பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 31 | Job 31

Job’s Final Appeal

1בְּ֭רִית כָּרַ֣תִּי לְעֵינָ֑י וּמָ֥ה אֶ֝תְבּוֹנֵ֗ן עַל־בְּתוּלָֽה׃

1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
1 “I have made a covenant with my eyes. How then could I gaze with desire at a virgin?
1 கண்களோடு நான் உடன்படிக்கை செய்துகொண்டேன்; பின்பு, கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?

2וּמֶ֤ה ׀ חֵ֣לֶק אֱל֣וֹהַּ מִמָּ֑עַל וְֽנַחֲלַ֥ת שַׁ֝דַּ֗י מִמְּרֹמִֽים׃

2 அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும் உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
2 For what is the allotment of God from above, or the heritage from the Almighty on high?
2 வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன? விசும்பினின்று எல்லாம் வல்லவர் விதிக்கும் உரிமையென்ன?

3הֲלֹא־אֵ֥יד לְעַוָּ֑ל וְ֝נֵ֗כֶר לְפֹ֣עֲלֵי אָֽוֶן׃

3 மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
3 Does not disaster come to the unjust and calamity to the workers of iniquity?
3 தீயோர்க்கு வருவது கேடு அல்லவா? கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?

4הֲלֹא־ה֭וּא יִרְאֶ֣ה דְרָכָ֑י וְֽכָל־צְעָדַ֥י יִסְפּֽוֹר׃

4 அவர் என் வழிகளைப் பார்த்து என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
4 Does He not see my ways and count my every step?
4 என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா? என் காலடிகளை அவர் கணக்கிடுவதில்லையா?

5אִם־הָלַ֥כְתִּי עִם־שָׁ֑וְא וַתַּ֖חַשׁ עַל־מִרְמָ֣ה רַגְלֽ͏ִי׃

5 நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
5 If I have walked in falsehood or my foot has rushed to deceit,
5 பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால், வஞ்சகத்தை நோக்கி என் காலடி விரைந்திருந்தால்,

6יִשְׁקְלֵ֥נִי בְמֹאזְנֵי־צֶ֑דֶק וְיֵדַ֥ע אֱ֝ל֗וֹהַּ תֻּמָּתִֽי׃

6 சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
6 let God weigh me with honest scales, that He may know my integrity.
6 சீர்தூக்கும் கோலில் எனை அவர் நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள் என் நேர்மையை அறியட்டும்.

7אִ֥ם תִּטֶּ֣ה אַשֻּׁרִי֮ מִנִּ֢י הַ֫דָּ֥רֶךְ וְאַחַ֣ר עֵ֭ינַי הָלַ֣ךְ לִבִּ֑י וּ֝בְכַפַּ֗י דָּ֣בַק מֻאוּֽם׃

7 என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
7 If my steps have turned from the path, if my heart has followed my eyes, or if impurity has stuck to my hands,
7 நெறிதவறி என் காலடி போயிருந்தால், கண்ணில் பட்டதையெல்லாம் என் உள்ளம் நாடியிருந்தால், என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,

8אֶ֭זְרְעָה וְאַחֵ֣ר יֹאכֵ֑ל וְֽצֶאֱצָאַ֥י יְשֹׁרָֽשׁוּ׃

8 அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
8 then may another eat what I have sown, and may my crops be uprooted.
8 நான் விதைக்க, இன்னொருவர் அதனை உண்ணட்டும்; எனக்கென வளர்பவை வேரொடு பிடுங்கப்படட்டும்.

9אִם־נִפְתָּ֣ה לִ֭בִּי עַל־אִשָּׁ֑ה וְעַל־פֶּ֖תַח רֵעִ֣י אָרָֽבְתִּי׃

9 என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டனால்,
9 If my heart has been enticed by my neighbor’s wife, or I have lurked at his door,
9 பெண்ணில் என் மனம் மயங்கியிருந்திருந்தால்; பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,

10תִּטְחַ֣ן לְאַחֵ֣ר אִשְׁתִּ֑י וְ֝עָלֶ֗יהָ יִכְרְע֥וּן אֲחֵרִֽין׃

10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
10 then may my own wife grind grain for another, and may other men sleep with her.
10 என் மனைவி மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்; மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.

