பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 18 | Job 18

Bildad: God Punishes the Wicked

1וַ֭יַּעַן בִּלְדַּ֥ד הַשֻּׁחִ֗י וַיֹּאמַֽר׃

1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
1 Then Bildad the Shuhite replied:
1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:

2עַד־אָ֤נָה ׀ תְּשִׂימ֣וּן קִנְצֵ֣י לְמִלִּ֑ין תָּ֝בִ֗ינוּ וְאַחַ֥ר נְדַבֵּֽר׃

2 நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.
2 “How long until you end these speeches? Show some sense, and then we can talk.
2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்? சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.

3מַ֭דּוּעַ נֶחְשַׁ֣בְנוּ כַבְּהֵמָ֑ה נִ֝טְמִ֗ינוּ בְּעֵינֵיכֶֽם׃

3 நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?
3 Why are we regarded as cattle, as stupid in your sight?
3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்? மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

4טֹֽרֵ֥ף נַפְשׁ֗וֹ בְּאַ֫פּ֥וֹ הֲ֭לְמַּעַנְךָ תֵּעָ֣זַב אָ֑רֶץ וְיֶעְתַּק־צ֝֗וּר מִמְּקֹמֽוֹ׃

4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
4 You who tear yourself in anger—should the earth be forsaken on your account, or the rocks be moved from their place?
4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா? பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?

5גַּ֤ם א֣וֹר רְשָׁעִ֣ים יִדְעָ֑ךְ וְלֹֽא־יִ֝גַּ֗הּ שְׁבִ֣יב אִשּֽׁוֹ׃

5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
5 Indeed, the lamp of the wicked is extinguished; the flame of his fire does not glow.
5 தீயவரின் ஒளி அணைந்துபோம்; அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.

6א֖וֹר חָשַׁ֣ךְ בְּאָהֳל֑וֹ וְ֝נֵר֗וֹ עָלָ֥יו יִדְעָֽךְ׃

6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
6 The light in his tent grows dark, and the lamp beside him goes out.
6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்; அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம்.*

7יֵֽ֭צְרוּ צַעֲדֵ֣י אוֹנ֑וֹ וְֽתַשְׁלִיכֵ֥הוּ עֲצָתֽוֹ׃

7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
7 His vigorous stride is shortened, and his own schemes trip him up.
7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்; அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.

8כִּֽי־שֻׁלַּ֣ח בְּרֶ֣שֶׁת בְּרַגְלָ֑יו וְעַל־שְׂ֝בָכָ֗ה יִתְהַלָּֽךְ׃

8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
8 For his own feet lead him into a net, and he wanders into its mesh.
8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்; அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

9יֹאחֵ֣ז בְּעָּקֵ֣ב פָּ֑ח יַחֲזֵ֖ק עָלָ֣יו צַמִּֽים׃

9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.
9 A trap seizes his heel; a snare grips him.
9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்; சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

10טָמ֣וּן בָּאָ֣רֶץ חַבְל֑וֹ וּ֝מַלְכֻּדְתּ֗וֹ עֲלֵ֣י נָתִֽיב׃

10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.
10 A noose is hidden in the ground, and a trap lies in his path.
10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.

11סָ֭בִיב בִּֽעֲתֻ֣הוּ בַלָּה֑וֹת וֶהֱפִיצֻ֥הוּ לְרַגְלָֽיו׃

11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
11 Terrors frighten him on every side and harass his every step.
11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்; கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

12יְהִי־רָעֵ֥ב אֹנ֑וֹ וְ֝אֵ֗יד נָכ֥וֹן לְצַלְעֽוֹ׃

12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.
12 His strength is depleted, and calamity is ready at his side.
12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்; தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

13יֹ֭אכַל בַּדֵּ֣י עוֹר֑וֹ יֹאכַ֥ל בַּ֝דָּ֗יו בְּכ֣וֹר מָֽוֶת׃

13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும்
13 It devours patches of his skin; the firstborn of death devours his limbs.
13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்; சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

14יִנָּתֵ֣ק מֵ֭אָהֳלוֹ מִבְטַח֑וֹ וְ֝תַצְעִדֵ֗הוּ לְמֶ֣לֶךְ בַּלָּהֽוֹת׃

14 அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.
14 He is torn from the shelter of his tent and is marched off to the king of terrors.
14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்; அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.

15תִּשְׁכּ֣וֹן בְּ֭אָהֳלוֹ מִבְּלִי־ל֑וֹ יְזֹרֶ֖ה עַל־נָוֵ֣הוּ גָפְרִֽית׃

15 அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.
15 Fire resides in his tent; burning sulfur rains down on his dwelling.
15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது; அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.

16מִ֭תַּחַת שָֽׁרָשָׁ֣יו יִבָ֑שׁוּ וּ֝מִמַּ֗עַל יִמַּ֥ל קְצִירֽוֹ׃

16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.
16 The roots beneath him dry up, and the branches above him wither away.
16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்; மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

17זִֽכְרוֹ־אָ֭בַד מִנִּי־אָ֑רֶץ וְלֹא־שֵׁ֥ם ל֝֗וֹ עַל־פְּנֵי־חֽוּץ׃

17 அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்
17 The memory of him perishes from the earth, and he has no name in the land.
17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

18יֶ֭הְדְּפֻהוּ מֵא֣וֹר אֶל־חֹ֑שֶׁךְ וּֽמִתֵּבֵ֥ל יְנִדֻּֽהוּ׃

18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.
18 He is driven from light into darkness and is chased from the inhabited world.
18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.

19לֹ֘א נִ֤ין ל֣וֹ וְלֹא־נֶ֣כֶד בְּעַמּ֑וֹ וְאֵ֥ין שָׂ֝רִ֗יד בִּמְגוּרָֽיו׃

19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.
19 He has no offspring or posterity among his people, no survivor where he once lived.
19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு வழிமரபும் வழித்தோன்றலுமில்லை; அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

20עַל־י֭וֹמוֹ נָשַׁ֣מּוּ אַחֲרֹנִ֑ים וְ֝קַדְמֹנִ֗ים אָ֣חֲזוּ שָֽׂעַר׃

20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.
20 Those in the west are appalled at his fate, while those in the east tremble in horror.
20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.

21אַךְ־אֵ֭לֶּה מִשְׁכְּנ֣וֹת עַוָּ֑ל וְ֝זֶ֗ה מְק֣וֹם לֹא־יָדַֽע־אֵֽל׃

21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.
21 Surely such is the dwelling of the wicked and the place of one who does not know God.”
21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே; இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.