பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 36 | Jeremiah 36
Jeremiah’s Scroll Read in the Temple
1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்:
1 In the fourth year of Jehoiakim son of Josiah king of Judah, this word came to Jeremiah from the LORD:
1 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;*
2 நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.
2 “Take a scroll and write on it all the words I have spoken to you concerning Israel, Judah, and all the nations, from the day I first spoke to you during the reign of Josiah until today.
2 நீ ஏட்டுச் சுருள் ஒன்றை எடுத்துக்கொள். நான் உன்னோடு பேசத் தொடங்கின நாள் முதல், அதாவது யோசியாவின் நாள்கள் தொடங்கி இந்நாள்வரை, இஸ்ரயேலைக் குறித்தும், யூதாவைக் குறித்தும், மற்ற எல்லா நாடுகளைக் குறித்தும் நான் உனக்கு உரைத்துள்ள சொற்கள் எல்லாவற்றையும் அச்சுருளில் எழுது.
3 யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக் குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார்.
3 Perhaps when the people of Judah hear about all the calamity I plan to bring upon them, each of them will turn from his wicked way. Then I will forgive their iniquity and their sin.”
3 யூதா வீட்டாருக்கு நான் அளிக்க எண்ணியுள்ள எல்லாத் தண்டனைகள் பற்றியும் அவர்கள் அனைவரும் கேள்வியுற நேர்ந்தால், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பக்கூடும். அப்பொழுது அவர்கள் குற்றங்களையும் பாவங்களையும் நான் மன்னிப்பேன்.
4 அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச் சுருளில் எழுதினான்.
4 So Jeremiah called Baruch son of Neriah, and at the dictation of Jeremiah, Baruch wrote on a scroll all the words that the LORD had spoken to Jeremiah.
4 ஆகவே நேரியாவின் மகன் பாரூக்கை எரேமியா தம்மிடம் அழைத்தார். ஆண்டவர் தமக்கு உரைத்திருந்த சொற்களை எரேமியா சொல்லச் சொல்ல பாரூக்கு அவற்றை எல்லாம் ஏட்டுச் சுருளில் எழுதிவைத்தார்.
5 பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது.
5 Then Jeremiah commanded Baruch, “I am restricted; I cannot enter the house of the LORD;
5 பின்னர் எரேமியா பாரூக்குக்குக் கொடுத்த கட்டளை; நான் அடைபட்டிருக்கிறேன். ஆண்டவர் இல்லத்திற்குச் செல்ல என்னால் இயலாது.
6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்து வருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக.
6 so you are to go to the house of the LORD on a day of fasting, and in the hearing of the people you are to read the words of the LORD from the scroll you have written at my dictation. Read them in the hearing of all the people of Judah who are coming from their cities.
6 ஆதலால் நீ அங்குப் போ. நோன்பு நாளன்று அங்குக் குழுமியிருக்கும் மக்களின் செவிகளில் விழும்படி, நான் சொல்லச் சொல்ல நீ எழுதி வைத்த ஆண்டவரின் சொற்களை ஏட்டுச்சுருளினின்று படித்துக்காட்டு. தம் நகர்களிலிருந்து அங்குவரும் யூதா மக்கள் அனைவரும் கேட்கும் படியும் நீ அதை வாசித்துக்காட்டு.
7 ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.
7 Perhaps they will bring their petition before the LORD, and each one will turn from his wicked way; for great are the anger and fury that the LORD has pronounced against this people.”
7 ஒருவேளை அவர்கள் ஆண்டவர் திருமுன் விழுந்து மன்றாடவும், அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பவும் இயலும். ஏனெனில் ஆண்டவர் கடும் சினமுற்று, சீற்றம் கொண்டு, இம்மக்களுக்குத் தீங்கு வருவிப்பதாக அறிவித்துள்ளார்.
8 அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில், கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.
8 So Baruch son of Neriah did everything that Jeremiah the prophet had commanded him. In the house of the LORD he read the words of the LORD from the scroll.
8 இறைவாக்கினர் எரேமியா கட்டளையிட்டிருந்தவாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஆண்டவர் இல்லத்தில் ஏட்டுச்சுருளினின்று ஆண்டவருடைய சொற்களைப் படித்துக் காட்டினார்.
9 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது.
9 Now in the ninth month of the fifth year of Jehoiakim son of Josiah king of Judah, a fast before the LORD was proclaimed to all the people of Jerusalem and all who had come there from the cities of Judah.
9 யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டு ஒன்பதாம் மாதத்தில் எருசலேம் மக்கள் எல்லாரும், யூதாவின் நகர்களினின்று எருசலேமுக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர்.
10 அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான்.
10 From the chamber of Gemariah son of Shaphan the scribe, which was in the upper courtyard at the opening of the New Gate of the house of the LORD, Baruch read from the scroll the words of Jeremiah in the hearing of all the people.
10 அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.
