பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 29 | Jeremiah 29

Jeremiah’s Letter to the Exiles

1וְאֵ֙לֶּה֙ דִּבְרֵ֣י הַסֵּ֔פֶר אֲשֶׁ֥ר שָׁלַ֛ח יִרְמְיָ֥ה הַנָּבִ֖יא מִירוּשָׁלָ֑͏ִם אֶל־יֶ֜תֶר זִקְנֵ֣י הַגּוֹלָ֗ה וְאֶל־הַכֹּהֲנִ֤ים וְאֶל־הַנְּבִיאִים֙ וְאֶל־כָּל־הָעָ֔ם אֲשֶׁ֨ר הֶגְלָ֧ה נְבֽוּכַדְנֶאצַּ֛ר מִירוּשָׁלַ֖͏ִם בָּבֶֽלָה׃

1 எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,
1 This is the text of the letter that Jeremiah the prophet sent from Jerusalem to the surviving elders among the exiles and to the priests, the prophets, and all the others Nebuchadnezzar had carried into exile from Jerusalem to Babylon.
1 எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார்.

2אַחֲרֵ֣י צֵ֣את יְכָנְיָֽה־הַ֠מֶּלֶךְ וְהַגְּבִירָ֨ה וְהַסָּרִיסִ֜ים שָׂרֵ֨י יְהוּדָ֧ה וִירוּשָׁלַ֛͏ִם וְהֶחָרָ֥שׁ וְהַמַּסְגֵּ֖ר מִירוּשָׁלָֽ͏ִם׃

2 எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி,
2 (This was after King Jeconiah,a the queen mother, the court officials, the officials of Judah and Jerusalem, the craftsmen, and the metalsmiths had been exiled from Jerusalem.)
2 அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர்,1

3בְּיַד֙ אֶלְעָשָׂ֣ה בֶן־שָׁפָ֔ן וּגְמַרְיָ֖ה בֶּן־חִלְקִיָּ֑ה אֲשֶׁ֨ר שָׁלַ֜ח צִדְקִיָּ֣ה מֶֽלֶךְ־יְהוּדָ֗ה אֶל־נְבוּכַדְנֶאצַּ֛ר מֶ֥לֶךְ בָּבֶ֖ל בָּבֶ֥לָה לֵאמֹֽר׃

3 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்:
3 The letter was entrusted to Elasah son of Shaphan and Gemariah son of Hilkiah, whom Zedekiah king of Judah sent to King Nebuchadnezzar in Babylon. It stated:
3 சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.

4כֹּ֥ה אָמַ֛ר יְהוָ֥ה צְבָא֖וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֑ל לְכָל־הַ֨גּוֹלָ֔ה אֲשֶׁר־הִגְלֵ֥יתִי מִירוּשָׁלַ֖͏ִם בָּבֶֽלָה׃

4 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,
4 This is what the LORD of Hosts, the God of Israel, says to all the exiles who were carried away from Jerusalem to Babylon:
4 அதன் சொற்களாவன; "இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே;

5בְּנ֥וּ בָתִּ֖ים וְשֵׁ֑בוּ וְנִטְע֣וּ גַנּ֔וֹת וְאִכְל֖וּ אֶת־פִּרְיָֽן׃

5 நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
5 “Build houses and settle down. Plant gardens and eat their produce.
5 வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.

6קְח֣וּ נָשִׁ֗ים וְהוֹלִידוּ֮ בָּנִ֣ים וּבָנוֹת֒ וּקְח֨וּ לִבְנֵיכֶ֜ם נָשִׁ֗ים וְאֶת־בְּנֽוֹתֵיכֶם֙ תְּנ֣וּ לַֽאֲנָשִׁ֔ים וְתֵלַ֖דְנָה בָּנִ֣ים וּבָנ֑וֹת וּרְבוּ־שָׁ֖ם וְאַל־תִּמְעָֽטוּ׃

6 நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி,
6 Take wives and have sons and daughters. Take wives for your sons and give your daughters in marriage, so that they too may have sons and daughters. Multiply there; do not decrease.
6 பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.

