பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 33 | Job 33
Elihu Rebukes Job
1 யோபே, என் நியாயங்களைக்கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
1 “But now, O Job, hear my speech, and listen to all my words.
1 ஆனால் இப்பொழுது, யோபே! எனக்குச் செவிகொடும்; என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.
2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன், என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
2 Behold, I will open my mouth; my address is on the tip of my tongue.
2 இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்; என் நாவினால் பேசுகிறேன்.
3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
3 My words are from an upright heart, and my lips speak sincerely what I know.
3 என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் விளம்பும்; அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.
4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
4 The Spirit of God has made me, and the breath of the Almighty gives me life.
4 இறைவனின் ஆவி என்னைப் படைத்தது; எல்லாம் வல்லவரின் மூச்சு என்னை வாழ்விக்கின்றது.
5 உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
5 Refute me if you can; prepare your case and confront me.
5 உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்; என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.
6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
6 I am just like you before God; I was also formed from clay.
6 இதோ! இறைவன் முன்னிலையில் நானும் நீவிரும் ஒன்றே; உம்மைப்போல் நானும் களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!
7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக்கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
7 Surely no fear of me should terrify you; nor will my hand be heavy upon you.
7 இதோ! நீர் எனக்கு அஞ்சி நடுங்க வேண்டியதில்லை; நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.
8 நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
8 Surely you have spoken in my hearing, and I have heard these very words:
8 உண்மையாகவே என் காதுகளில் விழ நீர் கூறினீர்; நானும் அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;
9 நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
9 ‘I am pure, without transgression; I am clean, with no iniquity in me.
9 'குற்றமில்லாத் தூயவன் நான்; மாசற்ற வெண் மனத்தான் யான்.
10 இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
10 Yet God finds occasions against me; He counts me as His enemy.
10 இதோ! அவர் என்னில் குற்றம்காணப் பார்க்கின்றார்; அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.
11 அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
11 He puts my feet in the stocks; He watches over all my paths.’
11 மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்; என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்'.1
1 யோபு 13:27.
12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
12 Behold, you are not right in this matter. I will answer you, for God is greater than man.
12 இதோ! இது சரியென்று; பதில் உமக்குக் கூறுகிறேன்; கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.
13 அவர் தம்முடைய செயல்களெல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?
13 Why do you complain to Him that He answers nothing a man asks?a
13 'என் சொல் எதற்கும் அவர் பதில் கூறுவதில்லை' என ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?
14 தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
14 For God speaks in one way and in another, yet no one notices.
14 ஏனெனில், இறைவன் முதலில் ஒருவகையில் இயம்புகின்றார்; இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்; அதை யாரும் உணர்வதில்லை.
15 கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
15 In a dream, in a vision in the night, when deep sleep falls upon men as they slumber on their beds,
15 கனவில், இரவின் காட்சியில் ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்; படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,2
2 யோபு 4:13.
16 அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
16 He opens their ears and terrifies them with warnings
16 அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்; எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.
17 மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
17 to turn a man from wrongdoing and keep him from pride,
17 இவ்வாறு மாந்தரிடமிருந்து தீவினையை நீக்குகின்றார்; மனிதரிடமிருந்து ஆணவத்தை அகற்றுகின்றார்.
18 இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
18 to preserve his soul from the Pit and his life from perishing by the sword.
18 அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும், உயிரை வாளின் அழிவிலிருந்தும் காக்கின்றார்.
19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
19 A man is also chastened on his bed with pain and constant distress in his bones,
19 படுக்கையில் படும் வேதனையினாலும் எலும்பில் வரும் தீரா வலியினாலும் அவர்கள் கண்டித்துத் திருத்தப்படுகின்றார்கள்.
20 அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
20 so that he detests his bread, and his soul loathes his favorite food.
20 அப்போது அவர்களின் உயிர் உணவையும், அவர்களின் ஆன்மா அறுசுவை உண்டியையும் அருவருக்கும்.
21 அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
21 His flesh wastes away from sight, and his hidden bones protrude.
21 அவர்களின் சதை கரைந்து மறையும்; காணப்படா அவர்களின் எலும்புகள் வெளியே தெரியும்.
22 அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
22 He draws near to the Pit, and his life to the messengers of death.
22 அவர்களின் ஆன்மா குழியினையும் அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.
23 ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
23 Yet if there is a messenger on his side, one mediator in a thousand, to tell a man what is right for him,
23 மனிதர் சார்பாக இருந்து, அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும் ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்
24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
24 to be gracious to him and say, ‘Spare him from going down to the Pit; I have found his ransom,’
24 அவர்களின் மீது இரங்கி, "குழியில் விழாமல் இவர்களைக் காப்பாற்றும்; ஏனெனில், இவர்களுக்கான மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;
25 அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.
25 then his flesh is refreshed like a child’s; he returns to the days of his youth.
25 இவர்களின் மேனி இளைஞனதைப்போல் ஆகட்டும்; இவர்கள் இளமையின் நாள்களுக்குத் திரும்பட்டும்"
26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தை கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
26 He prays to God and finds favor; he sees God’s face and shouts for joy, and God restores His righteousness to that man.
26 என்று கடவுளிடம் மன்றாடினால், அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்; அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு அவர்கள் காணச் செய்வார்; அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.
27 அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து; நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
27 Then he sings beforeb men with these words: ‘I have sinned and perverted what was right; yet I did not get what I deserved.
27 அவர்கள் மனிதர் முன் இவ்வாறு அறிக்கையிடுவர்; 'நாங்கள் பாவம் செய்தோம்; நேரியதைக் கோணலாக்கினோம்; இருப்பினும் அதற்கேற்ப நாங்கள் தண்டிக்கப்படவில்லை;
28 என் ஆத்துமா படுகுழியிலில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
28 He redeemed my soul from going down to the Pit, and I will live to see the light.’
28 எங்கள் ஆன்மாவைக் குழியில் விழாது அவர் காத்தார்; எங்கள் உயிர் ஒளியைக் காணும்.'
29 இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
29 Behold, all these things God does to a man, two or even three times,
29 இதோ இறைவன் இவற்றையெல்லாம் மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.
30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
30 to bring back his soul from the Pit, that he may be enlightened with the light of life.
30 இவ்வாறு குழியிலிருந்து அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்; வாழ்வோரின் ஒளியை அவர்கள் காணச் செய்கின்றார்.
31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
31 Pay attention, Job, and listen to me; be silent, and I will speak.
31 யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்; பேசாதிரும்; நான் பேசுவேன்.
32 சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
32 But if you have something to say, answer me; speak up, for I would like to vindicate you.
32 சொல்வதற்கு இருந்தால், எனக்குப் பதில் சொல்லும்; பேசுக! உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே நான் விழைகின்றேன்.
33 ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
33 But if not, then listen to me; be quiet, and I will teach you wisdom.”
33 இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்; பேசாதிரும்; நான் உமக்கு ஞானத்தைக் கற்பிப்பேன்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inFootnotes:
13 a Or that He answers for none of His actions
27 b Or Then he looks upon
Copyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.