பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 49 | Jeremiah 49
Judgment on the Ammonites
1 அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்?
1 Concerning the Ammonites, this is what the LORD says: “Has Israel no sons? Is he without heir? Why then has Milcoma taken possession of Gad? Why have his people settled in their cities?
1 அம்மோனியரைக் குறித்து, ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேலுக்குப் புதல்வரே இல்லையா? அதற்கு வழிமரபே கிடையாதா? மில்க்கோம்* காத்தைக் கைப்பற்றியது ஏன்? அவன் மக்கள் அதன் நகர்களில் குடியிருப்பது ஏன்?1
1 - 'அவர்களின் அரசன்' என்பது எபிரேய பாடம்.
2 ஆகையால், இதோ நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 Therefore, behold, the days are coming, declares the LORD, when I will sound the battle cry against Rabbah of the Ammonites. It will become a heap of ruins, and its villages will be burned. Then Israel will drive out their dispossessors, says the LORD.
2 இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அம்மோனியரின் இராபாவுக்கு எதிராகப் போர்முரசு ஒலிக்கச் செய்வேன். அது பாழடைந்த குவியல் ஆகும்; அதன் ஊர்கள்* தீக்கிரையாகும்; தன்னைக் கைப்பற்றியோரை இஸ்ரயேல் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.2
2 - 'புதல்வியர்' என்பது எபிரேய பாடம்.
3 எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப் போவான்.
3 Wail, O Heshbon, for Ai has been destroyed; cry out, O daughters of Rabbah! Put on sackcloth and mourn; run back and forth within your walls, for Milcom will go into exile together with his priests and officials.
3 எஸ்போனே, புலம்பியழு; ஆயி பாழடைந்துவிட்டது. இராபாவின் புதல்வியரே ஓலமிடுங்கள்; சாக்கு உடை உடுத்திக்கொள்ளுங்கள்; ஒப்பாரி வையுங்கள்; மதில்களுக்கிடையே அங்குமிங்கும் ஓடுங்கள்; மில்கோம் நாடுகடத்தப்படுவான். அவன் அர்ச்சகர்களும் தலைவர்களும் அவனோடு செல்வார்கள்.
4 எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமை பாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்கு கரைந்துபோகிறது.
4 Why do you boast of your valleys—your valleys so fruitful,b O faithless daughter? You trust in your riches and say, ‘Who can come against me?’
4 பற்றுறுதியற்ற மகளே, உன் பள்ளத்தாக்குகள் பற்றி, உன் செழிப்பான பள்ளத்தாக்குகள் பற்றி, பெருமையடிப்பானேன்? உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்கிறாய்; 'எனக்கு எதிராய் எவன் வருவான்?' எனச் சொல்லிக்கொள்கின்றாய்.
5 இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை.
5 Behold, I am about to bring terror upon you, declares the Lord GOD of Hosts, from all those around you. You will each be driven headlong, with no one to regather the fugitives.
5 உன்னைச் சுற்றியிருப்போர் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் வருவிப்பேன், என்கிறார் படைகளின் ஆண்டவராகிய தலைவர். நீங்கள் எல்லாரும் தலை தெறிக்க ஓடுமாறு விரட்டியடிக்கப்படுவீர்கள்; தப்பியோடுவோரை ஒன்று சேர்க்க எவரும் இரார்.
6 அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 Yet afterward I will restore the Ammonites from captivity,c” declares the LORD.
6 பின்னர், அம்மோனியரின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொடுப்பேன், என்கிறார் ஆண்டவர்.3
Judgment on Edom (Obadiah 1:1–14)
7 ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ?
7 Concerning Edom, this is what the LORD of Hosts says: “Is there no longer wisdom in Teman? Has counsel perished from the prudent? Has their wisdom decayed?
7 ஏதோமைக் குறித்து, படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; தேமானில் ஞானம் அற்றுப்போயிற்றா? மதி நுட்பமுடையோரிடமிருந்து அறிவுரை ஒழிந்துபோயிற்றா? அவர்களின் ஞானம் மறைந்து போயிற்றா?
8 தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன் மேல் வரப்பண்ணுவேன்.
8 Turn and run! Lie low, O dwellers of Dedan, for I will bring disaster on Esau at the time I punish him.
8 தெதோன் குடிமக்களே, திரும்புங்கள், தப்பியோடுங்கள்; பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள்; நான் ஏசாவைத் தண்டிக்கும் அவனது காலத்தில் அழிவை அவன்மீது கொண்டுவருவேன்.
9 திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ?
9 If grape gatherers came to you, would they not leave some gleanings? Were thieves to come in the night, would they not steal only what they wanted?