7וְדִרְשׁ֞וּ אֶת־שְׁל֣וֹם הָעִ֗יר אֲשֶׁ֨ר הִגְלֵ֤יתִי אֶתְכֶם֙ שָׁ֔מָּה וְהִתְפַּֽלְל֥וּ בַעֲדָ֖הּ אֶל־יְהוָ֑ה כִּ֣י בִשְׁלוֹמָ֔הּ יִהְיֶ֥ה לָכֶ֖ם שָׁלֽוֹם׃

7 நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.
7 Seek the prosperity of the city to which I have sent you as exiles. Pray to the LORD on its behalf, for if it prospers, you too will prosper.”
7 உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.

8כִּי֩ כֹ֨ה אָמַ֜ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל אַל־יַשִּׁ֧יאוּ לָכֶ֛ם נְבִֽיאֵיכֶ֛ם אֲשֶׁר־בְּקִרְבְּכֶ֖ם וְקֹֽסְמֵיכֶ֑ם וְאַֽל־תִּשְׁמְעוּ֙ אֶל־חֲלֹמֹ֣תֵיכֶ֔ם אֲשֶׁ֥ר אַתֶּ֖ם מַחְלְמִֽים׃

8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
8 For this is what the LORD of Hosts, the God of Israel, says: “Do not be deceived by the prophets and diviners among you, and do not listen to the dreams you elicit from them.
8 இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

9כִּ֣י בְשֶׁ֔קֶר הֵ֛ם נִבְּאִ֥ים לָכֶ֖ם בִּשְׁמִ֑י לֹ֥א שְׁלַחְתִּ֖ים נְאֻם־יְהוָֽה׃

9 அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9 For they are falsely prophesying to you in My name; I have not sent them, declares the LORD.”b
9 அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை," என்கிறார் ஆண்டவர்.

10כִּֽי־כֹה֙ אָמַ֣ר יְהוָ֔ה כִּ֠י לְפִ֞י מְלֹ֧את לְבָבֶ֛ל שִׁבְעִ֥ים שָׁנָ֖ה אֶפְקֹ֣ד אֶתְכֶ֑ם וַהֲקִמֹתִ֤י עֲלֵיכֶם֙ אֶת־דְּבָרִ֣י הַטּ֔וֹב לְהָשִׁ֣יב אֶתְכֶ֔ם אֶל־הַמָּק֖וֹם הַזֶּֽה׃

10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10 For this is what the LORD says: “When Babylon’s seventy years are complete, I will attend to you and confirm My promise to restore you to this place.
10 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்; உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன்.2

11כִּי֩ אָנֹכִ֨י יָדַ֜עְתִּי אֶת־הַמַּחֲשָׁבֹ֗ת אֲשֶׁ֧ר אָנֹכִ֛י חֹשֵׁ֥ב עֲלֵיכֶ֖ם נְאֻם־יְהוָ֑ה מַחְשְׁב֤וֹת שָׁלוֹם֙ וְלֹ֣א לְרָעָ֔ה לָתֵ֥ת לָכֶ֖ם אַחֲרִ֥ית וְתִקְוָֽה׃

11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
11 For I know the plans I have for you, declares the LORD, plans to prosper you and not to harm you, to give you a future and a hope.
11 ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.

12וּקְרָאתֶ֤ם אֹתִי֙ וַֽהֲלַכְתֶּ֔ם וְהִתְפַּלַּלְתֶּ֖ם אֵלָ֑י וְשָׁמַעְתִּ֖י אֲלֵיכֶֽם׃

12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
12 Then you will call upon Me and come and pray to Me, and I will listen to you.
12 நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.

13וּבִקַּשְׁתֶּ֥ם אֹתִ֖י וּמְצָאתֶ֑ם כִּ֥י תִדְרְשֻׁ֖נִי בְּכָל־לְבַבְכֶֽם׃

13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.
13 You will seek Me and find Me when you search for Me with all your heart.
13 நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்.3

14וְנִמְצֵ֣אתִי לָכֶם֮ נְאֻם־יְהוָה֒ וְשַׁבְתִּ֣י אֶת־שביתכם וְקִבַּצְתִּ֣י אֶ֠תְכֶם מִֽכָּל־הַגּוֹיִ֞ם וּמִכָּל־הַמְּקוֹמ֗וֹת אֲשֶׁ֨ר הִדַּ֧חְתִּי אֶתְכֶ֛ם שָׁ֖ם נְאֻם־יְהוָ֑ה וַהֲשִׁבֹתִ֣י אֶתְכֶ֔ם אֶל־הַ֨מָּק֔וֹם אֲשֶׁר־הִגְלֵ֥יתִי אֶתְכֶ֖ם מִשָּֽׁם׃

14 நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
14 I will be found by you, declares the LORD, and I will restore you from captivityc and gather you from all the nations and places to which I have banished you, declares the LORD. I will restore you to the place from which I sent you into exile.”
14 ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்; நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களினங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.

