பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 38 | Jeremiah 38
Jeremiah Cast into the Cistern
1 இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
1 Now Shephatiah son of Mattan, Gedaliah son of Pashhur, Jucala son of Shelemiah, and Pashhur son of Malchijah heard that Jeremiah had been telling all the people:
1 மாத்தானின் மகன் செபற்றியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூக்கால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர், மக்கள் எல்லாருக்கும் எரேமியா அறிவித்துக் கொண்டிருந்த கீழ்க்கண்ட சொற்களைக் கேட்டார்கள்:
2 இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,
2 “This is what the LORD says: Whoever stays in this city will die by sword and famine and plague, but whoever surrenders to the Chaldeansb will live; he will retain his life like a spoil of war, and he will live.
2 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்நகரில் தங்கியிருப்பவன் வாள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியவற்றால் மடிவான். கல்தேயர் பக்கம் தப்பிச் செல்பவனோ பிழைத்துக்கொள்வான். அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளாய் இருக்கும். அவன் உயிர் பிழைப்பான்.
3 எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
3 This is what the LORD says: This city will surely be delivered into the hands of the army of the king of Babylon, and he will capture it.”
3 ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனது படையிடம் இந்நகர் கையளிக்கப்படுவது உறுதி. அவனும் அதைக் கைப்பற்றிக் கொள்வான்.
4 அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்த மனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
4 Then the officials said to the king, “This man ought to die, for he is discouraging the warriors who remain in this city, as well as all the people, by speaking such words to them; this man is not seeking the well-being of these people, but their ruin.”
4 பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, "இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை" என்றார்கள்.
5 அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான்.
5 “Here he is,” replied King Zedekiah. “He is in your hands, since the king can do nothing to stop you.”
5 அதற்கு அரசன் செதேக்கியா, "நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே" என்றான்.
6 அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.
6 So they took Jeremiah and dropped him into the cistern of Malchiah, the king’s son, which was in the courtyard of the guard. They lowered Jeremiah with ropes into the cistern, which had no water but only mud, and Jeremiah sank down into the mud.
6 எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.
7 அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
7 Now Ebed-melech the Cushite,c a court officiald in the royal palace, heard that Jeremiah had been put into the cistern. While the king was sitting at the Gate of Benjamin,
7 அரண்மனையில் இருந்த அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்ற எத்தியோப்பியர் எரேமியா பாழ்ங்கிணற்றில் தள்ளப்பட்டதை அறியவந்தார். அப்பொழுது அரசன் பென்யமின் வாயிலில் அமர்ந்திருந்தான்.
8 அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
8 Ebed-melech went out from the king’s palace and said to the king,
8 எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி,
9 ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
9 “My lord the king, these men have acted wickedly in all that they have done to Jeremiah the prophet. They have dropped him into the cistern, where he will starve to death, for there is no more bread in the city.”
9 "என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது" என்று கூறினார்.
10 அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே; கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
10 So the king commanded Ebed-melech the Cushite, “Take thirty men from here with you and pull Jeremiah the prophet out of the cistern before he dies.”
10 அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, "உன்னோடு மூன்று* பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு" என்று கட்டளையிட்டான்.1
1 - "முப்பது" என்பது எபிரேய பாடம்.
11 அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடைவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு,
11 Then Ebed-melech took the men with him and went to the king’s palace, to a place below the storehouse. From there he took old rags and worn-out clothes and lowered them with ropes to Jeremiah in the cistern.
11 எனவே எபேது மெலேக்கு ஆள்களைத் தம்மோடு அழைத்துக் கொண்டு அரச அரண்மனையின் கருவூலத்திற்குக் கீழே சென்றார். அங்கிருந்து பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் எடுத்து, கயிற்றில் கட்டி, கிணற்றில் கிடந்த எரேமியாவிடம் இறக்கினார்.
12 எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்: எரேமியா அப்படியே செய்தான்.
