பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 22 | Job 22
Eliphaz: Can a Man Be of Use to God?
1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
1 Then Eliphaz the Temanite replied:
1 பின்னர் தேமானியனான எலிப்பாசு பேசத் தொடங்கினான்:
2 ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
2 “Can a man be of use to God? Can even a wise man benefit Him?
2 மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா? மதிநுட்பம் உடையவரால் அவருக்குப் பயன் உண்டா?
3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
3 Does it delight the Almighty that you are righteous? Does He profit if your ways are blameless?
3 நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா?1
1 யோபு 35:6-8.
4 அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
4 Is it for your reverence that He rebukes you and enters into judgment against you?
4 நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதனை முன்னிட்டா உம்மைத் தீர்ப்பிடுகிறார்?
5 உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
5 Is not your wickedness great? Are not your iniquities endless?
5 உமது தீமை பெரிதல்லவா? உமது கொடுமைக்கு முடிவில்லையா?
6 முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
6 For you needlessly demanded security from your brothers and deprived the naked of their clothing.
6 ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!
7 விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
7 You gave no water to the weary and withheld food from the famished,
7 தாகமுள்ளோர்க்குக் குடிக்கத் தண்ணீர் தரவில்லை; பசித்தோர்க்கு உணவு கொடுக்க முன்வரவில்லை.
8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
8 while the land belonged to a mighty man, and a man of honor lived on it.
8 வலிய மனிதராகிய உமக்கு வையகம் சொந்தமாயிற்று;. உம் தயவு பெற்றவர்க்கே அது குடியிருப்பாயிற்று.
9 விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
9 You sent widows away empty-handed, and the strength of the fatherless was crushed.
9 விதவைகளை நீர் வெறுங்கையராய் விரட்டினீர்; .அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.
10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
10 Therefore snares surround you, and sudden peril terrifies you;
10 ஆகையால், கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன; கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.
11 நீர் பார்க்கக் கூடாதபடிக்கு இருள் வந்தது; ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
11 it is so dark you cannot see, and a flood of water covers you.
11 நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது; நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.
12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
12 Is not God as high as the heavens? Look at the highest stars, how lofty they are!
12 உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!
13 நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
13 Yet you say: ‘What does God know? Does He judge through thick darkness?
13 ஆனால், நீர் சொல்கின்றீர்; 'இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?
14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
14 Thick clouds veil Him so He does not see us as He traverses the vault of heaven.a’
14 அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது; அவர் வான்தளத்தில் உலவுகின்றார்'.
15 அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
15 Will you stay on the ancient path that wicked men have trod?
15 பாதகர் சென்ற பழைய நெறியில் நீரும் செல்ல விழைகின்றீரோ!
16 காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
16 They were snatched away before their time, and their foundations were swept away by a flood.
16 நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்; அவர்கள் அடித்தளத்தை வெள்ளம் அடித்துச் சென்றது.
17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
17 They said to God, ‘Depart from us. What can the Almighty do to us?’
17 அவர்கள் இறைவனிடம், 'எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்பர்.
18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
18 But it was He who filled their houses with good things; so I stay far from the counsel of the wicked.
18 இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்; . எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக!
19 எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல் அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
19 The righteous see it and are glad; the innocent mock them:
19 நேர்மையுள்ளோர் அதைக் கண்டு மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர் அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;
20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
20 ‘Surely our foes are destroyed, and fire has consumed their excess.’
20 'இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்; அவர்களின் சேமிப்பு தீயால் விழுங்கப்பட்டது' என்கின்றனர்.
21 நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
21 Reconcile now and be at peace with Him; thereby good will come to you.
21 இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி; அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.
22 அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.
22 Receive instruction from His mouth, and lay up His words in your heart.
22 அவர் வாயினின்று அறிவுரை பெறுக; அவர்தம் மொழிகளை உம் நெஞ்சில் பொறித்திடுக;
23 நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால் திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
23 If you return to the Almighty, you will be restored. If you remove injustice from your tents
23 நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!
24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
24 and consign your gold to the dust and the gold of Ophir to the stones of the ravines,
24 பொன்னைப் புழுதியிலே எறிந்து, ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!
25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும் உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.
25 then the Almighty will be your gold and the finest silver for you.
25 எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும், வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.
26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
26 Surely then you will delight in the Almighty and lift up your face to God.
26 அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.
27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
27 You will pray to Him, and He will hear you, and you will fulfill your vows.
27 நீர் அவரிடம் மன்றாடுவீர்; அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.
28 நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
28 Your decisions will be carried out, and light will shine on your ways.
28 நீர் நினைப்பது கைகூடும்; உம் வழிகள் ஒளிமயமாகும்.
29 மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
29 When men are brought low and you say, ‘Lift them up!’ then He will save the lowly.
29 ஏனெனில், அவர் செருக்குற்றோரின் ஆணவத்தை அழிக்கின்றார்; தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.2
2 'ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்படும்போது,அவர்களை உயர்த்தும், என்பீர்; அவரும் அவர்களைத் தாழ்நிலையினின்று விடுவிப்பார்' என்பது எபிரேய பாடம்.
30 குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
30 He will deliver even one who is not innocent, rescuing him through the cleanness of your hands.”
30 குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்; அவர்கள் உம் கைகளின் தூய்மையால் மீட்கப்படுவர்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
14 a Or heaven’s horizon or the circle of the sky
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.