பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Jeremiah  எரேமியா  יִרְמְיָהוּ

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

எரேமியா 44 | Jeremiah 44

Judgment on the Jews in Egypt

1הַדָּבָר֙ אֲשֶׁ֣ר הָיָ֣ה אֶֽל־יִרְמְיָ֔הוּ אֶ֚ל כָּל־הַיְּהוּדִ֔ים הַיֹּשְׁבִ֖ים בְּאֶ֣רֶץ מִצְרָ֑יִם הַיֹּשְׁבִ֤ים בְּמִגְדֹּל֙ וּבְתַחְפַּנְחֵ֣ס וּבְנֹ֔ף וּבְאֶ֥רֶץ פַּתְר֖וֹס לֵאמֹֽר׃

1 எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்:
1 This is the word that came to Jeremiah concerning all the Jews living in the land of Egypta—in Migdol, Tahpanhes, and Memphisb—and in the land of Pathros:c
1 எகிப்து நாட்டின் மிக்தோல், தகபனகேசு, தப்னீஸ், மெம்பிசு, ஆகிய நகர்களிலும் பத்ரோசு நாட்டிலும் வாழ்ந்த வந்த யூதர் எல்லாரையும் குறித்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு:

2כֹּה־אָמַ֞ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל אַתֶּ֣ם רְאִיתֶ֗ם אֵ֤ת כָּל־הָֽרָעָה֙ אֲשֶׁ֤ר הֵבֵ֙אתִי֙ עַל־יְר֣וּשָׁלִַ֔ם וְעַ֖ל כָּל־עָרֵ֣י יְהוּדָ֑ה וְהִנָּ֤ם חָרְבָּה֙ הַיּ֣וֹם הַזֶּ֔ה וְאֵ֥ין בָּהֶ֖ם יוֹשֵֽׁב׃

2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.
2 “This is what the LORD of Hosts, the God of Israel, says: You have seen all the disaster that I brought against Jerusalem and all the cities of Judah; and behold, they lie today in ruins and desolation
2 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எருசலேம் மீதும் யூதாவின் எல்லா நகர்கள் மீதும் நான் வருவித்துள்ள தண்டனையை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இதோ, இன்று அவை பாழடைந்து குடியிருப்பாரற்றுக் கிடக்கின்றன.

3מִפְּנֵ֣י רָעָתָ֗ם אֲשֶׁ֤ר עָשׂוּ֙ לְהַכְעִסֵ֔נִי לָלֶ֣כֶת לְקַטֵּ֔ר לַעֲבֹ֖ד לֵאלֹהִ֣ים אֲחֵרִ֑ים אֲשֶׁר֙ לֹ֣א יְדָע֔וּם הֵ֖מָּה אַתֶּ֥ם וַאֲבֹתֵיכֶֽם׃

3 இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனை செய்யவும் போய் எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை.
3 because of the evil they have done. They provoked Me to anger by continuing to burn incense and to serve other gods that neither they nor you nor your fathers ever knew.
3 ஏனெனில், அவர்களோ நீங்களோ உங்கள் மூதாதையரோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களை அவர்கள் நாடிச்சென்று, தூபம் காட்டி, அவற்றைத் தொழுததன் மூலம் தீச்செயல் புரிந்து எனக்குச் சினமூட்டினார்கள்.

4וָאֶשְׁלַ֤ח אֲלֵיכֶם֙ אֶת־כָּל־עֲבָדַ֣י הַנְּבִיאִ֔ים הַשְׁכֵּ֥ים וְשָׁלֹ֖חַ לֵאמֹ֑ר אַל־נָ֣א תַעֲשׂ֗וּ אֵ֛ת דְּבַֽר־הַתֹּעֵבָ֥ה הַזֹּ֖את אֲשֶׁ֥ר שָׂנֵֽאתִי׃

4 நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.
4 Yet I sent you all My servants the prophets again and again,d saying: ‘Do not do this detestable thing that I hate.’
4 இருப்பினும், நான் என் ஊழியரான இறைவாக்கினர் அனைவரையும் திரும்பத் திரும்ப உங்களிடம் அனுப்பி வைத்து, நான் வெறுக்கின்ற இந்த அருவருப்பான செயலைச் செய்யாதீர்கள் என்று சொல்லச் செய்திருந்தேன்.

