பரிசுத்த இணை’ய இடைவரி வேதாகமம்®

Job  யோபு  אִיּוֹב

அதிகாரம்  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

யோபு 32 | Job 32

Elihu Rebukes Job’s Friends

1וַֽיִּשְׁבְּת֡וּ שְׁלֹ֤שֶׁת הָאֲנָשִׁ֣ים הָ֭אֵלֶּה מֵעֲנ֣וֹת אֶת־אִיּ֑וֹב כִּ֤י ה֖וּא צַדִּ֣יק בְּעֵינָֽיו׃

1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
1 So these three men stopped answering Job, because he was righteous in his own eyes.
1 யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.

2וַיִּ֤חַר אַ֨ף ׀ אֱלִיה֣וּא בֶן־בַּרַכְאֵ֣ל הַבּוּזִי֮ מִמִּשְׁפַּ֢חַ֫ת רָ֥ם בְּ֭אִיּוֹב חָרָ֣ה אַפּ֑וֹ עַֽל־צַדְּק֥וֹ נַ֝פְשׁ֗וֹ מֵאֱלֹהִֽים׃

2 அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
2 This kindled the anger of Elihu son of Barachel the Buzite, of the family of Ram. He burned with anger against Job for justifying himself rather than God,
2 அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான்.

3וּבִשְׁלֹ֣שֶׁת רֵעָיו֮ חָרָ֢ה אַ֫פּ֥וֹ עַ֤ל אֲשֶׁ֣ר לֹא־מָצְא֣וּ מַעֲנֶ֑ה וַ֝יַּרְשִׁ֗יעוּ אֶת־אִיּֽוֹב׃

3 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
3 and he burned with anger against Job’s three friends because they had failed to refute Job, and yet had condemned him.
3 யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.

4וֶֽאֱלִיה֗וּ חִכָּ֣ה אֶת־אִ֭יּוֹב בִּדְבָרִ֑ים כִּ֤י זְֽקֵנִים־הֵ֖מָּה מִמֶּ֣נּוּ לְיָמִֽים׃

4 அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
4 Now Elihu had waited to speak to Job because the others were older than he.
4 எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.

5וַיַּ֤רְא אֱלִיה֗וּא כִּ֘י אֵ֤ין מַעֲנֶ֗ה בְּ֭פִי שְׁלֹ֥שֶׁת הָאֲנָשִׁ֗ים וַיִּ֥חַר אַפּֽוֹ׃

5 அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்கு கோபம்மூண்டது.
5 But when he saw that the three men had no further reply, his anger was kindled.
5 அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான்.

6וַיַּ֤עַן ׀ אֱלִיה֖וּא בֶן־בַּֽרַכְאֵ֥ל הַבּוּזִ֗י וַיֹּ֫אמַֽר צָ֘עִ֤יר אֲנִ֣י לְ֭יָמִים וְאַתֶּ֣ם יְשִׁישׁ֑‍ִים עַל־כֵּ֖ן זָחַ֥לְתִּי וָֽאִירָ֓א ׀ מֵחַוֺּ֖ת דֵּעִ֣י אֶתְכֶֽם׃

6 ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன்.
6 So Elihu son of Barachel the Buzite declared: “I am young in years, while you are old; that is why I was timid and afraid to tell you what I know.
6 ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்; நான் வயதில் சிறியவன்; நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்; அஞ்சினேன்.

7אָ֭מַרְתִּי יָמִ֣ים יְדַבֵּ֑רוּ וְרֹ֥ב שָׁ֝נִ֗ים יֹדִ֥יעוּ חָכְמָֽה׃

7 முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
7 I thought that age should speak, and many years should teach wisdom.
7 நான் நினைத்தேன்; 'முதுமை பேசட்டும்; வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.'

8אָ֭כֵן רֽוּחַ־הִ֣יא בֶאֱנ֑וֹשׁ וְנִשְׁמַ֖ת שַׁדַּ֣י תְּבִינֵֽם׃

8 ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
8 But there is a spirita in a man, the breath of the Almighty, that gives him understanding.
8 ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.

9לֹֽא־רַבִּ֥ים יֶחְכָּ֑מוּ וּ֝זְקֵנִ֗ים יָבִ֥ינוּ מִשְׁפָּֽט׃

9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
9 It is not only the oldb who are wise, or the elderly who understand justice.
9 வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை; முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.

10לָכֵ֣ן אָ֭מַרְתִּי שִׁמְעָה־לִּ֑י אֲחַוֶּ֖ה דֵעִ֣י אַף־אָֽנִי׃

10 ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள், நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
10 Therefore I say, ‘Listen to me; I too will declare what I know.’
10 ஆகையால் நான் சொல்கின்றேன்; எனக்குச் செவி கொடுத்தருள்க! நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

11הֵ֤ן הוֹחַ֨לְתִּי לְֽדִבְרֵיכֶ֗ם אָ֭זִין עַד־תְּב֥וּנֹֽתֵיכֶ֑ם עַֽד־תַּחְקְר֥וּן מִלִּֽין׃

11 இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
11 Indeed, I waited while you spoke; I listened to your reasoning; as you searched for words,
11 இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன், நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை, அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.