15כִּ֖י אֲמַרְתֶּ֑ם הֵקִ֨ים לָ֧נוּ יְהוָ֛ה נְבִאִ֖ים בָּבֶֽלָה׃

15 கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள்.
15 Because you may say, “The LORD has raised up for us prophets in Babylon,”
15 'ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்' என்று சொல்கிறீர்கள்.

16כִּי־כֹ֣ה ׀ אָמַ֣ר יְהוָ֗ה אֶל־הַמֶּ֙לֶךְ֙ הַיּוֹשֵׁב֙ אֶל־כִּסֵּ֣א דָוִ֔ד וְאֶל־כָּל־הָעָ֔ם הַיּוֹשֵׁ֖ב בָּעִ֣יר הַזֹּ֑את אֲחֵיכֶ֕ם אֲשֶׁ֛ר לֹֽא־יָצְא֥וּ אִתְּכֶ֖ם בַּגּוֹלָֽה׃

16 ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும் உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும்,
16 this is what the LORD says about the king who sits on David’s throne and all the people who remain in this city, your brothers who did not go with you into exile—
16 ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே;

17כֹּ֤ה אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת הִנְנִי֙ מְשַׁלֵּ֣חַ בָּ֔ם אֶת־הַחֶ֖רֶב אֶת־הָרָעָ֣ב וְאֶת־הַדָּ֑בֶר וְנָתַתִּ֣י אוֹתָ֗ם כַּתְּאֵנִים֙ הַשֹּׁ֣עָרִ֔ים אֲשֶׁ֥ר לֹא־תֵאָכַ֖לְנָה מֵרֹֽעַ׃

17 இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
17 this is what the LORD of Hosts says: “I will send against them sword and famine and plague, and I will make them like rotten figs, so bad they cannot be eaten.
17 படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன்.

18וְרָֽדַפְתִּי֙ אַֽחֲרֵיהֶ֔ם בַּחֶ֖רֶב בָּרָעָ֣ב וּבַדָּ֑בֶר וּנְתַתִּ֨ים לזועה לְכֹ֣ל ׀ מַמְלְכ֣וֹת הָאָ֗רֶץ לְאָלָ֤ה וּלְשַׁמָּה֙ וְלִשְׁרֵקָ֣ה וּלְחֶרְפָּ֔ה בְּכָל־הַגּוֹיִ֖ם אֲשֶׁר־הִדַּחְתִּ֥ים שָֽׁם׃

18 அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும் ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 I will pursue them with sword and famine and plague. I will make them a horror to all the kingdoms of the earth—a curse, a desolation, and an object of scorn and reproach among all the nations to which I banish them.
18 வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்; நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.

19תַּ֛חַת אֲשֶֽׁר־לֹא־שָׁמְע֥וּ אֶל־דְּבָרַ֖י נְאֻם־יְהוָ֑ה אֲשֶׁר֩ שָׁלַ֨חְתִּי אֲלֵיהֶ֜ם אֶת־עֲבָדַ֤י הַנְּבִאִים֙ הַשְׁכֵּ֣ם וְשָׁלֹ֔חַ וְלֹ֥א שְׁמַעְתֶּ֖ם נְאֻם־יְהוָֽה׃

19 நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 I will do this because they have not listened to My words, declares the LORD, which I sent to them again and againd through My servants the prophets. And neither have you exiles listened, declares the LORD.”
19 ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.

20וְאַתֶּ֖ם שִׁמְע֣וּ דְבַר־יְהוָ֑ה כָּל־הַ֨גּוֹלָ֔ה אֲשֶׁר־שִׁלַּ֥חְתִּי מִירוּשָׁלַ֖͏ִם בָּבֶֽלָה׃

20 இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
20 So hear the word of the LORD, all you exiles I have sent away from Jerusalem to Babylon.
20 எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்."