5וְלֹ֤א שָֽׁמְעוּ֙ וְלֹא־הִטּ֣וּ אֶת־אָזְנָ֔ם לָשׁ֖וּב מֵרָֽעָתָ֑ם לְבִלְתִּ֥י קַטֵּ֖ר לֵאלֹהִ֥ים אֲחֵרִֽים׃

5 ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள்.
5 But they did not listen or incline their ears; they did not turn from their wickedness or stop burning incense to other gods.
5 அவர்களோ அதைக் கேட்கவில்லை; காதில் வாங்கிக்கொள்ளவுமில்லை. தங்கள் தீச்செயலை விட்டுத் திரும்பவில்லை; வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுவதை நிறுத்தவுமில்லை.

6וַתִּתַּ֤ךְ חֲמָתִי֙ וְאַפִּ֔י וַתִּבְעַר֙ בְּעָרֵ֣י יְהוּדָ֔ה וּבְחֻצ֖וֹת יְרֽוּשָׁלָ֑͏ִם וַתִּהְיֶ֛ינָה לְחָרְבָּ֥ה לִשְׁמָמָ֖ה כַּיּ֥וֹם הַזֶּֽה׃

6 ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப் போயிற்று.
6 Therefore My wrath and anger poured out and burned in the cities of Judah and in the streets of Jerusalem, so that they have become the desolate ruin they are today.
6 எனவே என் சீற்றமும் சினமும் யூதாவின் நகர்கள்மேலும் எருசலேமின் தெருக்கள்மேலும் மூண்டெழுந்து அவற்றைத் தீக்கிரையாக்கின. இன்று காண்பதுபோல், அவை பாழடைந்து, ஆளரவமற்றுப் போயின.

7וְעַתָּ֡ה כֹּֽה־אָמַ֣ר יְהוָה֩ אֱלֹהֵ֨י צְבָא֜וֹת אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֗ל לָמָה֩ אַתֶּ֨ם עֹשִׂ֜ים רָעָ֤ה גְדוֹלָה֙ אֶל־נַפְשֹׁ֣תֵכֶ֔ם לְהַכְרִ֨ית לָכֶ֧ם אִישׁ־וְאִשָּׁ֛ה עוֹלֵ֥ל וְיוֹנֵ֖ק מִתּ֣וֹךְ יְהוּדָ֑ה לְבִלְתִּ֛י הוֹתִ֥יר לָכֶ֖ם שְׁאֵרִֽית׃

7 இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து,
7 So now, this is what the LORD God of Hosts, the God of Israel, says: Why are you doing such great harm to yourselves by cutting off from Judah man and woman, child and infant, leaving yourselves without a remnant?
7 இப்போது இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; உங்களுள் ஒருவன் கூட எஞ்சியிராதபடி, ஆண், பெண், சிறுவர், குழந்தை ஆகிய அனைவரையும் யூதாவினின்று அழித்து விடுவதன்மூலம் நீங்கள் உங்களுக்கே பெரும் தீங்கை விளைவித்துக்கொள்ளப் பார்க்கிறீர்களே, அது ஏன்?

8לְהַכְעִסֵ֙נִי֙ בְּמַעֲשֵׂ֣י יְדֵיכֶ֔ם לְקַטֵּ֞ר לֵאלֹהִ֤ים אֲחֵרִים֙ בְּאֶ֣רֶץ מִצְרַ֔יִם אֲשֶׁר־אַתֶּ֥ם בָּאִ֖ים לָג֣וּר שָׁ֑ם לְמַ֙עַן֙ הַכְרִ֣ית לָכֶ֔ם וּלְמַ֤עַן הֱיֽוֹתְכֶם֙ לִקְלָלָ֣ה וּלְחֶרְפָּ֔ה בְּכֹ֖ל גּוֹיֵ֥י הָאָֽרֶץ׃

8 உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டுவானேன்?
8 Why are you provoking Me to anger by the work of your hands by burning incense to other gods in the land of Egypt, where you have gone to reside? As a result, you will be cut off and will become an object of cursing and reproach among all the nations of the earth.
8 நீங்கள் தங்கியிருக்க வந்துள்ள எகிப்து நாட்டில் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுதல் போன்ற உங்கள் செயல்களால் ஏன் எனக்குச் சினமூட்டுகிறீர்கள்? நான் உங்களை அழிக்க, உலகின் எல்லா மக்களினத்தார் மத்தியிலும் நீங்கள் பழிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளவதற்கா இவ்வாறு செய்கிறீர்கள்?

