பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 20 | Job 20
Zophar: Destruction Awaits the Wicked
1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக:
1 Then Zophar the Naamathite replied:
1 அதற்கு நாமாயனான சோப்பார் கூறின பதில்:
2 இதற்காக மறு உத்தரவுகொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
2 “So my anxious thoughts compel me to answer, because of the turmoil within me.
2 என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு, என் எண்ணங்கள் பதில் சொல்ல வைக்கின்றன.
3 நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
3 I have heard a rebuke that insults me, and my understanding prompts a reply.
3 என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்; நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது.
4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும் மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
4 Do you not know that from antiquity, since man was placed on the earth,
4 மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து, தொன்றுதொட்டு நடக்குமிது உமக்குத் தெரியாதா?
5 அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
5 the triumph of the wicked has been brief and the joy of the godless momentary?
5 கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே! கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு கணப்பொழுதே!
6 அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும் அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
6 Though his arrogance reaches the heavens, and his head touches the clouds,
6 அவர்களின் பெருமை விசும்பு மட்டும் உயர்ந்தாலும், அவர்களின் தலை முகிலை முட்டுமளவு இருந்தாலும்,
7 அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
7 he will perish forever, like his own dung; those who had seen him will ask, ‘Where is he?’
7 அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்; அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.
8 அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
8 He will fly away like a dream, never to be found; he will be chased away like a vision in the night.
8 கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்; இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.
9 அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை, அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
9 The eye that saw him will see him no more, and his place will no longer behold him.
9 பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது; வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.
10 அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
10 His sons will seek the favor of the poor, for his own hands must return his wealth.
10 ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்; அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.
11 அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
11 The youthful vigor that fills his bones will lie down with him in the dust.
11 எலும்புகளை நிரப்பிய அவர்களின் இளமைத் துடிப்பு, மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.
12 பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
12 Though evil is sweet in his mouth and he conceals it under his tongue,
12 தீங்கு அவர்களின் வாயில் இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில் அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,
13 அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
13 though he cannot bear to let it go and keeps it in his mouth,
13 இழந்து போகாமல் அதை அவர்கள் இருத்தி வைத்தாலும், அண்ணத்தின் நடுவே அதை அடைத்து வைத்தாலும்,
14 அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
14 yet in his stomach his food sours into the venom of cobras within him.
14 வயிற்றிலே அவர்களின் உணவு மாற்றமடைந்து, அவர்களுக்கு விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;
15 அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
15 He swallows wealth but vomits it out; God will force it from his stomach.
15 செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்; இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.
16 அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
16 He will suck the poison of cobras; the fangs of a viper will kill him.
16 விரியன் பாம்பின் நஞ்சை அவர்கள் உறிஞ்சுவர்; கட்டு விரியனின் நாக்கு அவர்களைக் கொன்றுபோடும்.
17 தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
17 He will not enjoy the streams, the rivers flowing with honey and cream.
17 ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும் , தேன், வெண்ணெய் ஆறுகளிலும் அவர்கள் இன்பம் காணார்.
18 தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும், அவன் களிகூராதிருப்பான்.
18 He must return the fruit of his labor without consuming it; he cannot enjoy the profits of his trading.
18 தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்; அதை அவர்கள் உண்ணமாட்டார்; வணிகத்தின் வருவாயில் இன்புறார்.
19 அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,
19 For he has oppressed and forsaken the poor; he has seized houses he did not build.
19 ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்; தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.
20 தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
20 Because his appetite is never satisfied, he cannot escape with his treasure.
20 அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை; ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில் மிச்சத்தைக் காணார்.
21 அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.
21 Nothing is left for him to consume; thus his prosperity will not endure.
21 அவர்கள் தின்றபின் எஞ்சியது எதுவும் இல்லை; எனவே அவர்களது செழுமை நின்று நிலைக்காது.
22 அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவனுடைய கையும் அவன்மேல் வரும்.
22 In the midst of his plenty, he will be distressed; the full force of misery will come upon him.
22 நிறைந்த செல்வத்திடை அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்; அவலத்தின் பளுவெல்லாம் அவர்கள்மேல் விழும்.
23 தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
23 When he has filled his stomach, God will vent His fury upon him, raining it down on him as he eats.
23 அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.
24 இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
24 Though he flees from an iron weapon, a bronze-tipped arrow will pierce him.
24 அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில் அவர்களை வீழ்த்திடுமே!
25 உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
25 It is drawn out of his back, the gleaming point from his liver.a Terrors come over him.
25 அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்; மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்; அச்சம் அவர்கள் மேல் விழும்.
26 அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.
26 Total darkness is reserved for his treasures. A fire unfanned will consume him and devour what is left in his tent.
26 காரிருள் அவர்களது கருவூலத்திற்குக் காத்திருக்கும்; மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.
27 வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
27 The heavens will expose his iniquity, and the earth will rise up against him.
27 விண்ணகம் அவர்களின் பழியை வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை மறுத்திட எழுந்து நிற்கும்.
28 அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.
28 The possessions of his house will be removed, flowing away on the day of God’s wrath.
28 அவர்களது இல்லத்தின் செல்வம் சூறையாடப்படும்; இறைவனின் வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.
29 இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும் அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்.
29 This is the wicked man’s portion from God, the inheritance God has appointed him.”
29 இதுவே பொல்லார்க்குக் கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
25 a Literally from his gall
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.