9 திராட்சைப் பழம் பறிப்போர் உன்னிடம் வந்தால், விடுபட்ட பழங்கள் எஞ்சியிராவோ? இரவில் திருடர் வருவாராயின், தேவைக்குமேல் திருடமாட்டார் அன்றோ?
10 நானோ ஏசாவை வெறுமையாக்கி அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான்.
10 But I will strip Esau bare; I will uncover his hiding places, and he will be unable to conceal himself. His descendants will be destroyed along with his relatives and neighbors, and he will be no more.
10 நானோ ஏசாவை வெறுமையாக்கிவிட்டேன்; அவனுடைய பதுங்கிடங்களை வெளிப்படுத்திவிட்டேன். இனி அவனால் மறைந்திருக்க முடியாது. அவன் வழிமரபினர், சகோதரர், அடுத்திருப்பார் அழிக்கப்படுவர்; அவன் முற்றிலும் அழிந்து போவான்.
11 திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக.
11 Abandon your orphans; I will preserve their lives. Let your widows trust in Me.”
11 அனாதைகளைப்பற்றிக் கவலை கொள்ளாதே. நான் அவர்களை வாழவைப்பேன். உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்.
12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய்.
12 For this is what the LORD says: “If those who do not deserve to drink the cup must drink it, can you possibly remain unpunished? You will not go unpunished, for you must drink it too.
12 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: நியாயப்படி துன்பக்கலத்தில் குடிக்கத் தேவையில்லாதவர்களே குடிக்கவேண்டியிருந்தது என்றால், நீ எவ்வாறு தண்டனைக்குத் தப்பமுடியும்? இல்லை, நீ தண்டனை பெறாது போகமாட்டாய்; நீ துன்பக்கலத்தில் குடித்தே தீருவாய்.
13 போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
13 For by Myself I have sworn, declares the LORD, that Bozrah will become a desolation, a disgrace, a ruin, and a curse, and all her cities will be in ruins forever.”
13 ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: என்மேல் ஆணை! பேரச்சம், கண்டனம், அழிவு, பழிப்பு ஆகியவற்றுக்குப் போஸ்ரா ஆளாகும்; அதன் நகர்கள் அனைத்தும் என்றென்றும் பாழாய்க் கிடக்கும்.
14 நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன்.
14 I have heard a message from the LORD; an envoy has been sent to the nations: “Assemble yourselves to march against her! Rise up for battle!”
14 நான் ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி கேட்டேன். 'ஒன்றுகூடுங்கள், அதனை எதிர்க்க வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்' என்று சொல்லுமாறு, மக்களினத்தார்க்கு ஒரு தூதன் அனுப்பப்பட்டுள்ளான்.
15 இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டைபண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார்.
15 “For behold, I will make you small among nations, despised among men.
15 பார்! மக்களினத்தாருள் உன்னைச் சிறியதாய் ஆக்குவேன்; மாந்தர்தம் இகழ்ச்சிக்கு நீ ஆளாவாய்.
16 கன்மலை வெடிப்புகளில் வாசம் பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
16 The terror you cause and the pride of your heart have deceived you, O dwellers in the clefts of the rocks,d O occupiers of the mountain summit. Though you elevate your nest like the eagle, even from there I will bring you down,” declares the LORD.
16 பாறை இடுக்குகளில் வாழ்பவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருப்பவனே, நீ விளைவித்த அச்சமும் உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை ஏமாற்றிவிட்டன; நீ கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் கட்டினாலும், நான் உன்னை அங்கிருந்து கீழே தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.
17 அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான்.
17 “Edom will become an object of horror. All who pass by will be appalled and will scoff at all her wounds.
17 ஏதோம் பேரச்சம் தரக்கூடியதாய் மாறும். அதன் வழியே போகிறவன் எவனும் அதிர்ச்சியடைவான்; அதன் அழிவு கண்டு ஏளனம் செய்வான்.
18 சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.
18 As Sodom and Gomorrah were overthrown along with their neighbors,” says the LORD, “no one will dwell there; no man will abide there.
18 சோதோம், கொமோராவும் அவற்றின் அண்டை நகர்களும் வீழ்த்தப்பட்டபொழுது நிகழ்ந்ததுபோல், ஏதோமில் ஒருவனும் குடியிருக்கமாட்டான்; எவனும் தங்கமாட்டான், என்கிறார் ஆண்டவர்.4
19 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவது போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
19 Behold, one will come up like a lion from the thickets of the Jordan to the watered pasture. For in an instant I will chase Edom from her land. Who is the chosen one I will appoint for this? For who is like Me, and who can challenge Me? What shepherd can stand against Me?”