9הַֽשְׁכַחְתֶּם֩ אֶת־רָע֨וֹת אֲבוֹתֵיכֶ֜ם וְאֶת־רָע֣וֹת ׀ מַלְכֵ֣י יְהוּדָ֗ה וְאֵת֙ רָע֣וֹת נָשָׁ֔יו וְאֵת֙ רָעֹ֣תֵכֶ֔ם וְאֵ֖ת רָעֹ֣ת נְשֵׁיכֶ֑ם אֲשֶׁ֤ר עָשׂוּ֙ בְּאֶ֣רֶץ יְהוּדָ֔ה וּבְחֻצ֖וֹת יְרוּשָׁלָֽ͏ִם׃

9 யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ?
9 Have you forgotten the wickedness of your fathers and of the kings of Judah and their wives, as well as the wickedness that you and your wives committed in the land of Judah and in the streets of Jerusalem?
9 உங்கள் மூதாதையரின் தீச்செயல்களையும், யூதா அரசர்களின் தீச்செயல்களையும், அவர்களுடைய மனைவியரின் தீச்செயல்களையும், உங்களுடைய சொந்தத் தீச்செயல்களையும் யூதா நாட்டிலும் எருசலேமின் தெருக்களிலும் உங்கள் மனைவியர் செய்த தீச்செயல்களையும் நீங்கள் மறந்துபோய் விட்டீர்களா?

10לֹ֣א דֻכְּא֔וּ עַ֖ד הַיּ֣וֹם הַזֶּ֑ה וְלֹ֣א יָרְא֗וּ וְלֹֽא־הָלְכ֤וּ בְתֽוֹרָתִי֙ וּבְחֻקֹּתַ֔י אֲשֶׁר־נָתַ֥תִּי לִפְנֵיכֶ֖ם וְלִפְנֵ֥י אֲבוֹתֵיכֶֽם׃

10 அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை.
10 To this day they have not humbled themselves or shown reverence, nor have they followed My instruction or the statutes that I set before you and your fathers.
10 இந்நாள் வரை அவர்கள் எனக்குப் பணிந்துபோகவில்லை; அஞ்சி நடக்கவில்லை; உங்களுக்கும் உங்கள் மூதாதையர்க்கும் நான் கொடுத்திருந்த திருச்சட்டத்தின்படியும் நியமங்களின்படியும் ஒழுகவுமில்லை.

11לָכֵ֗ן כֹּֽה־אָמַ֞ר יְהוָ֤ה צְבָאוֹת֙ אֱלֹהֵ֣י יִשְׂרָאֵ֔ל הִנְנִ֨י שָׂ֥ם פָּנַ֛י בָּכֶ֖ם לְרָעָ֑ה וּלְהַכְרִ֖ית אֶת־כָּל־יְהוּדָֽה׃

11 ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,
11 Therefore this is what the LORD of Hosts, the God of Israel, says: I will set My face to bring disaster and to cut off all Judah.
11 எனவே இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உங்களுக்குத் தண்டனை அளிக்கவும், யூதா முழுவதையும் அழிக்கவும் நான் முடிவுசெய்துள்ளேன்.

12וְלָקַחְתִּ֞י אֶת־שְׁאֵרִ֣ית יְהוּדָ֗ה אֲשֶׁר־שָׂ֨מוּ פְנֵיהֶ֜ם לָב֣וֹא אֶֽרֶץ־מִצְרַיִם֮ לָג֣וּר שָׁם֒ וְתַ֨מּוּ כֹ֜ל בְּאֶ֧רֶץ מִצְרַ֣יִם יִפֹּ֗לוּ בַּחֶ֤רֶב בָּֽרָעָב֙ יִתַּ֔מּוּ מִקָּטֹן֙ וְעַד־גָּד֔וֹל בַּחֶ֥רֶב וּבָרָעָ֖ב יָמֻ֑תוּ וְהָיוּ֙ לְאָלָ֣ה לְשַׁמָּ֔ה וְלִקְלָלָ֖ה וּלְחֶרְפָּֽה׃

12 எகிப்து தேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.
12 And I will take away the remnant of Judah who have resolved to go to the land of Egypt to reside there; they will meet their end. They will all fall by the sword or be consumed by famine. From the least to the greatest, they will die by sword or famine; and they will become an object of cursing and horror, of vilification and reproach.
12 எகிப்து நாட்டிற்கு வந்து தங்கியிருக்க முடிவுசெய்துள்ள யூதாவின் எஞ்சினோரை நான் தாக்க, அவர்கள் எல்லாரும் அழிந்து போவார்கள்; எகிப்து நாட்டில் அவர்கள் அனைவரும் வீழ்ச்சியுறுவார்கள்; வாளுக்கும் பஞ்சத்துக்கும் அவர்கள் இரையாவார்கள்; சிறியோர் முதல் பெரியோர் வரை அவர்கள் எல்லாரும் வாளாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; சாபம், பேரச்சம், பழிப்பு, கண்டனம் ஆகியவற்றுக்கு ஆளாவார்கள்.

