பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 51 | Jeremiah 51
Judgment on Babylon
1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி,
1 This is what the LORD says: “Behold, I will stir up against Babylon and against the people of Leb-kamaia the spirit of a destroyer.
1 ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனுக்கும் கல்தேயாவின் குடிகளுக்கும் எதிராக அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.
2 தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள்.
2 I will send strangers to Babylon to winnow her and empty her land; for they will come against her from every side in her day of disaster.
2 புடைப்போரைப் பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்; அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்; தண்டனை நாளில் அவர்கள் எப்பக்கத்தினின்றும் அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்; அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.
3 வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள்.
3 Do not let the archer bend his bow or put on his armor. Do not spare her young men; devote all her army to destruction!b
3 வில்வீரன் வில்லை நாணேற்ற விடாதீர்கள்! தன் கவசத்தை அணிந்து நிற்க விடாதீர்கள்! அதன் இளைஞர்கள் யாரையும் விட்டுவைக்காதீர்கள் அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
4 குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள்.
4 And they will fall slain in the land of the Chaldeans,c and pierced through in her streets.
4 கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில் வீழ்ந்து கிடப்பர். காயமடைந்தோர் அதன் தெருக்களில் கிடப்பர்.
5 அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை.
5 For Israel and Judah have not been abandoned by their God, the LORD of Hosts, though their land is full of guilt before the Holy One of Israel.”
5 தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இஸ்ரயேலையும் யூதாவையும் கைவிட்டுவிடவில்லை. இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக் கல்தேயரின் நாடு குற்றங்களால் நிறைந்துள்ளது.
6 நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
6 Flee from Babylon! Escape with your lives! Do not be destroyed in her punishment. For this is the time of the LORD’s vengeance; He will pay her what she deserves.
6 பாபிலோன் நடுவினின்று தப்பியோடுங்கள்; ஒவ்வொருவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்; அதன் குற்றங்களுக்காக நீங்கள் அழிந்து போகாதீர்கள்; இது ஆண்டவர் பழிவாங்கும் காலம், அவரே அதற்குத் தகுந்த தண்டனை வழங்குவார்;
7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.
7 Babylon was a gold cup in the hand of the LORD, making the whole earth drunk. The nations drank her wine; therefore the nations have gone mad.
7 பாபிலோன் ஆண்டவரின் கையில் பொற்கிண்ணம்போல் இருந்தது; அது மண்ணுலகு முழுவதற்கும் போதை ஊட்டியது; மக்களினங்கள் அதன் திராட்சை இரசத்தைப் பருகின; நாடுகள் வெறிகொண்டன.1
1 திவெ 17:2-4; 18:3.
8 பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
8 Suddenly Babylon has fallen and been shattered. Wail for her; get her balm for her pain; perhaps she can be healed.
8 பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று; அதற்காகப் புலம்பியழுங்கள்; அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்; ஒருவேளை அது நலம் பெறலாம்!
9 பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.
9 “We tried to heal Babylon, but she could not be healed. Abandon her! Let each of us go to his own land, for her judgment extends to the sky and reaches to the clouds.”
9 நாங்கள் பாபிலோனைக் குணப்படுத்த முயன்றோம்; அதுவோ நலம் அடைவதாயில்லை! அதைக் கைவிட்டுவிடுங்கள்; நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த நாட்டுக்குப் போவோம்; பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்பு விண்ணுலகை எட்டியுள்ளது; அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.2
2 திவெ 18:5.
10 கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.
10 “The LORD has brought forth our vindication; come, let us tell in Zion what the LORD our God has accomplished.”
10 ஆண்டவர் நமக்கு நீதி வழங்கியுள்ளார்; வாருங்கள்! நம் கடவுளான ஆண்டவரின் செயலைச் சீயோனில் பறைசாற்றுவோம்.
11 அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
11 Sharpen the arrows! Fill the quivers!d The LORD has aroused the spirit of the kings of the Medes, because His plan is aimed at Babylon to destroy her, for it is the vengeance of the LORD—vengeance for His temple.