11כִּי־הוא זִמָּ֑ה והיא עָוֺ֥ן פְּלִילִֽים׃

11 அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
11 For that would be a heinous crime, an iniquity to be judged.
11 ஏனெனில், அது தீச்செயல்; நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.

12כִּ֤י אֵ֣שׁ הִ֭יא עַד־אֲבַדּ֣וֹן תֹּאכֵ֑ל וּֽבְכָל־תְּב֖וּאָתִ֣י תְשָׁרֵֽשׁ׃

12 அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
12 For it is a fire that burns down to Abaddon;a it would root out my entire harvest.
12 ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும் நெருப்பு அது; வருவாய் அனைத்தையும் அடியோடு அழிக்கும் தீ அது.

13אִם־אֶמְאַ֗ס מִשְׁפַּ֣ט עַ֭בְדִּי וַאֲמָתִ֑י בְּ֝רִבָ֗ם עִמָּדִֽי׃

13 என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
13 If I have rejected the cause of my manservant or maidservant when they made a complaint against me,
13 என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,

14וּמָ֣ה אֶֽ֭עֱשֶׂה כִּֽי־יָק֣וּם אֵ֑ל וְכִֽי־יִ֝פְקֹ֗ד מָ֣ה אֲשִׁיבֶֽנּוּ׃

14 தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.
14 what will I do when God rises to judge? How will I answer when called to account?
14 இறைவன் எனக்கெதிராய் எழும்போது நான் என்ன செய்வேன்? அவர் என்னிடம் கணக்குக் கேட்டால் நான் என்ன பதிலளிப்பேன்?

15הֲ‍ֽ֝לֹא־בַ֭בֶּטֶן עֹשֵׂ֣נִי עָשָׂ֑הוּ וַ֝יְכֻנֶ֗נּוּ בָּרֶ֥חֶם אֶחָֽד׃

15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?
15 Did not He who made me in the womb also make them? Did not the same One form us in the womb?
15 கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே அவனையும் உருவாக்கினார். கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர் அவர் ஒருவரே அல்லவோ?

16אִם־אֶ֭מְנַע מֵחֵ֣פֶץ דַּלִּ֑ים וְעֵינֵ֖י אַלְמָנָ֣ה אֲכַלֶּֽה׃

16 எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
16 If I have denied the desires of the poor or allowed the widow’s eyes to fail,
16 ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது இருந்தேனா? கைப்பெண்டிரின் கண்கள் பூத்துப்போகச் செய்தேனா?

17וְאֹכַ֣ל פִּתִּ֣י לְבַדִּ֑י וְלֹא־אָכַ֖ל יָת֣וֹם מִמֶּֽנָּה׃

17 தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
17 if I have eaten my morsel alone, not sharing it with the fatherless—
17 என் உணவை நானே தனித்து உண்டேனா? தாய் தந்தையற்றோர் அதில் உண்ணாமல் போயினரா?

18כִּ֣י מִ֭נְּעוּרַי גְּדֵלַ֣נִי כְאָ֑ב וּמִבֶּ֖טֶן אִמִּ֣י אַנְחֶֽנָּה׃

18 என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன்.
18 though from my youth I reared him as would a father, and from my mother’s womb I guided the widow—
18 ஏனெனில், குழந்தைப் பருவமுதல் அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார் ; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.

19אִם־אֶרְאֶ֣ה א֖וֹבֵד מִבְּלִ֣י לְב֑וּשׁ וְאֵ֥ין כְּ֝ס֗וּת לָאֶבְיֽוֹן׃

19 ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாயிருக்கிறதையும் நான் கண்டபோது,
19 if I have seen one perish for lack of clothing, or a needy man without a cloak,
19 ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ பார்த்துக்கொண்டு இருந்தேனா?

20אִם־לֹ֣א בֵרֲכ֣וּנִי חלצו וּמִגֵּ֥ז כְּ֝בָשַׂי יִתְחַמָּֽם׃

20 அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
20 if his heart has not blessed meb for warming him with the fleece of my sheep,
20 என் ஆட்டுமுடிக் கம்பளியினால் குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல் என்னைப் பாராட்டவில்லையா?

21אִם־הֲנִיפ֣וֹתִי עַל־יָת֣וֹם יָדִ֑י כִּֽי־אֶרְאֶ֥ה בַ֝שַּׁ֗עַר עֶזְרָתִֽי׃

21 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
21 if I have lifted up my hand against the fatherless because I saw that I had support in the gate,
21 எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு எதிராகக் கைஓங்கினேனா?