13וּפָקַדְתִּ֗י עַ֤ל הַיּֽוֹשְׁבִים֙ בְּאֶ֣רֶץ מִצְרַ֔יִם כַּאֲשֶׁ֥ר פָּקַ֖דְתִּי עַל־יְרֽוּשָׁלָ֑͏ִם בַּחֶ֖רֶב בָּרָעָ֥ב וּבַדָּֽבֶר׃

13 நான் எருசலேமை தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன்.
13 I will punish those who live in the land of Egypt, just as I punished Jerusalem, by sword and famine and plague,
13 எருசலேமை வாள், பஞ்சம், கொள்ளை நோயால் நான் தண்டித்துள்ளது போன்று எகிப்து நாட்டில் வாழ்வோரையும் தண்டிப்பேன்.

14וְלֹ֨א יִהְיֶ֜ה פָּלִ֤יט וְשָׂרִיד֙ לִשְׁאֵרִ֣ית יְהוּדָ֔ה הַבָּאִ֥ים לָגֽוּר־שָׁ֖ם בְּאֶ֣רֶץ מִצְרָ֑יִם וְלָשׁ֣וּב ׀ אֶ֣רֶץ יְהוּדָ֗ה אֲשֶׁר־הֵ֜מָּה מְנַשְּׂאִ֤ים אֶת־נַפְשָׁם֙ לָשׁוּב֙ לָשֶׁ֣בֶת שָׁ֔ם כִּ֥י לֹֽא־יָשׁ֖וּבוּ כִּ֥י אִם־פְּלֵטִֽים׃

14 எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.
14 so that none of the remnant of Judah who have gone to reside in Egypt will escape or survive to return to the land of Judah, where they long to return and live; for none will return except a few fugitives.”
14 எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சியோருள் எவருமே தப்பமாட்டார்; உயிர் பிழைக்கவும் மாட்டார். யூதா நாட்டில் குடியிருக்கும் பொருட்டு அங்குத் திரும்பிச் செல்ல ஆவலோடு ஏங்கியும் அங்குத் திரும்பிச் செல்லமாட்டார். தப்பியோடுவோரைத் தவிர வேறு எவருமே திரும்பிச் செல்லமாட்டார்.

The Stubbornness of the People

15וַיַּעֲנ֣וּ אֶֽת־יִרְמְיָ֗הוּ כָּל־הָאֲנָשִׁ֤ים הַיֹּֽדְעִים֙ כִּֽי־מְקַטְּר֤וֹת נְשֵׁיהֶם֙ לֵאלֹהִ֣ים אֲחֵרִ֔ים וְכָל־הַנָּשִׁ֥ים הָעֹמְד֖וֹת קָהָ֣ל גָּד֑וֹל וְכָל־הָעָ֛ם הַיֹּשְׁבִ֥ים בְּאֶֽרֶץ־מִצְרַ֖יִם בְּפַתְר֥וֹס לֵאמֹֽר׃

15 அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நியதேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக:
15 Then all the men who knew that their wives were burning incense to other gods, and all the women standing by—a great assembly—along with all the people living in the land of Egypt and in Pathros,e said to Jeremiah,
15 அப்பொழுது, தங்கள் மனைவியர் வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டியதை அறிந்திருந்த எல்லா ஆண்களும், அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த எல்லாப் பெண்களும், எகிப்து நாட்டிலும் பத்ரோசிலும் வாழ்ந்துவந்த மக்கள் அனைவரும் எரேமியாவுக்கு மறுமொழியாகக் கூறியது:

16הַדָּבָ֛ר אֲשֶׁר־דִּבַּ֥רְתָּ אֵלֵ֖ינוּ בְּשֵׁ֣ם יְהוָ֑ה אֵינֶ֥נּוּ שֹׁמְעִ֖ים אֵלֶֽיךָ׃

16 நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல்,
16 “As for the word you have spoken to us in the name of the LORD, we will not listen to you!
16 "ஆண்டவர் பெயரால் எங்களுக்கு நீர் அறிவித்துள்ள செய்தியைப் பொறுத்தமட்டில் நாங்கள் உமக்குச் செவிகொடுக்கமாட்டோம்.

