பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 24 | Job 24
Job: Judgment for the Wicked
1 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
1 “Why does the Almighty not reserve times for judgment? Why may those who know Him never see His days?
1 குறித்த காலத்தை எல்லாம் வல்லவர் ஏன் வெளிப்படுத்தவில்லை? அவரை அறிந்தோரும் ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?
2 சிலர் எல்லைக் குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய் பட்சிக்கிறார்கள்.
2 Men move boundary stones; they pasture stolen flocks.
2 தீயோர் எல்லைக்கல்லை எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக் கொள்ளையிட்டு மேய்கின்றனர்.
3 தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
3 They drive away the donkey of the fatherless and take the widow’s ox in pledge.
3 அனாதையின் கழுதையை ஓட்டிச் செல்கின்றனர். விதவையின் எருதை அடகாய்க் கொள்கின்றனர்.
4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் ஏகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக, எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள்.
4 They push the needy off the road and force all the poor of the land into hiding.
4 ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர். நாட்டின் வறியோர் ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.
5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
5 Indeed, like wild donkeys in the desert, the poor go to work foraging for food; the wasteland is food for their children.
5 ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க் காட்டுக் கழுதையெனப் பாலைநிலத்தில் அலைகின்றனர்; பாலைநிலத்தில் கிடைப்பதே அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.
6 துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து அவனுடைய திராட்சத் தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
6 They gather fodder in the fields and glean the vineyards of the wicked.
6 கயவரின் கழனியில் அவர்கள் சேகரிக்கின்றனர்; பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில் அவர்கள் பொறுக்குகின்றனர்.
7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால் வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,
7 Without clothing, they spend the night naked; they have no covering against the cold.
7 ஆடையின்றி இரவில் வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்; வாடையில் போர்த்திக் கொள்ளப் போர்வையின்றி இருக்கின்றனர்;
8 மலைகளிலிருந்து வரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே அண்டிக்கொள்ளுகிறார்கள்.
8 Drenched by mountain rains, they huddle against the rocks for want of shelter.
8 மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்; உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;
9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப் பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள்.
9 The fatherless infant is snatched from the breast; the nursing child of the poor is seized for a debt.
9 தந்தையிலாக் குழந்தையைத் தாயினின்று பறிக்கின்றனர்; ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.
10 அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
10 Without clothing, they wander about naked. They carry the sheaves, but still go hungry.
10 ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்; ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.
11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும் பண்ணுகிறார்கள்.
11 They crush olives within their walls; they tread the winepresses, but go thirsty.
11 ஒலிவத் தோட்டத்தில் எண்ணெய் ஆட்டுகின்றனர்; திராட்சை பிழிந்தும் தாகத்தோடு இருக்கின்றனர்.
12 ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.
12 From the city, men groan, and the souls of the wounded cry out, yet God charges no one with wrongdoing.
12 நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது; காயமடைந்தோர் உள்ளம் உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
13 அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிக்காமலும் இருக்கிறார்கள்.
13 Then there are those who rebel against the light, not knowing its ways or staying on its paths.
13 இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்; இவர்கள் அதன் வழியை அறியார்; இவர்கள் அதன் நெறியில் நில்லார்.
14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
14 When daylight is gone, the murderer rises to kill the poor and needy; in the night he is like a thief.
14 எழுவான் கொலைஞன் புலரும் முன்பே; ஏழை எளியோரைக் கொன்று குவிக்க; இரவில் திரிவான் திருடன் போல.
15 விபசாரனுடைய கண் மாலைமயங்குகிற வேளைக்குக் காத்திருந்து, என்னை ஒரு கணம் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
15 The eye of the adulterer watches for twilight. Thinking, ‘No eye will see me,’ he covers his face.
15 காமுகனின் கண் கருக்கலுக்காய்க் காத்திருக்கும்; கண்ணெதுவும் என்னைக் காணாது என்றெண்ணி; முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!
16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள்.
16 In the dark they dig through houses; by day they shut themselves in, never to experience the light.
16 இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்; பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்; ஒளியினை இவர்கள் அறியாதவரே!
17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
17 For to them, deep darkness is their morning; surely they are friends with the terrors of darkness!
17 ஏனென்றால் இவர்களுக்கு நிழல் காலைபோன்றது; சாவின் திகில் இவர்களுக்குப் பழக்கமானதே!
18 நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால் அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை.
18 They are but foam on the surface of the water; their portion of the land is cursed, so that no one turns toward their vineyards.
18 வெள்ளத்தில் விரைந்தோடும் வைக்கோல் அவர்கள்; பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது; அவர்தம் திராட்சைத் தோட்டத்தை எவரும் அணுகார்.
19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
19 As drought and heat consume the melting snow, so Sheol steals those who have sinned.
19 வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்; தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.
20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
20 The womb forgets them; the worm feeds on them; they are remembered no more. So injustice is like a broken tree.
20 தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்; புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும். அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.
21 பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
21 They prey on the barren and childless, and show no kindness to the widow.
21 ஏனெனில், மகவிலா மலடியை இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு நன்மையைக் கருதினாரில்லை.
22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.
22 Yet by His power, God drags away the mighty; though rising up, they have no assurance of life.
22 இருப்பினும், கடவுள் தம் வலிமையால் வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்; அவர்கள் தம் வாழ்வில் நம்பிக்கையோடு இருந்தாலும் நிலைக்கமாட்டார்கள்.
23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
23 He gives them a sense of security, but His eyes are on their ways.
23 அவர் அவர்களைப் பாதுகாப்புடன் வாழவிடுகிறார்; அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்; இருப்பினும் அவரது கண் அவர்கள் நடத்தைமேல் உள்ளது.
24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து காணாமற்போய், தாழ்த்தப்பட்டு மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
24 They are exalted for a moment, then they are gone; they are brought low and gathered up like all others; they are cut off like heads of grain.
24 அவர்கள் உயர்த்தப்பட்டனர்; அது ஒரு நொடிப்பொழுதே; அதன்பின் இல்லாமற் போயினர்; எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்; கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.
25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.
25 If this is not so, then who can prove me a liar and reduce my words to nothing?”
25 இப்படி இல்லையெனில், என்னைப் பொய்யன் என்றோ, என் மொழி தவறு என்றோ, எண்பிப்பவன் எவன்?
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.