11 அம்புகளைக் கூர்மையாக்குங்கள்; கேடயங்களைக் கையிலெடுங்கள்; ஆண்டவர் மேதிய அரசர்களைக் கிளர்ந்தெழச் செய்துள்ளார்; பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்; இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டு ஆண்டவர் பழிவாங்குவார்.
12 பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார்.
12 Raise a banner against the walls of Babylon; post the guard; station the watchmen; prepare the ambush. For the LORD has both devised and accomplished what He spoke against the people of Babylon.
12 பாபிலோன் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள்; காவலை வலுப்படுத்துங்கள்; இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்; கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்; பாபிலோனின் குடிகளுக்கு எதிராக ஆண்டவர் உரைத்திருந்ததைத் தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.
13 திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது.
13 You who dwell by many waters, rich in treasures, your end has come; the thread of your life is cut.
13 நீர்வளம் கொண்டவனே! செல்வம் மிகுந்தவனே! உனக்கு முடிவு வந்துவிட்டது; உன் வாழ்நாளின் இழை துண்டிக்கப்பட்டுவிட்டது.3
3 திவெ 17:1.
14 மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப் போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம் பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.
14 The LORD of Hosts has sworn by Himself: “Surely I will fill you up with men as with locusts, and they will shout in triumph over you.”
14 வெட்டுக்கிளிகளைப் போன்று எண்ணற்ற மனிதரால் உன்னைத் திண்ணமாய் நிரப்புவேன்; அவர்கள் உனக்கு எதிராக வெற்றி முழக்கம் செய்வார்கள், என்று படைகளின் ஆண்டவர் தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.
Praise to the God of Jacob (Isaiah 25:1–12)
15 அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார்.
15 The LORD made the earth by His power; He established the world by His wisdom and stretched out the heavens by His understanding.
15 அவரே தம் ஆற்றலால் மண்ணுலகைப் படைத்தார் ; தம் ஞானத்தால் பூவுலகை நிலைநாட்டினார்; தம் கூர்மதியால் விண்ணுலகை விரித்தார்.
16 அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார்.
16 When He thunders, the waters in the heavens roar; He causes the clouds to rise from the ends of the earth. He generates the lightning with the rain and brings forth the wind from His storehouses.
16 அவர் குரல் கொடுக்க, வானத்து நீர்த்திரள் முழக்கமிடுகின்றது; மண்ணுலகின் எல்லையினின்று முகில்கள் எழச் செய்கின்றார்; மழை பொழியுமாறு மின்னல் வெட்டச் செய்கிறார்; தம் கிடங்குகளினின்று காற்று வீசச்செய்கிறார்.
17 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
17 Every man is senseless and devoid of knowledge; every goldsmith is put to shame by his idols. For his molten images are a fraud, and there is no breath in them.
17 மனிதர் யாவரும் மூடர்கள், அறிவிலிகள்; கொல்லர் எல்லாரும் தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் பொய்யானவை; அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.
18 அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்..
18 They are worthless, a work to be mocked. In the time of their punishment they will perish.
18 அவை பயனற்றவை, ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்; தம் தண்டனையின் காலத்தில் அவை அழிந்துவிடும்.
19 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
19 The Portion of Jacob is not like these, for He is the Maker of all things, and of the tribe of His inheritance—the LORD of Hosts is His name.
19 யாக்கோபின் பங்காய் இருப்பவரோ இவற்றைப் போன்றவர் அல்லர்; அவரே அனைத்தையும் உருவாக்கியவர்; தம் உரிமைச் சொத்தாகிய இனத்தை உருவாக்கியவரும் அவரே; படைகளின் ஆண்டவர் என்பது அவர் பெயராகும்.
Babylon’s Punishment
20 நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
20 “You are My war club, My weapon for battle. With you I shatter nations; with you I bring kingdoms to ruin.
20 நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்; நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.
21 உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன்.
