பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 48 | Jeremiah 48
Judgment on Moab (Isaiah 15:1–9)
1 மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று.
1 Concerning Moab, this is what the LORD of Hosts, the God of Israel, says: “Woe to Nebo, for it will be devastated. Kiriathaim will be captured and disgraced; the fortress will be shattered and dismantled.
1 மோவாபைக் குறித்து, இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:நெபோவுக்கு ஐயோ கேடு! அது பாழடைந்து கிடக்கிறது. கிரியத்தாயிம் அவமானத்துக்கு உள்ளாகிக் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் கோட்டை இழிவுபடுத்தப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
2 எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.
2 There is no longer praise for Moab; in Heshbona they devise evil against her: ‘Come, let us cut her off from nationhood.’ You too, O people of Madmen,b will be silenced; the sword will pursue you.
2 போவாபின் புகழ் மங்கிவிட்டது; எஸ்போனில் அதற்குத் தீங்கிழைக்கத் திட்டமிடப்படுகிறது: 'வாருங்கள்; அதனை ஒரு நாடாய் இல்லாதவாறு சிதைப்போம்'. மத்மேன்! நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைத் துரத்தி வரும்.
3 பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும்.
3 A voice cries out from Horonaim: ‘Devastation and great destruction!’
3 ஓரொனாயிமினின்று கூக்குரல் ஒலிக்கிறது. 'கொடுமை, பேரழிவு' எனக் கேட்கிறது.
4 மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது.
4 Moab will be shattered; her little ones will cry out.c
4 மோவாபு அழிக்கப்பட்டுவிட்டது; அதன் குழந்தைகளின் அழுகுரல் கேட்கின்றது.
5 லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.
5 For on the ascent to Luhith they weep bitterly as they go, and on the descent to Horonaim cries of distress resound over the destruction:
5 லூகித்துக்கு ஏறிச்செல்லும் வழியில் அவர்கள் அழுதுகொண்டே போகிறார்கள்; ஓரொனாயிமுக்கு இறங்கிச் செல்லும் வழியில் அழிவின் புலம்பல்* கேட்கிறது.1
1 - 'புலம்பலின் துயரம்' என்பது எபிரேய பாடம்.
6 உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள்.
6 ‘Flee! Run for your lives! Become like a juniper in the desert.d’
6 தப்பியோடுங்கள், உங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்; பாலை நிலத்துக் காட்டுக்கழுதைபோல் மாறுங்கள்.
7 நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.
7 Because you trust in your works and treasures, you too will be captured, and Chemosh will go into exile with his priests and officials.
7 உன் கோட்டைகளையும்* கருவூலங்களையும் நம்பியிருந்தாய்; நீயும் கைப்பற்றப்படுவாய். கெமோசு தெய்வம் நாடுகடத்தப்படும்; அதன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அதனோடு செல்வார்கள்.2
2 - 'செயல்கள்' என்பது எபிரேய பாடம்.
8 பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.
8 The destroyer will move against every city, and not one town will escape. The valley will also be ruined, and the high plain will be destroyed, as the LORD has said.
8 'அழிப்போன்' ஒவ்வொரு நகருக்கும் வருவான். எந்த நகரும் தப்பாது. ஆண்டவர் சொல்லியிருப்பது போல் பள்ளத்தாக்குகள் பாழாகும்; சமவெளிகள் அழிக்கப்படும்.
9 மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும்.
9 Put salt on Moab, for she will be laid waste;e her cities will become desolate, with no one to dwell in them.
9 மோவாபுக்கு இறக்கைகள் கொடுங்கள்; அது பறந்தோடட்டும்; அதன் நகர்கள் பாழாக்கப்படும்; அவை குடியிருப்போர் அற்றுப் போகும்.
10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன்.
10 Cursed is the one who is remiss in doing the work of the LORD, and cursed is he who withholds his sword from bloodshed.
10 ஆண்டவர்தம் அலுவலை அக்கறையின்றிச் செய்பவன் சபிக்கப்பட்டவன்; குருதி சிந்தாமல் தன் வாளை வைத்திருப்பவனும் சபிக்கப்பட்டவனே.
11 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.
11 Moab has been at ease from youth, settled like wine on its dregs; he has not been poured from vessel to vessel or gone into exile. So his flavor has remained the same, and his aroma is unchanged.
11 மோவாபு இளமைமுதல் அமைதியில் வாழ்ந்துவருகிறது; மண்டியை அடியில் கொண்ட பழந் திராட்சை இரசம் அது . அது கலத்தினின்று கலத்திற்கு மாற்றப்படாதது; நாடுகடத்தப்படாதது; அதன் சுவை குன்றவில்லை; அதன் நறுமணம் மாறவில்லை.