19 யோர்தானை அடுத்த காட்டினின்று சிங்கம் செழிப்பான மேய்ச்சல் நிலத்திற்கு வருவது போல், நான் அவர்களை அங்கிருந்து திடீரென விரட்டியடிப்பேன்; நான் தேர்ந்துகொள்பவனை அவனுக்குத் தலைவன் ஆக்குவேன். ஏனெனில் எனக்கு நிகர் யார்? என்னைத் தட்டிக் கேட்பவன் யார்? எந்தத் தலைவன் என்னை எதிர்த்து நிற்பான்?
20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார்.
20 Therefore hear the plans that the LORD has drawn up against Edom and the strategies He has devised against the people of Teman: Surely the little ones of the flock will be dragged away; certainly their pasture will be made desolate because of them.e
20 எனவே ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டத்திற்கும், தேமானின் குடிகளுக்கு எதிராக அவர் எடுத்துள்ள முடிவுகளுக்கும் செவிகொடுங்கள்; மந்தையில் மிகச் சிறிய ஆடுகளும் திண்ணமாய் இழுத்துச் செல்லப்படும்; ஆட்டுப்பட்டி அதைக் கண்டு உறுதியாய்த் திகைப்படையும்.
21 அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும்.
21 At the sound of their fall the earth will quake; their cry will resound to the Red Sea.f
21 அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
22 இதோ, ஒரு கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராகிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.
22 Look! An eagle will soar and swoop down, spreading its wings over Bozrah. In that day the hearts of Edom’s mighty men will be like the heart of a woman in labor.
22 இதோ! கழுகைப் போல் ஒருவன் வானளாவப் பறந்து, கீழ்நோக்கிப் பாய்வான்; போஸ்ரா மேல் தன் இறக்கைகளை விரிப்பான். அந்நாளில் ஏதோமின் படைவீர்களுடைய இதயம் பேறுகாலப் பெண்ணின் இதயத்தைப்போல் துடிக்கும்.5
5 எசா 34:5-17; 63:1-6; எசே 25:12-14; 35:1-15; ஆமோ 1:13-15; ஒப 1-14; மலா 1:2-5.
Judgment on Damascus (Isaiah 17:1–14)
23 தமஸ்குவைக் குறித்துச் சொல்வது; ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்து போகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை.
23 Concerning Damascus: “Hamath and Arpad are put to shame, for they have heard a bad report; they are agitated like the sea;g their anxiety cannot be calmed.
23 தமஸ்கு குறித்து: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலக்கம் அடைந்துள்ளன; கெட்ட செய்தியை அவை கேள்வியுற்றன; அவை அச்சத்தால் நடுங்குகின்றன; கடலைப்போல் தத்தளிக்கின்றன; அவற்றுக்கு அமைதியே கிடையாது.
24 தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப்பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது.
24 Damascus has become feeble; she has turned to flee. Panic has gripped her; anguish and pain have seized her like a woman in labor.
24 தமஸ்கு தளர்ந்துவிட்டது; தப்பியோடப் பார்க்கின்றது; அதனைக் கிலி பிடித்துக்கொண்டது; வேதனை, துயரத்தின் பிடியில் பேறுகாலப் பெண் தவிப்பதுபோல் அதுவும் தவிக்கின்றது.
25 சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்ப விடப்படாமற்போயிற்றே!
25 How is the city of praise not forsaken, the town that brings Me joy?
25 புகழ் பெற்ற நகர் — மகிழ்ச்சி பொங்கும் நகர் — இப்படிக் கைவிடப்பட்டுக் கிடக்கிறதே!
26 ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
26 For her young men will fall in the streets, and all her warriors will be silenced in that day,” declares the LORD of Hosts.
26 அதன் இளைஞர்கள் தெருக்களில் வீழ்ந்து மடிவார்கள். அதன் படைவீரர்கள் அனைவரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள், என்கிறார் படைகளின் ஆண்டவர்.
27 தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.
27 “I will set fire to the walls of Damascus; it will consume the fortresses of Ben-hadad.”
27 தமஸ்குவின் மதில்களில் தீவைப்பேன்; பென்அதாதின் கோட்டைகளை அது சுட்டெரிக்கும்.6
6 எசா 17:1-3; ஆமோ 1:3-5; செக் 9:1.
Judgment on Kedar and Hazor
28 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப்புத்திரரைப் பாழாக்குங்கள்.
28 Concerning Kedar and the kingdoms of Hazor, which Nebuchadnezzar king of Babylon defeated, this is what the LORD says: “Rise up, advance against Kedar, and destroy the people of the east!
28 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் வீழ்த்திய கேதார், ஆட்சோர் அரசுகள் பற்றி, ஆண்டவர் கூறுவது இதுவே; புறப்படுங்கள், கேதாரை எதிர்த்துச் செல்லுங்கள்; கீழ்த்திசை மக்களை அழித்தொழியுங்கள்.
