பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 21 | Job 21

Job: God Will Punish the Wicked

1וַיַּ֥עַן אִיּ֗וֹב וַיֹּאמַֽר׃

1 யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job answered:
1 அதற்கு யோபு கூறிய மறுமொழி:

2שִׁמְע֣וּ שָׁ֭מוֹעַ מִלָּתִ֑י וּתְהִי־זֹ֝֗את תַּנְח֥וּמֹֽתֵיכֶֽם׃

2 என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
2 “Listen carefully to my words; let this be your consolation to me.
2 நான் கூறுவதைக் கவனமாய்க் கேளுங்கள்; இதுவே நீங்கள் எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.

3שָׂ֭אוּנִי וְאָנֹכִ֣י אֲדַבֵּ֑ר וְאַחַ֖ר דַּבְּרִ֣י תַלְעִֽיג׃

3 நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.
3 Bear with me while I speak; then, after I have spoken, you may go on mocking.
3 பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்; நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.

4הֶ֭אָנֹכִי לְאָדָ֣ם שִׂיחִ֑י וְאִם־מַ֝דּ֗וּעַ לֹא־תִקְצַ֥ר רוּחִֽי׃

4 நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
4 Is my complaint against a man? Then why should I not be impatient?
4 என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா? இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?

5פְּנוּ־אֵלַ֥י וְהָשַׁ֑מּוּ וְשִׂ֖ימוּ יָ֣ד עַל־פֶּֽה׃

5 என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
5 Look at me and be appalled; put your hand over your mouth.
5 என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்; கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.

6וְאִם־זָכַ֥רְתִּי וְנִבְהָ֑לְתִּי וְאָחַ֥ז בְּ֝שָׂרִ֗י פַּלָּצֽוּת׃

6 இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
6 When I remember, terror takes hold, and my body trembles in horror.
6 இதை நான் நினைக்கும்பொழுது திகிலடைகிறேன்; நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.

7מַדּ֣וּעַ רְשָׁעִ֣ים יִחְי֑וּ עָ֝תְק֗וּ גַּם־גָּ֥בְרוּ חָֽיִל׃

7 துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
7 Why do the wicked live on, growing old and increasing in power?
7 தீயோர் வாழ்வதேன்? நீண்ட ஆயுள் பெறுவதேன்? . வலியோராய் வளர்வதேன்?

8זַרְעָ֤ם נָכ֣וֹן לִפְנֵיהֶ֣ם עִמָּ֑ם וְ֝צֶאֱצָאֵיהֶ֗ם לְעֵינֵיהֶֽם׃

8 அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
8 Their descendants are established around them, and their offspring before their eyes.
8 அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்; அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.

9בָּתֵּיהֶ֣ם שָׁל֣וֹם מִפָּ֑חַד וְלֹ֤א שֵׁ֖בֶט אֱל֣וֹהַּ עֲלֵיהֶֽם׃

9 அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
9 Their homes are safe from fear; no rod of punishment from God is upon them.
9 அவர்களின் இல்லங்களில் அச்சமற்ற அமைதி நிலவுகின்றது. கடவுளின் தண்டனை அவர்கள்மேல் விழவில்லை.

10שׁוֹר֣וֹ עִ֭בַּר וְלֹ֣א יַגְעִ֑ל תְּפַלֵּ֥ט פָּ֝רָת֗וֹ וְלֹ֣א תְשַׁכֵּֽל׃

10 அவர்களுடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது
10 Their bulls breed without fail; their cows bear calves and do not miscarry.
10 அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை; அவர்களின் பசுக்கள் கருவுறும்; ஆனால் கரு கலைவதில்லை.

11יְשַׁלְּח֣וּ כַ֭צֹּאן עֲוִילֵיהֶ֑ם וְ֝יַלְדֵיהֶ֗ם יְרַקֵּדֽוּן׃

11 அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
11 They send forth their little ones like a flock; their children skip about,
11 மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை வெளியனுப்புகின்றனர்; அவர்களின் குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.

12יִ֭שְׂאוּ כְּתֹ֣ף וְכִנּ֑וֹר וְ֝יִשְׂמְח֗וּ לְק֣וֹל עוּגָֽב׃

12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
12 singing to the tambourine and lyre and making merry at the sound of the flute.
12 அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.