12 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள்.
12 Therefore behold, the days are coming, declares the LORD, when I will send to him wanderers, who will pour him out. They will empty his vessels and shatter his jars.
12 எனவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது நான் 'கவிழ்ப்போரை' அனுப்புவேன். அவர்கள் அதைக் கவிழ்ப்பார்கள்; அதன் கலங்களை வெறுமையாக்குவார்கள்; அதன் சாடிகளை நொறுக்குவார்கள்.
13 அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும்.
13 Then Moab will be ashamed of Chemosh, just as the house of Israel was ashamed when they trusted in Bethel.
13 இஸ்ரயேல் வீட்டார் தாம் நம்பிக்கை வைத்திருந்த பெத்தேலைக் குறித்து இகழ்ச்சியுற்றது போல, மோவாபு கெமோசைக் குறித்து இகழ்ச்சியுறும்.
14 நாங்கள் பராக்கிரமசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன?
14 How can you say, ‘We are warriors, mighty men ready for battle’?
14 'நாங்கள் படைவீரர்கள்; போரில் வல்லவர்கள்' என்று நீங்கள் எப்படிச் சொல்லக்கூடும்?
15 மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
15 Moab has been destroyed and its towns have been invaded; the best of its young men have gone down in the slaughter, declares the King, whose name is the LORD of Hosts.
15 "மோவாபையும் அதன் நகர்களையும் அழிப்பவன் வந்துவிட்டான்; அதன் சிறந்த இளைஞர்கள் கொலைக் களத்திற்குப் போய் விட்டார்கள்," என்கிறார் படைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மன்னர்.
16 மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
16 Moab’s calamity is at hand, and his affliction is rushing swiftly.
16 மோவாபின் அழிவு அண்மையில் உள்ளது; தீங்கு அதை நோக்கி விரைந்து வருகிறது.
17 அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
17 Mourn for him, all you who surround him, everyone who knows his name; tell how the mighty scepter is shattered—the glorious staff!
17 அதைச் சுற்றியிருப்போரே, நீங்கள் அனைவரும் அதற்காகத் துக்கம் கொண்டாடுங்கள். அதன் புகழை அறிந்திருப்போரே, நீங்கள் அனைவரும் 'வலிமைமிக்க செங்கோல் முறிந்தது எங்ஙனம்? மேன்மைமிக்க கோல் உடைந்தது எவ்வாறு?' என்று கேளுங்கள்.
18 தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்..
18 Come down from your glory; sit on parched ground, O daughter dwelling in Dibon, for the destroyer of Moab has come against you; he has destroyed your fortresses.
18 மகள் தீபோனின் குடிமகனே, உன் மேன்மையை விட்டு இறங்கி வா; வறண்ட நிலத்தில் வந்து அமர்ந்துகொள்.§மோவாபை அழிப்பவன் உனக்கு எதிராக எழுந்துவிட்டான்; உன் கோட்டைகளை அவன் தகர்த்து விட்டான்.
19 ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
19 Stand by the road and watch, O dweller of Aroer! Ask the man fleeing or the woman escaping, ‘What has happened?’
19 அரோயேரின் குடிமகனே! நீ சாலை ஓரமாய் நின்று கவனி; ஓட்டம்பிடிக்கிறவனையும் தப்பி ஓடுகிறவளையும் நோக்கி, 'என்ன நடந்தது?' என்று கேள்.
20 மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
20 Moab is put to shame, for it has been shattered. Wail and cry out! Declare by the Arnon that Moab is destroyed.
20 மோவாபு அழிக்கப்பட்டுச் சிறுமைக்குள்ளானது; அழுது புலம்புங்கள்; கூக்குரலிடுங்கள்; மோவாபு பாழடைந்துவிட்டது என அர்னோனில் அறிவியுங்கள்.
21 சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,
21 Judgment has come upon the high plain—upon Holon, Jahzah,f and Mephaath,
21 சமவெளி நாடுகள்மீது தண்டனைத் தீர்ப்பு வந்துவிட்டது; ஓலோன், யாகுசா, மேப்பாத்து,
22 தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,
22 upon Dibon, Nebo, and Beth-diblathaim,
22 தீபோன், நெபோ, பெத்திப்லத்தாயிம்,
23 கீரியாத்தாயீமின் மேலும், பேத்கமூலின்மேலும், பெத்தெமெயோனின்மேலும்,
23 upon Kiriathaim, Beth-gamul, and Beth-meon,
23 கிர்யத்தாயிம், பெத்-காமூல், பெத்-மெகோன்,
24 கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.