21כֹּֽה־אָמַר֩ יְהוָ֨ה צְבָא֜וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל אֶל־אַחְאָ֤ב בֶּן־קֽוֹלָיָה֙ וְאֶל־צִדְקִיָּ֣הוּ בֶן־מַֽעֲשֵׂיָ֔ה הַֽנִבְּאִ֥ים לָכֶ֛ם בִּשְׁמִ֖י שָׁ֑קֶר הִנְנִ֣י ׀ נֹתֵ֣ן אֹתָ֗ם בְּיַד֙ נְבֽוּכַדְרֶאצַּ֣ר מֶֽלֶךְ־בָּבֶ֔ל וְהִכָּ֖ם לְעֵינֵיכֶֽם׃

21 என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
21 This is what the LORD of Hosts, the God of Israel, says about Ahab son of Kolaiah and Zedekiah son of Maaseiah, who are prophesying to you lies in My name: “I will deliver them to Nebuchadnezzar king of Babylon, and he will kill them before your very eyes.
21 "என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.

22וְלֻקַּ֤ח מֵהֶם֙ קְלָלָ֔ה לְכֹל֙ גָּל֣וּת יְהוּדָ֔ה אֲשֶׁ֥ר בְּבָבֶ֖ל לֵאמֹ֑ר יְשִֽׂמְךָ֤ יְהוָה֙ כְּצִדְקִיָּ֣הוּ וּכְאֶחָ֔ב אֲשֶׁר־קָלָ֥ם מֶֽלֶךְ־בָּבֶ֖ל בָּאֵֽשׁ׃

22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
22 Because of them, all the exiles of Judah who are in Babylon will use this curse: ‘May the LORD make you like Zedekiah and Ahab, whom the king of Babylon roasted in the fire!’
22 அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் 'பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக' என்று சாபமிடுவர்.

23יַ֡עַן אֲשֶׁר֩ עָשׂ֨וּ נְבָלָ֜ה בְּיִשְׂרָאֵ֗ל וַיְנַֽאֲפוּ֙ אֶת־נְשֵׁ֣י רֵֽעֵיהֶ֔ם וַיְדַבְּר֨וּ דָבָ֤ר בִּשְׁמִי֙ שֶׁ֔קֶר אֲשֶׁ֖ר ל֣וֹא צִוִּיתִ֑ם וְאָנֹכִ֛י הוידע וָעֵ֖ד נְאֻם־יְהוָֽה׃

23 அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.
23 For they have committed an outrage in Israel by committing adultery with the wives of their neighbors and speaking lies in My name, which I did not command them to do. I am He who knows, and I am a witness, declares the LORD.”
23 ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்; பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்; நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்; இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்."

The Message to Shemaiah

24וְאֶל־שְׁמַעְיָ֥הוּ הַנֶּחֱלָמִ֖י תֹּאמַ֥ר לֵאמֹֽר׃

24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்:
24 You are to tell Shemaiah the Nehelamite that
24 நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது;

25כֹּֽה־אָמַ֞ר יְהוָ֧ה צְבָא֛וֹת אֱלֹהֵ֥י יִשְׂרָאֵ֖ל לֵאמֹ֑ר יַ֡עַן אֲשֶׁ֣ר אַתָּה֩ שָׁלַ֨חְתָּ בְשִׁמְכָ֜ה סְפָרִ֗ים אֶל־כָּל־הָעָם֙ אֲשֶׁ֣ר בִּירוּשָׁלִַ֔ם וְאֶל־צְפַנְיָ֤ה בֶן־מַֽעֲשֵׂיָה֙ הַכֹּהֵ֔ן וְאֶ֥ל כָּל־הַכֹּהֲנִ֖ים לֵאמֹֽר׃

25 நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
25 this is what the LORD of Hosts, the God of Israel, says: “In your own name you have sent out letters to all the people of Jerusalem, to the priest Zephaniah son of Maaseiah, and to all the priests. You said to Zephaniah:e
25 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.

26יְהוָ֞ה נְתָנְךָ֣ כֹהֵ֗ן תַּ֚חַת יְהוֹיָדָ֣ע הַכֹּהֵ֔ן לִֽהְי֤וֹת פְּקִדִים֙ בֵּ֣ית יְהוָ֔ה לְכָל־אִ֥ישׁ מְשֻׁגָּ֖ע וּמִתְנַבֵּ֑א וְנָתַתָּ֥ה אֹת֛וֹ אֶל־הַמַּהְפֶּ֖כֶת וְאֶל־הַצִּינֹֽק׃

26 இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்கிறவகினாகிய எந்த மனுஷனையும் நீர் காவலறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே.
26 ‘The LORD has appointed you priest in place of Jehoiada, to be the chief officer in the house of the LORD, responsible for any madman who acts like a prophet—you must put him in stocks and neck irons.
26 செப்பனியாவுக்கு நீ எழுதியது; ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.