13יבלו בַטּ֣וֹב יְמֵיהֶ֑ם וּ֝בְרֶ֗גַע שְׁא֣וֹל יֵחָֽתּוּ׃

13 அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
13 They spend their days in prosperity and go down to Sheol in peace.a
13 அவர்கள் மகிழ்வில் தம் நாள்களைக் கழிக்கின்றனர்; அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.

14וַיֹּאמְר֣וּ לָ֭אֵל ס֣וּר מִמֶּ֑נּוּ וְדַ֥עַת דְּ֝רָכֶ֗יךָ לֹ֣א חָפָֽצְנוּ׃

14 அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
14 Yet they say to God: ‘Leave us alone! For we have no desire to know Your ways.
14 அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்; 'எம்மை விட்டு அகலும்; ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை;'

15מַה־שַׁדַּ֥י כִּֽי־נַֽעַבְדֶ֑נּוּ וּמַה־נּ֝וֹעִ֗יל כִּ֣י נִפְגַּע־בּֽוֹ׃

15 சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
15 Who is the Almighty, that we should serve Him, and what would we gain if we pray to Him?’
15 எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய? அவரை நோக்கி நாங்கள் மன்றாடுவதால் என்ன பயன்?

16הֵ֤ן לֹ֣א בְיָדָ֣ם טוּבָ֑ם עֲצַ֥ת רְ֝שָׁעִ֗ים רָ֣חֲקָה מֶֽנִּי׃

16 ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
16 Still, their prosperity is not in their own hands, so I stay far from the counsel of the wicked.
16 இதோ! அவர்களின் வளமை அவர்களின் கையில் இல்லை; எனவே, தீயோரின் ஆலோசனை எனக்குத் தொலையிலிருப்பதாக!

17כַּמָּ֤ה ׀ נֵר־רְשָׁ֘עִ֤ים יִדְעָ֗ךְ וְיָבֹ֣א עָלֵ֣ימוֹ אֵידָ֑ם חֲ֝בָלִ֗ים יְחַלֵּ֥ק בְּאַפּֽוֹ׃

17 எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
17 How often is the lamp of the wicked put out? Does disaster come upon them? Does God, in His anger, apportion destruction?
17 எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.

18יִהְי֗וּ כְּתֶ֥בֶן לִפְנֵי־ר֑וּחַ וּ֝כְמֹ֗ץ גְּנָבַ֥תּוּ סוּפָֽה׃

18 அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
18 Are they like straw before the wind, like chaff swept away by a storm?
18 அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்; சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.

19אֱל֗וֹהַּ יִצְפֹּן־לְבָנָ֥יו אוֹנ֑וֹ יְשַׁלֵּ֖ם אֵלָ֣יו וְיֵדָֽע׃

19 தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்துவைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
19 It is said that God lays up one’s punishment for his children. Let God repay the man himself, so he will know it.
19 அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்; அவர்களும் அதை உணர்வர்.

20יִרְא֣וּ עינו כִּיד֑וֹ וּמֵחֲמַ֖ת שַׁדַּ֣י יִשְׁתֶּֽה׃

20 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
20 Let his eyes see his own destruction; let him drink for himself the wrath of the Almighty.
20 அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்; எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.

21כִּ֤י מַה־חֶפְצ֣וֹ בְּבֵית֣וֹ אַחֲרָ֑יו וּמִסְפַּ֖ר חֳדָשָׁ֣יו חֻצָּֽצוּ׃

21 அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப்பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
21 For what does he care about his household after him, when the number of his months has run out?
21 அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின், அவர்களது இல்லத்தில் அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?

22הַלְאֵ֥ל יְלַמֶּד־דָּ֑עַת וְ֝ה֗וּא רָמִ֥ים יִשְׁפּֽוֹט׃

22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
22 Can anyone teach knowledge to God, since He judges those on high?
22 இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்? ஏனெனில், அவரே உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.

23זֶ֗ה יָ֭מוּת בְּעֶ֣צֶם תֻּמּ֑וֹ כֻּ֝לּ֗וֹ שַׁלְאֲנַ֥ן וְשָׁלֵֽיו׃

23 ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
23 One man dies full of vigor, completely secure and at ease.
23 சிலர் வளமையோடும் வலிமையோடும் நிறைவோடும் முழு அமைதியோடும் சாகின்றனர்.

24עֲ֭טִינָיו מָלְא֣וּ חָלָ֑ב וּמֹ֖חַ עַצְמוֹתָ֣יו יְשֻׁקֶּֽה׃

24 அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
24 His body is well nourished,b and his bones are rich with marrow.
24 அவர்களின் தொடைகள் கொழுப்பேறி உள்ளன; அவர்களின் எலும்புகளின் சோறு உலரவில்லை.