12וְעָֽדֵיכֶ֗ם אֶתְבּ֫וֹנָ֥ן וְהִנֵּ֤ה אֵ֣ין לְאִיּ֣וֹב מוֹכִ֑יחַ עוֹנֶ֖ה אֲמָרָ֣יו מִכֶּֽם׃

12 நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக் காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
12 I paid you full attention. But no one proved Job wrong; not one of you rebutted his arguments.
12 உங்களைக் கவனித்துக் கேட்டேன்; உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை. அவர் சொற்களுக்கு தக்க பதில் அளிக்கவுமில்லை.

13פֶּן־תֹּ֣֭אמְרוּ מָצָ֣אנוּ חָכְמָ֑ה אֵ֖ל יִדְּפֶ֣נּוּ לֹא־אִֽישׁ׃

13 ஞானத்தைக் கண்டுபிடித்தோமென்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.
13 So do not claim, ‘We have found wisdom; let God, not man, refute him.’
13 எச்சரிக்கை! 'நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்; இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்; மனிதரால் முடியாது' என்று சொல்லாதீர்கள்!

14וְלֹא־עָרַ֣ךְ אֵלַ֣י מִלִּ֑ין וּ֝בְאִמְרֵיכֶ֗ם לֹ֣א אֲשִׁיבֶֽנּוּ׃

14 அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
14 But Job has not directed his words against me, and I will not answer him with your arguments.
14 என்னை நோக்கி யோபு தம்மொழிகளைக் கூறவில்லை; உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

15חַ֭תּוּ לֹא־עָ֣נוּ ע֑וֹד הֶעְתִּ֖יקוּ מֵהֶ֣ם מִלִּֽים׃

15 அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
15 Job’s friends are dismayed, with no more to say; words have escaped them.
15 அவர்கள் மலைத்துப் போயினர்; மீண்டும் மறுமொழி உரையார்; அவர்கள் ஒரு வார்த்தையும் சொல்வதற்கில்லை.

16וְ֭הוֹחַלְתִּי כִּי־לֹ֣א יְדַבֵּ֑רוּ כִּ֥י עָ֝מְד֗וּ לֹא־עָ֥נוּ עֽוֹד׃

16 அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
16 Must I wait, now that they are silent, now that they stand and no longer reply?
16 அவர்கள் பேசவில்லை; நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை; நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?

17אַעֲנֶ֣ה אַף־אֲנִ֣י חֶלְקִ֑י אֲחַוֶּ֖ה דֵעִ֣י אַף־אָֽנִי׃

17 நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
17 I too will answer; yes, I will declare what I know.
17 நானும் எனது பதிலைக் கூறுவேன்; நானும் எனது கருத்தை நவில்வேன்.

18כִּ֭י מָלֵ֣תִי מִלִּ֑ים הֱ֝צִיקַ֗תְנִי ר֣וּחַ בִּטְנִֽי׃

18 வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
18 For I am full of words, and my spirit within me compels me.
18 ஏனெனில், சொல்லவேண்டியவை என்னிடம் நிறையவுள்ளன; என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.

19הִנֵּֽה־בִטְנִ֗י כְּיַ֥יִן לֹא־יִפָּתֵ֑חַ כְּאֹב֥וֹת חֲ֝דָשִׁ֗ים יִבָּקֵֽעַ׃

19 இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.
19 Behold, my belly is like unvented wine; it is about to burst like a new wineskin.
19 இதோ! என் நெஞ்சம் அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது; வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.

20אֲדַבְּרָ֥ה וְיִֽרְוַֽח־לִ֑י אֶפְתַּ֖ח שְׂפָתַ֣י וְאֶֽעֱנֶֽה׃

20 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
20 I must speak and find relief; I must open my lips and respond.
20 நான் பேசுவேன்; என் நெஞ்சை ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து நான் பதில் அளிக்க வேண்டும்.

21אַל־נָ֭א אֶשָּׂ֣א פְנֵי־אִ֑ישׁ וְאֶל־אָ֝דָ֗ם לֹ֣א אֲכַנֶּֽה׃

21 நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
21 I will be partial to no one, nor will I flatter any man.
21 நான் யாரிடமும் ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்; நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.

22כִּ֤י לֹ֣א יָדַ֣עְתִּי אֲכַנֶּ֑ה כִּ֝מְעַ֗ט יִשָּׂאֵ֥נִי עֹשֵֽׂנִי׃

22 நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
22 For I do not know how to flatter, or my Maker would remove me in an instant.
22 ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது; இல்லையேல், படைத்தவரே விரைவில் என்னை அழித்திடுவார்.


வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு

Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.

உள்நுழைவு | Sign in

Job Chapter  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14   15   16   17   18   19   20   21   22   23   24   25   26   27   28   29   30   31   32   33   34   35   36   37   38   39   40   41   42

Gen   Exo   Lev   Num   Deut   Josh   Judg   Ruth   1Sam   2Sam   1Kgs   2Kgs   1Chr   2Chr   Ezra   Neh   Esth   Job   Pslm   Prov
Ecc   Song   Isa   Jer   Lam   Eze   Dan   Hos   Joel   Amos   Obad   Jnh   Mic   Nah   Hab   Zeph   Hag   Zech   Mal

Footnotes:
a Or the Spirit ; also in verse 18
9 b Or many  or great

Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.

Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.

Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.