பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Jeremiah எரேமியா יִרְמְיָהוּ
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52
எரேமியா 6 | Jeremiah 6
Jerusalem’s Final Warning
1 பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.
1 “Run for cover, O sons of Benjamin; flee from Jerusalem! Sound the ram’s horn in Tekoa; send up a signal over Beth-haccherem, for disaster looms from the north, even great destruction.
1 பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்; பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும், பேரழிவும் வருகின்றன.
2 செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன்.
2 Though she is beautiful and delicate, I will destroy the Daughter of Zion.a
2 *மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்*.1
1 "மகள் சீயோனை வளமான பசும்புல் தரைக்கு ஒப்பிடுவேன்" என்பதன் வேறுபாடம் "வளமான பசும்புல் தரையாகிய மகள் சீயோனைஅழிப்பேன்".
3 மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து,
3 Shepherds and their flocks will come against her; they will pitch their tents all around her, each tending his own portion:
3 ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்; அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.
4 அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே;
4 ‘Prepare for battle against her; rise up, let us attack at noon. Woe to us, for the daylight is fading; the evening shadows grow long.
4 "அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள்; நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்; ஐயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!
5 எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
5 Rise up, let us attack by night and destroy her fortresses!’”
5 எழுந்திருங்கள்; இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்; அவள் அரண்மனைகளை அழிப்போம்" என்பார்கள்.
6 சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.
6 For this is what the LORD of Hosts says: “Cut down the trees and raise a siege ramp against Jerusalem. This city must be punished; there is nothing but oppression in her midst.
6 படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அவளுடைய மரங்களை வெட்டுங்கள்; எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்; அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்; அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.
7 ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.
7 As a well gushes its water, so she pours out her evil. Violence and destruction resound in her; sickness and wounds are ever before Me.
7 கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்; நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.
8 எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப்பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள்.
8 Be forewarned, O Jerusalem, or I will turn away from you; I will make you a desolation, a land without inhabitant.”
8 எருசலேமே, எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்; உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.
9 திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
9 This is what the LORD of Hosts says: “Glean the remnant of Israel as thoroughly as a vine. Pass your hand once more like a grape gatherer over the branches.”
9 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; திராட்சைக் கொடிகளில் தப்பும் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.
10 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
10 To whom can I give this warning? Who will listen to me? Look, their ears are closed,b so they cannot hear. See, the word of the LORD has become offensive to them; they find no pleasure in it.
10 நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை; அவர்களால் செவிகொடுக்க முடியாது; ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று; அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.
11 ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
11 But I am full of the LORD’s wrath; I am tired of holding it back. “Pour it out on the children in the street, and on the young men gathered together. For both husband and wife will be captured, the old and the very old alike.
11 ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது; அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்; ஆண்டவர் கூறுவது; தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோரும் பிடிபடுவர்.
12 அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 Their houses will be turned over to others, their fields and wives as well, for I will stretch out My hand against the inhabitants of the land,” declares the LORD.
12 அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும் மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்; ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.
13 அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
13 “For from the least of them to the greatest, all are greedy for gain; from prophet to priest, all practice deceit.
13 ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்; இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
14 சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
14 They dress the wound of My people with very little care, saying, ‘Peace, peace,’ when there is no peace at all.
14 அமைதியே இல்லாதபொழுது, 'அமைதி, அமைதி' என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.2
2 எசே 13:10.
15 அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15 Are they ashamed of the abomination they have committed? No, they have no shame at all; they do not even know how to blush. So they will fall among the fallen; when I punish them, they will collapse,” says the LORD.
15 அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை; நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது; எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர் என்கிறார் ஆண்டவர்.3
3 எரே 8:10-12.
16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
16 This is what the LORD says: “Stand at the crossroads and look. Ask for the ancient paths: ‘Where is the good way?’ Then walk in it, and you will find rest for your souls. But they said, ‘We will not walk in it!’
16 ஆண்டவர் கூறுவது இதுவே: சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்.4
4 மத் 11:29.
17 நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
17 I appointed watchmen over you and said, ‘Listen for the sound of the ram’s horn.’ But they answered, ‘We will not listen!’
17 நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். "எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்" என்றேன். அவர்களோ, "செவிசொடுக்க மாட்டோம்" என்றார்கள்.
18 ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
18 Therefore hear, O nations, and learn, O congregations, what will happen to them.
18 எனவே, நாடுகளே கேளுங்கள்; மக்கள் கூட்டத்தாரே, அவர்களுக்கு என்ன நேரப்போகிறது என்று பாருங்கள்.
19 பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
19 Hear, O earth! I am bringing disaster on this people, the fruit of their own schemes, because they have paid no attention to My word and have rejected My instruction.
19 நிலமே, நீயும் கேள்; இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை; என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
20 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
20 What use to Me is frankincense from Sheba or sweet cane from a distant land? Your burnt offerings are not acceptable; your sacrifices do not please Me.”
20 சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.
21 ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
21 Therefore this is what the LORD says: “I will lay stumbling blocks before this people; fathers and sons alike will be staggered; friends and neighbors will perish.”
21 ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்; அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.
An Invasion from the North
22 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
22 This is what the LORD says: “Behold, an army is coming from the land of the north; a great nation is stirred up from the ends of the earth.
22 ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.
23 அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கமறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
23 They grasp the bow and spear;c they are cruel and merciless. Their voice roars like the sea, and they ride upon horses, lined up like men in formation against you, O Daughter of Zion.”
23 அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்; அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்; அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது; மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்; சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்;
24 அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
24 We have heard the report; our hands hang limp. Anguish has gripped us, pain like that of a woman in labor.
24 "அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின; கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.
25 வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
25 Do not go out to the fields; do not walk the road. For the enemy has a sword; terror is on every side.
25 வயல்வெளிக்குப் போகவேண்டாம்; சாலைகளில் செல்ல வேண்டாம்; ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது; சுற்றிலும் ஒரே திகில்.
26 என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
26 O daughter of my people, dress yourselves in sackcloth and roll in ashes. Mourn with bitter wailing, as you would for an only son, for suddenly the destroyer will come upon us.
26 மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான்."
27 நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
27 “I have appointed you to examine My people like ore,d so you may know and try their ways.
27 நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்; நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.5
5 "ஆய்வாளனாகவும்" என்பது "அரணாகவும்" எனவும் பொருள்படும்.
28 அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
28 All are hardened rebels, walking around as slanderers. They are bronze and iron; all of them are corrupt.
28 அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்; பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்; அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்; அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
29 துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
29 The bellows blow fiercely, blasting away the lead with fire. The refining proceeds in vain, for the wicked are not purged.
29 துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன; காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை; ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
30 அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
30 They are called rejected silver, because the LORD has rejected them.”
30 அவர்கள் 'தள்ளுபடியான வெள்ளி' என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
2 a Or To a lovely and delicate woman I have likened the Daughter of Zion
10 b Hebrew uncircumcised
23 c Or javelin
27 d Or to examine My people, a fortress
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.