பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 12 | Job 12
Job Presents His Case
1 யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job answered:
1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி:
2 ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
2 “Truly then you are the people with whom wisdom itself will die!
2 உண்மையிலும் உண்மை; நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள். உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!
3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
3 But I also have a mind; I am not inferior to you. Who does not know such things as these?
3 உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு; உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்; இத்தகையவற்றை யார்தான் அறியார்?
4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
4 I am a laughingstock to my friends, though I called on God, and He answered. The righteous and upright man is a laughingstock.
4 கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான், என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன். குற்றமற்ற நேர்மையாளனாகிய நான் நகைப்புப் பொருள் ஆனேன்.
5 ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
5 The one at ease scorns misfortune as the fate of those whose feet are slipping.
5 இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள் என்னை ஏளனம் செய்கின்றீர்கள்; அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.
6 கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
6 The tents of robbers are safe, and those who provoke God are secure—those who carry their god in their hands.a
6 கொள்ளையரின் கூடாரங்கள் கொழிக்கின்றன! இறைவனைச் சினந்தெழச் செய்வோரும் கடவுளுக்குச் சவால் விடுப்போரும் பாதுகாப்பாய் உள்ளனர்!
7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப்போதிக்கும் ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.
7 But ask the animals, and they will instruct you; ask the birds of the air, and they will tell you.
7 இருப்பினும், விலங்கிடம் வினவுக; உமக்கு அது கற்றுக்கொடுக்கும்; வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.
8 அல்லது பூமியை விசாரித்துக்கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
8 Or speak to the earth, and it will teach you; let the fish of the sea inform you.
8 அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக; அவை உமக்குக் கற்பிக்கும். ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.
9 கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றிலும் அறியாதவன் யார்?
9 Which of all these does not know that the hand of the LORD has done this?
9 இவற்றில் ஆண்டவரை அறியாதது எது? அவரது கைதான் இதைச் செய்தது என எது அறியாது?
10 சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
10 The life of every living thing is in His hand, as well as the breath of all mankind.
10 அவர் கையில்தான் அனைத்துப் படைப்புகளின் உயிரும் மனித இனத்தின் மூச்சும் உள்ளன.
11 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
11 Does not the ear test words as the tongue tastes its food?
11 செவி, சொற்களைப் பிரித்து உணர்வதில்லையா? நாக்கு, உணவைச் சுவைத்து அறிவதில்லையா?
12 முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
12 Wisdom is found with the elderly, and understanding comes with long life.
12 முதியோரிடம் ஞானமுண்டு; ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.
13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
13 Wisdom and strength belong to God; counsel and understanding are His.
13 ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன! ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!
14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
14 What He tears down cannot be rebuilt; the man He imprisons cannot be released.
14 இதோ! அவர் இடித்திடுவதை எழுப்பிட இயலாது; அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.
15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால் பூமியைக் கீழதுமேலதாக்கும்.
15 If He holds back the waters, they dry up, and if He releases them, they overwhelm the land.
15 இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில், அனைத்தும் வறண்டுபோம்; வெளியே அதை வரவிடுவாரெனில், நிலத்தையே மூழ்கடிக்கும்.
16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும். அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
16 True wisdom and power belong to Him. The deceived and the deceiver are His.
16 வல்லமையும் மதிநுட்பமும் அவருக்கே உரியன; ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும் அவருடையோரே!
17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
17 He leads counselors away barefoot and makes fools of judges.
17 அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.
18 அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
18 He loosens the bonds placed by kings and fastens a belt around their waists.
18 அரசர்களின் அரைக்கச்சையை அவிழ்க்கின்றார்; அவர்களின் இடையில் கந்தையைக் கட்டுகின்றார்;
19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
19 He leads priests away barefoot and overthrows the established.
19 குருக்களைத் தம் நிலையிலிருந்து விழச் செய்கின்றார்; நிலைபெற்ற வலியோரைக் கவிழ்த்து வீழ்த்துகின்றார்;
20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவரின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
20 He deprives the trusted of speech and takes away the discernment of elders.
20 வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்; முதியோரின் பகுத்துணர் மதியைப் பறிக்கின்றார்;
21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
21 He pours out contempt on nobles and disarms the mighty.
21 உயர்குடி மக்கள் மீது வெறுப்பினைப் பொழிகின்றார்; வலியோரின் கச்சை கழன்றுபோகச் செய்கின்றார்;
22 அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
22 He reveals the deep things of darkness and brings deep shadows into light.
22 புரியாப் புதிர்களை இருளினின்று இலங்கச் செய்கின்றார் . காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.
23 அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
23 He makes nations great and destroys them; He enlarges nations, then disperses them.
23 மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்; பின்பு அழிக்கின்றார்; மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்; பின், குறையச் செய்கின்றார்.
24 அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
24 He deprives the earth’s leaders of reason and makes them wander in a trackless wasteland.
24 மண்ணக மக்களின் தலைவர் தம் அறிவாற்றலை அழிக்கின்றார். வழியிலாப் பாழ்வெளியில் அவர்களை அலையச் செய்கின்றார்.
25 அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.
25 They grope in the darkness without light; He makes them stagger like drunkards.
25 இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்; குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
6 a Or though God keeps them in His power
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.