of dreams, your mediums, or your sorcerers who declare, ‘You will not serve the king of Babylon.’
9 நீங்களோ 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணியாதீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் இறைவாக்கினர், குறிசொல்வோர், கனவுக்காரர், மந்திரவாதி, சூனியக்காரர் ஆகியோருக்குச் செவி கொடாதீர்கள்.

10כִּ֣י שֶׁ֔קֶר הֵ֖ם נִבְּאִ֣ים לָכֶ֑ם לְמַ֨עַן הַרְחִ֤יק אֶתְכֶם֙ מֵעַ֣ל אַדְמַתְכֶ֔ם וְהִדַּחְתִּ֥י אֶתְכֶ֖ם וַאֲבַדְתֶּֽם׃

10 நான் உங்களை உங்கள் தேசத்திருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
10 For they prophesy to you a lie that will serve to remove you from your land; I will banish you and you will perish.
10 ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். அதன் விளைவாக உங்கள் நாட்டினின்று நீங்கள் அப்புறப்படுத்தப்படுவீர்கள். நான் உங்களைத் துரத்தியடிப்பேன்; நீங்கள் அழிந்து போவீர்கள்.

11וְהַגּ֗וֹי אֲשֶׁ֨ר יָבִ֧יא אֶת־צַוָּאר֛וֹ בְּעֹ֥ל מֶֽלֶךְ־בָּבֶ֖ל וַֽעֲבָד֑וֹ וְהִנַּחְתִּ֤יו עַל־אַדְמָתוֹ֙ נְאֻם־יְהוָ֔ה וַֽעֲבָדָ֖הּ וְיָ֥שַׁב בָּֽהּ׃

11 ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11 But the nation that will put its neck under the yoke of the king of Babylon and serve him, I will leave in its own land, to cultivate it and reside in it, declares the LORD.”
11 ஆனால், பாபிலோனிய மன்னனின் நுகத்தைத் தன் கழுத்தில் ஏற்று, அவனுக்கு அடிபணியும் எந்த இனத்தையும் அதன் சொந்த நாட்டிலேயே நான் விட்டு வைப்பேன். அந்த இனம் உழுது பயிரிட்டு அங்கேயே குடியிருக்கும், என்கிறார் ஆண்டவர்."

12וְאֶל־צִדְקִיָּ֤ה מֶֽלֶךְ־יְהוּדָה֙ דִּבַּ֔רְתִּי כְּכָל־הַדְּבָרִ֥ים הָאֵ֖לֶּה לֵאמֹ֑ר הָבִ֨יאוּ אֶת־צַוְּארֵיכֶ֜ם בְּעֹ֣ל מֶֽלֶךְ־בָּבֶ֗ל וְעִבְד֥וּ אֹת֛וֹ וְעַמּ֖וֹ וִֽחְיֽוּ׃

12 இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
12 And to Zedekiah king of Judah I spoke the same message: “Put your necks under the yoke of the king of Babylon; serve him and his people, and live!
12 யூதாவின் அரசனான செதேக்கியாவிடமும் இதே போன்று பேசினேன்: "பாபிலோனிய மன்னனின் நுகத்துக்கு உங்கள் கழுத்தை நீட்டுங்கள்; அவனுக்கும் அவனுடைய மக்களுக்கும் அடிபணியுங்கள். அப்படியானால் நீங்கள் பிழைப்பீர்கள்.

13לָ֤מָּה תָמ֙וּתוּ֙ אַתָּ֣ה וְעַמֶּ֔ךָ בַּחֶ֖רֶב בָּרָעָ֣ב וּבַדָּ֑בֶר כַּֽאֲשֶׁר֙ דִּבֶּ֣ר יְהוָ֔ה אֶל־הַגּ֕וֹי אֲשֶׁ֥ר לֹֽא־יַעֲבֹ֖ד אֶת־מֶ֥לֶךְ בָּבֶֽל׃

13 பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாக கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்?
13 Why should you and your people die by sword and famine and plague, as the LORD has decreed against any nation that does not serve the king of Babylon?
13 பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய மனம் இல்லாத மக்களினத்தின் மேல் அனுப்பபுவதாக ஆண்டவர் எச்சரித்துள்ள வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றுக்கு நீரும் உம் மக்களும் ஏன் இரையாக வேண்டும்?

