பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 15 | Job 15
Eliphaz: Job Does Not Fear God
1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
1 Then Eliphaz the Temanite replied:
1 அதற்குத் தேமானியனான எலிப்பாசு சொன்னான்:
2 ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
2 “Does a wise man answer with empty counsel or fill his belly with the hot east wind?
2 வெற்று அறிவினால் ஞானி விடையளிக்கக்கூடுமோ? வறண்ட கீழ்க்காற்றினால் வயிற்றை அவன் நிரப்பவோ?
3 பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
3 Should he argue with useless words or speeches that serve no purpose?
3 பயனிலாச் சொற்களாலோ, பொருளிலாப் பொழிவினாலோ அவன் வழக்காடத் தகுமோ?
4 நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
4 But you even undermine the fear of God and hinder meditation before Him.
4 ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்; இறைச்சிந்தனை இல்லாது போனீர்.
5 உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
5 For your iniquity instructs your mouth, and you choose the language of the crafty.
5 உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது; வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.
6 நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
6 Your own mouth, not mine, condemns you; your own lips testify against you.
6 கண்டனம் செய்தது உம் வாயே; நானல்ல; உம் உதடே உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.
7 மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
7 Were you the first man ever born? Were you brought forth before the hills?
7 மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ? மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?
8 நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
8 Do you listen in on the council of God or limit wisdom to yourself?
8 கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ? ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?
9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
9 What do you know that we do not? What do you understand that is not clear to us?
9 எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்? எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?
10 உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
10 Both the gray-haired and the aged are on our side—men much older than your father.
10 நரைமுடியும் நிறைவயதும்கொண்டு, நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர் எங்களிடை உள்ளனர்.
11 தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?
11 Are the consolations of God not enough for you, even words spoken gently to you?
11 கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும் உமக்கு அற்பமாயினவோ?
12 உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
12 Why has your heart carried you away, and why do your eyes flash,a
12 மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்? உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?
13 தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
13 as you turn your spirit against God and pour such words from your mouth?
13 அதனால், இறைவனுக்கு எதிராய் உம் கோபத்தைத் திருப்புகின்றீர்; வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.
14 மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
14 What is man, that he should be pure, or one born of woman, that he should be righteous?
14 மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்? நேர்மையாளராய் இருக்கப் பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?
15 இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
15 If God puts no trust in His holy ones, if even the heavens are not pure in His eyes,
15 வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்; வானங்களும் அவர்தம் கண்முன் தூயவையல்ல;
16 அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
16 how much less man, who is vile and corrupt, who drinks injustice like water?
16 தீமையை தண்ணீர் போல் குடிக்கும் அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர் எத்துணை இழிந்தோர் ஆவர்?1
1 யோபு 25:4-6.
17 உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும், நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
17 Listen to me and I will inform you. I will describe what I have seen,
17 கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்; நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;
18 ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
18 what was declared by wise men and was not concealed from their fathers,
18 ஞானிகள் உரைத்தவை அவை! அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!
19 அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
19 to whom alone the land was given when no foreigner passed among them.
19 அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது; அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.
20 துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
20 A wicked man writhes in pain all his days; only a few years are reserved for the ruthless.
20 துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர் தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள் கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
21 பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.
21 Sounds of terror fill his ears; in his prosperity the destroyer attacks him.
21 திகிலளிக்கும் ஒலி அவர்களின் செவிகளில் கேட்கும்; நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.
22 இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
22 He despairs of his return from darkness; he is marked for the sword.
22 அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்; வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.
23 அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
23 He wanders about as food for vultures; he knows the day of darkness is at hand.
23 எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்; இருள்சூழ்நாள் அண்மையில் உள்ளதென்று அறிவர்.
24 இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
24 Distress and anguish terrify him, overwhelming him like a king poised to attack.
24 இன்னலும் இடுக்கணும் அவர்களை நடுங்க வைக்கும்; போருக்குப் புறப்படும் அரசன்போல் அவை அவர்களை மேற்கொள்ளும்.
25 அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
25 For he has stretched out his hand against God and has vaunted himself against the Almighty,
25 ஏனெனில், இறைவனுக்கு எதிராக அவர்கள் கையை ஓங்கினர்; எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.
26 கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
26 rushing headlong at Him with a thick, studded shield.
26 வணங்காக் கழுத்தோடும் வலுவான பெரிய கேடயத்தோடும், அவரை எதிர்த்து வந்தனர்.
27 அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது.
27 Though his face is covered with fat and his waistline bulges with flesh,
27 ஏனெனில், அவர்களின் முகத்தைக் கொழுப்பு மூடியுள்ளது; அவர்களின் தொந்தி பருத்துள்ளது.
28 ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
28 he will dwell in ruined cities, in abandoned houses destined to become rubble.
28 பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.
29 அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை, அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
29 He will no longer be rich; his wealth will not endure. His possessions will not overspread the land.
29 அவர்கள் செல்வர் ஆகார்; அவர்களின் சொத்தும் நில்லாது; அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.
30 இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்.
30 He will not escape from the darkness; the flame will wither his shoots, and the breath of God’s mouth will carry him away.
30 இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை; அவர்களது தளிரை அனல் வாட்டும். அவர்களது மலர் காற்றில் அடித்துப்போகப்படும்.2
2 'அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்' என்பது எபிரேய பாடம்.
31 வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
31 Let him not deceive himself with trust in emptiness, for emptiness will be his reward.
31 வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்; ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.
32 அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை.
32 It will be paid in full before his time, and his branch will not flourish.
32 அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே அது நடக்கும்; அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;
33 பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான்.
33 He will be like a vine stripped of its unripe grapes, like an olive tree that sheds its blossoms.
33 பிஞ்சுகளை உதிர்க்கும் திராட்சைச் செடிபோன்றும் பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும் அவர்கள் இருப்பர்.
34 மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
34 For the company of the godless will be barren, and fire will consume the tents of bribery.
34 ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம் கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின் கூடாரம் எரியுண்ணும்.
35 அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.
35 They conceive trouble and give birth to evil; their womb is pregnant with deceit.”
35 இன்னலைக் கருவுற்று அவர்கள் இடுக்கண் ஈன்றெடுப்பர்; வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
12 a Or blink
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.