பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 35 | Jeremiah 35

The Obedience of the Rechabites

1הַדָּבָ֛ר אֲשֶׁר־הָיָ֥ה אֶֽל־יִרְמְיָ֖הוּ מֵאֵ֣ת יְהוָ֑ה בִּימֵ֨י יְהוֹיָקִ֧ים בֶּן־יֹאשִׁיָּ֛הוּ מֶ֥לֶךְ יְהוּדָ֖ה לֵאמֹֽר׃

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
1 This is the word that came to Jeremiah from the LORD in the days of Jehoiakim son of Josiah king of Judah:
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய நாள்களில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:*

2הָלוֹךְ֮ אֶל־בֵּ֣ית הָרֵכָבִים֒ וְדִבַּרְתָּ֣ אוֹתָ֔ם וַהֲבִֽאוֹתָם֙ בֵּ֣ית יְהוָ֔ה אֶל־אַחַ֖ת הַלְּשָׁכ֑וֹת וְהִשְׁקִיתָ֥ אוֹתָ֖ם יָֽיִן׃

2 நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.
2 “Go to the house of the Rechabites, speak to them, and bring them to one of the chambers of the house of the LORD to offer them a drink of wine.”
2 'நீ இரேக்காபு குடியிருப்புக்குச் செல். அவர்களோடு பேசி ஆண்டவரின் இல்லத்தில் அறைகளுள் ஒன்றுக்கு அவர்களை அழைத்துவா. அங்கே அவர்கள் பருகிடத் திராட்சை இரசம் கொடு.'

3וָאֶקַּ֞ח אֶת־יַאֲזַנְיָ֤ה בֶֽן־יִרְמְיָ֙הוּ֙ בֶּן־חֲבַצִּנְיָ֔ה וְאֶת־אֶחָ֖יו וְאֶת־כָּל־בָּנָ֑יו וְאֵ֖ת כָּל־בֵּ֥ית הָרֵכָבִֽים׃

3 அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
3 So I took Jaazaniah son of Jeremiah, the son of Habazziniah, and his brothers and all his sons—the entire house of the Rechabites—
3 அவ்வாறே அபட்சனியாவின் பேரனும் மற்றோர் எரேமியாவின் மகனுமான யாசனியாவையும் அவருடைய சகோதரரையும் புதல்வர் எல்லாரையும் இரேக்காபு வீட்டார் அனைவரையும் நான் அழைத்து,

4וָאָבִ֤א אֹתָם֙ בֵּ֣ית יְהוָ֔ה אֶל־לִשְׁכַּ֗ת בְּנֵ֛י חָנָ֥ן בֶּן־יִגְדַּלְיָ֖הוּ אִ֣ישׁ הָאֱלֹהִ֑ים אֲשֶׁר־אֵ֙צֶל֙ לִשְׁכַּ֣ת הַשָּׂרִ֔ים אֲשֶׁ֣ר מִמַּ֗עַל לְלִשְׁכַּ֛ת מַעֲשֵׂיָ֥הוּ בֶן־שַׁלֻּ֖ם שֹׁמֵ֥ר הַסַּֽף׃

4 கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,
4 and I brought them into the house of the LORD, to a chamber occupied by the sons of Hanan son of Igdaliah, a man of God. This room was near the chamber of the officials, which was above the chamber of Maaseiah son of Shallum the doorkeeper.
4 கடவுளின் அடியவரான இக்தலியாவின் மகன் ஆனானுடைய புதல்வரின் அறைக்குக் கூட்டிவந்தேன். அந்த அறை ஆண்டவரின் இல்லத்தில் தலைவர்களின் அறைக்கு அருகில், சல்லூம் மகனும் வாயில் காவலருமான மாசேயாவின் அறைக்குமேல் இருந்தது.

