பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 23 | Job 23
Job Longs for God
1 யோபு பிரதியுத்தரமாக:
1 Then Job answered:
1 யோபு அதற்கு உரைத்த மறுமொழி:
2 இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
2 “Even today my complaint is bitter. His hand is heavy despite my groaning.
2 இன்றுகூட என் முறைப்பாடு கசப்பாயுள்ளது; நான் வேதனைக் குரல் எழுப்பியும், என் மேல் அவரது* கை பளுவாயுள்ளது.*
* 'எனது' என்பது எபிரேய பாடம்.
3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து,
3 If only I knew where to find Him, so that I could go to His seat.
3 அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென நான் அறிய யாராவது உதவுவாரானால், நான் அவர் இருக்கையை அணுகுவேன்.
4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
4 I would plead my case before Him and fill my mouth with arguments.
4 என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்; என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.
5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
5 I would learn how He would answer, and consider what He would say.
5 அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு என்ன சொல்வார் என்பதையும் நான் புரிந்து கொள்வேன்.
6 அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
6 Would He contend with me in His great power? No, He would certainly take note of me.
6 மாபெரும் வல்லமையுடன் அவர் என்னோடு வழக்காடுவாரா? இல்லை; அவர் கண்டிப்பாக எனக்குச் செவி கொடுப்பார்.
7 அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.
7 Then an upright man could reason with Him, and I would be delivered forever from my Judge.
7 அங்கே நேர்மையானவன் அவரோடு வழக்காடலாம்; நானும் என் நடுவரால் முழுமையாக விடுவிக்கப்படுவேன்.
8 இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
8 If I go east, He is not there, and if I go west, I cannot find Him.
8 கிழக்கே நான் சென்றாலும் அவர் அங்கில்லை; மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.
9 இடதுபுறத்தில் அவர் கிரியைசெய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
9 When He is at work in the north, I cannot behold Him; when He turns to the south, I cannot see Him.
9 இடப்புறம் தேடினும் செயல்படுகிற அவரைக் காணேன்; வலப்புறம் திரும்பினும் நான் அவரைப் பார்த்தேனில்லை.
10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
10 Yet He knows the way I have taken; when He has tested me, I will come forth as gold.
10 ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்.
11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
11 My feet have followed in His tracks; I have kept His way without turning aside.
11 அவர் அடிச்சுவடுகளை என் கால்கள் பின்பற்றின; அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.
12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
12 I have not departed from the command of His lips; I have treasured the words of His mouth more than my daily bread.
12 அவர் நா உரைத்த ஆணையினின்று நான் விலகவில்லை; அவர்தம் வாய்மொழிகளை அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.
13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
13 But He is unchangeable, and who can oppose Him? He does what He desires.
13 ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால், யாரால் மாற்ற முடியும்? ஏனெனில், எதை அவர் விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.
14 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
14 For He carries out His decree against me, and He has many such plans.
14 ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை அவர் நிறைவேற்றுவார்; இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.
15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
15 Therefore I am terrified in His presence; when I consider this, I fear Him.
15 ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்; அவரைப்பற்றி நினைக்கையில் திகிலடைகின்றேன்.
16 தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
16 God has made my heart faint; the Almighty has terrified me.
16 இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்; எல்லாம் வல்லவர் என்னைக் கலங்கச் செய்தார்.
17 அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.
17 Yet I am not silenced by the darkness, by the thick darkness that covers my face.
17 ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது; காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.