12 Ebed-melech the Cushite cried out to Jeremiah, “Put these worn-out rags and clothes under your arms to pad the ropes.” Jeremiah did so,
12 எத்தியோப்பியரான எபேது மெலேக்கு எரேமியாவிடம், "இந்தப் பழைய ஆடைகளையும் கந்தல் துணிகளையும் உம் அக்குள்களுக்கும் கயிற்றுக்கும் இடையே வைத்துக் கொள்ளும்" என்று வேண்டினார். எரேமியாவும் அவ்வாறே செய்தார்.
13 அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.
13 and they pulled him up with the ropes and lifted him out of the cistern. And Jeremiah remained in the courtyard of the guard.
13 பின்னர் அவர்கள் எரேமியாவைக் கயிற்றால் வெளியே தூக்கினார்கள். அதன்பின் எரேமியா காவல்கூடத்தில் தங்கி இருந்தார்.
14 பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்திலிருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
14 Then King Zedekiah sent for Jeremiah the prophet and received him at the third entrance to the house of the LORD. “I am going to ask you something,” said the king to Jeremiah. “Do not hide anything from me.”
14 அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி, "நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது" என்று சொன்னான்.
15 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.
15 “If I tell you,” Jeremiah replied, “you will surely put me to death. And even if I give you advice, you will not listen to me.”
15 எரேமியா செதேக்கியாவை நோக்கி, "நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!" என்றார்.
16 அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.
16 But King Zedekiah swore secretly to Jeremiah, “As surely as the LORD lives, who has given us this life, I will not kill you, nor will I deliver you into the hands of these men who are seeking your life.”
16 அதற்கு அரசன் செதேக்கியா "நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்" என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான்.
17 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
17 Then Jeremiah said to Zedekiah, “This is what the LORD God of Hosts, the God of Israel, says: ‘If you indeed surrender to the officers of the king of Babylon, then you will live, this city will not be burned down, and you and your household will survive.
17 எரேமியா செதேக்கியாவிடம் கூறியது: "படைகளின் கடவுளும் இஸ்ரயேலின் கடவுளுமாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீர் உடனே பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் சரணடைந்தால், உயிர் வாழ்வீர். இந்நகர் தீக்கிரையாகாது. நீரும் உம் வீட்டாரும் பிழைத்துக்கொள்வீர்கள்.
18 நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால் அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குக் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
18 But if you do not surrender to the officers of the king of Babylon, then this city will be delivered into the hands of the Chaldeans. They will burn it down, and you yourself will not escape their grasp.’”
18 பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் நீர் சரணடையாவிட்டால், இந்நகர் கல்தேயரிடம் கையளிக்கப்படும்; அவர்கள் அதைத் தீக்கிரையாக்குவார்கள். நீரோ அவர்களது கைக்குத் தப்பமாட்டீர்".
19 அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான்.
19 But King Zedekiah said to Jeremiah, “I am afraid of the Jews who have deserted to the Chaldeans, for the Chaldeans may deliver me into their hands to abuse me.”
19 அப்பொழுது அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, "கல்தேயரிடம் ஏற்கெனவே சரணடைந்துள்ள யூதா நாட்டவர் மட்டில் எனக்கு அச்சமாய் உள்ளது. நான் அவர்களிடம் கையளிக்கப்பட்டு அவர்களது பழிப்புக்கு ஆளாவேன்" என்றான்.
20 அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.
20 “They will not hand you over,” Jeremiah replied. “Obey the voice of the LORD in what I am telling you, that it may go well with you and you may live.
20 அதற்கு எரேமியா, "இல்லை, நீர் கையளிக்கப்படமாட்டீர்; நான் உமக்கு எடுத்துரைக்கும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடும். அது உமக்கு நலம் பயக்கும். நீரும் உயிர் பிழைப்பீர்.
21 நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
21 But if you refuse to surrender, this is the word that the LORD has shown me:
21 நீர் சரணடைய மறுப்பீராகில், இவ்வாறு நடக்குமென ஆண்டவர் எனக்குக் காட்டியுள்ளார்;
22 இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள்தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனை செய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள்.