Jeremiah’s Scroll Read in the Palace
11 சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக் கேட்டபோது,
11 When Micaiah son of Gemariah, the son of Shaphan, heard all the words of the LORD from the scroll,
11 ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,
12 அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள்.
12 he went down to the scribe’s chamber in the king’s palace, where all the officials were sitting: Elishama the scribe, Delaiah son of Shemaiah, Elnathan son of Achbor, Gemariah son of Shaphan, Zedekiah son of Hananiah, and all the other officials.
12 உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.
13 பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான்.
13 And Micaiah reported to them all the words he had heard Baruch read from the scroll in the hearing of the people.
13 மக்கள் கேட்கும்படி ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டியிருந்த சொற்கள் எல்லாவற்றையும் மிக்காயா தலைவர்களிடம் எடுத்துரைத்தார்.
14 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக் கொண்டுவா என்று சொல்லச் சொன்னார்கள்; ஆகையால் நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான்.
14 Then all the officials sent word to Baruch through Jehudi son of Nethaniah, the son of Shelemiah, the son of Cushi, saying, “Bring the scroll that you read in the hearing of the people, and come here.” So Baruch son of Neriah took the scroll and went to them.
14 பின்னர் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து, கூசியின் கொள்ளுப்பேரனும் செலேமியாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான எகுதியைப் பாரூக்கிடம் அனுப்பிவைத்தார்கள். "மக்கள் செவிகளில் விழும்படி நீ படித்துக் காட்டிய ஏட்டுச்சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டு வா", என அவருக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச்சுருளைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வந்தார்.
15 அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான்.
15 “Please sit down,” they said, “and read it in our hearing.” So Baruch read it in their hearing.
15 அப்பொழுது அவர்கள் அவரிடம், "நீ இங்கே அமர்ந்து, நாங்கள் கேட்கும்படி அதைப் படி" என்றார்கள். அவரும் அவர்கள் காதில் விழும்படி அதைப் படித்தார்.
16 அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள்.
16 When they had heard all these words, they turned to one another in fear and said to Baruch, “Surely we must report all these words to the king.”
16 எல்லாச் சொற்களையும் அவர்கள் கேட்டுத் திகிலுற்று, ஒருவர் ஒருவரை நோக்கினர். பின் பாரூக்கைப் பார்த்து, "இவற்றை எல்லாம் நாங்கள் கண்டிப்பாக அரசரிடம் தெரிவிக்க வேண்டும்" என்றார்கள்.
17 அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள்.
17 “Tell us now,” they asked Baruch, “how did you write all these words? Was it at Jeremiah’s dictation?”
17 தொடர்ந்து, "இச்சொற்கள் எல்லாவற்றையும் நீ எவ்வாறு எழுதினாய்? அவன் சொல்ல நீ எழுதினாயா? சொல்" என்று அவர்கள் பாரூக்கை வினவினார்கள்.
18 அதற்கு பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான்.
18 “It was at his dictation,” Baruch replied. “He recited all these words to me and I wrote them in ink on the scroll.”
18 அதற்குப் பாரூக்கு, "எரேமியா சொல்லச் சொல்ல, இவற்றை எல்லாம் நான் மை கொண்டு ஏட்டுச்சுருளில் எழுதினேன்" என்று மறுமொழி கூறினார்.
19 அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி,
19 Then the officials said to Baruch, “You and Jeremiah must hide yourselves and tell no one where you are.”
19 அப்பொழுது தலைவர்கள் பாரூக்கை நோக்கி, "நீயும் எரேமியாவும் ஓடி ஒளிந்து கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாதிருக்கட்டும்" என்றார்கள்.
Jehoiakim Burns the Scroll
20 சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள்.
20 So the officials went to the king in the courtyard. And having stored the scroll in the chamber of Elishama the scribe, they reported everything to the king.
20 செயலர் எலிசாமாவின் அறையிலேயே ஏட்டுச்சுருளை வைத்துவிட்டுத் தலைவர்கள் அரண்மனை முற்றத்திற்குள் சென்று, நடந்த எல்லாவற்றையும் அரசனுக்குத் தெரிவித்தார்கள்.
21 அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான்.
21 Then the king sent Jehudi to get the scroll, and he took it from the chamber of Elishama the scribe. And Jehudi read it in the hearing of the king and all the officials who were standing beside him.
21 அரசனோ ஏட்டுச்சுருளை எடுத்துவருமாறு எகுதியை அனுப்பிவைத்தான். செயலர் எலிசாமாவின் அறையினின்று எகுதி அதை எடுத்துவந்து, அரசனும் அவனைச் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அனைவரும் கேட்கப் படித்தான்.
22 ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது.
22 Since it was the ninth month, the king was sitting in his winter quarters with a fire burning before him.
22 அது ஆண்டின் ஒன்பதாம் மாதம், அரசன் தன் குளிர்கால மாளிகையில் அமர்ந்திருந்தான். அவன்முன் கனல் தட்டில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.
23 யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்து போகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான்.