17כִּי֩ עָשֹׂ֨ה נַעֲשֶׂ֜ה אֶֽת־כָּל־הַדָּבָ֣ר ׀ אֲשֶׁר־יָצָ֣א מִפִּ֗ינוּ לְקַטֵּ֞ר לִמְלֶ֣כֶת הַשָּׁמָיִם֮ וְהַסֵּֽיךְ־לָ֣הּ נְסָכִים֒ כַּאֲשֶׁ֨ר עָשִׂ֜ינוּ אֲנַ֤חְנוּ וַאֲבֹתֵ֙ינוּ֙ מְלָכֵ֣ינוּ וְשָׂרֵ֔ינוּ בְּעָרֵ֣י יְהוּדָ֔ה וּבְחֻצ֖וֹת יְרוּשָׁלָ֑͏ִם וַנִּֽשְׂבַּֽע־לֶ֙חֶם֙ וַנִּֽהְיֶ֣ה טוֹבִ֔ים וְרָעָ֖ה לֹ֥א רָאִֽינוּ׃

17 எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
17 Instead, we will do everything we vowed to do: We will burn incense to the Queen of Heaven and offer drink offerings to her, just as we, our fathers, our kings, and our officials did in the cities of Judah and in the streets of Jerusalem. At that time we had plenty of food and good things, and we saw no disaster.
17 நாங்கள் செய்து கொண்ட எல்லா நேர்ச்சைகளையும் திண்ணமாய் நிறைவேற்றுவோம்; நாங்களும் எங்கள் மூதாதையரும் அரசர்களும் தலைவர்களும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் செய்துள்ளது போல, நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவோம். நீர்மப்படையல்களைப் படைப்போம். ஏனெனில், அப்பொழுது எங்களுக்கு ஏராளமான உணவு இருந்தது. நாங்கள் வளமுடன் வாழ்ந்தோம். தீமை எதுவும் எங்களை அணுகியதில்லை.

18וּמִן־אָ֡ז חָדַ֜לְנוּ לְקַטֵּ֨ר לִמְלֶ֧כֶת הַשָּׁמַ֛יִם וְהַסֵּֽךְ־לָ֥הּ נְסָכִ֖ים חָסַ֣רְנוּ כֹ֑ל וּבַחֶ֥רֶב וּבָרָעָ֖ב תָּֽמְנוּ׃

18 நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம்.
18 But from the time we stopped burning incense to the Queen of Heaven and pouring out drink offerings to her, we have lacked everything and have been perishing by sword and famine.”
18 ஆனால், நாங்கள் விண்ணக அரசிக்குத் தூபம் காட்டுவதையும் நீர்மப் படையல்களைப் படைப்பதையும் நிறுத்திவிட்ட காலத்திலிருந்து, எங்களுக்கு எல்லாமே குறைபாடாய் உள்ளது. வாளாலும் பஞ்சத்தாலும் நாங்கள் அழிந்து கொண்டிருக்கிறோம்."

19וְכִֽי־אֲנַ֤חְנוּ מְקַטְּרִים֙ לִמְלֶ֣כֶת הַשָּׁמַ֔יִם וּלְהַסֵּ֥ךְ לָ֖הּ נְסָכִ֑ים הֲמִֽבַּלְעֲדֵ֣י אֲנָשֵׁ֗ינוּ עָשִׂ֨ינוּ לָ֤הּ כַּוָּנִים֙ לְהַ֣עֲצִבָ֔הֿ וְהַסֵּ֥ךְ לָ֖הּ נְסָכִֽים׃

19 மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.
19 “Moreover,” said the women, “when we burned incense to the Queen of Heaven and poured out drink offerings to her, was it without our husbands’ knowledge that we made sacrificial cakes in her image and poured out drink offerings to her?”
19 அப்பொழுது பெண்கள், "விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப் படையல்களைப் படைத்தபொழுது, எங்கள் கணவர்களின் ஒப்புதல் இல்லாமலா நாங்கள் விண்ணக அரசியின் உருவம் தாங்கிய மாவடை சுட்டு, நீர்மப் படையல்கள் படைத்தோம்?" என்றார்கள்.