14וְאַֽל־תִּשְׁמְע֞וּ אֶל־דִּבְרֵ֣י הַנְּבִאִ֗ים הָאֹמְרִ֤ים אֲלֵיכֶם֙ לֵאמֹ֔ר לֹ֥א תַעַבְד֖וּ אֶת־מֶ֣לֶךְ בָּבֶ֑ל כִּ֣י שֶׁ֔קֶר הֵ֖ם נִבְּאִ֥ים לָכֶֽם׃

14 நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
14 Do not listen to the words of the prophets who say, ‘You must not serve the king of Babylon,’ for they are prophesying to you a lie.
14 எனவே 'பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிய வேண்டாம்' என உங்களுக்குச் சொல்லும் இறைவாக்கினரின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடாதீர்கள். ஏனெனில் உங்களிடம் அவர்கள் பொய்யை இரைவாக்காக உரைக்கிறார்கள்.

15כִּ֣י לֹ֤א שְׁלַחְתִּים֙ נְאֻם־יְהוָ֔ה וְהֵ֛ם נִבְּאִ֥ים בִּשְׁמִ֖י לַשָּׁ֑קֶר לְמַ֨עַן הַדִּיחִ֤י אֶתְכֶם֙ וַאֲבַדְתֶּ֔ם אַתֶּ֕ם וְהַנְּבִאִ֖ים הֽ͏ַנִּבְּאִ֥ים לָכֶֽם׃

15 நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
15 For I have not sent them, declares the LORD, and yet they are prophesying falsely in My name; therefore I will banish you, and you will perish—you and the prophets who prophesy to you.”
15 நான் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இருப்பினும், நான் உங்களை நாடுகடத்தும் பொருட்டும், அங்கே நீங்களும் உங்களோடு பேசும் இறைவாக்கினர்களும் அழியும் பொருட்டும், அவர்கள் இவ்வாறு என் பெயரால் பொய்யை இறைவாக்காக உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள்."

16וְאֶל־הַכֹּהֲנִים֩ וְאֶל־כָּל־הָעָ֨ם הַזֶּ֜ה דִּבַּ֣רְתִּי לֵאמֹ֗ר כֹּה֮ אָמַ֣ר יְהוָה֒ אַֽל־תִּשְׁמְע֞וּ אֶל־דִּבְרֵ֣י נְבִֽיאֵיכֶ֗ם הַֽנִבְּאִ֤ים לָכֶם֙ לֵאמֹ֔ר הִנֵּ֨ה כְלֵ֧י בֵית־יְהוָ֛ה מוּשָׁבִ֥ים מִבָּבֶ֖לָה עַתָּ֣ה מְהֵרָ֑ה כִּ֣י שֶׁ֔קֶר הֵ֖מָּה נִבְּאִ֥ים לָכֶֽם׃

16 மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
16 Then I said to the priests and to all this people, “This is what the LORD says: Do not listen to the words of your prophets who prophesy to you, saying, ‘Look, very soon now the articles from the house of the LORD will be brought back from Babylon.’ They are prophesying to you a lie.
16 பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது; "ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; 'இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்', என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.

17אַל־תִּשְׁמְע֣וּ אֲלֵיהֶ֔ם עִבְד֥וּ אֶת־מֶֽלֶךְ־בָּבֶ֖ל וִֽחְי֑וּ לָ֧מָּה תִֽהְיֶ֛ה הָעִ֥יר הַזֹּ֖את חָרְבָּֽה׃

17 அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன?
17 Do not listen to them. Serve the king of Babylon and live! Why should this city become a ruin?
17 எனவே அவர்களுக்குச் செவி கொடாதீர்கள். பாபிலோனிய மன்னனுக்கு அடிபணிந்தால் நீங்கள் பிழைப்பீர்கள். இந்நகர் ஏன் பாழாக வேண்டும்?

18וְאִם־נְבִאִ֣ים הֵ֔ם וְאִם־יֵ֥שׁ דְּבַר־יְהוָ֖ה אִתָּ֑ם יִפְגְּעוּ־נָא֙ בַּֽיהוָ֣ה צְבָא֔וֹת לְבִלְתִּי־בֹ֜אוּ הַכֵּלִ֣ים ׀ הַנּוֹתָרִ֣ים בְּבֵית־יְהוָ֗ה וּבֵ֨ית מֶ֧לֶךְ יְהוּדָ֛ה וּבִירוּשָׁלַ֖͏ִם בָּבֶֽלָה׃

18 அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதா ராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே.
18 If they are indeed prophets and the word of the LORD is with them, let them now plead with the LORD of Hosts that the articles remaining in the house of the LORD, in the palace of the king of Judah, and in Jerusalem, not be taken to Babylon.
18 அவர்கள் உண்மையாகவே இறைவாக்கினர்களாய் இருந்தால், ஆண்டவரின் வாக்கும் அவர்களோடு இருந்தால், ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனது அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்களாவது பாபிலோனுக்குப் போகாதவாறு இப்பொழுதே அவர்கள் படைகளின் ஆண்டவரிடம் பரிந்து பேசட்டும்."3

3 - 'கோனியா", "யோயாக்கிம்' என்பவை மறுபெயர்கள்.