21 With you I shatter the horse and rider; with you I shatter the chariot and driver.
21 உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு தேரையும் தேரோட்டியையும் நொறுக்குவேன்.
22 உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன்.
22 With you I shatter man and woman; with you I shatter the old man and the youth; with you I shatter the young man and the maiden.
22 உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;
23 உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்.
23 With you I shatter the shepherd and his flock; with you I shatter the farmer and his oxen; with you I shatter the governors and officials.
23 உன்னைக்கொண்டு ஆயனையும் அவனது மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவன் காளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ஆளுநர்களையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்;
24 பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
24 Before your very eyes I will repay Babylon and all the dwellers of Chaldeae for all the evil they have done in Zion,” declares the LORD.
24 பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர்.
25 இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 “Behold, I am against you, O destroying mountain, you who devastate the whole earth, declares the LORD. I will stretch out My hand against you; I will roll you over the cliffs and turn you into a charred mountain.
25 அழிவைக் கொணரும் மலையே, மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே, நான் உனக்கு எதிராய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர். நான் உனக்கு எதிராய் என் கையை நீட்டுவேன்; உன்னைப் பாறை முகடுகளினின்று உருட்டிவிடுவேன்; உன்னை எரிந்துபோன மலை ஆக்குவேன்.
26 மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
26 No one shall retrieve from you a cornerstone or a foundation stone, because you will become desolate forever,” declares the LORD.
26 மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ, உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது; நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய், என்கிறார் ஆண்டவர்.
27 தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.
27 “Raise a banner in the land! Blow the ram’s horn among the nations! Prepare the nations against her. Summon the kingdoms against her—Ararat, Minni, and Ashkenaz. Appoint a captain against her; bring up horses like swarming locusts.
27 மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்; மக்களினங்கள் நடுவில் எக்காளம் ஊதுங்கள்; அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்; அதனை எதிர்க்குமாறு அரராத்து, மின்னி, அஸ்கனாசு ஆகிய அரசுகளுக்கு அழைப்பு விடுங்கள்; அதற்கு எதிராய்த் தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள். வெட்டுக்கிளிக் கூட்டம்போல் குதிரைகளைக் கொணருங்கள்.
28 மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்.
28 Prepare the nations for battle against her—the kings of the Medes, their governors and all their officials, and all the lands they rule.
28 அதனை எதிர்த்துப் போரிட மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்; மேதிய மன்னர்கள், ஆளுநர்கள், அதிகாரிகளையும் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.
29 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும்.
29 The earth quakes and writhes because the LORD’s intentions against Babylon stand: to make the land of Babylon a desolation, without inhabitant.
29 மண்ணுலகு நடுநடுங்கி, வேதனையால் பதைபதைக்கிறது; பாபிலோன் நாட்டை மக்கள் குடியிருப்பில்லாத பாழ்நிலம் ஆக்கும் பொருட்டு அதற்கு எதிராக ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள் நிலைக்கும்.
30 பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது.
30 The warriors of Babylon have stopped fighting; they sit in their strongholds. Their strength is exhausted; they have become like women. Babylon’s homes have been set ablaze, the bars of her gates are broken.
30 பாபிலோனின் படைவீரர்கள் போரிடுவதைக் கைவிட்டார்கள்; அவர்கள் தங்கள் கோட்டைகளுக்குள்ளேயே தங்கியிருக்கிறார்கள்; அவர்களின் வலிமை குன்றிப்போயிற்று. அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள். அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின; அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.
31 கடையாந்திர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும்; துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க,
31 One courier races to meet another, and messenger follows messenger, to announce to the king of Babylon that his city has been captured from end to end.