22כְּ֭תֵפִי מִשִּׁכְמָ֣ה תִפּ֑וֹל וְ֝אֶזְרֹעִ֗י מִקָּנָ֥ה תִשָּׁבֵֽר׃

22 என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.
22 then may my arm fall from my shoulder and be torn from its socket.
22 அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு தோளிலிருந்து நெகிழ்வதாக! முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!

23כִּ֤י פַ֣חַד אֵ֭לַי אֵ֣יד אֵ֑ל וּ֝מִשְּׂאֵת֗וֹ לֹ֣א אוּכָֽל׃

23 தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக் கூடாது என்றும் எனக்குப் பயங்கரமாயிருந்தது.
23 For calamity from God terrifies me, and His splendor I cannot overpower.
23 ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர் எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன் என்னால் எதுவும் இயலாது.

24אִם־שַׂ֣מְתִּי זָהָ֣ב כִּסְלִ֑י וְ֝לַכֶּ֗תֶם אָמַ֥רְתִּי מִבְטַחִֽי׃

24 நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
24 If I have put my trust in gold or called pure gold my security,
24 தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில், 'பசும்பொன் என்உறுதுணை ' என்று பகர்ந்திருப்பேனாகில்,

25אִם־אֶ֭שְׂמַח כִּי־רַ֣ב חֵילִ֑י וְכִֽי־כַ֝בִּ֗יר מָצְאָ֥ה יָדִֽי׃

25 என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
25 if I have rejoiced in my great wealth because my hand had gained so much,
25 செல்வப் பெருக்கினால், அல்லது கை நிறையப் பெற்றதால் . நான் மகிழ்திருப்பேனாகில்,

26אִם־אֶרְאֶ֣ה א֖וֹר כִּ֣י יָהֵ֑ל וְ֝יָרֵ֗חַ יָקָ֥ר הֹלֵֽךְ׃

26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும் நான் அதை நோக்கி:
26 if I have beheld the sunc in its radiance or the moon moving in splendor,
26 சுடர்விடும் கதிரவனையும் ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,

27וַיִּ֣פְתְּ בַּסֵּ֣תֶר לִבִּ֑י וַתִּשַּׁ֖ק יָדִ֣י לְפִֽי׃

27 என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,
27 so that my heart was secretly enticed and my hand threw a kiss from my mouth,
27 என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால், அல்லது, என் வாயில் கை வைத்து முத்தமிட்டிருந்தால்,

28גַּם־ה֖וּא עָוֺ֣ן פְּלִילִ֑י כִּֽי־כִחַ֖שְׁתִּי לָאֵ֣ל מִמָּֽעַל׃

28 இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
28 this would also be an iniquity to be judged, for I would have denied God on high.
28 அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய. பழியாய் இருக்கும்; ஏனெனில், அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.

29אִם־אֶ֭שְׂמַח בְּפִ֣יד מְשַׂנְאִ֑י וְ֝הִתְעֹרַ֗רְתִּי כִּֽי־מְצָ֥אוֹ רָֽע׃

29 என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
29 If I have rejoiced in my enemy’s ruin, or exulted when evil befell him—
29 என்னை வெறுப்போரின் அழிவில் நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?

30וְלֹא־נָתַ֣תִּי לַחֲטֹ֣א חִכִּ֑י לִשְׁאֹ֖ל בְּאָלָ֣ה נַפְשֽׁוֹ׃

30 அவன் ஜீவனுக்குச் சாபத்தைக்கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
30 I have not allowed my mouth to sin by asking for his life with a curse—
30 சாகும்படி அவர்களைச் சபித்து, என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.

31אִם־לֹ֣א אָ֭מְרוּ מְתֵ֣י אָהֳלִ֑י מִֽי־יִתֵּ֥ן מִ֝בְּשָׂר֗וֹ לֹ֣א נִשְׂבָּֽע׃

31 அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
31 if the men of my house have not said, ‘Who is there who has not had his fill?’—
31 'இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர் யாரேனும் உண்டோ?' என்று என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?