5וָאֶתֵּ֞ן לִפְנֵ֣י ׀ בְּנֵ֣י בֵית־הָרֵכָבִ֗ים גְּבִעִ֛ים מְלֵאִ֥ים יַ֖יִן וְכֹס֑וֹת וָאֹמַ֥ר אֲלֵיהֶ֖ם שְׁתוּ־יָֽיִן׃

5 திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன்.
5 Then I set pitchers full of wine and some cups before the men of the house of the Rechabites, and I said to them, “Drink some wine.”
5 நான் திராட்சை இரசம் நிறைந்த பாத்திரங்களையும கிண்ணங்களையும் இரேக்காபு வீட்டாரின் மக்கள்முன் வைத்து, அவர்களை நோக்கி, "திராட்சை இரசம் பருகுங்கள்" என்றேன்.

6וַיֹּאמְר֖וּ לֹ֣א נִשְׁתֶּה־יָּ֑יִן כִּי֩ יוֹנָדָ֨ב בֶּן־רֵכָ֜ב אָבִ֗ינוּ צִוָּ֤ה עָלֵ֙ינוּ֙ לֵאמֹ֔ר לֹ֧א תִשְׁתּוּ־יַ֛יִן אַתֶּ֥ם וּבְנֵיכֶ֖ם עַד־עוֹלָֽם׃

6 அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,
6 “We do not drink wine,” they replied, “for our forefather Jonadaba son of Rechab commanded us, ‘Neither you nor your descendants are ever to drink wine.
6 அவர்களோ, "நாங்கள் திராட்சை இரசம் பருகமாட்டோம்; ஏனெனில் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையாவது; 'நீங்களோ உங்கள் மக்களோ என்றுமே திராட்சை இரசம் பருகலாகாது.

7וּבַ֣יִת לֹֽא־תִבְנ֗וּ וְזֶ֤רַע לֹֽא־תִזְרָ֙עוּ֙ וְכֶ֣רֶם לֹֽא־תִטָּ֔עוּ וְלֹ֥א יִֽהְיֶ֖ה לָכֶ֑ם כִּ֠י בָּאֳהָלִ֤ים תֵּֽשְׁבוּ֙ כָּל־יְמֵיכֶ֔ם לְמַ֨עַן תִּֽחְי֜וּ יָמִ֤ים רַבִּים֙ עַל־פְּנֵ֣י הָאֲדָמָ֔ה אֲשֶׁ֥ר אַתֶּ֖ם גָּרִ֥ים שָֽׁם׃

7 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
7 Nor are you ever to build a house or sow seed or plant a vineyard. Those things are not for you. Instead, you must live in tents all your lives, so that you may live a long time in the land where you wander.’
7 வீடு கட்டிக்கொள்ளவோ, விதை விதைக்கவோ, திராட்சைத் தோட்டம் நடவோ அதை உடைமையாக்கிக் கொள்ளவோ கூடாது. மாறாக, நீங்கள் தங்கியிருக்கும் இந்நிலத்தின் கண் நெடுநாள்வாழும் பொருட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருங்கள்.'

8וַנִּשְׁמַ֗ע בְּק֨וֹל יְהוֹנָדָ֤ב בֶּן־רֵכָב֙ אָבִ֔ינוּ לְכֹ֖ל אֲשֶׁ֣ר צִוָּ֑נוּ לְבִלְתִּ֤י שְׁתֽוֹת־יַ֙יִן֙ כָּל־יָמֵ֔ינוּ אֲנַ֣חְנוּ נָשֵׁ֔ינוּ בָּנֵ֖ינוּ וּבְנֹתֵֽינוּ׃

8 அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
8 And we have obeyed the voice of our forefather Jonadab son of Rechab in all he commanded us. So we have not drunk wine all our lives—neither we nor our wives nor our sons and daughters.
8 ஆகையால் இரேக்காபின் மகனும் எங்கள் மூதாதையுமான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றுக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து வருகிறோம். அதன்படி நாங்களும் எங்கள் மனைவியர், புதல்வர், புதல்வியர் ஆகிய எல்லாருமே எங்கள் வாழ்நாள் முழுவதும் திராட்சை இரசம் பருகியதுமில்லை;