23 And as soon as Jehudi had read three or four columns, Jehoiakim would cut them off with a scribe’s knife and throw them into the firepot, until the entire scroll had been consumed by the fire.
23 எகுதி மூன்று அல்லது நான்கு பத்திகளைப் படித்ததும், அரசன் கத்தியால் அப்பகுதியை அறுத்து கனல்தட்டில் இருந்த நெருப்பில் போட்டான். இவ்வாறு ஏட்டுச்சுருள் முழுவதும் எரிந்து சாம்பலாகும் வரை அவன் செய்து கொண்டிருந்தான்.
24 ராஜாவாயினும் அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
24 Yet in hearing all these words, the king and his servants did not become frightened or tear their garments.
24 அரசனோ இச்சொற்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய பணியாளர்களோ அஞ்சவில்லை; தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொள்ளவுமில்லை.
25 எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்க வேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம் பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களுக்கு அவன் செவிகொடாமல்,
25 Even though Elnathan, Delaiah, and Gemariah urged the king not to burn the scroll, he would not listen to them.
25 அரசன் ஏட்டுச்சுருளை எரிக்காதவாறு அவனை எல்னாத்தான், தெலாயா, கெமரியா ஆகியோர் வேண்டியும், அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.
26 பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளை கொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார்.
26 Instead, the king commanded Jerahmeel, a son of the king, as well as Seraiah son of Azriel and Shelemiah son of Abdeel, to seize Baruch the scribe and Jeremiah the prophet. But the LORD had hidden them.
26 மாறாக எழுத்தர் பாரூக்கையும் இறைவாக்கினர் எரேமியாவையும் பிடித்து வருமாறு அரசனின் மகன் எரகுமவேல், அஸ்ரியேலின் மகன் செராயா, அப்தவேலின் மகன் செலேமியா ஆகியோருக்கு அரசன் கட்டளையிட்டான். ஆண்டவரோ அவர்களை மறைத்துவைத்திருந்தார்.
Jeremiah Rewrites the Scroll
27 ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
27 After the king had burned the scroll containing the words that Baruch had written at Jeremiah’s dictation, the word of the LORD came to Jeremiah:
27 எரேமியா சொல்ல, பாரூக்கு எழுதியிருந்த சொற்கள் அடங்கிய ஏட்டுச்சுருளை அரசன் எரித்த பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
28 நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார்.
28 “Take another scroll and rewrite on it the very words that were on the original scroll, which Jehoiakim king of Judah has burned.
28 நீ மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்துக்கொள்; யூதா அரசன் யோயாக்கிம் முன்பு எரித்த ஏட்டுச்சுருளில் அடங்கியிருந்த எல்லாச் சொற்களையும் இதில் எழுதிவை.
29 மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்தத் தேசத்தை அழித்து அதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 You are to proclaim concerning Jehoiakim king of Judah that this is what the LORD says: You have burned the scroll and said, ‘Why have you written on it that the king of Babylon would surely come and destroy this land and deprive it of man and beast?’
29 பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது: ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்; மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்?" என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய்.
30 ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
30 Therefore this is what the LORD says about Jehoiakim king of Judah: He will have no one to sit on David’s throne, and his body will be thrown out and exposed to heat by day and frost by night.
30 எனவே யூதாவின் அரசன் யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; அவன் வழிமரபினருள் எவனும் தாவீதின் அரியணையில் அமரமாட்டான். அவனது பிணம் வெளியில் எறியப்பட்டு, பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கும்.
31 நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
31 I will punish him and his descendants and servants for their iniquity. I will bring on them, on the residents of Jerusalem, and on the men of Judah, all the calamity about which I warned them but they did not listen.”
31 அரசனையும் அவன் வழிமரபினர், பணியாளர் ஆகியோரையும் அவர்களின் குற்றங்கள் பொருட்டுத் தண்டிப்பேன். நான் எச்சரித்திருந்தும் அவர்கள் பொருட்படுத்தியிராத தீங்குகளை அவர்கள் மேலும் எருசலேம் குடிகள்மேலும் யூதா மக்கள்மேலும் வரச் செய்வேன்.
32 அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.
32 Then Jeremiah took another scroll and gave it to the scribe Baruch son of Neriah, and at Jeremiah’s dictation he wrote on it all the words of the scroll that Jehoiakim king of Judah had burned in the fire. And many similar words were added to them.
32 பின்னர் எரேமியா மற்றுமோர் ஏட்டுச்சுருளை எடுத்து, நேரியாவின் மகனும் எழுத்தருமான பாரூக்கிடம் கொடுத்தார். யூதாவின் அரசன் யோயாக்கிம் எரித்த ஏட்டுச்சுருளில் காணப்பட்ட எல்லாச் சொற்களையும் எரேமியா சொல்லச் சொல்லப் பாரூக்கு மீண்டும் அவற்றை ஏட்டுச்சுருளில் எழுதினார். அவை போன்ற வேறு பலசொற்களும் அவற்றோடு சேர்க்கப்பெற்றன.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.