Calamity for the Jews

20וַיֹּ֥אמֶר יִרְמְיָ֖הוּ אֶל־כָּל־הָעָ֑ם עַל־הַגְּבָרִ֤ים וְעַל־הַנָּשִׁים֙ וְעַל־כָּל־הָעָ֔ם הָעֹנִ֥ים אֹת֛וֹ דָּבָ֖ר לֵאמֹֽר׃

20 அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி:
20 Then Jeremiah said to all the people, both men and women, who were answering him,
20 இந்த மறுமொழி கூறிய ஆண், பெண் ஆகிய எல்லா மக்களிடமும் எரேமியா கூறியது:

21הֲל֣וֹא אֶת־הַקִּטֵּ֗ר אֲשֶׁ֨ר קִטַּרְתֶּ֜ם בְּעָרֵ֤י יְהוּדָה֙ וּבְחֻצ֣וֹת יְרוּשָׁלִַ֔ם אַתֶּ֧ם וַאֲבֽוֹתֵיכֶ֛ם מַלְכֵיכֶ֥ם וְשָׂרֵיכֶ֖ם וְעַ֣ם הָאָ֑רֶץ אֹתָם֙ זָכַ֣ר יְהוָ֔ה וַֽתַּעֲלֶ֖ה עַל־לִבּֽוֹ׃

21 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.
21 “As for the incense you burned in the cities of Judah and in the streets of Jerusalem—you, your fathers, your kings, your officials, and the people of the land—did the LORD not remember and bring this to mind?
21 "நீங்களும் உங்கள் மூதாதையர், அரசர்கள், தலைவர்கள், நாட்டுமக்கள் எல்லாரும் யூதாவின் நகர்களிலும் எருசலேமின் தெருக்களிலும் தூபம் காட்டினீர்களே, அதை ஆண்டவர் மறந்து விட்டாரா? அதை அவர் தம் நினைவில் கொள்ளவில்லையா?

22וְלֹֽא־יוּכַל֩ יְהוָ֨ה ע֜וֹד לָשֵׂ֗את מִפְּנֵי֙ רֹ֣עַ מַעַלְלֵיכֶ֔ם מִפְּנֵ֥י הַתּוֹעֵבֹ֖ת אֲשֶׁ֣ר עֲשִׂיתֶ֑ם וַתְּהִ֣י אַ֠רְצְכֶם לְחָרְבָּ֨ה וּלְשַׁמָּ֧ה וְלִקְלָלָ֛ה מֵאֵ֥ין יוֹשֵׁ֖ב כְּהַיּ֥וֹם הַזֶּֽה׃

22 உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக் கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.
22 So the LORD could no longer endure the evil deeds and detestable acts you committed, and your land became a desolation, a horror, and an object of cursing, without inhabitant, as it is this day.
22 நீங்கள் செய்துள்ள தீச்செயல்களையும் அருவருப்பான செயல்களையும் ஆண்டவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கள் நாடு கண்டனத்திற்கும் பேரச்சத்திற்கும் சாபத்திற்கும் உள்ளாகி, இன்று காண்பதுபோல், குடியிருப்பாரற்றுக் கிடக்கிறது.

23מִפְּנֵי֩ אֲשֶׁ֨ר קִטַּרְתֶּ֜ם וַאֲשֶׁ֧ר חֲטָאתֶ֣ם לַיהוָ֗ה וְלֹ֤א שְׁמַעְתֶּם֙ בְּק֣וֹל יְהוָ֔ה וּבְתֹרָת֧וֹ וּבְחֻקֹּתָ֛יו וּבְעֵדְוֺתָ֖יו לֹ֣א הֲלַכְתֶּ֑ם עַל־כֵּ֞ן קָרָ֥את אֶתְכֶ֛ם הָרָעָ֥ה הַזֹּ֖את כַּיּ֥וֹם הַזֶּֽה׃

23 நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான்.
23 Because you burned incense and sinned against the LORD, and did not obey the voice of the LORD or walk in His instruction, His statutes, and His testimonies, this disaster has befallen you, as you see today.”
23 நீங்கள் தூபம் காட்டியதாலும், ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்ததாலும், அவரது குரலுக்குச் செவிகொடாது, அவருடைய திருச்சட்டம், நியமங்கள், ஒழுங்குமுறைகள் ஆகியவற்றிற்கேற்ப ஒழுகாததாலுமே, இன்றும் காண்பது போல், இத்தீங்கு உங்களுக்கு நேர்ந்துள்ளது."

24וַיֹּ֤אמֶר יִרְמְיָ֙הוּ֙ אֶל־כָּל־הָעָ֔ם וְאֶ֖ל כָּל־הַנָּשִׁ֑ים שִׁמְעוּ֙ דְּבַר־יְהוָ֔ה כָּל־יְהוּדָ֕ה אֲשֶׁ֖ר בְּאֶ֥רֶץ מִצְרָֽיִם׃

24 பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
24 Then Jeremiah said to all the people, including all the women, “Hear the word of the LORD, all those of Judah who are in the land of Egypt.
24 தொடர்ந்து எரேமியா எல்லா மக்களையும் பெண்களையும் நோக்கிக் கூறியது: "எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.