9וּלְבִלְתִּ֛י בְּנ֥וֹת בָּתִּ֖ים לְשִׁבְתֵּ֑נוּ וְכֶ֧רֶם וְשָׂדֶ֛ה וָזֶ֖רַע לֹ֥א יִֽהְיֶה־לָּֽנוּ׃

9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும் ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
9 Nor have we built houses in which to live, and we have not owned any vineyards or fields or crops.
9 குடியிருக்க வீடுகள் கட்டிக் கொண்டதுமில்லை. எங்களுக்காகத் திராட்சைத் தோட்டமோ வயலோ விதையோ எதுவுமே கிடையாது.

10וַנֵּ֖שֶׁב בָּֽאֳהָלִ֑ים וַנִּשְׁמַ֣ע וַנַּ֔עַשׂ כְּכֹ֥ל אֲשֶׁר־צִוָּ֖נוּ יוֹנָדָ֥ב אָבִֽינוּ׃

10 நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.
10 But we have lived in tents and have obeyed and done exactly as our forefather Jonadab commanded us.
10 கூடாரங்களில்தான் நாங்கள் குடியிருக்கிறோம். எங்கள் மூதாதையான யோனதாபு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்துக்கும் நாங்கள் கீழ்ப்படிந்து நடக்கிறோம்.

11וַיְהִ֗י בַּעֲל֨וֹת נְבוּכַדְרֶאצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶל֮ אֶל־הָאָרֶץ֒ וַנֹּ֗אמֶר בֹּ֚אוּ וְנָב֣וֹא יְרוּשָׁלִַ֔ם מִפְּנֵי֙ חֵ֣יל הַכַּשְׂדִּ֔ים וּמִפְּנֵ֖י חֵ֣יל אֲרָ֑ם וַנֵּ֖שֶׁב בִּירוּשָׁלָֽ͏ִם׃

11 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
11 So when Nebuchadnezzar king of Babylon marched into the land, we said: ‘Come, let us go into Jerusalem to escape the armies of the Chaldeansb and the Arameans.’ So we have remained in Jerusalem.”
11 ஆனால் பாபிலோனிய மன்னன் நெபுகத்கேனசர் இந்நாட்டின்மீது படையெடுத்து வந்தபொழுது, 'வாருங்கள், கல்தேயர் படைக்கும் சிரியர் படைக்கும் தப்பித்துக் கொள்ளுமாறு எருசலேமுக்கு ஓடிப் போவோம்' என்று நாங்கள் சொன்னோம். இவ்வாறு எருசலேமில் நாங்கள் தங்கி வாழ்கிறோம்" என்றனர்.

Judah Rebuked

12וַֽיְהִי֙ דְּבַר־יְהוָ֔ה אֶֽל־יִרְמְיָ֖הוּ לֵאמֹֽר׃

12 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்,
12 Then the word of the LORD came to Jeremiah:
12 பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:

13כֹּֽה־אָמַ֞ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל הָלֹ֤ךְ וְאָֽמַרְתָּ֙ לְאִ֣ישׁ יְהוּדָ֔ה וּלְיֽוֹשְׁבֵ֖י יְרֽוּשָׁלָ֑͏ִם הֲל֨וֹא תִקְח֥וּ מוּסָ֛ר לִשְׁמֹ֥עַ אֶל־דְּבָרַ֖י נְאֻם־יְהוָֽה׃

13 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 “This is what the LORD of Hosts, the God of Israel, says: Go and tell the men of Judah and the residents of Jerusalem: ‘Will you not accept discipline and obey My words?’ declares the LORD.
13 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா மக்களையும் எருசலேம் குடிகளையும் பார்த்து, 'நீங்கள் என் அறிவுரையை ஏற்று, என் சொற்களுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்களா?' என்று கேள், என்கிறார் ஆண்டவர்.