31 ❮31-32❯ஓர் அஞ்சற்காரன் அடுத்த அஞ்சற்காரனைச் சந்திக்க ஓடுகின்றான்; ஒரு தூதன் அடுத்த தூதனைச் சந்திக்க ஓடுகின்றான்; "நகர் எல்லாப் பக்கங்களிலும் கைப்பற்றப்பட்டது; கடவுத் துறைகள் பிடிப்பட்டன; கோட்டை, கொத்தளங்கள் தீக்கிரையாயின; படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்", எனப் பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்க அவர்கள் ஓடுகிறார்கள்.
32 அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான்.
32 The fords have been seized, the marshes set on fire, and the soldiers are terrified.”
33 பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப்போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
33 For this is what the LORD of Hosts, the God of Israel, says: “The Daughter of Babylon is like a threshing floor at the time it is trampled. In just a little while her harvest time will come.”
33 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; புணையடிக்கும் காலக் களத்துக்கு மகள் பாபிலோன் ஒப்பாவாள்; இன்றும் சிறிது காலத்தில் அதன் அறுவடைக் காலம் வரும்.
34 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான்.
34 “Nebuchadnezzar king of Babylon has devoured me; he has crushed me. He has set me aside like an empty vessel; he has swallowed me like a monster; he filled his belly with my delicacies and vomited me out.f
34 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் என்னை விழுங்கிவிட்டான்; அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்; வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்; அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்; என் அருஞ்சுவை உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான். என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான்.
35 எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன் மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.
35 May the violence done to me and to my flesh be upon Babylon,” says the dweller of Zion. “May my blood be on the dwellers of Chaldea,” says Jerusalem.
35 "எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்" என்று சீயோன் குடிகள் கூறட்டும்; "என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்," என்று எருசலேம் சொல்லட்டும்.
36 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன்.
36 Therefore this is what the LORD says: “Behold, I will plead your case and take vengeance on your behalf; I will dry up her sea and make her springs run dry.
36 எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்; உன் பொருட்டுப் பழிவாங்குவேன்; அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்; அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.
37 அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும்.
37 Babylon will become a heap of rubble, a haunt for jackals,g an object of horror and scorn, without inhabitant.
37 பாபிலோன் பாழ்மேடு ஆகும்; குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும்.
38 ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப் போலக் கெர்ச்சித்து, சிங்கங்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
38 They will roar together like young lions; they will growl like lion cubs.
38 அவர்கள் சிங்கங்களைப்போல் சேர்ந்து கர்ச்சிப்பார்கள்; சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.
39 அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39 While they are flushed with heat, I will serve them a feast, and I will make them drunk so that they may revel; then they will fall asleep forever and never wake up, declares the LORD.
39 அவர்கள் கொதித்தெழுந்தபொழுது நான் அவர்களுக்கு விருந்து அளிப்பேன்; அவர்கள் மயங்கி மகிழுமாறு போதையுறும்வரை குடிக்கச் செய்வேன்; அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்; துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
40 அவர்களை ஆட்டுக்குட்டிகளைப் போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன்.
40 I will bring them down like lambs to the slaughter, like rams with male goats.
40 செம்மறிக்குட்டிகள், ஆட்டுக்கிடாய்கள், வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று, நான் அவர்களைக் கொலைக் களத்திற்குக் கொண்டுபோவேன்.
41 சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரம்மிப்பானது எப்படி?
41 How Sheshach has been captured! The praise of all the earth has been seized. What a horror Babylon has become among the nations!
41 சேசாக்கு இப்படிப் பிடிபட்டுப் போயிற்றே! மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம் இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே! மக்களினங்கள் நடுவே பாபிலோன் பாழடைந்துபோனது எவ்வாறு?
42 சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது.
42 The sea has come up over Babylon; she is covered in turbulent waves.
42 கடலானது பாபிலோன்மீது கொந்தளித்து வந்துள்ளது; ஆர்ப்பரிக்கும் அலைகளால் அது மூடப்பட்டுவிட்டது.
43 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று.
43 Her cities have become a desolation, a dry and arid land, a land where no one lives, where no son of man passes through.