19כִּ֣י כֹ֤ה אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת אֶל־הָֽעַמֻּדִ֔ים וְעַל־הַיָּ֖ם וְעַל־הַמְּכֹנ֑וֹת וְעַל֙ יֶ֣תֶר הַכֵּלִ֔ים הַנּוֹתָרִ֖ים בָּעִ֥יר הַזֹּֽאת׃

19 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில்,
19 For this is what the LORD of Hosts says about the pillars, the sea, the bases, and the rest of the articles that remain in this city,
19 ❮19-20❯பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான எக்கோனியாவையும் யூதாவிலும் எருசலேமிலும் வாழ்ந்துவந்த உயர்குடி மக்கள் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திய பொழுது, தன்னோடு எடுத்துச் செல்லாமல் இந்நகரிலேயே விட்டுச்சென்றிருந்த தூண்கள், வெண்கலக்கடல், ஆதாரங்கள், பிற கலங்கள் முதலியவற்றைக் குறித்துப் படைகளின் ஆண்டவர் கூறுவது:

20אֲשֶׁ֣ר לֹֽא־לְקָחָ֗ם נְבֽוּכַדְנֶאצַּר֙ מֶ֣לֶךְ בָּבֶ֔ל בַּ֠גְלוֹתוֹ אֶת־יְכָונְיָ֨ה בֶן־יְהוֹיָקִ֧ים מֶֽלֶךְ־יְהוּדָ֛ה מִירֽוּשָׁלַ֖͏ִם בָּבֶ֑לָה וְאֵ֛ת כָּל־חֹרֵ֥י יְהוּדָ֖ה וִירוּשָׁלָֽ͏ִם׃

20 எடுக்காமல் விட்ட சகல தூண்களையும் கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
20 which Nebuchadnezzar king of Babylon did not take when he carried Jeconiahc son of Jehoiakim king of Judah into exile from Jerusalem to Babylon, along with all the nobles of Judah and Jerusalem.

21כִּ֣י כֹ֥ה אָמַ֛ר יְהוָ֥ה צְבָא֖וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֑ל עַל־הַכֵּלִ֗ים הַנּֽוֹתָרִים֙ בֵּ֣ית יְהוָ֔ה וּבֵ֥ית מֶֽלֶךְ־יְהוּדָ֖ה וִירוּשָׁלָֽ͏ִם׃

21 கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
21 Yes, this is what the LORD of Hosts, the God of Israel, says about the articles that remain in the house of the LORD, in the palace of the king of Judah, and in Jerusalem:
21 ஆண்டவரின் இல்லத்திலும் யூதாவின் அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் மீந்திருக்கும் கலங்கள் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:

22בָּבֶ֥לָה יוּבָ֖אוּ וְשָׁ֣מָּה יִֽהְי֑וּ עַ֠ד י֣וֹם פָּקְדִ֤י אֹתָם֙ נְאֻם־יְהוָ֔ה וְהַֽעֲלִיתִים֙ וַהֲשִׁ֣יבֹתִ֔ים אֶל־הַמָּק֖וֹם הַזֶּֽה׃

22 நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
22 ‘They will be carried to Babylon and will remain there until the day I attend to them again,’ declares the LORD. ‘Then I will bring them back and restore them to this place.’”
22 'அவை யாவும் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படும். நான் அவற்றின்மீது எனது கவனத்தைத் திருப்பும்வரை அவை அங்கேயே இருக்கும். பின்னர் நான் அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து இவ்விடத்தில் வைக்கச் செய்வேன்' என்கிறார் ஆண்டவர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
1 a A few Hebrew manuscripts and Syriac (see also verses 3 and 12, and Jeremiah 28:1); most Hebrew manuscripts Jehoiakim
1 b Most LXX manuscripts do not include this verse.
20 c Jeconiah  is a variant of Jehoiachin ; see 2 Kings 24:12.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.