14הוּקַ֡ם אֶת־דִּבְרֵ֣י יְהוֹנָדָ֣ב בֶּן־רֵ֠כָב אֲשֶׁר־צִוָּ֨ה אֶת־בָּנָ֜יו לְבִלְתִּ֣י שְׁתֽוֹת־יַ֗יִן וְלֹ֤א שָׁתוּ֙ עַד־הַיּ֣וֹם הַזֶּ֔ה כִּ֣י שָֽׁמְע֔וּ אֵ֖ת מִצְוַ֣ת אֲבִיהֶ֑ם וְאָ֨נֹכִ֜י דִּבַּ֤רְתִּי אֲלֵיכֶם֙ הַשְׁכֵּ֣ם וְדַבֵּ֔ר וְלֹ֥א שְׁמַעְתֶּ֖ם אֵלָֽי׃

14 திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
14 The words of Jonadab son of Rechab have been carried out. He commanded his sons not to drink wine, and they have not drunk it to this very day because they have obeyed the command of their forefather. But I have spoken to you again and again,c and you have not obeyed Me!
14 திராட்சை இரசம் பருகவேண்டாம் என்று இரேக்காபின் மகன் யோனதாபு தம் வீட்டாருக்குக் கொடுத்திருந்த கட்டளை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றுவரை அவர்கள் திராட்சை இரசம் பருகுவது கிடையாது. இவ்வாறு தங்கள் மூதாதையின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து வருகிறார்கள். நானோ உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை.

15וָאֶשְׁלַ֣ח אֲלֵיכֶ֣ם אֶת־כָּל־עֲבָדַ֣י הַנְּבִאִ֣ים ׀ הַשְׁכֵּ֣ים וְשָׁלֹ֣חַ ׀ לֵאמֹ֡ר שֻׁבוּ־נָ֡א אִישׁ֩ מִדַּרְכּ֨וֹ הָרָעָ֜ה וְהֵיטִ֣יבוּ מַֽעַלְלֵיכֶ֗ם וְאַל־תֵּ֨לְכ֜וּ אַחֲרֵ֨י אֱלֹהִ֤ים אֲחֵרִים֙ לְעָבְדָ֔ם וּשְׁבוּ֙ אֶל־הָ֣אֲדָמָ֔ה אֲשֶׁר־נָתַ֥תִּי לָכֶ֖ם וְלַאֲבֹֽתֵיכֶ֑ם וְלֹ֤א הִטִּיתֶם֙ אֶֽת־אָזְנְכֶ֔ם וְלֹ֥א שְׁמַעְתֶּ֖ם אֵלָֽי׃

15 நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
15 Again and again I have sent youd all My servants the prophets, proclaiming: ‘Turn now, each of you, from your wicked ways, and correct your actions. Do not go after other gods to serve them. Live in the land that I have given to you and your fathers.’ But you have not inclined your ear or listened to Me.
15 இறைவாக்கினரான என் ஊழியர் அனைவரையும் நான் உங்களிடம் மீண்டும் மீண்டும் அனுப்பி வைத்தேன். 'இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்கள் தீய வழியினின்று திரும்பி வாருங்கள்; உங்கள் செயல்களைச் சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள். வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்று அவற்றை வழிபடாதீர்கள். அப்படியானால், உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்துள்ள நாட்டில் நீங்கள் வாழ்வீர்கள்' என்று அவர்களைச் சொல்லவைத்தேன். நீங்களோ எனக்குச் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.

16כִּ֣י הֵקִ֗ימוּ בְּנֵי֙ יְהוֹנָדָ֣ב בֶּן־רֵכָ֔ב אֶת־מִצְוַ֥ת אֲבִיהֶ֖ם אֲשֶׁ֣ר צִוָּ֑ם וְהָעָ֣ם הַזֶּ֔ה לֹ֥א שָׁמְע֖וּ אֵלָֽי׃

16 இப்போதும் ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும்.
16 Yes, the sons of Jonadab son of Rechab carried out the command their forefather gave them, but these people have not listened to Me.
16 இரேக்காபின் மகனான யோனதாபின் மக்கள் தம் மூதாதையின் கட்டளையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இம்மக்களோ எனக்குக் கீழ்ப்படியவில்லை.