24 upon Kerioth, Bozrah, and all the towns of Moab, those far and near.
24 கெரியோத்து, போஸ்ரா மீதும் அருகிலும் தொலைவிலும் உள்ள மோவாபு நாட்டு நகர்கள் மீதும் வந்து விட்டது.
25 மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 The horn of Moab has been cut off, and his arm is broken,” declares the LORD.
25 மோவாபின் கொம்பு முறிந்து விட்டது; அதன் கையும் ஒடிந்து போயிற்று, என்கிறார் ஆண்டவர்.
26 அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.
26 “Make him drunk, because he has magnified himself against the LORD; so Moab will wallow in his own vomit, and he will also become a laughingstock.
26 மோவாபுக்குப் போதை வெறி ஏற்றுங்கள்; ஏனெனில் அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமையடித்துக் கொண்டது. அது, தான் வாந்தி எடுத்ததில் கிடந்து புரளும்; ஏளனத்துக்கு ஆளாகும்.
27 இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே.
27 Was not Israel your object of ridicule? Was he ever found among thieves? For whenever you speak of him you shake your head.
27 இஸ்ரயேல் உன் நகைப்புக்கு ஆளாகவில்லையா? அவனைப் பற்றி நீ பேசும்போதெல்லாம் உன் தலையை ஆட்டிப் பழித்தாயே? அவன் என்ன, திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவனா?
28 மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய் கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள்..
28 Abandon the towns and settle among the rocks, O dwellers of Moab! Be like a dove that nests at the mouth of a cave.
28 மோவாபின் குடிமக்களே, நகர்களை விட்டு வெளியேறுங்கள்; பாறைப் பகுதியில் குடியேறுங்கள். பாறையின் இடுக்குகளில் கூடுகட்டி வாழும் புறாவைப் போல் இருங்கள்.
29 அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.
29 We have heard of Moab’s pomposity, his exceeding pride and conceit, his proud arrogance and haughtiness of heart.
29 மோவாபின் செருக்கைப் பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்; பெரிதே அதன் இறுமாப்பு! அதன் ஆணவம், செருக்கு, அகங்காரம், அகந்தை பற்றி எல்லாம் கேள்வியுற்றோம்.
30 அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
30 I know his insolence,” declares the LORD, “but it is futile. His boasting is as empty as his deeds.
30 அதன் திமிரை நான் அறிவேன், என்கிறார் ஆண்டவர். அதன் தற்புகழ்ச்சி எல்லாம் பொய்; அதன் செயல்கள் யாவும் பொய்.
31 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
31 Therefore I will wail for Moab; I will cry out for all of Moab; I will moan for the men of Kir-heres.g
31 மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்; மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்; கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன்.
32 சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.
32 I will weep for you, O vine of Sibmah, more than I weep for Jazer. Your tendrils have extended to the sea;h they reach even to Jazer.i The destroyer has descended on your summer fruit and grape harvest.
32 சிப்மாவின் திராட்சைக் கொடியே, யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன். உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன; யாசேர் கடலை எட்டியுள்ளன. கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும் 'அழிப்போன்' பாய்ந்து வந்தான்.
33 பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல.
33 Joy and gladness are removed from the orchard and from the fields of Moab. I have stopped the flow of wine from the presses; no one treads them with shouts of joy; their shouts are not for joy.
33 செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன; திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்; மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை; மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை.
34 எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.
34 There is a cry from Heshbon to Elealeh; they raise their voices to Jahaz, from Zoar to Horonaim and Eglath-shelishiyah; for even the waters of Nimrim have dried up.
34 எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது; சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.
35 மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
35 In Moab, declares the LORD, I will bring an end to those who make offerings on the high places and burn incense to their gods.
35 மோவாபின் தொழுகைமேடுகளில் தன் தெய்வங்களுக்குப் பலி செலுத்தித் தூபம் காட்டுபவனை நான் அழித்து விடுவேன், என்கிறார் ஆண்டவர்.
36 ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
36 Therefore My heart laments like a flute for Moab; it laments like a flute for the men of Kir-heres, because the wealth they acquired has perished.
36 எனவே, என் இதயம் புல்லாங்குழல் போன்று மோவாபுக்காகப் புலம்புகிறது; என் இதயம் புல்லாங்குழல் போன்று கீர்கெரேசின் மனிதருக்காகச் சோகப் பண் இசைக்கிறது. ஏனெனில் அவர்கள் சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் அழிந்து விட்டன.