25וְזֶ֗ה יָ֭מוּת בְּנֶ֣פֶשׁ מָרָ֑ה וִלֹֽא־אָ֝כַ֗ל בַּטּוֹבָֽה׃

25 வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல் மனக்கிலேசத்தோடே சாகிறான்.
25 Yet another man dies in the bitterness of his soul, having never tasted prosperity.
25 வேறு சிலர், கசந்த உள்ளத்துடன் இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;

26יַ֭חַד עַל־עָפָ֣ר יִשְׁכָּ֑בוּ וְ֝רִמָּ֗ה תְּכַסֶּ֥ה עֲלֵיהֶֽם׃

26 இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
26 But together they lie down in the dust, and worms cover them both.
26 புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்; புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

27הֵ֣ן יָ֭דַעְתִּי מַחְשְׁבֽוֹתֵיכֶ֑ם וּ֝מְזִמּ֗וֹת עָלַ֥י תַּחְמֹֽסוּ׃

27 இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயாமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
27 Behold, I know your thoughts full well, the schemes by which you would wrong me.
27 இதோ! உம் எண்ணங்களையும் எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும் நான் அறிவேன்.

28כִּ֤י תֹֽאמְר֗וּ אַיֵּ֥ה בֵית־נָדִ֑יב וְ֝אַיֵּ֗ה אֹ֤הֶל ׀ מִשְׁכְּנ֬וֹת רְשָׁעִֽים׃

28 பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே என்று சொல்லுகிறீர்கள்.
28 For you say, ‘Where now is the nobleman’s house, and where are the tents in which the wicked dwell?’
28 ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்; 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'

29הֲלֹ֣א שְׁ֭אֶלְתֶּם ע֣וֹבְרֵי דָ֑רֶךְ וְ֝אֹתֹתָ֗ם לֹ֣א תְנַכֵּֽרוּ׃

29 வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா? அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
29 Have you never asked those who travel the roads? Do you not accept their reports?
29 வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா? அவர்கள் அறிவித்ததை நீங்கள் கேட்கவில்லையா?

30כִּ֤י לְי֣וֹם אֵ֭יד יֵחָ֣שֶׂךְ רָ֑ע לְי֖וֹם עֲבָר֣וֹת יוּבָֽלוּ׃

30 துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
30 Indeed, the evil man is spared from the day of calamity, delivered from the day of wrath.
30 தீயோர் அழிவின் நாளுக்கென விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில் அவர்கள் விடுவிக்கப்படுவாரா?

31מִֽי־יַגִּ֣יד עַל־פָּנָ֣יו דַּרְכּ֑וֹ וְהֽוּא־עָ֝שָׂ֗ה מִ֣י יְשַׁלֶּם־לֽוֹ׃

31 அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?
31 Who denounces his behavior to his face? Who repays him for what he has done?
31 யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்? யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?

32וְ֭הוּא לִקְבָר֣וֹת יוּבָ֑ל וְֽעַל־גָּדִ֥ישׁ יִשְׁקֽוֹד׃

32 அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
32 He is carried to the grave, and watch is kept over his tomb.
32 இருப்பினும், கல்லறைக்கு அவர்கள் கொண்டுவரப்படுவர்; அவர்களின் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.

33מָֽתְקוּ־ל֗וֹ רִגְבֵ֫י נָ֥חַל וְ֭אַחֲרָיו כָּל־אָדָ֣ם יִמְשׁ֑וֹךְ וּ֝לְפָנָ֗יו אֵ֣ין מִסְפָּֽר׃

33 பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.
33 The clods of the valley are sweet to him; everyone follows behind him, and those before him are without number.
33 பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்; மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்; அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.

34וְ֭אֵיךְ תְּנַחֲמ֣וּנִי הָ֑בֶל וּ֝תְשׁ֥וּבֹתֵיכֶ֗ם נִשְׁאַר־מָֽעַל׃

34 நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.
34 So how can you comfort me with empty words? For your answers remain full of falsehood.”
34 அப்படியிருக்க, வெற்றுமொழியால் நீர் என்னைத் தேற்றுவதெப்படி? உமது மறுமொழி முற்றிலும் பொய்யே!


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
13 a Or in an instant
24 b Literally His pails are full of milk

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.