17לָ֠כֵן כֹּֽה־אָמַ֨ר יְהוָ֜ה אֱלֹהֵ֤י צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל הִנְנִ֧י מֵבִ֣יא אֶל־יְהוּדָ֗ה וְאֶ֤ל כָּל־יֽוֹשְׁבֵי֙ יְר֣וּשָׁלִַ֔ם אֵ֚ת כָּל־הָ֣רָעָ֔ה אֲשֶׁ֥ר דִּבַּ֖רְתִּי עֲלֵיהֶ֑ם יַ֣עַן דִּבַּ֤רְתִּי אֲלֵיהֶם֙ וְלֹ֣א שָׁמֵ֔עוּ וָאֶקְרָ֥א לָהֶ֖ם וְלֹ֥א עָנֽוּ׃

17 இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
17 Therefore this is what the LORD God of Hosts, the God of Israel, says: ‘Behold, I will bring to Judah and to all the residents of Jerusalem all the disaster I have pronounced against them, because I have spoken to them but they have not obeyed, and I have called to them but they have not answered.’”
17 எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ, நான் எச்சரித்திருந்த எல்லாத் தீங்குகளும் யூதாவுக்கும் எருசலேமின் அனைத்துக் குடிகளுக்கும் நேரிடச் செய்வேன். ஏனெனில் நான் அவர்களோடு பேசியிருந்தும் அவர்கள் எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை.

18וּלְבֵ֨ית הָרֵכָבִ֜ים אָמַ֣ר יִרְמְיָ֗הוּ כֹּֽה־אָמַ֞ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל יַ֚עַן אֲשֶׁ֣ר שְׁמַעְתֶּ֔ם עַל־מִצְוַ֖ת יְהוֹנָדָ֣ב אֲבִיכֶ֑ם וַֽתִּשְׁמְרוּ֙ אֶת־כָּל־מִצְוֺתָ֔יו וַֽתַּעֲשׂ֔וּ כְּכֹ֥ל אֲשֶׁר־צִוָּ֖ה אֶתְכֶֽם׃

18 பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
18 Then Jeremiah said to the house of the Rechabites: “This is what the LORD of Hosts, the God of Israel, says: ‘Because you have obeyed the command of your forefather Jonadab and have kept all his commandments and have done all that he charged you to do,
18 இரேக்காபின் வீட்டாரிடம் எரேமியா கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் உங்கள் மூதாதையாம் யோனதாபின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை எல்லாம் நிறைவேற்றி, அவர் உங்களுக்குக் கொடுத்திருந்த அறிவுரை அனைத்தையும் கடைப்பிடித்து வந்துள்ளீர்கள்.

19לָכֵ֗ן כֹּ֥ה אָמַ֛ר יְהוָ֥ה צְבָא֖וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֑ל לֹֽא־יִכָּרֵ֨ת אִ֜ישׁ לְיוֹנָדָ֧ב בֶּן־רֵכָ֛ב עֹמֵ֥ד לְפָנַ֖י כָּל־הַיָּמִֽים׃

19 ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
19 this is what the LORD of Hosts, the God of Israel, says: Jonadab son of Rechab will never fail to have a man to stand before Me.’”
19 ஆதலால் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது; என் திருமுன் என்றும் பணிவிடை புரியத்தக்க ஒருவன், இரேக்காபின் மகன் யோனதாபுக்கு இல்லாமல் போகான்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
6 a Jonadab  is a variant of Jehonadab ; here and throughout this chapter; see 2 Kings 10:15.
11 b That is, the Babylonians
14 c Literally But I have spoken to you, rising up early and speaking,
15 d Literally Rising up early and sending (you), I have sent you

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.