27וְעַתָּ֗ה לָ֚מָּה לֹ֣א גָעַ֔רְתָּ בְּיִרְמְיָ֖הוּ הָֽעֲנְּתֹתִ֑י הַמִּתְנַבֵּ֖א לָכֶֽם׃

27 இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்துகொள்ளாமற்போனதென்ன?
27 So now, why have you not rebuked Jeremiah of Anathoth, who poses as a prophet among you?
27 அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்?

28כִּ֣י עַל־כֵּ֞ן שָׁלַ֥ח אֵלֵ֛ינוּ בָּבֶ֥ל לֵאמֹ֖ר אֲרֻכָּ֣ה הִ֑יא בְּנ֤וּ בָתִּים֙ וְשֵׁ֔בוּ וְנִטְע֣וּ גַנּ֔וֹת וְאִכְל֖וּ אֶת־פְּרִיהֶֽן׃

28 இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்கள் என்று பாபிலோனிலிருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான்.
28 For he has sent to us in Babylon, claiming: Since the exile will be lengthy, build houses and settle down; plant gardens and eat their produce.’”
28 இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, 'உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்; எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்' என்று செய்தி அனுப்பியுள்ளான்.

29וַיִּקְרָ֛א צְפַנְיָ֥ה הַכֹּהֵ֖ן אֶת־הַסֵּ֣פֶר הַזֶּ֑ה בְּאָזְנֵ֖י יִרְמְיָ֥הוּ הַנָּבִֽיא׃

29 இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான்.
29 (Zephaniah the priest, however, had read this letter to Jeremiah the prophet.)
29 இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.

30וַֽיְהִי֙ דְּבַר־יְהוָ֔ה אֶֽל־יִרְמְיָ֖הוּ לֵאמֹֽר׃

30 ஆதலால் கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி அவர்:
30 Then the word of the LORD came to Jeremiah:
30 அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

31שְׁלַ֤ח עַל־כָּל־הַגּוֹלָה֙ לֵאמֹ֔ר כֹּ֚ה אָמַ֣ר יְהוָ֔ה אֶל־שְׁמַעְיָ֖ה הַנֶּחֱלָמִ֑י יַ֡עַן אֲשֶׁר֩ נִבָּ֨א לָכֶ֜ם שְׁמַעְיָ֗ה וַֽאֲנִי֙ לֹ֣א שְׁלַחְתִּ֔יו וַיַּבְטַ֥ח אֶתְכֶ֖ם עַל־שָֽׁקֶר׃

31 சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,
31 “Send a message telling all the exiles what the LORD says concerning Shemaiah the Nehelamite. Because Shemaiah has prophesied to you—though I did not send him—and has made you trust in a lie,
31 நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது; நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.

32לָכֵ֞ן כֹּֽה־אָמַ֣ר יְהוָ֗ה הִנְנִ֨י פֹקֵ֜ד עַל־שְׁמַעְיָ֣ה הַנֶּחֱלָמִי֮ וְעַל־זַרְעוֹ֒ לֹא־יִהְיֶ֨ה ל֜וֹ אִ֣ישׁ ׀ יוֹשֵׁ֣ב ׀ בְּתוֹךְ־הָעָ֣ם הַזֶּ֗ה וְלֹֽא־יִרְאֶ֥ה בַטּ֛וֹב אֲשֶׁר־אֲנִ֥י עֹשֶֽׂה־לְעַמִּ֖י נְאֻם־יְהוָ֑ה כִּֽי־סָרָ֥ה דִבֶּ֖ר עַל־יְהוָֽה׃

32 இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
32 this is what the LORD says: ‘I will surely punish Shemaiah the Nehelamite and his descendants. He will have no one left among this people, nor will he see the good that I will bring to My people, declares the LORD, for he has preached rebellion against the LORD.’”
32 எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்," என்கிறார் ஆண்டவர்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
2 a Jeconiah  is a variant of Jehoiachin ; see 2 Kings 24:12.
9 b Some translators close the written portion of this letter later in the chapter.
14 c Or restore your fortunes
19 d Literally I sent to them, rising up early and sending (to them)
25 e Hebrew You said ; the addressee Zephaniah  is added for clarity.

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.