25כֹּֽה־אָמַ֣ר יְהוָֽה־צְבָאוֹת֩ אֱלֹהֵ֨י יִשְׂרָאֵ֜ל לֵאמֹ֗ר אַתֶּ֨ם וּנְשֵׁיכֶ֜ם וַתְּדַבֵּ֣רְנָה בְּפִיכֶם֮ וּבִידֵיכֶ֣ם מִלֵּאתֶ֣ם ׀ לֵאמֹר֒ עָשֹׂ֨ה נַעֲשֶׂ֜ה אֶת־נְדָרֵ֗ינוּ אֲשֶׁ֤ר נָדַ֙רְנוּ֙ לְקַטֵּר֙ לִמְלֶ֣כֶת הַשָּׁמַ֔יִם וּלְהַסֵּ֥ךְ לָ֖הּ נְסָכִ֑ים הָקֵ֤ים תָּקִ֙ימְנָה֙ אֶת־נִדְרֵיכֶ֔ם וְעָשֹׂ֥ה תַעֲשֶׂ֖ינָה אֶת־נִדְרֵיכֶֽם׃

25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.
25 This is what the LORD of Hosts, the God of Israel, says: As for you and your wives, you have spoken with your mouths and fulfilled with your hands your words: ‘We will surely perform our vows that we have made to burn incense to the Queen of Heaven and to pour out drink offerings to her.’ Go ahead, then, do what you have promised! Keep your vows!
25 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்களும் உங்கள் மனைவியரும், 'விண்ணக அரசிக்குத் தூபம் காட்டி, நீர்மப்படையல்களை அவளுக்குப் படைப்பதாக நாங்கள் செய்துகொண்ட நேர்ச்சைகளை நிறைவேற்றியே தீருவோம்' என்று நீங்கள் சொல்லால் கூறியதைச் செயலில் நிறைவேற்றிவிட்டீர்கள். நன்று! நன்று! உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்! உங்கள் பொருத்தனைகளைச் செலுத்துங்கள்!

26לָכֵן֙ שִׁמְע֣וּ דְבַר־יְהוָ֔ה כָּל־יְהוּדָ֕ה הַיֹּשְׁבִ֖ים בְּאֶ֣רֶץ מִצְרָ֑יִם הִנְנִ֨י נִשְׁבַּ֜עְתִּי בִּשְׁמִ֤י הַגָּדוֹל֙ אָמַ֣ר יְהוָ֔ה אִם־יִהְיֶה֩ ע֨וֹד שְׁמִ֜י נִקְרָ֣א ׀ בְּפִ֣י ׀ כָּל־אִ֣ישׁ יְהוּדָ֗ה אֹמֵ֛ר חַי־אֲדֹנָ֥י יְהוִ֖ה בְּכָל־אֶ֥רֶץ מִצְרָֽיִם׃

26 ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 Nevertheless, hear the word of the LORD, all you people of Judah living in Egypt: Behold, I have sworn by My great name, says the LORD, that never again will any man of Judah living in the land of Egypt invoke My name or say, ‘As surely as the Lord GOD lives.’
26 எனவே எகிப்து நாட்டில் குடியிருக்கும் யூதாவின் மக்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; ஆண்டவர் கூறுகிறார்: 'தலைவராகிய வாழும் ஆண்டவர் மேல் ஆணை!' எனச் சொல்லி எகிப்து நாடு எங்கணும் யூதாவின் எந்தக் குடிமகனும் என் பெயரை வாயால் உச்சரிக்கமாட்டான் என்று என் பெருமை வாய்ந்த பெயரால் நான் ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.

27הִנְנִ֨י שֹׁקֵ֧ד עֲלֵיהֶ֛ם לְרָעָ֖ה וְלֹ֣א לְטוֹבָ֑ה וְתַמּוּ֩ כָל־אִ֨ישׁ יְהוּדָ֜ה אֲשֶׁ֧ר בְּאֶֽרֶץ־מִצְרַ֛יִם בַּחֶ֥רֶב וּבָרָעָ֖ב עַד־כְּלוֹתָֽם׃

27 இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.
27 I am watching over them for harm and not for good, and every man of Judah who is in the land of Egypt will meet his end by sword or famine, until they are finished off.
27 நன்மை அன்று, தீமை விளைவிக்கவே அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்; எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும் முற்றிலும் அழியும்வரை வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன்.

