பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 17 | Job 17
Job Prepares for Death
1 என் சுவாசம் ஒழிகிறது; என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
1 “My spirit is broken; my days are extinguished; the grave awaits me.
1 என் உயிர் ஊசலாடுகின்றது; என் நாள்கள் முடிந்துவிட்டன; கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.
2 பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
2 Surely mockers surround me, and my eyes must gaze at their rebellion.
2 உண்மையாகவே, எள்ளி நகைப்போர் என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது.
3 தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
3 Give me, I pray, the pledge You demand. Who else will be my guarantor?
3 நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக! வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்?
4 நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
4 You have closed their minds to understanding; therefore You will not exalt them.
4 அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்; அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர்.
5 எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
5 If a man denounces his friends for a price, the eyes of his children will fail.
5 கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.
6 ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
6 He has made me a byword among the people, a man in whose face they spit.
6 என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்; என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.
7 இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
7 My eyes have grown dim with grief, and my whole body is but a shadow.
7 கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன; என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.
8 சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
8 The upright are appalled at this, and the innocent are stirred against the godless.
8 இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்; குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர்.
9 நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
9 Yet a righteous one holds to his way, and the one with clean hands grows stronger.
9 நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்; கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.
10 இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
10 But come back and try again, all of you. For I will not find a wise man among you.
10 ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள். வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன்.
11 என் நாட்கள் போயிற்று, என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
11 My days have passed; my plans are broken off—even the desires of my heart.
11 கடந்தன என் நாள்கள்; தகர்ந்தன என் திட்டங்கள்; அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.
12 அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
12 They have turned night into day, making light seem near in the face of darkness.
12 அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்; ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.
13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
13 If I look for Sheol as my home, if I spread out my bed in darkness,
13 இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில், என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,
14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப்பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
14 and say to corruption, ‘You are my father,’ and to the worm, ‘My mother,’ or ‘My sister,’
14 படுகுழியை நோக்கி "என் தந்தையே" என்றும், புழுவை நோக்கி "என் தாயே, என் தமக்கையே" என்றும் புகல்வேனாகில்,
15 என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
15 where then is my hope? Who can see any hope for me?
15 பின் எங்கே என் நம்பிக்கை? என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?
16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
16 Will it go down to the gates of Sheol? Will we go down together into the dust?”
16 நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது, இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.