43 அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன; அது வறண்ட பாலைநிலமாய் மாறிவிட்டது; அந்நாட்டில் குடியிருப்பார் யாரும் இல்லை; எவரும் அதனைக் கடந்து செல்லமாட்டார்.
44 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும்.
44 I will punish Bel in Babylon. I will make him spew out what he swallowed. The nations will no longer stream to him; even the wall of Babylon will fall.
44 நான் பாபிலோனில் பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதன் வாயினின்று கக்கச்செய்வேன்; மக்களினங்கள் இனி ஒருபோதும் அங்குக் செல்லமாட்டா; பாபிலோன் மதிலும் தரைமட்டமாக்கப்படும்.
45 என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆததுமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
45 Come out of her, My people!i Save your lives, each of you, from the fierce anger of the LORD.
45 என் மக்களே, அதனின்று வெளியேறுங்கள்; ஆண்டவரின் வெஞ்சினத்தினின்று ஒவ்வொருவனும் தன் உயிரைக் காத்துக்கொள்ளட்டும்.
46 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான்.
46 Do not let your heart grow faint, and do not be afraid when the rumor is heard in the land; for a rumor will come one year—and then another the next year—of violence in the land and of ruler against ruler.
46 உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்; நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக் கலங்காதீர்கள்; ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்; மறு ஆண்டில் மற்றொரு வதந்தி உருவெடுக்கும்; நாட்டில் வன்முறை மலியும்; ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய் எழுவான்.
47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.
47 Therefore, behold, the days are coming when I will punish the idols of Babylon. Her entire land will suffer shame, and all her slain will lie fallen within her.
47 எனவே நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன். அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்; கொலையுண்டோர் அனைவரும் அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.
48 வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
48 Then heaven and earth and all that is in them will shout for joy over Babylon because the destroyers from the north will come against her,” declares the LORD.
48 விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அனைத்தும் பாபிலோனைக் குறித்து மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்; வடக்கினின்று "அழிப்போர்" அதை எதிர்த்து வருவர், என்கிறார் ஆண்டவர்.4
4 திவெ 18:20.
49 பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள்.
49 “Babylon must fall on account of the slain of Israel, just as the slain of all the earth have fallen because of Babylon.
49 பாபிலோனை முன்னிட்டு மண்ணுலகு எங்கும் மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்; இஸ்ரயேலில் கொலையுண்டோரை முன்னிட்டு இப்போது பாபிலோன் வீழ்ச்சியுற வேண்டும்.5
5 திவெ 18:24.
50 பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது.
50 You who have escaped the sword, depart and do not linger! Remember the LORD from far away, and let Jerusalem come to mind.”
50 வாளுக்குத் தப்பியவர்களே, போய்விடுங்கள், நிற்காதீர்கள்; தொலையிலிருந்து ஆண்டவரை நினைவுகூருங்கள்; உங்கள் இதயத்தில் எருசலேம் இடம்பெறட்டும்.
51 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று.
51 “We are ashamed because we have heard reproach; disgrace has covered our faces, because foreigners have entered the holy places of the LORD’s house.”
51 பழிமொழி கேட்டதால் நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்; ஆண்டவரது இல்லத்தின் திரு இடங்களுக்குள் அன்னியர் நுழைந்துவிட்டதால், மானக்கேடு எங்கள் முகங்களை மூடிக்கொண்டது.
52 ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள்.
52 “Therefore, behold, the days are coming,” declares the LORD, “when I will punish her idols, and throughout her land the wounded will groan.
52 ஆகவே நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். நான் அதன் சிலைகளைத் தண்டிப்பேன்; அந்நாடு எங்கணும் காயம்பட்டோர் குமுறியழுவர்.
53 பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
53 Even if Babylon ascends to the heavens and fortifies her lofty stronghold, the destroyers I send will come against her,” declares the LORD.
53 பாபிலோன் வானம்வரை தன்னை உயர்த்திக் கொண்டாலும், தன் உயர்ந்த கோட்டை கொத்தளங்களை வலுப்படுத்திக் கொண்டாலும், அழிப்போரை நான் அதன் மீது அனுப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
54 பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.
