பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 28 | Job 28
Where Can Wisdom Be Found?
1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.
1 “Surely there is a mine for silver and a place where gold is refined.
1 வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
2 Iron is taken from the earth, and copper is smelted from ore.
2 மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3 மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்
3 Man puts an end to the darkness; he probes the farthest recesses for ore in deepest darkness.
3 மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4 கடக்கக் கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.
4 Far from human habitation he cuts a shaft in places forgotten by the foot of man. Far from men he dangles and sways.
4 மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.
5 பூமியின்மேல் ஆகாரம் விளையும், அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும்.
5 Food may come from the earth, but from below it is transformed as by fire.
5 மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6 அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன் பொடிகளும் உண்டாயிருக்கும்.
6 Its rocks are the source of sapphires, containing flecks of gold.
6 நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்; பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7 ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லுூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
7 No bird of prey knows that path; no falcon’s eye has seen it.
7 அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது; கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8 துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
8 Proud beasts have never trodden it; no lion has ever prowled over it.
8 வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை; சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9 அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
9 The miner strikes the flint; he overturns mountains at their base.
9 கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.
10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
10 He hews out channels in the rocks, and his eyes spot every treasure.
10 பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.
11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
11 He stops upa the sources of the streams to bring what is hidden to light.
11 ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்; மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
12 But where can wisdom be found, and where does understanding dwell?
12 ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13 அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
13 No man can know its value, nor is it found in the land of the living.
13 மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
14 The ocean depths say, ‘It is not in me,’ while the sea declares, ‘It is not with me.’
14 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்; 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
15 It cannot be bought with gold, nor can its price be weighed out in silver.
15 தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும் இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
16 It cannot be valued in the gold of Ophir, in precious onyx or sapphire.
16 ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக் கூடாது.
17 Neither gold nor crystal can compare to it, nor jewels of fine gold be exchanged for it.
17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
18 Coral and quartz are unworthy of mention; the price of wisdom is beyond rubies.
18 மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
19 Topaz from Cushb cannot compare to it, nor can it be valued in pure gold.
19 எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
20 From where then does wisdom come, and where does understanding dwell?
20 அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21 அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
21 It is hidden from the eyes of every living thing and concealed from the birds of the air.
21 வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
22 நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
22 Abaddonc and Death say, ‘We have heard a rumor about it.’
22 படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
23 தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
23 But God understands its way, and He knows its place.
23 அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24 அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
24 For He looks to the ends of the earth and sees everything under the heavens.
24 ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25 அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
25 When God fixed the weight of the wind and measured out the waters,
25 காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
26 when He set a limit for the rain and a path for the thunderbolt,
26 மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27 அவர் அதை பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
27 then He looked at wisdom and appraised it; He established it and searched it out.
27 அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28 மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.
28 And He said to man, ‘Behold, the fear of the Lord, that is wisdom, and to turn away from evil is understanding.’”
28 அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.*
* திபா 111:10; நீமொ 1:7; 9:10.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
11 a Hebrew; LXX and Vulgate He searches
19 b That is, the upper Nile region
22 c Abaddon means Destruction .
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.