32בַּ֭חוּץ לֹא־יָלִ֣ין גֵּ֑ר דְּ֝לָתַ֗י לָאֹ֥רַח אֶפְתָּֽח׃

32 பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
32 but no stranger had to lodge on the street, for my door has been open to the traveler—
32 வீதியில் வேற்றார் உறங்கியதில்லை; ஏனெனில், வழிப்போக்கருக்கு என் வாயிலைத் திறந்து விட்டேன்.

33אִם־כִּסִּ֣יתִי כְאָדָ֣ם פְּשָׁעָ֑י לִטְמ֖וֹן בְּחֻבִּ֣י עֲוֺֽנִי׃

33 நான் ஆதாமைப்போல என்மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே வைத்துவைத்தேனோ?
33 if I have covered my transgressions like Adamd by hiding my guilt in my heart,
33 என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து, என் குற்றங்களை மானிடர்போல் மறைத்ததுண்டா?

34כִּ֤י אֶֽעֱר֨וֹץ ׀ הָ֘מ֤וֹן רַבָּ֗ה וּבוּז־מִשְׁפָּח֥וֹת יְחִתֵּ֑נִי וָ֝אֶדֹּ֗ם לֹא־אֵ֥צֵא פָֽתַח׃

34 திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ?
34 because I greatly feared the crowds and the contempt of the clans terrified me, so that I kept silent and would not go outside—
34 பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி, உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி, நான் வாளாவிருந்ததுண்டா? கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?

35מִ֤י יִתֶּן־לִ֨י ׀ שֹׁ֘מֵ֤עַֽ לִ֗י הֶן־תָּ֭וִי שַׁדַּ֣י יַעֲנֵ֑נִי וְסֵ֥פֶר כָּ֝תַ֗ב אִ֣ישׁ רִיבִֽי׃

35 ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
35 (Oh, that I had one to hear me! Here is my signature. Let the Almighty answer me; let my accuser compose an indictment.
35 என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால் எத்துணை நன்று! இதோ! என் கையொப்பம்; எல்லாம் வல்லவர் எனக்குப் பதில் அளிக்கட்டும்! என் எதிராளி வழக்கை எழுதட்டும்.

36אִם־לֹ֣א עַל־שִׁ֭כְמִי אֶשָּׂאֶ֑נּוּ אֶֽעֶנְדֶ֖נּוּ עֲטָר֣וֹת לִֽי׃

36 அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே.
36 Surely I would carry it on my shoulder and wear it like a crown.
36 உண்மையாகவே அதை என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்! எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.

37מִסְפַּ֣ר צְ֭עָדַי אַגִּידֶ֑נּוּ כְּמוֹ־נָ֝גִ֗יד אֲקָרֲבֶֽנּוּ׃

37 அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
37 I would give account of all my steps; I would approach Him like a prince.)—
37 என் நடத்தை முழுவதையுமே அவருக்கு எடுத்துரைப்பேன்; இளவரசனைப்போல் அவரை அணுகிச் செல்வேன்.

38אִם־עָ֭לַי אַדְמָתִ֣י תִזְעָ֑ק וְ֝יַ֗חַד תְּלָמֶ֥יהָ יִבְכָּיֽוּן׃

38 எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
38 if my land cries out against me and its furrows weep together,
38 எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால், அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,

39אִם־כֹּ֭חָהּ אָכַ֣לְתִּי בְלִי־כָ֑סֶף וְנֶ֖פֶשׁ בְּעָלֶ֣יהָ הִפָּֽחְתִּי׃

39 கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
39 if I have devoured its produce without payment or broken the spirit of its tenants,
39 விலைகொடாமல் அதன் விளைச்சலை உண்டிருந்தால், அதன் உரிமையாளரின் உயிரைப் போக்கியிருந்தால்,

40תַּ֤חַת חִטָּ֨ה ׀ יֵ֥צֵא ח֗וֹחַ וְתַֽחַת־שְׂעֹרָ֥ה בָאְשָׁ֑ה תַּ֝֗מּוּ דִּבְרֵ֥י אִיּֽוֹב׃

40 அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.
40 then let briers grow instead of wheat and stinkweed instead of barley.” Thus conclude the words of Job.
40 கோதுமைக்குப் பதில் முட்களும், வாற்கோதுமைக்கு பதில் களையும் வளரட்டும். யோபின் மொழிகள் முடிவுற்றன.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Footnotes:
12 a Abaddon  means Destruction .
20 b Hebrew if his loins have not blessed me
26 c Hebrew the light
33 d Or like men

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.