28וּפְלִיטֵ֨י חֶ֜רֶב יְשֻׁב֨וּן מִן־אֶ֧רֶץ מִצְרַ֛יִם אֶ֥רֶץ יְהוּדָ֖ה מְתֵ֣י מִסְפָּ֑ר וְֽיָדְע֞וּ כָּל־שְׁאֵרִ֣ית יְהוּדָ֗ה הַבָּאִ֤ים לְאֶֽרֶץ־מִצְרַ֙יִם֙ לָג֣וּר שָׁ֔ם דְּבַר־מִ֥י יָק֖וּם מִמֶּ֥נִּי וּמֵהֶֽם׃

28 ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
28 Those who escape the sword will return from Egypt to Judah, few in number, and the whole remnant of Judah who went to dwell in the land of Egypt will know whose word will stand, Mine or theirs!
28 வாளுக்குத் தப்பும் ஒரு சிலரே எகிப்து நாட்டினின்று யூதா நாட்டுக்குத் திரும்பிச் செல்வர். அப்பொழுது எகிப்து நாட்டில் தங்கியிருக்கும்படி வந்துள்ள யூதாவின் எஞ்சினோர் அனைவரும், நிலைநிற்பது என் சொல்லா, அவர்கள் சொல்லா? என்பதை அறிந்துகொள்வர்.

29וְזֹאת־לָכֶ֤ם הָאוֹת֙ נְאֻם־יְהוָ֔ה כִּֽי־פֹקֵ֥ד אֲנִ֛י עֲלֵיכֶ֖ם בַּמָּק֣וֹם הַזֶּ֑ה לְמַ֙עַן֙ תֵּֽדְע֔וּ כִּי֩ ק֨וֹם יָק֧וּמוּ דְבָרַ֛י עֲלֵיכֶ֖ם לְרָעָֽה׃

29 நான் இவ்விடத்தில் உங்களை தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
29 This will be a sign to you that I will punish you in this place, declares the LORD, so that you may know that My threats of harm against you will surely stand.
29 நான் இந்த இடத்திலேயே உங்களைத் தண்டிப்பேன். இதுவே உங்களுக்கு அடையாளம், என்கிறார் ஆண்டவர். இதனால் உங்கள் தண்டனை பற்றி உங்களுக்கு எதிராக நான் கூறிய சொற்கள் உறுதியாய் நிலைநிற்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

30כֹּ֣ה ׀ אָמַ֣ר יְהוָ֗ה הִנְנִ֣י נֹ֠תֵן אֶת־פַּרְעֹ֨ה חָפְרַ֤ע מֶֽלֶךְ־מִצְרַ֙יִם֙ בְּיַ֣ד אֹֽיְבָ֔יו וּבְיַ֖ד מְבַקְשֵׁ֣י נַפְשׁ֑וֹ כַּאֲשֶׁ֨ר נָתַ֜תִּי אֶת־צִדְקִיָּ֣הוּ מֶֽלֶךְ־יְהוּדָ֗ה בְּיַ֨ד נְבוּכַדְרֶאצַּ֧ר מֶֽלֶךְ־בָּבֶ֛ל אֹיְב֖וֹ וּמְבַקֵּ֥שׁ נַפְשֽׁוֹ׃

30 இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
30 This is what the LORD says: Behold, I will deliver Pharaoh Hophra king of Egypt into the hands of his enemies who seek his life, just as I delivered Zedekiah king of Judah into the hand of Nebuchadnezzar king of Babylon, the enemy who was seeking his life.”
30 ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, யூதாவின் அரசனான செதேக்கியாவை, அவன் பகைவனும் அவன் உயிரைப் பறிக்கத் தேடியவனுமான பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் நான் கையளித்தது போல, எகிப்திய மன்னன் பார்வோன் ஒப்ராவை அவன் பகைவர் கையிலும் அவன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் ஒப்புவிப்பேன்."*


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Jeremiah Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42   43   44   45   46   47   48   49   50   51   52

Footnotes:
1 a Or Lower Egypt  or northern Egypt ; also in verse 15
1 b LXX; Hebrew Noph
1 c Or Upper Egypt  or southern Egypt ; also in verse 15
4 d Literally the prophets, rising up early and sending (them),
15 e That is, in Lower and Upper Egypt; possibly in the land of Egypt at Pathros

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.