பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 13 | Job 13
Job Prepares His Case
1 இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
1 “Indeed, my eyes have seen all this; my ears have heard and understood.
1 இதோ! இவை என் கண்களே கண்டவை; என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.
2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.
2 What you know, I also know; I am not inferior to you.
2 நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்; நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை.
3 சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன்.
3 Yet I desire to speak to the Almighty and argue my case before God.
3 ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்; கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,
4 நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள்.
4 You, however, smear with lies; you are all worthless physicians.
4 நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்; நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.
5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும்.
5 If only you would remain silent; for that would be your wisdom!
5 ஐயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்; அதுவே உங்களுக்கு ஞானமாகும்.
6 நீங்கள் என் நியாயத்தைக்கேட்டு என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள்.
6 Hear now my argument, and listen to the plea of my lips.
6 இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்; என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.
7 நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
7 Will you speak wickedly on God’s behalf or speak deceitfully for Him?
7 இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா? அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?
8 அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ?
8 Would you show Him partiality or argue in His defense?
8 கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா?
9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ?
9 Would it be well when He examined you? Could you deceive Him like a man?
9 அவர் உங்களை ஆராய்ந்தால் உங்களில் நல்லதைக் காண்பாரா? அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா?
10 நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார்.
10 Surely He would rebuke you if you secretly showed partiality.
10 நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால் உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.
11 அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ?
11 Would His majesty not terrify you? Would the dread of Him not fall upon you?
11 அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா? அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா?
12 உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச்சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம்,
12 Your maxims are proverbs of ashes; your defenses are defenses of clay.
12 உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்; உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்ணையொத்த வாதங்கள்.
13 நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன் எனக்கு வருகிறது வரட்டும்.
13 Be silent, and I will speak. Then let come to me what may.
13 பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்; எனக்கு எது வந்தாலும் வரட்டும்.
14 நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்?
14 Why do I put myself at riska and take my life in my own hands?
14 என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்? என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?
15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
15 Though He slay me, I will hope in Him.b I will still defend my ways to His face.
15 அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்; இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன்.
16 அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான்.
16 Moreover, this will be my salvation, for no godless man can appear before Him.
16 இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்; ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.
17 என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள்.
17 Listen carefully to my words; let my declaration ring in your ears.
17 என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்; என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.
18 இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன்.
18 Behold, now that I have prepared my case, I know that I will be vindicated.
18 இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்; குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.
19 என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே.
19 Can anyone indict me? If so, I will be silent and die.
19 இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது? அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன்.
20 இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன்.
20 Only grant these two things to me, so that I need not hide from You:
20 எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்; அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன்.
21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
21 Withdraw Your hand from me, and do not let Your terror frighten me.
21 உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்; உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.
22 நீர் கூப்பிடும், நான் உத்தரவுகொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும்.
22 Then call me, and I will answer, or let me speak, and You can reply.
22 பின்னர் என்னைக் கூப்பிடும்; நான் விடையளிப்பேன்; அல்லது என்னைப் பேசவிடும்; பின் நீர் மறுமொழி அருளும்.
23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
23 How many are my iniquities and sins? Reveal to me my transgression and sin.
23 என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை? என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும்.
24 நீர் உமது முகத்தை மறைத்து என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்.
24 Why do You hide Your face and consider me as Your enemy?
24 உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்? பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?
25 காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
25 Would You frighten a windblown leaf? Would You chase after dry chaff?
25 காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ? காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?
26 மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர்.
26 For You record bitter accusations against me and bequeath to me the iniquities of my youth.
26 கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்; என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்.
27 என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர்.
27 You put my feet in the stocks and stand watch over all my paths; You set a limit for the soles of my feet.
27 என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்; கண் வைத்தீர் என் பாதை எல்லாம்; காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர்.*
* யோபு 33:11.
28 இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற, வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.
28 So man wastes away like something rotten, like a moth-eaten garment.
28 மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
14 a Literally Why do I take my flesh in my teeth
15 b Or I have no other hope
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.