பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 19 | Job 19
Job: My Redeemer Lives
1 யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job answered:
1 பின் யோபு உரைத்த மறுமொழி:
2 நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
2 “How long will you torment me and crush me with your words?
2 என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்? என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?
3 இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
3 Ten times now you have reproached me; you shamelessly mistreat me.
3 பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்; வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.
4 நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
4 Even if I have truly gone astray, my error concerns me alone.
4 உண்மையாகவே நான் பிழை செய்திருந்தாலும் என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?
5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,
5 If indeed you would exalt yourselves above me and use my disgrace against me,
5 எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில், என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,
6 தேவன் என்னைக் கவிழ்த்து தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
6 then understand that it is God who has wronged me and drawn His net around me.
6 கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும், வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!
7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாய விசாரணை இல்லை.
7 Though I cry out, ‘Violence!’ I get no response; though I call for help, there is no justice.
7 இதோ! 'கொடுமை' எனக் கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை; நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.
8 நான் கடந்துபோகக் கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து என் வழிகளை இருளாக்கிவிட்டார்.
8 He has blocked my way so I cannot pass; He has veiled my paths with darkness.
8 நான் கடந்துபோகாவண்ணம், கடவுள் என் வழியை அடைத்தார்; என் பாதையை இருளாக்கினார்.
9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார்.
9 He has stripped me of my honor and removed the crown from my head.
9 என் மாண்பினை அவர் களைந்தார்; மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.
10 அவர் என்னை நான்குபுறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார்.
10 He tears me down on every side until I am gone; He uproots my hope like a tree.
10 எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்; நான் தொலைந்தேன்; மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.
11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார், என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார்.
11 His anger burns against me, and He counts me among His enemies.
11 அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த் தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய் என்னையும் எண்ணுகின்றார்.
12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
12 His troops advance together; they construct a ramp against me and encamp around my tent.
12 அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன; அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்; என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.
13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப்போனார்கள்.
13 He has removed my brothers from me; my acquaintances have abandoned me.
13 என் உடன் பிறந்தவரை என்னிடமிருந்து அகற்றினார்; எனக்கு அறிமுகமானவரை முற்றிலும் விலக்கினார்;
14 என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள்.
14 My kinsmen have failed me, and my friends have forgotten me.
14 என் உற்றார் என்னை ஒதுக்கினர்; என் நண்பர்கள் என்னை மறந்தனர்.
15 என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன்.
15 My guests and maidservants count me as a stranger; I am a foreigner in their sight.
15 என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்; அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.
16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவு கொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று.
16 I call for my servant, but he does not answer, though I implore him with my own mouth.
16 என் அடிமையை அழைப்பேன்; மறுமொழி கொடான்; என் வாயால் அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.
17 என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன்.
17 My breath is repulsive to my wife, and I am loathsome to my own family.
17 என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று; என் தாயின் பிள்ளைகளுக்கு நாற்றம் ஆனேன்.
18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப பேசுகிறார்கள்.
18 Even little boys scorn me; when I appear, they deride me.
18 குழந்தைகளும் என்னைக் கேலி செய்கின்றனர்; நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.
19 என் பிராண சிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள்.
19 All my best friends despise me, and those I love have turned against me.
19 என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.
20 என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.
20 My skin and flesh cling to my bones; I have escaped by the skin of my teeth.
20 நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்; நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.
21 என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
21 Have pity on me, my friends, have pity, for the hand of God has struck me.
21 என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.
22 தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன?
22 Why do you persecute me as God does? Will you never get enough of my flesh?
22 இறைவனைப் போல் நீங்களும் என்னை விரட்டுவது ஏன்? என் சதையை நீங்கள் குதறியது போதாதா?
23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு,
23 I wish that my words were recorded and inscribed in a book,
23 ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது வரையப்படலாகாதா? ஓ! அவை ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?
24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்.
24 by an iron stylus on lead, or chiseled in stone forever.
24 இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும் என்றென்றும் அவை பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.
25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.
25 But I know that my Redeemera lives, and in the end He will stand upon the earth.b
25 ஏனெனில், என் மீட்பர் வாழ்கின்றார் என்றும் இறுதியில் மண்மேல் எழுவார் என்றும் நான் அறிவேன்.
26 இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
26 Even after my skin has been destroyed, yet in my fleshc I will see God.
26 என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின், நான் சதையோடு இருக்கும் போதே கடவுளைக் காண்பேன்.
27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது.
27 I will see Him for myself; my eyes will behold Him, and not as a stranger. How my heart yearnsd within me!
27 நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
28 காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
28 If you say, ‘Let us persecute him, since the root of the matter lies with him,e’
28 ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்; 'அவனை எப்படி நாம் வதைப்பது? அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?'
29 பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.
29 then you should fear the sword yourselves, because wrath brings punishment by the sword, so that you may know there is a judgment.”
29 மாறாக — வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்; ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்; அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
25 a Or Vindicator
25 b Or on my grave
26 c Or without my flesh
27 d Hebrew my kidneys yearn
28 e Many Hebrew manuscripts, LXX, and Vulgate; most Hebrew manuscripts with me
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.