54 “The sound of a cry comes from Babylon, the sound of great destruction from the land of the Chaldeans!
54 பாபிலோனிலிருந்து கூக்குரல் கேட்கிறது; கல்தேயரின் நாட்டிலிருந்து பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.
55 கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும்.
55 For the LORD will destroy Babylon; He will silence her mighty voice. The waves will roar like great waters; the tumult of their voices will resound.
55 ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்; அதன் பெரும் ஆரவாரத்தை அடக்குகிறார்; அவர்களின் அலைகள் பெரும் வெள்ளம்போல் முழங்கும். அவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்வர்.
56 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார்.
56 For a destroyer is coming against her—against Babylon. Her warriors will be captured, and their bows will be broken, for the LORD is a God of retribution; He will repay in full.
56 "அழிப்போன்" பாபிலோன் மீதே வந்துவிட்டான். அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள். அவர்கள் அம்புகள் முறித்தெறியப்பட்டன. ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்; அவர் திண்ணமாய் பதிலடி கொடுப்பார்.
57 அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.
57 I will make her princes and wise men drunk, along with her governors, officials, and warriors. Then they will fall asleep forever and not wake up,” declares the King, whose name is the LORD of Hosts.
57 அதன் தலைவர்கள், ஞானிகள், ஆளுநர்கள், படைத்தலைவர்கள், படைவீரர்கள் ஆகிய எல்லாரையும் நான் குடிவெறி கொள்ளச்செய்வேன். அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்; துயில் எழவே மாட்டார்கள், என்கிறார் "படைகளின் ஆண்டவர்" என்னும் பெயர் கொண்ட மன்னர்.
58 பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவாகவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
58 This is what the LORD of Hosts says: “Babylon’s thick walls will be leveled, and her high gates consumed by fire. So the labor of the people will be for nothing; the nations will exhaust themselves to fuel the flames.”
58 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்; அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்; மக்களின் உழைப்பு வீணாகும்; மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.
Jeremiah’s Message to Seraiah
59 பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான்.
59 This is the message that Jeremiah the prophet gave to the quartermaster Seraiah son of Neriah, the son of Mahseiah, when he went to Babylon with King Zedekiah of Judah in the fourth year of Zedekiah’s reign.
59 யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
60 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
60 Jeremiah had written on a single scroll about all the disaster that would come upon Babylon—all these words that had been written concerning Babylon.
60 பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
61 எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
61 And Jeremiah said to Seraiah, “When you get to Babylon, see that you read all these words aloud,
61 எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
62 கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித்தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி
62 and say, ‘O LORD, You have promised to cut off this place so that no one will remain—neither man nor beast. Indeed, it will be desolate forever.’
62 'ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்' எனச் சொல்.
63 நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,
63 When you finish reading this scroll, tie a stone to it and cast it into the Euphrates.
63 இச்சுருளை வாசித்து முடித்த பின்னர், அதை ஒரு கல்லில் கட்டி, யூப்பிரத்தீசு நடுவே எறிந்துவிடு.
64 இப்படியே பாபிலோன் முழுகிப் போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.
64 Then you are to say, ‘In the same way Babylon will sink and never rise again, because of the disaster I will bring upon her. And her people will grow weary.’” Here end the words of Jeremiah.
64 "நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்" என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.67
6 திவெ 18:21.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
1 a Leb-kamai is a code name for Chaldea, that is, Babylonia.
3 b Forms of the Hebrew cherem refer to the giving over of things or persons to the LORD, either by destroying them or by giving them as an offering.
4 c That is, the Babylonians; also in verse 54
11 d LXX and some translations of the Hebrew; literally Fill the hand with the shields! or Take up the shields!
24 e That is, Babylonia; also in verse 35
34 f Or expelled me
37 g Or serpents or dragons
41 h Sheshach is a code name for Babylon.
45 i See Revelation 18:4.
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.