29 அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.
29 They will take their tents and flocks, their tent curtains and all their goods. They will take their camels for themselves. They will shout to them: ‘Terror is on every side!’
29 அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிபடும்; கூடாரத் துணிகளும் மற்ற எல்லாப் பொருள்களும் கைப்பற்றப்படும்; அவர்களின் ஒட்டகங்களை அவர்களிடமிருந்து ஓட்டிச்செல்வர்; "எப்பக்கமும் ஒரே திகில்" என மனிதர் ஓலமிடுவர்.
30 காத்சோரின் குடிகளே, ஓடி தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.
30 Run! Escape quickly! Lie low, O residents of Hazor,” declares the LORD, “for Nebuchadnezzar king of Babylon has drawn up a plan against you; he has devised a strategy against you.
30 ஆட்சோரின் குடிமக்களே! தப்பியோடுங்கள், தூரமாகச் சென்று பள்ளங்களில் பதுங்கிக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியுள்ளான்; உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்துள்ளான்.
31 அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அதற்கு வாசல்களுமில்லை, தாழ்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.
31 Rise up, advance against a nation at ease, one that dwells securely,” declares the LORD. “They have no gates or bars; they live alone.
31 புறப்படுங்கள்; கதவுகளோ தாழ்ப்பாள்களோ இன்றி அமைதியோடும் பாதுகாப்போடும் வாழும் மக்களினத்தார்க்கு எதிராக — தனித்து வாழும் மக்களினத்தார்க்கு எதிராக முன்னேறிச் செல்லுங்கள், என்கிறார் ஆண்டவர்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடு மாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
32 Their camels will become plunder, and their large herds will be spoil. I will scatter to the wind in every direction those who shave their temples; I will bring calamity on them from all sides,” declares the LORD.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும்; அவர்களின் எண்ணற்ற மந்தைகள் பறிமுதலாகும்; முன்தலையை மழித்துக்கொள்ளும் மக்களைக் காற்றில் பறக்கவிடுவேன்; எப்பக்கமுமிருந்தும் அவர்கள்மேல் அழிவைக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.
33 ஆத்தோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே, தங்குவதுமில்லையென்கிறார்.
33 “Hazor will become a haunt for jackals,h a desolation forever. No one will dwell there; no man will abide there.”
33 ஆட்சோர், குள்ளநரிகளின் உறைவிடம் ஆகும்; என்றும் பாழடைந்து கிடக்கும்; அங்கு எவரும் குடியிருக்கமாட்டார்; எவரும் அதில் தங்கவும் மாட்டார்.
Judgment on Elam
34 யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
34 This is the word of the LORD that came to Jeremiah the prophet concerning Elam at the beginning of the reign of Zedekiah king of Judah.
34 யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஏலாமைக் குறித்து இறைவாக்கினர் ஏரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
35 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
35 This is what the LORD of Hosts says: “Behold, I will shatter Elam’s bow, the mainstay of their might.
35 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன்.
36 வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
36 I will bring the four winds against Elam from the four corners of the heavens, and I will scatter them to all these winds. There will not be a nation to which Elam’s exiles will not go.
36 வானத்தின் நான்கு திசைகளினின்று நால்வகைக் காற்றுகளை ஏலாம்மீது வரவழைப்பேன்; இந்த எல்லாக் காற்றுகளினாலும் அவர்களைச் சிதறடிப்பேன். ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர் சென்றடையாத நாடே இராது.
37 நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாகுமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
37 So I will shatter Elam before their foes, before those who seek their lives. I will bring disaster upon them, even My fierce anger,” declares the LORD. “I will send out the sword after them until I finish them off.
37 ஏலாமின் எதிரிகள் முன்னும், அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும் நான் அதை நடுங்கச்செய்வேன்; அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன். என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும், என்கிறார் ஆண்டவர். அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை, அவர்களைப் பின்தொடருமாறு வாளை அனுப்பி வைப்பேன்.
38 என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
38 I will set My throne in Elam, and destroy its king and officials,” declares the LORD.
38 ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்; அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
39 ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 “Yet in the last days, I will restore Elam from captivity,i” declares the LORD.
39 ஆயினும் ,இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Or their king ; Milcom is a variant of Molech ; also in verse 3; see Leviticus 18:21 and 1 Kings 11:7.
4 b Or your valleys flowing
6 c Or restore the fortunes of the Ammonites
16 d Or of Sela
20 e Or their pasture will be appalled at their fate
21 f Or the Sea of Reeds
23 g Hebrew on the sea or by the sea
33 h Or serpents or dragons
39 i Or restore the fortunes of Elam
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.