22 All the women who remain in the palace of the king of Judah will be brought out to the officials of the king of Babylon, and those women will say: ‘They misled you and overcame you—those trusted friends of yours. Your feet sank into the mire, and they deserted you.’
22 யூதா அரசனின் அரண்மனையில் எஞ்சியிருக்கும் பெண்கள் எல்லாரும் பாபிலோனிய மன்னனின் தளபதிகளிடம் கொண்டு செல்லப்படுவார்கள். அவர்கள் 'நம்பிக்கைக்குரிய உம் நண்பர்கள் உம்மை வஞ்சித்து அடக்கி விட்டார்கள்; உம் கால்களைச் சேற்றில் அமிழச்செய்து உம்மைவிட்டு அகன்று போனார்கள்' எனக் கூறுவார்கள்.
23 உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப் போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
23 All your wives and children will be brought out to the Chaldeans. And you yourself will not escape their grasp, for you will be seized by the king of Babylon, and this city will be burned down.”
23 உம் மனைவியர், மக்கள் அனைவரும் கல்தேயரிடம் கொண்டுபோகப்படுவார்கள்; நீரோ அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர். மாறாக, பாபிலோனிய மன்னனால் நீர் பிடிபடுவீர். இந்நகர் தீக்கிரையாகும்" என்றார்.
24 அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை.
24 Then Zedekiah warned Jeremiah, “Do not let anyone know about this conversation, or you will die.
24 அதற்குச் செதேக்கியா எரேமியாவிடம், "நாம் பேசிக் கொண்டது யாருக்கும் தெரியவேண்டாம். அப்படியானால் நீர் சாவுக்குள்ளாகமாட்டீர்.
25 நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,
25 If the officials hear that I have spoken with you, and they come and demand of you, ‘Tell us what you said to the king and what he said to you; do not hide it from us, or we will kill you,’
25 நான் உம்மோடு பேசினதாகத் தலைவர்கள் கேள்வியுற்று, உம்மிடம் வந்து, 'நீர் அரசரிடம் என்ன கூறினீர்? அரசர் உம்மிடம் என்ன சொன்னார்? எங்களிடம் எதையும் மறைக்காதீர். நாங்கள் உம்மைக் கொல்ல மாட்டோம்' என்று சொன்னால்,
26 நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம் பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான்.
26 then tell them, ‘I was presenting to the king my petition that he not return me to the house of Jonathan to die there.’”
26 'நான் மடிந்துபோகாதவாறு யோனத்தான் வீட்டிற்கு என்னை மீண்டும் அனுப்பிவைக்க வேண்டாம் என்று நான் அரசனை வேண்டிக்கொண்டேன்' என்று நீர் அவர்களிடம் சொல்லி விடும்" என்றான்.
27 பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.
27 When all the officials came to Jeremiah and questioned him, he relayed to them the exact words the king had commanded him to say. So they said no more to him, for no one had overheard the conversation.
27 பின்னர் தலைவர்கள் அனைவரும் எரேமியாவிடம் வந்து, அவரை வினவியபொழுது, அரசன் சொல்லியிருந்தபடியே அவர் பதில் உரைத்தார். எனவே அத்தோடு அவர்கள் நிறுத்திக் கொண்டார்கள். பேசியதை யாரும் ஒட்டுக்கேட்கவில்லை.
28 அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
28 And Jeremiah remained in the courtyard of the guard until the day Jerusalem was captured.
28 எருசலேம் கைப்பற்றப்பட்ட நாள்வரை எரேமியா காவல் கூடத்திலேயே இருந்தார்.2
2 எசே 33:21.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Jucal is a variant of Jehucal ; see Jeremiah 37:3.
2 b That is, the Babylonians; also in verses 18, 19, and 23
7 c Probably from the upper Nile region
7 d Or eunuch
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.