பரிசுத்த ‘இணை’ய இடைவரி வேதாகமம்®
ஆதி யாத் லேவி எண் உபா யோ நியா ரூத் 1சா 2சா 1இரா 2இரா 1நா 2நா எஸ்றா நெ எஸ்தர் யோபு சங் நீதி
பிர உன் ஏசா எரே புல எசே தானி ஓசி யோ ஆமோ ஒபதி யோ மீகா நாகூ ஆபகூ செப் ஆகா சகரி மல்கி
Job யோபு אִיּוֹב
அதிகாரம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42
யோபு 34 | Job 34
Elihu Confirms God’s Justice
1 பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
1 Then Elihu continued:
1 எலிகூ தொடர்ந்து கூறினான்:
2 ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
2 “Hear my words, O wise men; give ear to me, O men of learning.
2 ஞானிகளே! என் சொற்களைக் கேளுங்கள்; அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.
3 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும்.
3 For the ear tests words as the mouth tastes food.
3 நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல, காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.1
1 யோபு 12:11.
4 நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக.
4 Let us choose for ourselves what is right; let us learn together what is good.
4 நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்; நல்லது எதுவோ அதை நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.
5 யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டாரென்றும்,
5 For Job has declared, ‘I am righteous, yet God has deprived me of justice.
5 ஆனால் யோபு சொல்லியுள்ளார்; "நான் நேர்மையானவன்; ஆனால் இறைவன் என் உரிமையைப் பறித்துக் கொண்டார்,
6 நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே.
6 Would I lie about my case? My wound is incurable, though I am without transgression.’
6 நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்; நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.'
7 யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து,
7 What man is like Job, who drinks up derision like water?
7 யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்? நீர்குடிப்பதுபோல் அவர் இறைவனை இகழ்கின்றார்;
8 அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்?
8 He keeps company with evildoers and walks with wicked men.
8 தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்; கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.
9 எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே.
9 For he has said, ‘It profits a man nothing that he should delight in God.’
9 ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்; 'கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால் எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.'
10 ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.
10 Therefore listen to me, O men of understanding. Far be it from God to do wrong, and from the Almighty to act unjustly.
10 ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்! தீங்கிழைப்பது இறைவனுக்கும், தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக!
11 மனுஷனுடைய செய்கைக்குத் தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார்.
11 For according to a man’s deeds He repays him; according to a man’s ways He brings consequences.
11 ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்; அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.2
2 திபா 62:12.
12 தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
12 Indeed, it is true that God does not act wickedly, and the Almighty does not pervert justice.
12 உண்மையாகவே, கொடுமையை இறைவன் செய்யமாட்டார்; நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.
13 பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்?
13 Who gave Him charge over the earth? Who appointed Him over the whole world?
13 பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்? உலகனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தவர் யார்?
14 அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
14 If He were to set His heart to it and withdraw His Spirit and breath,
14 அவர்தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால், தம் உயிர் மூச்சை மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,
15 அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான்.
15 all flesh would perish together and mankind would return to the dust.
15 ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்; மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;
16 உமக்கு உணர்விருந்தால் இதைக்கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும்.
16 If you have understanding, hear this; listen to my words.
16 உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்; என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.
17 நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ?
17 Could one who hates justice govern? Will you condemn the just and mighty One,
17 உண்மையில், நீதியை வெறுப்பவரால் ஆட்சி செய்ய இயலுமா? வாய்மையும் வல்லமையும் உடையவரை நீர் பழிப்பீரோ?
18 ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரரென்றும் சொல்லத்தகுமோ?
18 who says to kings, ‘You are worthless!’ and to nobles, ‘You are wicked,’
18 அவர் வேந்தனை நோக்கி "வீணன்" என்றும் கோமகனைப் பார்த்து 'கொடியோன்' என்றும் கூறுவார்.
19 இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.
19 who is not partial to princes and does not favor rich over poor? For they are all the work of His hands.
19 அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்; ஏழைகளை விடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்; ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
20 இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள்.
20 They die in an instant, in the middle of the night. The people convulse and pass away; the mighty are removed without human hand.
20 நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்; நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்; ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.
21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.
21 For His eyes are on the ways of a man, and He sees his every step.
21 ஏனெனில், அவரின் விழிகள் மனிதரின் வழிகள்மேல் உள்ளன; அவர்களின் அடிச்சுவடுகளை அவர் காண்கிறார்.