37 தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு.
37 For every head is shaved and every beard is clipped; on every hand is a gash, and around every waist is sackcloth.
37 அவர்கள் அனைவருடைய தலைகளும் மழிக்கப்பட்டுள்ளன; தாடிகள் அகற்றப்பட்டுள்ளன. எல்லாக் கைகளிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. இடைகளில் சாக்கு உடை காணப்படுகிறது.
38 மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38 On all the rooftops of Moab and in the public squares, everyone is mourning; for I have shattered Moab like an unwanted jar,” declares the LORD.
38 மோவாபின் வீட்டு மேல்தளங்கள் எல்லாவற்றிலும், அதன் தெருக்களிலும் ஒரே புலம்பல்; ஏனெனில் யாரும் பொருட்படுத்தாத பாத்திரத்தைப் போன்று மோவாபை நான் உடைத்தெறிந்தேன், என்கிறார் ஆண்டவர்.
39 மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும்
39 “How shattered it is! How they wail! How Moab has turned his back in shame! Moab has become an object of ridicule and horror to all those around him.”
39 இப்படி அது நொறுக்கப்பட்டுக் கிடக்கின்றதே! இப்படி அவர்கள் புலம்புகின்றார்களே! இப்படி மோவாபு வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றதே! மோவாபு தன்னைச் சுற்றியிருப்போர் எல்லார் முன்னும் ஏளனத்துக்கும் பேரச்சத்திற்கும் உள்ளாயிற்று.
40 இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
40 For this is what the LORD says: “Behold, an eagle swoops down and spreads his wings against Moab.
40 ஆண்டவர் கூறுவது இதுவே; ஒருவன் கழுகைப்போல் பாய்ந்து வருவான்; மோவாபின்மீது தன் இறக்கைகளை விரிப்பான்.
41 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும்.
41 Kirioth has been taken, and the strongholds seized. In that day the heart of Moab’s warriors will be like the heart of a woman in labor.
41 நகர்கள் பிடிபடும்; கோட்டைகள் கைப்பற்றப்படும். அந்நாளில் மோவாபிய படைவீரர்களின் இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.
42 மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும்.
42 Moab will be destroyed as a nation because he vaunted himself against the LORD.
42 மோவாபு அழிக்கப்படும்; இனி அது ஒரு மக்களினமாய் இராது. அது ஆண்டவருக்கு எதிராகப் பெருமை அடித்துக் கொண்டது.
43 மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
43 Terror and pit and snare await you, O dweller of Moab,” declares the LORD.
43 மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
44 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
44 “Whoever flees the panic will fall into the pit, and whoever climbs from the pit will be caught in the snare. For I will bring upon Moab the year of their punishment,” declares the LORD.
44 திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்; படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
45 வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினிஜுவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப் தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.
45 “Those who flee will stand helpless in Heshbon’s shadow, because fire has gone forth from Heshbon and a flame from within Sihon. It devours the foreheads of Moab and the skulls of the sons of tumult.
45 தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில் வலுவிழந்து நிற்கின்றனர்; எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று; சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது; மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று; கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று.
46 மோவாபே உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள்.
46 Woe to you, O Moab! The people of Chemosh have perished; for your sons have been taken into exile and your daughters have gone into captivity.
46 மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கெமோசின் மக்கள் அழிந்துபோயினர்; உன் புதல்வர் நாடு கடத்தப்பட்டனர்; உன் புதல்வியரும் நாடுகடத்தப்பட்டனர்.
47 ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.
47 Yet in the latter days I will restore Moab from captivity,j” declares the LORD. Here ends the judgment on Moab.
47 ஆயினும், இறுதி நாள்களில் அடிமைத்தனத்தினின்று மோவாபை நான் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர். மோவாபின் மீதான தண்டனைத் தீர்ப்பு இத்துடன் முற்றிற்று.3
3 எசா 15:1-16:14; 25:10-12; எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a The Hebrew for Heshbon sounds like the Hebrew for plot .
2 b The name of the Moabite town Madmen sounds like the Hebrew for silenced .
4 c Hebrew; LXX her cries are heard as far away as Zoar
6 d Or like a wild donkey or like Aroer
9 e Or Give wings to Moab, for she would fly away
21 f Jahzah is a variant of Jahaz ; see verse 34.
31 g Kir-heres is a variant of Kir-hareseth ; also in verse 36; see Isaiah 16:7.
32 h Probably the Dead Sea
32 i Two Hebrew manuscripts and LXX; most Hebrew manuscripts to the Sea of Jazer
47 j Or restore the fortunes of Moab
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.