22 அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை.
22 There is no darkness or deep shadow where the workers of iniquity can hide.
22 கொடுமை புரிவோர் தங்களை ஒளித்துக்கொள்ள இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.
23 மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
23 For God need not examine a man further or have him approach for judgment.
23 இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க, எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.
24 ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார்.
24 He shatters the mighty without inquiry and sets up others in their place.
24 வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.
25 அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துபோடுகிறார்.
25 Therefore, He recognizes their deeds; He overthrows them in the night and they are crushed.
25 அவர்களின் செயலை அவர் அறிவார்; ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்; அவர்களும் நொறுக்கப்படுவர்.
26 அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும்,
26 He strikes them for their wickedness in full view,
26 அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர் மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.
27 எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக்கேட்கிற அவர்,
27 because they turned aside from Him and had no regard for any of His ways.
27 ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்; அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை;
28 எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார்.
28 They caused the cry of the poor to come before Him, and He heard the outcry of the afflicted.
28 ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்; அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.
29 மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும்,
29 But when He remains silent, who can condemn Him? When He hides His face, who can see Him? Yet He watches over both man and nation,
29 அவர் பேசாதிருந்தால், யார் அவரைக் குறைகூற முடியும்? அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால், யார்தான் அவரைக் காணமுடியும்? நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.
30 ஒரு ஜனத்துக்கானாலும் மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்?
30 that godless men should not rule or lay snares for the people.
30 எனவே, இறைப்பற்றில்லாதவரோ மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ ஆளக்கூடாது.
31 நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
31 Suppose someone says to God, ‘I have endured my punishment; I will offend no more.
31 எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா; 'நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்; இனி நான் தவறு செய்யமாட்டேன்.
32 நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
32 Teach me what I cannot see; if I have done wrong, I will not do it again.’
32 தெரியாமல் செய்ததை எனக்குத் தெளிவாக்கும்; தீங்கு செய்திருந்தாலும், இனி அதை நான் செய்யேன்.'
33 நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால் உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச் சொல்வீரோ? நானல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும்.
33 Should God repay you on your own terms when you have disavowed His? You must choose, not I; so tell me what you know.
33 நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்; நான் அல்ல; ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.
34 யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று,
34 Men of understanding will declare to me, and the wise men who hear me will say:
34 புரிந்துகொள்ளும் திறன் உடையவரும் எனக்குச் செவி சாய்ப்பவர்களில் ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;
35 புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான்.
35 ‘Job speaks without knowledge; his words lack insight.’
35 யோபு புரியாமல் பேசுகின்றார்; அவர் சொற்களும் பொருளற்றவை.
36 அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை.
36 If only Job were tried to the utmost for answering like a wicked man.
36 யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா? ஏனெனில், அவரின் மொழிகள் தீயோருடையவைபோல் உள்ளன.
37 தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.
37 For he adds rebellion to his sin; he claps his hands among us and multiplies his words against God.”
37 யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்; ஏளனமாய் நம்மிடையே அவர் கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.
வார்த்தைக்கு வார்த்தை எபிரேயம் - தமிழ் இடைவரி ஆராய்வு — உறுப்பினர்களுக்கு
Word-by-word Hebrew–Tamil interlinear study is available to Members.
உள்நுழைவு | Sign inCopyright:
The Westminster Leningrad Codex (WLC) is in the Public Domain. The Berean Standard Bible and Berean Majority Bible texts are in the Public Domain.
Parisutha Vedhagamam (Tamil Bible, BSI OV 1957) is in the Public Domain.
திருவிவிலியம் (Thiruviviliam, Tamil Common Language Interconfessional Translation, 1995 edition)
© United Bible Societies (Bible Society of India) & Tamil Nadu Biblical, Catechetical and Liturgical Centre (TNBCLC), Tindivanam.
All rights in the Thiruviviliam text belong to the respective copyright holders.
Interlinear alignment, transliteration, HTML coding & digital edition © EASTER TECH. All Rights Reserved.
Emunah Avodah is a ministry of EASTER TECH.
Note: Chapter and verse numbering on this site follows the English Bible tradition (BSB / Tamil versions).
The Hebrew Masoretic text (WLC/BHS) numbers some passages differently — Psalm superscriptions,
for example, are counted as verse 1 (or 1–2) in Hebrew, so MT verse numbers in Psalms may run
one or two higher than shown.